அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற்

Rev.Fr. Anthony Fernando Bennet
Jaffna
Sri Lanka
Email: benferdo@hotmail.de
பணிவாழ்வு காலப்பகுதி
குருப்பட்டம்:- யாழ் மரியன்னை பேராலயம் 1989-06-19
உதவிப்பங்குத்தந்தை:- மயிலிட்டி-ஊரணி 1989-1990
உதவிப்பங்குத்தந்தை:- பரந்தன்-கிளிநொச்சி 1991-1993
பங்குத்தந்தை:- சண்டிலிப்பாய்(சில்லாலை) 1993-1995
பங்குத்தந்தை:- கரவெட்டி 1995-1998
உயர்கல்வி:- நற்செய்தி அறிவிப்பு உருவாக்களுக்கான டிப்ளோமா கற்கைநெறி, பிலிப்பைன்ஸ் 1998-1999
பங்குத்தந்தை:- மானிப்பாய், யாழ்பாணம் 1999-2005
மறைக்கோட்ட முதல்வர்:- கிளி-முல்லை மறைக்கோட்டம் 2006-2009
குரு- வவுனியா செட்டிகுளம் அகதிகள் முகாம் 2009-2010
இயக்குனர் - தமிழ் ஆன்மீக பணியகம்,யேர்மனி 01.07.2010 - 31.03.2016

வாழ்க்கைப் பதிவுகள்


கடுகு சிறிதாயினும் காரம் பெரிது.

........பணிவாழ்வுப்பயணம்.


2002ஆம் ஆண்டில் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்கள் யாழ் மானிப்பாய் பங்கின் பங்கு தந்தையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவ் வருடம் ஆனிமாதம் 13ஆம் திகதி மானிப்பாய் அந்தோனியார் திருவிழாத் திருப்பலியை யாழ் ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை தலைமையேற்று நிறைவேற்றினார். அங்கு உரையாற்றிய ஆயர் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரைப்பற்றி சொன்ன வார்த்தைதான்; கடுகு சிறிதாயினும் காரம் பெரிது. உருவத்திலே சிறியவராய் இருந்தாலும், தன்னுடைய பணிவாழ்வாலும் தன்னுடைய சிறந்த ஆளுமையாலும், ஆண்டவர் இயேசுவின் குருத்துவப்பணியை இன்றுவரை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்.

தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்.(1சாமுவேல் 16.7) என்று கூறி தாவீதை ஆண்டவராகிய கடவுள் தமது பணிக்கு திருப்பொழிவு செய்தார். அது போல ஆண்டவர் இயேசுவும் அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளாரையும் குருவாக திருப்பொழிவு செய்தார்.


குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா வாழ்த்துச்செய்திகள்

எம் இயக்குனர்
மண்டைதீவு மண் தந்த செல்வப்புதல்வா
மாட்டீன் குருமடத்தில் நீர்
வித்திட்ட விதை அன்று - இன்று
கனிந்திட்ட கனியாச்சுதே

வெள்ள உள்ளத்தோடு
வெளிநாட்டுப்புலன் பெயர்நோக்கி விரைந்து
இறைவிசுவாசம் குறைந்தவரை
இல்லம் சென்று வரவழைத்தவர் - எம் இயக்குனர்

வேதனை நிறைந்த வெளிநாட்டில்
சாதனை படைக்க வேண்டுமென்று
போதனையூடாக வேதம் ஊட்டி
புதிய பாதைகள் இட்டவர் - எம் இயக்குனர்

சிகரமே காத்திருக்க சீர்மிகு இயக்குனர்
உம் சிந்தனையை எம்மில் பதித்து
சிரமங்கள் ஆயிரம் வந்தபோதும்
நொந்து போகும் மனம் வேண்டாம்

துதி தரும் வெற்றியின் பாதையிலே
ஆண்டவர் வழி நடந்திடுவோம்
தூய ஆவி எங்கும் துணைவர
ஜெயமே ஜெயமே என்றும் ஜெயமே

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் அகமகிழ்வோடு வாழ்த்துவோம்
பரணியெங்கும் பணிசெய்திட - எம் இயக்குனர்
பரலோக பிதா பாதம் பணிந்து
இறைவிடுதலைப்பாதை பயணிக்க வாழ்த்துவோம்.