தொடுவானம்

தொடுவானம் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தினால் 1994இல் இருந்து வெளியிடப்படுகின்றது. ஐரோப்பிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆன்மீக சமூக கலாச்சார நலன்கருதி அன்றைய நாள் இயக்குனராகிய அருட்கலாநிதி அ.பி.ஜெயசேகரம் அடிகளாரினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தொடுவானம் எனும் பெயரானது அமரத்துவம் அடைந்த அருட்பணி கிருபானந்தன் அவர்களினால் சூட்டப்பட்டது. இன்றும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் காலாண்டு இதழாக தொடுவானம் வெளியிடப்படுகின்றது.

வெற்றி

போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்: ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.
(நீதிமொழிகள் 21:31)

இறைவார்த்தை

நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.
(யோசுவா 24:15)