மெட்யுகோரியோவில்(Medjugorje) 2012வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு2012-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிளளைகளே, ஒரு தாய்க்குரிய அன்புடன் உங்கள் உள்ளத்தினை பார்க்கும் போது, அதில் ஆழ்ந்த துன்பத்தையும் நீடிய கவலைகளையும் காண்கின்றேன். கடந்த கால வாழ்வில் நீடிய அமைதியினைக் காணவில்லை. நீங்கள் அமைதியைத் தேடி இதுவரை நீங்கள் காணவில்லை எனில், உங்கள் இதயத்தினை இறை தந்தைக்கு திறவுங்கள். அது ஒன்றே அமைதிக்கான வழி. இறை தந்தை தனது பிளளைகளை தனிமையிலும் துன்பத்திலும் விடுவதில்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள். உங்கள் வாழ்வில் வழியும் உண்மையுமான எனது மகனை பின்பெற்றுவீர்கள். எனது மகன் தனது பணிக்காக தெரிந்து கொண்டவர்களுக்காக செபியுங்கள். நன்றி2012-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொள்கின்றேன்: உங்கள் இதயத்தைத் திறவுங்கள் அத்துடன் எனது அழைப்பைக் கேளுங்கள். நான் முதலில் நீங்கள் அடைக்கலமும் அமைதியும் பெறுவதற்காக உங்களை எனது மாசற்ற இருதயத்திற்கு அண்மையாக கொண்டுவர விரும்புகின்றேன். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வரை நீங்கள் செபித்துக்கொள்ளுங்கள். இந்த செபத்தின் மூலமாக எல்லாம் வல்ல இறைவனின் கருணை எனது விரிக்கப்பட்ட கரங்கள் ஊடாக இந்த அமைதியற்ற உலகிற்கு அமைதியைக் கொடுப்பதாக. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வு, விசுவாசம் மற்றும் செபம் உங்கள் நம்பிக்கையை நாளுக்கு நாள் உங்கள் இதயத்தில் வளரச்செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி கூறுகின்றேன்!2012-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த நேரத்தில் உங்களை நான் விசேடவிதமாக அழைக்கிறேன்: இதயத்தால் செபியுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள் ஆனால் குறைவாகச் செபிக்கின்றீர்கள். தூய விவிலியத்தை வாசியுங்கள், தியானியுங்கள் மற்றும் அதில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தட்டும். கடவுளில் உங்கள் வாழ்வின் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள நான் உங்களுக்கு உற்சாகத்தையும் அன்பையும் வழங்குவேன். நீங்கள் என் அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!2012-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அளவிடமுடியாத இறைவனின் அன்புக்கு ஊடாக நான் உங்களிடம் வருகைதந்து வாஞ்சையுடன் எனது மகனை கட்டித்தழுவிக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். தாயின் இதயத்தோடு உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்வதோடு, எனது பிள்ளைகளே, உங்களை நான் எச்சரிக்கிறேன், உங்களது எவ்விதமான கவலைகளையும், எனது மகனிடம் தெரியப்படுத்தாதிருந்தால் அவையே முதலிடம் பெறட்டும். உங்கள் வாழ்வை வளப்படுத்த அவரை அறிந்து கொள்ளாமலிருக்க இடம்கொடாதீர்கள். எனது மகன் உங்களில் நிறைந்திருக்க தூயஆவியை மன்றாடுங்கள். இருள்சூழ்ந்த மற்றும் நம்பிக்கையற்ற இக்காலகட்டத்தில் நீங்கள் இறைஒளியின் சீடர்களாயிருக்க வேண்டுமென மன்றாடிக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் சோதனைக் காலமாயுள்ளது. கையில் செபமாலையுடனும் இதயத்தில் அன்புடனும் என்னோடு வாருங்கள். நான் உங்களை எனது மகனின் உயிர்ப்புக்கு அழைத்துச் செல்வேன். எனது மகனை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்காக செபியுங்கள், அவர்கள் எப்பொழுதும் அவரால் மற்றும் அவரில் வாழட்டும்-நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.மிர்ஜானா சொல்டோக்கு 18 பங்குனி 2012ல் இடம்பெற்ற வருடாந்தக் காட்சி

மிர்ஜானா ட்றாகிசேவிச்-சொல்டோ எனும் காட்சி காணுபவர் 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரை நாளாந்தம் காட்சிகளைக் கண்ணுற்றார். இதன்போது இறுதியான அன்னையின் தரிசிப்பின்போது அன்னை கூறினார், நீ எனது 10 இரகசியங்களையும் நம்புவதாக இருந்தால், வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல் காட்சி தருவதாகத் தெரிவித்தார். இதன்படியே பலவருடங்களாக நடந்துவருகின்றது. இந்த வருடமும் இதுபோன்றே இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான யாத்திகர்கள் ”நீல சிலுவை” இருக்கும் இடத்தில் ஒன்றுகூடி செபமாலை செபித்தனர். காட்சி 14.00 மணிக்குத் தொடங்கி 14.05 வரை இடம்பெற்றது.

”அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் அன்னையாகவும், உங்களுக்காகப் பரிந்து பேசுபவளாகவும் இருக்க விரும்புவதால் நான் உங்கள் மத்தியில் வருகின்றேன். நான் உங்களுக்கும் வானகத் தந்தைக்கும் இடையில் தொடர்பாளராக இருக்க விரும்புகிறேன். நான் உங்களை எனது கரங்களில் எடுப்பதுடன் தீய ஆவிகளுடனான மோதல்களின்போது உங்களுடன் இருந்து போராட விரும்புகின்றேன். எனது பிள்ளைகளே, எனது முழுமையான ஆசீரையும் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வாழ்வை எனது தாய்க்குரிய கரங்களில் எடுத்துக்கொள்வதுடன், உங்களுக்கு சமாதானத்தையும் அன்பையும் புகட்டி அதன்பின் உங்களை எனது மகனிடம் வழங்குவேன். நான் உங்களைக் கேட்டுக்கொள்வது, நீங்கள் செபிப்பதுடன் உபவாசம் இருங்கள், இதன்மூலம் மட்டுமே நீங்கள் அறிந்து கொண்டுள்ளபடி எனது தாய் இதயத்தினூடாக நீதியான வழியில் எனது மகனுக்கு பரிந்துரை வழங்க முடியும். எனது மகனுடன் ஒன்றிணைந்து கடவுளின் வார்த்தைகளை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.”2012-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தாயன்புமிகு எனது ஆசீரை வழங்குவதோடு தொடர்ந்து செபிக்குமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். செபிப்பது உங்கள் கட்டாய கடமையாக இருந்துகொள்வதோடு, அதன்மூலம் நீங்கள் நாளாந்தம் பரிசுத்தத்தில் வளர்ந்து கொள்ளுங்கள். மனந்திரும்பலுக்காக மேலும் உழையுங்கள், ஏனெனில் நீங்கள் தொலைவில் உள்ளீர்கள் அன்பான பிள்ளைகளே. நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!2012-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்க அழைக்கிறேன். எனது பிள்ளைகளே. சூரிய வெப்பத்தில் எவ்வாறு மலர்கள் விரிகின்றனவோ அதுபோல் நீங்களும் உங்கள் இதயத்தை இறைவனுக்காக விருப்புடன் திறவுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்வேன். எனது குரலை செவிமடுப்பதற்கு நன்றி கூறுகின்றேன்.2012-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை மனந்திரும்பவும் தூய்மையாக இருக்கவும் அழைக்கிறேன். இறைவன் உங்களிடமிருந்து செபத்தின் ஊடாக மகிழ்வையும் சமாதானத்தையும் தர விரும்புகிறார், ஆனால் நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, இன்னும் தொலைவிலேயே உள்ளீர்கள், உலகுடன் மற்றும் ஏமாற்றுதலுடன் பின்னிப் பிணைந்துள்ளீர்கள். ஆகவே உங்களை நான் மீண்டும் அழைக்கிறேன், உங்கள் இதயத்தையும் பார்வையையும் கடவுள் மற்றும் கடவுளுக்குரியவைகளுக்காகத் திறவுங்கள், மகிழ்ச்சியும் சமாதானமும் உங்கள் இதயத்தை நிரப்பும். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி!2012-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இதயத்தில் பெரிதான நம்பிக்கையுடன் இன்றும் உங்களை செபிக்க அழைக்கின்றேன். நீங்கள் செபிக்கும்போது, என்னுடன் இருந்துகொண்டு, எனது மகனின் விருப்பைத் தேடுவதுடன் அவரில் வாழ்கின்றீர்கள். திறந்த மனதுடன் செபத்தில் வாழும்போது ஒவ்வொரு வேளையிலும் உங்கள் உள்ளம் பேருவைகையால் நிறைந்திருக்கும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைத்து வேண்டுதல்களையும் உங்கள் சார்பாக எனது மகன் இயேசுவிடம் சமர்ப்பிப்பேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி!2012-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை நல்லவற்றிற்காக அழைக்கிறேன். நீங்கள் சமாதானத்தை எடுத்துச் செல்பவர்களாகவும், இந்த உலகின் நற்கனிகளாகவும் இருந்து கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு சக்தியைத் தருவதற்கும், இதனால் உங்கள் இதயத்திலும் வாழ்விலும் நம்பிக்கையும் நிறைவும் எப்பொழுதும் இருப்பதற்குமாகச் செபித்துக் கொள்ளுங்கள், அது இல்லாவிடின் இதயத்தில் மகிழ்ச்சியும் எதிர்காலமும் அற்றுப் போய்விடும், இறைவனுக்காக உங்கள் இதயத்தை நீங்கள் திறந்து கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் இறைவனின் பிள்ளைகள் என்பதுடன் அவரது நம்பிக்கைகளையும் இவ்வுலகில் சுமந்து செல்கின்றீர்கள், நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்!2012-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களோடு இருப்பதுடன் உங்களைக் கைவிடவில்லை. நான் உங்களை எனது மகனுக்கு அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனது பிள்ளைகளே நீங்கள் என்னுடன் நித்திய வாழ்வை அனுபவிக்கவும், அமைதியின் மகிழ்வை உணர்ந்துகொள்ளவும், எப்பொழுதும் நலமுடன் இருந்துகொள்ளவும் விரும்புகின்றேன். நீங்கள் மனித பலவீனத்தை வெற்றிகொள்ளவும், எனது மகன் உங்களுக்கு அவரது தூய இதயத்தை தருமாறும் நான் மன்றாடுகிறேன். எனது அன்பான பிள்ளைகளே, ஒருவர் திருச்சிலுவையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு தனது பாவங்களை அறிக்கையிடுவது, மற்றும் அதனால் விண்ணகத் தந்தையை அவமதித்தது, இன்றும் அவமதித்துக்கொண்டிருப்பது அத்துடன் அவரை அறிந்து கொள்ளாமல் இருப்பது குறித்து தூய இதயத்திற்குத் தெரிந்திருக்கும். நீங்கள் நம்பிக்கையின் ஒளியை அறிந்துகொள்ள தூய இதயத்துடன் நான் மன்றாடுகிறேன். இதன்மூலம் உங்கள் அருகில் இருப்பவர்களும் எனது மகனின் அன்பை உணர்ந்து கொள்வார்கள். எனது மகனை தேர்ந்து கொண்டவர்களுக்காக மன்றாடுங்கள் அத்துடன் அவர்கள் நலமடைய மன்றாடிக் கொள்ளுங்கள். எந்தத் தீர்ப்பின்போதும் உங்கள் வாய் மூடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.2012-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் இதயத்தில் நம்பிக்கையுடன் உங்களுக்காக மன்றாடுவதுடன் நீங்கள் ஒவ்வொருவரும் எனது வேண்டுகோள்களை இதயத்தில் ஏற்று வாழ்வதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்ய முடிந்தமைக்காகவும் எனது மாசற்ற இதயத்தின் ஊடாக உங்களை மனம் திரும்பச் செய்தமைக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இதயத்தைத் திறந்து நீங்கள் பரிசுத்தருக்காகத் தீர்மானம் செய்வதுடன் அந்த நம்பிக்கை உங்கள் இதயத்தில் மகிழ்வை வழங்கட்டும். நீங்கள் எனது வேண்டுகோளைப் பின்பற்றுவதற்காக நன்றி!2012-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது கண்கள் உங்களைப் பார்க்கும்போது, எனது உள்ளம் என்னுடன் ஒன்றித்துள்ள ஆன்மாக்களைத் தேடுவதுடன், விண்ணகத்திலிக்கும் தந்தையை இதுவரை அறிந்திருக்காதவர்களுக்காகச் செபிப்பதன் முக்கியத்தை உணர்ந்துகொள்கின்றது. நான் உங்களை அழைக்கின்றேன் ஏனென்றால் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள். பணிகளை ஏற்றுக்கொள்வதுடன் எதற்கும் அஞ்சாதீர்கள், நான் உங்களைத் திடப்படுத்துவேன். நான் உங்களை எனது இரக்கத்தால் நிரப்புவேன். எனது அன்பால் நான் உங்களை தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பேன். நான் உங்களோடு இருப்பேன். எனது பிரசன்னத்தால் உங்களது பிரச்சினையான வேளைகளில் தேற்றுதல் செய்வேன். உங்கள் திறந்த இதயத்திற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அருட்பணியாளர்களுக்காக மன்றாடுங்கள். நீங்கள் எனது மகனுடன் ஒன்றித்திருப்பதற்காக செபிப்பதுடன், உங்களுக்கிடையே எவ்வளவு உறுதியான ஒன்றிப்பு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு உறுதியாக இருந்து கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் ஒன்றித்திருப்பீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்2012-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நீங்கள் உன்னத இறைவன் தந்துள்ள இயற்கையின் வர்ண ஜாலங்களைக் காணும்போது, உங்கள் இதயத்தைத் திறந்து நன்றியுணர்வுடன் அவர் தந்த அனைத்து நன்மைகளுக்காகச் செபிப்பதுடன்: இங்கு நான் நிரந்தரமாக எதிர்பார்த்திருக்கும் வானக வாழ்விற்காகப் படைக்கப்பட்டுள்ளதுடன், இறைவன் அளவிட முடியாத விதத்தில் எம்மை அன்பு செய்கின்றார் என்று கூறுங்கள். இதனால்தான் அவர் உங்களுக்கு என்னைத் தந்துள்ளதுடன், உங்களுக்குக் கூறச் சொல்கின்றார்: கடவுளில் மட்டுமே உங்கள் சமாதானமும் நம்பி;க்கையும் இருக்கட்டும், அன்பான பிள்ளைகளே. எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்2012-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை அழைப்பதுடன் உங்களிடையே வருகின்றேன், ஏனென்றால் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள். எனக்கு தூய இதயம் தேவைப்படுகின்றது. தூயஆவியானவர் உங்களை வழிநடத்திட நான் செபிப்பதுடன், நீங்களும் செபித்துக் கொள்ளுங்கள், அவர் உங்களை அன்பால் வழிகாட்டித் திடப்படுத்துவதுடன், இரக்கத்தாலும் தூய இதயத்தாலும் நிரப்புவார். அதன்பின்பே என்னை விளங்கிக் கொள்வீர்கள், எனது பிள்ளைகளே. அதன்பின்பே இறைவனின் அன்பை விளங்கிக் கொள்ளாதவர்கள் குறித்து நான் படும் வேதனைகளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எனக்கு நீங்கள் உதவ முடியும். நீங்கள் அன்பான இறைவனின் விளக்கை ஏந்துபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பார்வையிருந்தும் பார்க்காமல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் விளக்குகளாக இருக்க வேண்டும். எனது பிள்ளைகள் அனைவரும் எனது மகனைப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். எனது பிள்ளைகள் அனைவரும் அவரது இறையாட்சியை அனுபவிக்க வேண்டுமென விரும்புகின்றேன். மீண்டும் நான் உங்களை அழைத்து, எனது மகனை நோக்கிக் கூவியழைப்பவர்களுக்காக செபிக்கும்படி வேண்டுகிறேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.2012-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை எனது விடயத்திற்காக செபிக்க அழைக்கின்றேன். சாத்தான் புத்திசாலித்தனமாக பலரது இதயத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் இழுத்துக் கொள்வதால் மீண்டும் மீண்டும் தவமிருந்து செபித்துக் கொள்ளுங்கள். எனது பிள்ளைகளே, நான் உங்களை பரிசுத்தரிடம் அழைப்பதுடன் இரக்கத்தில் வாழ அழைக்கிறேன். எனது மகனிடம் மன்றாடுங்கள், இதனால் அவர் நீங்கள் விரும்பும் தனது சமாதானத்தாலும் தனது அன்பாலும் நிரப்புவார். எனது அழைப்பை நீங்கள் பின்பற்றுவதற்காக நன்றி2012-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் நான் உங்கள் அனைவரையும் செபங்களைப் புதுப்பிக்க அழைக்கிறேன். புனிதமான ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதன் மூலம் உங்கள் இதயத்தைத் திறப்பதுடன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் நீங்கள் பாவக் குழியில் விழுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வேன், ஆனால் நீங்கள் தூய இறைவனின் வழியில் மனம்மாற வேண்டும், இதனாலேயே உங்கள் இதயம் இறைவனின் அன்பில் சங்கமிக்கும். அவருக்கு காலத்தைக் கொடுங்கள் அவர் தன்னை உங்களுக்கு வழங்குவார், இதன்மூலம் இறைவனின் சித்தத்தின்படி அவரது அன்பையும் வாழ்வில் மகிழ்வையும் கண்டுகொள்வீர்கள். எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!2012-12-25 அன்றுபாலகன் இயேசுவும் அன்னைமரியாளும் வழங்கிய செய்தி

இறைவனின் அன்னை, பாலகன் இயேசுவைக் கரங்களில் தாங்கியவாறு வருகை தந்தபோது எவ்விதமான செய்தியையும் வழங்கவில்லை. மாறாக பாலகன் இயேசு பேசுவதற்கு ஆரம்பித்ததுடன்: „நானே உங்களது சமாதானம்> எனது கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்!“ என அவர் கூறினார். இறை அன்னையும் பாலகன் இயேசுவும் ஒன்றுசேர்ந்து சிலுவை அடையாளத்தின் மூலம் எம்மை ஆசீர்வதித்தனர்.