News Image

அம்பிகாபூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பாரா

நம் மத்தியில் வாழ்வதற்கு வந்துள்ள கடவுளின் அன்பின் பெயர் மற்றும் முகம், இயேசு எனவும், ஒவ்வொருவரும் அவரைத் தேட ஆவல்கொள்வீர்கள் மற்றும், அவரைக் கண்டுகொள்வதில் மகிழ்வீர்கள் என்று, நான் நம்புகிறேன் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 22, இப்புதனன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்.

வரவிருக்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, கிறிஸ்மஸ் (#Christmas) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அம்பிகாபூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

மேலும், இந்தியாவின் அம்பிகாபூர் மறைமாவட்ட ஆயராக பணியாற்றிவந்த ஆயர் Patras Minj அவர்களின் பணிஓய்வை ஏற்றுள்ளதோடு, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அம்மறைமாவட்டத்தில் முதன்மைக் குருவாகப் பணியாற்றிவரும் அருள்பணி அந்தோனிஸ் பாரா அவர்களை, டிசம்பர் 22, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அம்பிகாபூர் மறைமாவட்ட புதிய ஆயர் அந்தோனிஸ் பாரா அவர்கள், ஜாஷ்பூர் மறைமாவட்டத்திலுள்ள ஷோஹா என்ற ஊரில், 1958ம் ஆண்டில் பிறந்தார். 1988ம் ஆண்டில் அம்பிகாபூர் மறைமாவட்டத்திற்காக, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் உர்பானியானம் பாப்பிறை இறையியல் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 2015ம் ஆண்டிலிருந்து, அம்மறைமாவட்ட பேராலயத்தின் பங்குத்தந்தையாகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

முந்தைய அடுத்தது