News Image

நேர்காணல்: வீரமாமுனிவரின் 275வது விண்ணகப்பிறப்பு விழா

கான்ஸ்ட்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரைக்கொண்ட அருள்பணி வீரமாமுனிவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இயேசு சபை மறைப்பணியாளர். இவர், 1709ம் ஆண்டு இயேசு சபையில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்டுத்தப்பட்டு, 1710ம் ஆண்டு, தனது முப்பதாவது வயதில் தமிழகத்துக்கு வந்து, மறைப்பணியோடு மொழிப்பணியும் ஆற்றிய பெருமைக்குரியவர். இவர், 1747ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி விண்ணகப் பேற்றை எய்தினார். அந்த நிகழ்வின் 275வது ஆண்டு நினைவு, கொண்டாடப்பட்டுவரும் இவ்வேளையில் அந்த மாபெரும் இத்தாலிய மறைப்பணியாளர் பற்றி இன்று நம் செவிகளுக்கு விருந்தளிக்கிறார், இயேசு சபையின் அருள்பணி சகாயராஜ் விஜயன் அவர்கள். இவர் சென்னை இலொயோலா தன்னாட்சி கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.

முந்தைய அடுத்தது