Düren (டியூர்என்)
டியூரனில் (Düren) உள்ள அன்னா தேவாலயம் ஆழமான வரலாறு, ஆன்மீக ஒளியைக் கொண்ட ஒரு முக்கியமான கத்தோலிக்க பணியகம், மற்றும் புனித யாத்திரை தேவாலயமாகும். 15ஆம் நூற்றாண்டில், புனித அன்னாவின் நினைவுச்சின்னம் (Reliquie) Düren நகருக்கு கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து ஏராளமான யாத்திரையாளர்களை அன்னா தேவாலயம் கவர்ந்துள்ளது. யாத்திரைத் தலமாக மாறியது இந்த வழிபாட்டிலிருந்துதான் கோடையில் பாரம்பரிய அண்ணா ஒக்டாவ், ஜனவரியில் குளிர்கால அண்ணா விழா மற்றும் பிரபலமான அன்ன நகர திருவிழா ஆகியவை உருவாக்கப்பட்டது.
1944 நவம்பர் 16-இல், தேவாலயம் குண்டு வீச்சால் முற்றிலும் அழிக்கப்பட்டது. 1954–1956-இல், Rudolf Schwarz என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் புதிய தேவாலயம் கட்டப்பட்டது.
புதிய கட்டிடம் எளிமையாகவும் அடையாளமாகவும் வடிவமைக்கப்பட்டது இது "தாயின் அரவணைப்பு" என்ற உணர்வை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இந்த தேவாலயம் அமைதி, ஜெபம், தியானம் ஆகியவற்றுக்கான ஒரு புனித தளமாக மட்டுமல்ல, வரலாற்று நினைவாகவும், மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
முகவரி:
St. Annas Kirche, Ahrweilerplatz 11, 52349 Düren
| நாள் | நேரம் |
|---|---|
| 2வது வெள்ளிக்கிழமை | 17.00 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media