இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் இரண்டாம் வாரம்

கடந்து செல்லுதல்

தொடக்கநூல் 12:1-4
2திமொத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

உருமாற்றம் அடைதலை தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் தாய்திருச்சபை நம் கண்முன் வைக்கின்றது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை நாம் இந்த தவக்கால இறைவாசகங்களில் அதிகமாக உணரலாம். நாம் ஒவ்வொருவருமே நம் முன்னோர்களின் அடையாளம் தாங்கிய புதையல்கள். எடுத்துக்காட்டாக நம்மை பார்த்தவுடன் சிலர் நம் குடும்பத்தைப் பற்றியும், நமது வாழ்க்கை முறையின் செயல்பாடுகளை பார்த்து நாம் நமது மூதாதையர்களை நினைவுப்படுத்தும் மனிதர்களாக தோற்றம் கொடுக்கிறோம் என்று கூறுவர்.
அடையாளம்
மனிதவாழ்வுக்கு புதிய திசைக்காட்டி அடையாளம். இதைத்தான் அன்றைய யூத மரபின் படி மலைகளையும், மேகத்தையும் அடையாளமாக எடுத்துக்கூறினார்கள்.
மலை- என்பது இறைவன் தம்மை வெளிப்படுத்துகிற இடம். (விப 24:12)
மேகம்- என்பது இறைப்பிரசன்னத்தின் அடையாளம். (விப 24:15)
 பழைய ஏற்பாட்டின் இருபெரும் உறுப்பினர்களை புனித மத்தேயு நமக்கு வெளிப்படுத்துகிறார். மத் 17:2
மோசே + எலியா = உடனிருப்பு
மோசே- திருச்சட்டத்தின் பொறுப்பாளர் (விப 24:12-18)
எலியா- இறைவாக்குகளின் பொறுப்பாளர் (1அர18:22)
 புதிய ஏற்பாட்டின் மூப்பெரும் உறுப்பினர்களை புனித மத்தேயு நமக்கு வெளிப்படுத்துகிறார். மத் 17: 1
பேதுரு + யாக்கோபு + யோவான்= உடனிருப்பு
புனித பேதுரு
பேதுருவின் உறுதியான விசுவாச அறிக்கை அவரை பேறுபெற்றவர் ஆக்கியது. அவரின் பாறை போன்ற உறுதியான விசுவாசத்திலே திருச்சபையை கட்டினார் இயேசு. மேலும் விண்ணக திறவுகோல்களையும் தந்து மண்ணுலகில் தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும் என்கிறார்.
நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டதாய் உள்ளது? இயேசுவே ஆண்டவரும், மெசியாவுமாக கொண்டு வாழ்கிறோமா?
புனித வோவான்
இயேசுவின் அன்பில் நிலைத்திருந்து இயேசுவோடு பயணித்த சீடர்களுள் ஒருவர்தான் புனித வோவான். இயேசுவை அனுபவித்து உணர்ந்தவர். இறுதியில் கல்வாரி குன்றில் ஆண்டவருடைய உச்சக்கட்ட அன்பின் வெளிப்பாட்டிற்கு சான்றாக திகழ்பவர். இறைவனுக்கு சான்று பகர்ந்தவர்.
நாம் இயேசுவை அறியவும், அன்பு செய்யவும், அறிவிக்கவும், அவருக்கு சாட்சியாய் வாழவும் தயாரா?
புனித யாக்கோபு
இவர் எருசலேம் திருச்சபைக்கு முதல் தலைவராக இருந்தவர். நம்பிக்கையிலும், பிறரன்பிலும் சிறந்தவர்.
நமது பிறரன்பு எதை மையமாக கொண்டு விளங்குகிறது?
எதார்த்தமான வாழ்வின் செயல்பாடுகள்
மனிதர்கள் தங்களைச்சுற்றி ஒருவகையான பாதுகாப்பை விரும்புகிறோம். அதற்காக பெரிதும் பாடுபடுகிறோம். துன்பத்தை, பிரச்சனைகளை விரும்புவதில்லை. அருகில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு அல்லது சமுதாயத்தில் உள்ளோருக்கு பிரச்சனை என்றால் வேடிக்கைப்பார்த்தல், அதை கண்டும் காணாமல் செல்லுதல், பிரச்சனையில் இரங்கினால் எனது நேரம் வீணாக்கப்படும், வீண் அலைச்சல், வீண் தொந்தரவு, வீண் செலவு என பிரச்சனைகளை சந்திக்க வேண்டும், மேலும் அது என் வாழ்வுக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பற்ற நிலையை கொடுக்கும், ஆகவே தவிர்த்துவிடுகிறோம். ஒரே நிலையில் சீராக நமது வாழ்க்கை ஓட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புவதோடு, மனித நேய செயல்களை செய்ய தவறிவிடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் அதைதான் செய்ய பேதுரு முற்படுகிறார். “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?”(மத்17:4) இந்த நிலை நமக்கு பாதுகாப்பும், எந்தவித இடர்பாடுகளும் இல்லாத இடம், ஆகவே இங்கே கூடராம் அமைத்துக் கொள்ளலாம், ஆம் ஒரே நிலையில் இருக்கும் போது நமது எண்ணங்களில் மாற்றம் இல்லை, ஒரு விதமான சுகம், இந்த சுகம் சிறிய சிற்றின்பம், ஆனால் மறைந்து போகக்கூடியது. நிலைவாழ்விற்கு செல்ல இப்படிப்பட்ட தேக்க நிலையில் இருந்து கடந்து வரவேண்டும் என தவக்காலம் அழைக்கிறது.
வழிபாட்டை வாழ்க்கையோடு இணைக்க தெரிந்தவர்கள் - செபத்தை வாழ்வாக்க தொடந்து முயற்சி செய்பவர்கள். செபம்
மனிதனை ஒரு மனிதனிடம் இருந்து பிரிக்க கூடிய வெளியடையாளங்களை தாண்டி அன்பு செய்ய தெரிந்தவர்கள்- திறமைகள், குணங்கள் என என்னுடன் இணைந்து இல்லாதவர்களை தொடர்ந்து அறிந்து, புரிய, முயற்சி செய்பவர்கள். அடையாளம்
பிறருடைய உயர்வில், என்னுடைய தாழ்வில் இருந்து கடந்து இறைவனை அன்பு செய்ய வேண்டும்- மற்றவரிகளின் மகிழ்வு என்னுடையது என எண்ணி தொடர்ந்து ஏற்றுக்கொள்ளல். அனுபவம்
செபம், அடையாளம், அனுபவம் இவை நம் வாழ்வில் செயல்படுத்தப்படும் போது நம்மில் இறைமகன் பூரிப்படைகிறார். ஆகவே பூரிப்படையக்கூடிய செயல்பாட்டை தொடர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்த தவக்காலத்தை பயன்படுத்த முற்படுவோம் ஆமென்.