News Image

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டத்தைப் பெரும்திரளான பக்தர்கள் தரிசித்தனர்

இந்தியாவின் கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 45 நாள்களில் ஏறக்குறைய நாற்பது இலட்சம் பக்தர்கள் அதனைத் தரிசித்துள்ளனர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறியது.

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருப்பண்டம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட நிகழ்வு சனவரி 4, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்தது. இந்நிகழ்வின் இறுதி நாளன்று ஏறக்குறைய பத்தாயிரம் பக்தர்கள் மணிக்கணக்காய் வரிசையில் காத்துநின்று அப்புனிதப் பண்டத்தைப் பார்த்துச் செபித்தனர்.

1964ம் ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாற்பது நாள்களுக்கு இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, அடுத்ததாக 2024ம் ஆண்டில் இத்திருப்பண்டத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல், இப்புனிதர், புனிதர் என அறிவிக்கப்பட்ட 400ம் ஆண்டின் நிறைவாக 2022ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என, பாம் ஜேசு பசிலிக்கா அதிபர் அருள்பணி Savio Barretto அவர்கள் அறிவித்தார்.

புனித பிரான்சிஸ் சேவியர், 1622ம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார். இப்புனிதர், 1552ம் ஆண்டு சீனாவுக்கு அருகில் Shangchuan தீவில் இறந்தார்.

(ஆதாரம் : UCAN)

முந்தைய அடுத்தது