16-01-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு,
பொதுக்காலம் முதலாவது வாரம்
-வெள்ளிக்கிழமை
புனித ஜோசப் வாஸ் பெருவிழா
இதோ, உன் சாமக் காவலர்குரல் எழுப்புகின்றனர்;
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும்
நலம்தரும் செய்தியை உரைக்கவும்,விடுதலையைப் பறைசாற்றவும்,சீயோனை நோக்கி, ‘உன் கடவுள்
அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்;
ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள்
தம் கண்களாலேயே காண்பர்.
எருசலேமின் பாழ் இடங்களே,ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.
பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்;
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
அனைத்து மக்களினங்களுக்கும் அவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே,
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பைநாள்தோறும் அறிவியுங்கள்.
3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
6மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும்
அவரது திருத்தலத்தில் உள்ளன;
7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;
மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்;
உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.-பல்லவி
10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி
“நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: “நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். எனவே, விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.
இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
லூக்கா 1:45 - அல்லேலூயா, அல்லேலூயா! உலகெங்கும் சென் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். ஏந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன். ஏன்கிறார் ஆண்ட அல்லேலூயா!
இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே.. .. .."
அருமையான ஒலி ஒளி காட்சி. கற்பனையில் பார்த்து ரசியுங்கள். அழகிய ஆற்றங்கரை. குளிர்ந்த தெளிந்த நீர் பொங்கி பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது.மக்கள் கூட்டம் மௌனப் பேரணி நடத்திக்கொண்டிருக்கும் கண்கொள்ளா காட்சி. வண்ண வண்ணப் பறவைகள் வானில் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கின்ற மற்றொறு காட்சி. அவற்றுள் வெள்ளைப் புறா ஒன்று மட்டும் அனைவரின் கவனத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. சல சல ஒலியில் இயற்கையின் காதுக்கினிய இன்னிசை விருந்து. இதமான இந்த ஒலியின் நடுவே ஒரு பேரிடி முழக்கம். விண்ணதிரும் பெருங்குரல். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் ப+ரிப்படைகிறேன்". யார் இந்த அன்பார்ந்த மகன்? கிறிஸ்(து)தவன் நீ.ஆம். உன்னைக் குறித்து உன்னைப் படைத்த இறைவன் பூரிப்படைய வேண்டும்.நீ வாழப்போகும் சாட்சிய வாழ்வைக் குறித்து உன் இறைவன் பெருமைப்பட வேண்டும். நீ கிறிஸ்தவனாக வாழும் வாழ்கையைப் பார்த்து மக்கள் கூட்டம் வாழ்த்த வேண்டும். இவ்வுயர் நிலையை நீங்கள் பெற வாழ்த்துக்கள்.
மன்றாட்டு:
இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.