மெட்யுகோரியோவில்(Medjugorje) 2011வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு02-08-2011 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை பரிசுத்த ஆவியில் நிறைந்து செபித்து என் மகனில் புதிய மக்களாக உங்களை மாற்ற அழைக்கிறேன். கடவுளை விட்டு சென்ற மக்கள் தங்களையே இழந்து விடுகின்றனர். துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனையே நம்பி இருக்கும் மக்கள் இரட்சிக்கப்பட்ட மக்களாய் இருக்கிறார்கள். உங்களை ஒரே குடும்பமாக இறைவனில் நிலைத்திருக்க அழைக்கிறேன். உங்களால் தனித்து உங்களை எதிர்த்து நிற்கும் சாத்தனை மேற்கொள்ள இயலாது. ஆனால் இறை திட்டத்தின் படி என்னுடைய மகனுடன் இணைந்து நிங்கள் உலகத்தினை வெற்றி கொள்வதோடு, உலகினை நல்வழிப்படுத்துவீர்கள். உங்களுடைய மேய்ப்பர்களுக்காக செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், ஏனெனில் அவர்கள் என் மகனினால் தேர்ந்து கொள்ளாப்பட்டவர்கள். நன்றி


2011-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை என்னுடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்காக உபவாசமிருந்து செபிக்க அழைக்கிறேன். ஏனெனில் சாத்தான் என்னுடைய திட்டங்களை அழிக்க விழைகின்றான். நான் இந்த பங்கில் ஆரம்பித்து முழு உலகத்தினையும் அழைத்தேன். பலர் என்னுடைய அழைத்தலை ஏற்றுக்கொண்டனர், ஆயினும் மிகப் பெரிய அளவினர் என்னுடைய அழைப்பினை ஏற்றுக்கொள்ளவோ செவிசாய்க்கவோ இல்லை. என்னுடைய அழைத்தலை ஏற்றுக்கொண்ட நீங்கள் விசுவாசத்தில் வலிமையாக தரித்து இருங்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.


2011-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, என் முழு ஆன்மாவோடும் முழு இருதயத்தோடும் பரலோக தந்தையின் மீது வைத்த அளவு கடந்த விசுவாசத்தினாலும் அன்பினாலும், எனது மகனை உங்களுக்கு கொடுத்தேன். எனது மகன் ஒரே உண்மை கடவுளையும் அவரது அளவு கடந்த அன்பினையும் அறியும்படி முழு உலக மக்களையும் கூட்டிச்சேர்த்தார். அவர் உங்களை உண்மையின் பாதையில் நடக்கச்செய்து உங்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக்கினார். அதனால் என் பிள்ளைகளே நீங்கள் உங்கள் பாதையில் இருந்து விலகாமல் அன்பிலும் உண்மையிலும் விசுவாசத்திலும் நிலைத்திருங்கள். உங்களை சுற்றி உள்ள எல்லாம் நிலையற்றவை; கடவுளின் மாட்சி மட்டுமே நிலையானது. எனவே, கடவுளிடமிருந்து உங்களை பிரிக்கும் எல்லாவற்றிடமிருந்தும் விலகி இருங்கள். அவரை முழுவதுமாய் பற்றியிருங்கள். ஏனெனில் அவரே உண்மைக் கடவுள். நான் உங்களோடு எந்நாளும் நிலைத்திருப்பேன். நான் மேய்ப்பர்களுக்காக விசேசமாக செபிக்கிறேன். ஏனெனில் அவர்கள் எனது மகனின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்து அன்பின் பாதையில் உங்களை வழிநடத்த வேண்டும். நன்றி.


2011-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் உங்களை எனது மகனாகிய இயேசுவில் ஒன்றுபடுமாறு அழைக்கின்றேன். நீங்கள் கடவுளின் குடும்பமாக இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து வாழ; தாய்க்குரிய அன்புடன் உங்களுக்காக மன்றாடுகின்றேன். பரலோக தந்தை உங்களுக்கு தந்த ஆன்மீக சுகந்திரத்தின் மூலம் உண்மையினை அறிந்து கொள்ள அழைக்கப்பட்டு இருக்கின்றீர்கள். உபவாசித்து செபிப்பதனால் எனது மகனின் முலமாக பரலோக தந்தையினை கண்டடைவீர்கள். பரலோக தந்தையை ஏக்கத்துடன் நீங்கள் தேடுகையில்; உங்கள் வாழ்ககை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அமையும். உங்களுடைய வாழ்க்கைப் பாதையில்; உங்களை விட்டு ஒரு போதும் பிரிய மாட்டேன்.


2011-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, இன்றும் கூட தாய்க்குரிய அன்புடன் செபிக்க அழைக்கிறேன். பரம பிதாவுடனான தனிப்பட்ட உங்கள் உறவுக்கு செபித்தல் அவசியமானது. பரம பிதா உங்களைவிட்டு காணமுடியாத தொலைவிலோ உங்களைத் தெரியாதவராகவோ இல்லை. அவர் தம்மை எனது மகனின் மூலமாக வெளிப்படுத்தி, உங்களுக்கு புது வாழ்வைத்தந்துள்ளார். எனவே உங்களை பரம தந்தையிடமிருந்து பிரிக்கும் எந்த சோதனைக்கும் இடம் கொடாதிருங்கள். உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் இறைபிரசன்னம் நிறைந்திருக்கட்டும். செபியுங்கள், எனது மகனுடன் உங்கள் மனமும் ஒரு மனப்பட செபியுங்கள். ஒரு மனப்பட்ட நல்மனதுடன் இருப்பவர்களே பரம பிதாவினை ஏற்று கொள்ள முடியும். நான் உங்களை விசேட விதமாக வழிநடத்துவேன், உங்கள் மேய்ப்பர்களை (குருக்களை( தீர்ப்பிடாது இருங்கள், ஏனெனில் அவர்கள் பரம பிதாவினால் அழைக்கப்பட்டவர்கள். செபியுங்கள் நன்றி.


2011-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களுடைய இருதயத்தினை பார்க்கும் போது, உங்களிடம் எந்த மகிழ்ச்சியையும் காணவில்லை. அதனால் இன்று உங்களுக்கு உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியினை தரவிரும்புகின்றேன். அவர் உங்களை அரவணைத்து அன்பு செய்து உங்களை பாதுகாப்பார். நான் உங்களை அன்பு செய்து உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன். இதனால் மனமாற்றம் அடைந்து இயேசுவின் அரவணைப்புக்குள் வந்து சேருங்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.


2011-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, பரம தந்தை உங்களை உங்களுடைய விருப்பப்படி வாழ அனுமதிக்கவில்லை. பதிலாக தன்னுடைய அளவு கடந்த அன்பினால் உங்களை அணைத்து, உங்களை வழிநடத்தி தன்னை அறிந்து வாழ வழிநடத்துகின்றார். எனது மகனின் மூலம் நீங்கள் அவரை அப்பா தந்தை என்று அழைக்கும் பேறினை பெற்றிருக்கின்றீர்கள். இறை குடும்பத்திலே நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள். எனினும் என் அன்பார்ந்த பிள்ளைகளே நீங்கள் உங்களுக்காக மட்டும் வாழாதிருங்கள். அதனால் உங்களை உலகின் ஒளியாயிருக்க அழைக்கின்றேன். என் மகனின் ஒளியாயிருங்கள், பரம தந்தையினை அறிந்திராது பாவத்திலும் இருளிலும் துன்பத்திலும் தனிமையிலும் வாழும் மக்களுக்கு ஒளிவிளக்காக இருங்கள். உங்களுடைய வாழ்வின் மூலம் இறை அன்பினை மற்றவர்களுக்கு எடுத்து காட்டுங்கள். நீங்கள் உங்கள் இருதயத்தினை எனக்கு திறப்பீர்களாயின், நான் உங்களை வழிநடத்துவேன். மீளவும் உங்களை குருக்களுக்காக மன்றாட அழைக்கின்றேன். நன்றி


2011-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கொடுக்க விரும்புகிறேன். உங்களைச் சுற்றியுள்ளவை எல்லாம் நிலையற்ற இவ்வுலக வாழ்வினை நோக்கியே உங்களை இட்டு செல்லும். நானோ உங்களை இரக்கத்தின் காலத்தினுடாக இட்டுச்செல்ல விழைகின்றேன். இதனால் நீங்கள் எனது மகனை ஆழமாக அறிந்து, முடிவில்லா வாழ்வினைப் பெற்றுக் கொள்வீர்கள். என் அன்பார்ந்த சிறு பிள்ளைகளே, செபியுங்கள் அதன் மூலம் இரக்கத்தின் மகிமையினப் பெற்றுக் கொள்வீர்கள். என்னுடைய அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.


2011-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, ஒரு தாய்க்குரிய அன்புடனும், இறைவேண்டுதலுடனும் நான் உங்களுடன் இருக்கின்றேன். இதனால் நீங்கள் எதிர்காலத்திற்கான நல்ல விதையாக இருப்பீர்கள். ஒரு விதையானது முளைத்து வளர்ந்து அதனுடைய கிளைகளை எல்லா இடமும் பரப்புகின்றது. நீங்கள் எதிர்காலத்திற்கான நல்ல விதையாக மாற, இறைதந்தையிடம் இரந்து மன்றாடுங்கள், உங்களுடைய பாவங்களினுடைய மன்னிப்பிற்காக அவரை வேண்டுங்கள். பாவம் இல்லாத, தூய இருதயமுடையவர்களுடைய நேர்மையான கண்களே; நான் உங்களை அழைத்துச்செல்ல விரும்பும் பாதையினை கண்டுணர முடியும். நீங்கள் அதை அறிந்து கொள்ளும் போது இறைவனுடைய அன்பினை அறிந்து கொள்வீர்கள். இவ் அன்பு உங்களுக்கு இலவசமாகவே தரப்பட்டுள்ளது. அப்போது நீங்கள் மற்றவர்களுக்கு அன்பினை கொடுக்கும் விதைகளாக மாறுவீர்கள். நன்றி


2011-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, இன்று எனது கரங்களில் எனது மகன் இயேசுவினை ஏந்தி, அவர் உங்களுக்கு தரும் சமாதனத்தை கொண்டு வருகின்றேன். சிறு பிள்ளைகளே, செபிப்பதில் நிலைத்திருங்கள். அதன் மூலம் மனிதன் தரும் சமாதானம் அல்ல இறைவன் தரும் சமாதானம், எல்லா இதயங்களிலும் குடிகொள்வதாக. இறைவன் தான் அன்பு கொள்ளும் அனைவருக்கும் கொடுக்கும் சமாதானம் நிலையானது, அதனை யாராலும் அழிக்க முடியாது. திருமுழுக்கின் வழியாக நீங்கள், விசேட விதமாக அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். எனவே, சாட்சியவாழ்வு வாழ்ந்து, இடைவிடாது இறைவேண்டல் செய்வதன் மூலம், எனது கருவிகளாகி முழு உலகினையும் இறைவனின் சமாதனத்தினை பெற்றுக்கொள்ள செய்யுங்கள். எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைகு நன்றி.