எது திருவருகைக்கால பரிசு
திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம்.
இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம்.
நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம்.
படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திருவகைக்காலம்.
திருவருகைக்காலத்திற்குள் செல்லும் முன் மார்த்தா, மரியாள் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்று செவிமடுக்க உங்களை அழைக்கிறேன்.
மார்த்தா - நிதானத்தின் வழி ஆண்டவரை அறிந்து கொள்ள வாய்ப்பு பெறுதல்
ஆண்டவர் அவரைப் பார்த்து,
“மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். (லூக்10:41)
கவலைகளில் இருந்து, அடுத்து, அடுத்து மிகுந்த பரப்பரப்பான பணியை தேடிச் செல்வதில் இருந்து, சற்று நிதானத்திற்கு வந்து அமைதியை விளைவிக்க ஆண்டவர் மார்த்தா வழி நம்மையும் அழைக்கின்றார்.
உதாரணமாக வீட்டில் பல வேலைகளை இந்த திருவருகைக்காலத்தில் சற்று வித்தியாசப்படுத்தி செய்ய உங்களை அழைக்கிறேன்.
1.சூழ்நிலையை புரிய முற்படல் -
புரிதலின் வழி எதிர்நோக்கு கொண்டு காத்திருப்போம்.
இந்த சூழ்நிலையில் என் பெற்றோருக்கு செவிமடுப்பேன், அவர்கள் கூற வரும் கருந்து என்ன என்று புரிய முற்படல். கால சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஏற்ப குழந்தைகளை அணுகுதல்.
மார்த்தாவிற்கு நமதாண்டவர் சூழ்நிலையை புரிய கற்றுக்கொடுத்தார்.
2.தன்னை அறிதல் -
படைத்த கடவுளை அறிந்து கொண்டு அன்பை பகிர்தல்.
நான் யார் என அறிந்து கொள்ள முற்படும் போது, நான் என்ன செய்கிறேன், எனது தூண்டுதல்கள் எங்கே ஆரம்பம் ஆகின்றன எனவும்,என்னில் இருக்கும் நன்மை, தீமையை அறிந்திடவும் வாய்ப்பு பெறுகிறேன்.
மார்த்தாவிற்கு நமதாண்டவர் தன்னை மற்றும் தான் எந்த மனநிலையில் இருக்கிறார் என கற்றுக்கொடுத்தார்.
3.பலவீனத்தை ஏற்றுக்கொள்ளுதல் -
பலத்தை அறிந்து வெற்றிக்காண வழிகள்.
பரப்பரப்பான சூழ்நிலைகள் நமது எண்ணித்தில் திடமான எண்ணங்களை சீர்தூக்கி பார்பதற்கும், நம்மை சுற்றியுள்ளவர்களின் தெளிவான கருத்துக்களையும் உள்வாங்கி கொள்ளவும் தடம்பிறழச்செய்யும் வாய்ப்பினை கொடுக்கிறது.
மார்த்தாவிற்கு நமதாண்டவர் தனது பலவீனத்தை கொடுத்து, அவரின் பலத்தை அறிந்திட கற்றுக்கொடுத்தார்.
மரியா-நல்ல தேர்ந்தெடுத்தலின் வழி ஆண்டவரை அறிந்து கொள்ள வாய்ப்பு பெறுதல்
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். (லூக்10:39)
உதாரணமாக நன்மைகளை செய்வதில் இந்த திருவருகைக்காலத்தில் சற்று அதிகப்படுத்தி செய்ய உங்களை அழைக்கிறேன்.
1.நேரம் கொடுத்தல்
நன்மைகளை பெறுவதற்கும், அதனை இரட்டிப்பாக்கி மற்றருக்கு கொடுக்கவும் , காலம் தாழ்த்தாமல் தொடர்ந்து செயல்படுதல்.
மரியாள் நமதாண்டவர் கண்களில் விலையேர பெற்றவராக தேர்தெடுக்கப்பட்டார்.
2.கடவுளின் குரல் கேட்டல்
இவ்வுலகில் பலவிதமான குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன, ஆனால் இதில் கடவுளது குரலை அறிந்திடவும் அதற்கு ஏற்றார் போல் வாழ்வதும் நமது கடமையாகும். மரியாள் நமதாண்டவர் வார்தையை வாழ்வாக்கிட உயர்த்தபட்டார்.
3.இறைபலத்தை அறிதல்
மனிதன் பலத்தை கொண்டவனாக உருவெடுக்கின்றான், ஆனால் இந்த பலம் இறைவனிடம் இருந்து வருகின்றது என்பதை பலநேரங்களில் விழிப்புடன் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.
மரியாள் நமதாண்டவரின் பலத்தை முழுமையாக நம்பிட தேர்தெடுக்கப்பட்டார்.
இந்த திருவருகைக் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் இறைவன் சந்திக்க வர ஆவலாக இருக்கின்றார். நம்மை அறிந்து அதில் புதைந்திருக்கும் இருக்கும் பரிசுக்களை இந்த திருவருகைக்காலத்தில் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிறேன். இறைவன் சாட்சிகளாக இன்றும் என்றும் திகழ்வோம் ஆமென்.
[2019-12-15 18:44:39]
எழுத்துருவாக்கம்:
|