மெட்யுகோரியோவில்(Medjugorje) 2013வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு2013-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! மிகவும் அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் இதயத்தை எனது இதயமாக மாற்ற நான் முயற்சிக்கின்றேன். என் உதாரணத்தின் மூலம் நான் உங்களுக்கு திடம், புத்தி மற்றும் அன்பைக் கற்பிக்க முயற்சிக்கின்றேன். ஏனென்றால் எனக்கு நீங்கள் தேவை. நீங்கள் இல்லாது என்னால் இருக்க முடியாது எனது பிள்ளைகளே. இறைவனின் சித்தத்திற்கமையவே உங்களைத் தேர்வுசெய்தேன். அவரது சக்தியால் நான் உங்களை திடப்படுத்துகின்றேன். ஆகவே எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தைத் திறக்கப் பயப்பட வேண்டாம். நான் உங்களை எனது மகனிடம் வழங்குவேன், அவர் உங்களுக்கு இறைஅமைதியைப் பரிசளிப்பார். நீங்கள் அவருக்காக எதிர்கொள்ளும் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள, இறைவனின் அன்பு உங்கள் வாழ்வில் சாட்சியமாகட்டும். எனது மகன் உங்களுக்கு அதற்கான துணிவை வழங்குவார். மன்னிப்பு, நோன்பு மற்றும் செபிப்பதன் ஊடாக நான் உங்களை வழிநடத்துவேன். எனது அன்பு அளவிட முடியாதது. நீங்கள் பயப்பட வேண்டாம். எனது பிள்ளைகளே, ஆயர்களுக்காக செபியுங்கள். தீர்ப்புப் பெறுவதற்கு முன்பாக உங்கள் உதடுகளை மூடிக்கொள்வதுடன், மறக்காதீர்கள், எனது மகனே உங்களைத் தெரிவுசெய்தார், அவருக்கு மட்டுமே தீர்ப்பளிக்க உரிமையுண்டு. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்2013-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கின்றேன். உங்கள் செபம், நீங்கள் உங்கள் வாழ்வை சாட்சியப்படுத்தும்வரை உயிர்த்துடிப்பான கற்கள் போன்று உறுதியானதாக இருக்கட்டும். உங்கள் விசுவாசத்தின் அழகுக்கு சாட்சியமாகுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனிடம் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிந்துபேசுவேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்!2013-02-02அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பு என்னை உங்களிடம் கொண்டு வருகின்றது. என் மகன் காட்டிய அதே அன்பு, அவர் சிலுவையிலே உங்களுக்காக காட்டிய அன்பு, எல்லோரையும் மன்னிக்கும் அன்பு. நீங்கள் மற்றவர்களை அன்பு செய்கிறீர்களா? எனது தாய் உள்ளம் உண்மை அன்பினை உங்களிடம் தேடுகின்றது. நீங்கள் இறைவன் மீதான அன்பினால், உங்களுடைய வாழ்வின் திட்டங்களை , இறைவனின் திட்டங்களாக கையளிக்கும் நிலையில் இல்லை. உங்களிடம் உண்மை அன்பு இல்லாத காரணத்தால், மற்றவர்களை இறைவனிடம் கொண்டு வர இயலாதவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் இருதயத்தை என் பக்கம் திருப்புங்கள் நான் உங்களை வழி நடத்துவேன். என் மகனைப்போல மற்றவர்களை மன்னிக்க கற்றுத்தருவேன். நான் உங்களை உண்மை ஒளியில் வாசம் செய்யும் பரலோக தந்தையை நோக்கி வழினடத்துவேன். உபவசித்து செபிப்பதால் நீங்கள் மேய்ப்பர்களை உண்மை அன்பினை நோக்கி வழிநடத்துபவர்களாக மாறுவீர்கள். நன்றி2013-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்க அழைக்கிறேன். பாவம் உங்களை பிரபஞ்சக் குழியில் தள்ள இழுக்கின்றது, ஆனால் நான் உங்களை பரிசுத்தமான இறை அனுபவத்தில் வாழ வழிகாட்டுகிறேன், இருந்தும் நீங்கள் நன்மை மற்றும் தீமையை நோக்கி போராட உங்கள் சக்தியை செலவிடுகின்றீர்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், உங்களுக்கு செபங்கள் மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். அத்துடன் உங்கள் வாழ்வு இறைவனுக்கு இலகுவில் உகந்ததாக இருக்கும்வரை செபியுங்கள். நீங்கள் என் அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!2013-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, தாய்க்குரிய அன்புடன் உங்கள் இதயத்தை கடினப்படுத்தாதிருக்க வேண்டுகின்றேன். பரலோக தந்தை உங்கள் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பினால், உங்களை கண்டித்து உணர்த்தும் வார்த்தைகளை மறந்து விடாதீர்கள். நீங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்கிறீர்களா? பரலோக தந்தை அளவு கடந்த அன்பினால் தம் ஒரே மகனை சிலுவையில் மரணிக்க அனுப்பினார் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லாவிடில் இப்போதாவது ஏற்று கொள்ளுங்கள்.

என் பிள்ளைகளே, என் மகனின் அளவு கடந்த அன்பினை மறந்து விடாதீர்கள். உபவாசம் செய்து செபித்து அமைதியுடன் கூடிய நம்பிக்கையினை நாடுங்கள். சிலுவையினால் எனது மகன் உங்களை சூழ்ந்துள்ள இருளினை அகற்றியுள்ளார். தம்மில் புதிய வாழ்விற்கான வழியினை காண்பிப்பார். என் மகனில் நீங்கள் வாழும் போது, பாவத்தில் வாழும் மனிதர்களுக்கு நீங்கள் ஓளியாக மாறுவீர்கள். தாயாக நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் என்னை அன்பு செய்யுங்கள், என் மகன் தெரிந்தெடுத்த மேய்ப்பர்களுக்காக செபியிங்கள். நன்றி2013.03.18 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

மியெர்ஜானா சொல்டோக்கு பங்குனி 18, 2013ல் வருடாந்தக் காட்சி கிடைத்தது மியெர்ஜானா டிறாகிசெவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982வரை நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். அந்த வேளையிலான இறுதித் தரிசிப்பின்போது அவரது 10வது இரகசியத்தில் நம்பிக்கை வைத்ததால், வருடம் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல் காட்சியளிப்பார் என மரியன்னையால் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செபமாலை செபிக்கக் குழுமியிருந்தனர். அன்னையின் தரிசிப்பு 13:52க்கு ஆரம்பித்து 13:58வரை இடம்பெற்றது.

"அன்பான பிள்ளைகளே! முழு நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் இறைவனின் பெயரைப் புகழவும், எந்நாளும் இதயத்திலிருந்து அவரது பேரன்புக்காக நன்றி கூறவும் நான் உங்களை அழைக்கிறேன். எனது மகன் சிலுவையில் காட்டிய தனது அன்பிற்காக, நீங்கள் அனைத்தையும் மன்னித்துக் கொள்ளுங்கள். எனது மகன் உங்கள் இதயத்தைத் திறக்க மாட்டார் எனும் பயமோ வெட்கமோ கொள்ளத் தேவையில்லை. இதற்கு மாறாக, எனது பிள்ளைகளே, வானகத் தந்தையிடம் நீங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள், எனது மகன் உங்களை அன்பு செய்வது போன்று நீங்களும் அவரை அன்பு செய்யுங்கள். நீங்கள் உங்களை அன்பு செய்தால், ஏனைய மனிதர்களையும் அன்பு செய்வீர்கள், நீங்கள் அவர்களில் எனது மகனைக் காண்பதுடன் அவரது பேரன்பைக் கண்டுகொள்வீர்கள். இறை நம்பிக்கையில் வாழுங்கள்! எனது மகன் என்னூடாக நீங்கள் ஆற்றவேண்டிய பல செயற்பாடுகளைத் தயார்படுத்துவதுடன் அவற்றை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவருக்கு நன்றி கூறுங்கள். விசேடமாக உங்களுக்காக தொடர்பாளர்களாக வானகத் தந்தையின் மன்னிப்பைப் பெற்றுத் தரும் மேய்ப்பர்களுக்கு நன்றி கூறுங்கள். எனது பிள்ளைகளே. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."அன்னை மரியாள் 25.03.2013 அன்று மரியாவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
இரக்கத்தின் காலமாகிய இந்நாட்களில், என் மகனின் சிலுவைப்பாடுகளையும் அவரது துன்பகரமான பாடுகளையும் தியானிக்க உங்களை அழைக்கின்றேன். உங்கள் வாழ்க்கையில் வரும் பாடுகளை மகிழ்வோடு சுமப்பதன் மூலம், என் மகனின் பாடுகளுடன் நிலைத்திருங்கள். ஏனெனில் அவர் தம்மையே முழுமையாக கொடுத்து உங்களை அன்பு செய்கின்றார். உங்கள் மனங்களில் அன்பும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் வரை செபியுங்கள்.
எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.அன்னை மரியாள் 02.04.2013 அன்று மரியானவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
என் மகனுடன் நீங்கள் ஒன்றிணைந்து இருக்க உங்களை அழைக்கின்றேன். செபிப்பதாலும் திருப்பலிகளில் தொடர்ந்து பங்கெடுப்பதாலும் என் மகனுடன் இணைந்து இருங்கள். திருப்பலியில் எனது மகன் தன்னை சிறப்பாக உங்களுடன் இணைக்கின்றார். எப்போதும் உங்களுடைய திட்டத்தை அல்ல ஆண்டவருடைய திட்டத்தினையே நிறைவேற்ற முயலுங்கள். ஏனெனில் நீங்கள் இப்போது இருப்பதும் ஆண்டவராலேயே. ஆண்டவர் இன்றி நீங்கள் ஒன்று இல்லாதவர்களாவீர்கள். ஆண்டவராகிய கடவுளை மகிமைப்படுத்துமாறு தாய்க்குரிய அன்புடன் உங்களை அழைக்கின்றேன். அப்பொழுது நீங்களும் அவரால் மகிமைப்படுத்தப்படுவீர்கள். அன்பையும் மனிதத்துவத்தையும் எல்லா மனிதர்களுக்கும் காட்டுங்கள், எனெனில் அதனால் தான் என் மகன் உங்களுக்கு கடவுளிடம் வருவதற்கான வழியினைத் துறந்தார். இன்னும் தந்தை இறைவனின் அன்பினை அறிந்து அவரை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, அதற்கான வழியினை தொடர்ந்து காண்பியுங்கள். உங்களுடைய வாழ்வின் மூலம் மற்றவர்களுக்கு உண்மை அன்பினை எடுத்துக்காட்டுங்கள். ஒரு நாள் தந்தை இறைவனுக்கு முன்பாக நீங்கள் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை மறவாதிருங்கள். என் மகன் தெரிந்து கொண்ட மேய்ப்பர்களுக்காக மன்றாடுங்கள். என் மகன் அவர்களை உங்களுக்கு தமது அன்பளிப்பாக தந்திருக்கின்றார். என்வே அவர்களுக்காக எப்போதும் செபியுங்கள். நன்றிஅன்னை மரியாள் 25.04.2013 அன்று மரியாவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
செபியுங்கள் செபியுங்கள் செபியுங்கள்....
சூரியனின் வரவிற்காக காத்திருந்து மலரும் பூக்களைப்போல உங்கள் இதயங்களும் திறக்கப்பட செபியுங்கள். என்னை உங்களிடம் அனுப்புவதன் மூலம் ஆண்டவர் ஒரு பெரிய இரக்கத்தின் காலத்தினை உங்களுக்கு தருகின்றார். ஆனால் நிங்களோ, எனது இருதயத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். தனித்தும் குடும்பமாகவும் செபிக்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். வேதாகமம் எப்போழுதும் உங்களை ஊக்கிவிற்கும் வழிகாட்டியாக இருக்கட்டும். தாய்க்குரிய பாசத்துடன் உங்களை நான் ஆசீர்வதிக்கின்றேன். எனது அழைத்தலுக்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.அன்னை மரியாள் 02.05.2013 அன்று மிர்யானவுக்கு அளித்த செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
திரும்பவும் நான் உங்களை மற்றவர்களை தீர்ப்பிட அன்றி அன்பு செய்வதற்கே அழைக்கின்றேன். என்னுடைய மகன் உங்கள் மத்தியில் வாழ்ந்து;இரட்சிப்பிற்கான வழியை காட்டினார். அவர் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தது உங்களை இரட்சிக்கவே அன்றி உங்களை தீர்ப்பிட அல்ல. நீங்கள் என் மகனை பின்பற்ற விரும்பினால் நீங்கள் மற்றவர்களை தீர்ப்பிட மாட்டீர்கள் மாறாக பரலோக தந்தை உங்களை அன்பு செய்வதைப் போல நீங்களும் மற்றவர்களை அன்பு செய்வீர்கள். வாழ்கையில் வரும் தாங்கமுடியாத சுமையினால் விரக்தியடையும் போது, தீர்ப்பிடாதீர்கள். பதிலாக நீங்கள் பரலோக தந்தையின் அன்புக்கும் மகிமையிற்கும் உரியவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர் அன்பாய் இருக்கிறார்.

    பிள்ளைகளே நான் காட்டும் வழியில் இருந்து விலகாதிருங்கள், அழிவுக்கு இட்டு செல்லும் நரகத்தினை நோக்கி செல்லாதிருங்கள். செபிபதும் நோன்பிருத்தலும் உங்களை இன்னும் விசுவாசத்தில் உறுதிப்படுத்தும். அப்போது நீங்கள் பரலோக தந்தை விரும்புவதைப் போல வாழ முடியும். நீங்கள் விசுவாசத்தினதும் அன்பினதும் அப்போஸ்தலர்களாக இருப்பீர்கள். உங்கள் வாழ்கை நீங்கள் சந்திக்கும் மற்றவர்களுக்கு அசீர்வாதமாக அமையும். அப்போது நீங்கள் பரலோக தந்தையோடும் என் மகனோடும் ஒன்றித்திருப்பீர்கள்.
        என் பிள்ளைகளே இதுவே உண்மை, இந்த உண்மை உங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தும், நீங்கள் சந்திக்கும் எல்லோரையும் மாற்றும், இன்னும் என் மகனிடம் வந்து சேராதவர்களையும் மாற்றும். என் மகன் மேய்ப்பர்களை உங்களுக்கு பரிசாக தந்து இருக்கின்றார். அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்களுக்காக செபியுங்கள். நன்றி.அன்னை மரியாள் 25.05.2013 அன்று மிர்யானவுக்கு அளித்த செய்தி

என் அன்புக் குழந்தைகளே!
உங்களுடைய செபங்கள் மிகவும் அன்புக்குரிய என் மகன் இயேசுவின் இரக்கமி குந்த இதயத்தை திறக்கும ளவுக்கு பலமானதாக இருக்க உறுதியுடனும், திடத்து டனும் மன்றாடும்படிஇன்று நான் உங்களை அழைத்து நிற்கின்றேன்.குழந்தைகளே உங்களுடைய இதயங்கள் கடவுளின் அன்புக்காக திறக்கப்படும்வரை இடைவிடாது செபியுங்கள். நான் உங்க ளோடு இருக்கின்றேன், உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன், உங்களுடைய மன ந்திரும்புதலுக்காகச் செபிக்கின்றேன். என்னுடைய அழைப்பிற்கு செவிமடுத்ததற் காக உங்களுக்கு நன்றி.2013-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த அமைதி இழந்த காலத்தில் உங்களை நான் மீண்டும் எனது மகனின் பாதையில் செல்லவும் அவரைப் பின்தொடரவும் அழைக்கிறேன். வேதனைகள், துன்பம் மற்றும் தேவைகளை நான் அறிந்துள்ளேன், ஆனால் எனது மகன் உங்களைத் தேற்றுவதுடன் அவரில் நீங்கள் சமாதானமும் நலமும் பெற்றுக்கொள்வீர்கள். எனது பிள்ளைகளே, மறக்க வேண்டாம், எனது மகன் உங்களைத் தன் சிலுவையால் மீட்டதுடன் கடவுளின் புதிய பிள்ளைகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தந்துள்ளார், இதனூடாக இறைத்தந்தையை நீங்கள் "அப்பா" என அழைக்கின்றீர்கள். இதன்மூலம் நீங்கள் இறைத்தந்தையைப் போற்றுவதுடன், அன்பு செய்து மன்னித்து வாழுங்கள், ஏனென்றால் உங்கள் தந்தை அன்பு செய்பவராகவும் மன்னிப்பளிப்பவராகவும் உள்ளார். செபம் செய்வதுடன் தவமிருங்கள், ஏனென்றால் இந்த வழியே உங்களை வழிநடத்தி இறைத்தந்தையைக் கண்டடைய வைக்கும். நீங்கள் தந்தையைக் காண்பீர்களானால் அவர் உங்களுக்குத் தேவையென்பதை உணர்ந்து கொள்வீர்கள். (இதை இறைஅன்னை உருக்கமாகவும் உறுதியாகவும் கூறினார்): "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கும் ஒரு மக்கள் குழுமத்தின் பிள்ளைகளுக்கு நான் தாயாக இருக்க விரும்புகிறேன்". ஆகவே எனது பிள்ளைகளே, எனது மகனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், அவருடன் ஒன்றுபடுங்கள், கடவுளின் பிள்ளைகளாக வாழுங்கள். உங்களை மேய்ப்பவர்களை அன்பு செய்யுங்கள், எப்படி எனது மகன் அவர்களை அன்பு செய்து உங்களுக்குப் பணியாற்ற அழைத்துள்ளாரோ அதே போன்று நீங்களும் அவர்களைக் கனம் பண்ணுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்!2013.06.25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இதயத்தில் மகிழ்ச்சியுடன் நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்வதுடன், நான் உங்களை எனது மாசற்ற இதயத்திற்கு அண்மையாக வரும்படி அழைக்கிறேன், இதனால் நான் உங்களை எனது மகன் இயேசுவிற்கு அண்மையாகக் கொண்டுவர முடியும் என்பதுடன், இதனால் அவர் உங்களுக்கு அவரது சமாதானத்தையும் அன்பையும் வழங்குவதுடன், அதுவே உங்கள் அனைவருக்கும் உணவாக அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் செபங்களை வெளிப்படுத்துங்கள், எனது அன்பை வெளிப்படுத்துங்கள். நான் உங்கள் அன்னையாய் இருப்பதுடன், உங்களை பாதுகாத்து உங்கள் அவசர வேளைகளில் ஒருபோதும் உங்களைத் தனியாக விடமாட்டேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் எனது பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள், இதனால் நான் உங்கள் அனைவரையும் எனது மகனிடம் அழைத்துச் செல்ல முடியும். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!2013-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! தாய்க்குரிய அன்புடன் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்ää உங்கள் இதயத்தை பரிசளியுங்கள்ää இதன்மூலம் நான் உங்களை எனது மகனிடம் அழைத்தச் செல்வதுடன்ää அவர் உங்களை அனைத்து பாவங்களிலுமிருந்தும்ää உங்களை பிழையாக வழிநடத்தும் மற்றும் உங்கள் அமைதியைக் குலைக்கும் அனைத்துச் சக்திகளிலுமிருந்தும் விடுவிப்பார். நான் உங்களை எனது மகனின் விடுதலை வழியில் அழைத்துச் செல்ல விரும்புவதோடுää கடவுளின் முழுவதுமான சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். வானகத் தந்தையுயின் மன்னிப்பை நீங்கள் பெறுவதற்கு உங்களது செபம் மற்றும் ஒறுத்தல்கள் துணைபுரிவதுடன்ää அன்புத் தூதுவர்களாக நீங்கள் பிறப்பெடுக்க வேண்டும். எனது அனைத்துப் பிள்ளைகளும் இவ்வாறு ஆகவேண்டும் என விரும்புகிறேன். இதன்மூலம் வானகத் தந்தையின் நம்பிக்கையை நீங்கள் விரிவாக்கிக்கொள்வதோடு மோட்சத்தின் வாசல்களையும் திறந்து கொள்ள முடியும். அன்பான பிள்ளைகளேää உங்களை மேய்ப்பவர்களுக்கு உங்களது மகிழ்ச்சியையும் அன்பையும் உதவிகளையும் வழங்குங்கள்ää இதையே எனது மகன் பெரியளவில் உங்களிடமிருந்து விரும்புகிறார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.2013-08-02 அன்று அன்னைமரியாளினால் மிர்ஜானாவிற்கு வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
நீங்கள் உங்கள் இருதயத்தை என்னை நோக்கி திருப்பும் போது, உங்களால் என்னை புரிந்து கொள்ள முடியும். அப்போது எவ்வளவு அன்புடன் உங்களை நான் அழைக்கின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை மாற்ற விரும்புகின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை என் மகனுடைய சீடர்களாக மாற்ற விரும்புகின்றேன் என்பதை, எவ்வளவு அன்புடன் உங்களை என் மகன் அருளும் அன்பினால் நிரப்ப விரும்புகின்றேன் என்பதை, என்னுடைய அள்விடமுடியாத தாய்க்குரிய அன்பினை, நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
என் அன்பார்ந்த பிள்ளைகளே செபியுங்கள், செபிப்பதால் விசுவாசம் மலர்கின்றது, அன்பு பிறக்கின்றது. அந்த அன்பினால் சுமக்க முடியாத சிலுவைகளைக்கூட நீங்கள் சுமக்க கூடியதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் சிலுவையை தனியாக சுமக்க போவதில்லை. என் மகனுடன் சேர்ந்து ஒரே குடும்பமாக, பரலோக தந்தையை புகழ்ந்து பாடுங்கள். செபியுங்கள், அன்பு என்ற கொடைக்காக செபியுங்கள், ஏனெனில் அன்பு எல்லாவற்றையும் மன்னிக்கின்றது. அன்பு எல்லோருக்கும் பணிசெய்யும், அன்பு எல்லாரிலும் சகோதரத்துவத்தை காணும்.

என் அன்பார்ந்த பிள்ளைகளே, என் அப்போஸ்தலர்களே, பரலோக தந்தையை அறியாதவர்களுக்கு, அவரை அறியப்படுத்தி அவரை பின்பெற்றச் செயவத்ற்காக, அவரது அடிமையாகிய என்மூலம் உங்களுக்கு விசுவாசம் என்ற கொடையினை தந்திருக்கின்றார். அதனால் தான் உங்களை அன்பு செய்ய அழைக்கின்றேன். நீங்கள் எல்லோரையும் அன்பு செய்தால் மட்டுமே, அவரது அழைத்தலுக்கு செவிகொடுக்க முடியும். இந்த சிக்கலான நேரத்தில் குருக்களுக்காக செபுயுங்கள், எனது மகனின் நாமம், அவர்களது வழிகாட்டுதலில் மகிமைப்படுத்தப்படட்டும். நன்றி2013-08-25 அன்று அன்னைமரியாளினால் மரியாவிற்கு வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்னத பிள்ளைகளே,
இன்றும் சர்வவல்ல கடவுள், உங்களை மனமாற்றத்தினை நோக்கி வழிநடத்த எனக்கு கிருபை தந்துள்ளார். ஒவ்வொரு நாளும் நான் உங்களிடம் மன்மாற்றம் என்ற விதையினை விதைக்கின்றேன். நீங்கள் அன்பில் சமாதானத்தில் செபிப்பதில் தரித்திருங்கள். மண்ணில் விழுகின்ற விதையே நூறு மடங்கு பலன் தரும். நீங்கள் நன்மை செய்திருக்க கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களை, தவறவிட்டமையினை முன்னிட்டு மனம் திரும்புங்கள். அதனால், என் சிறிய பிள்ளைகளே, ஊக்கத்திடன் இன்றே முடுவெடுங்கள், "நான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பேன்" என்று. எனது அழைத்தலுக்கு செவிகொடுத்தமைக்கு நன்றி.2013-09-02 அன்று அன்னைமரியாளினால் மிரியானாவுக்கு வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே,
நான் உங்களை அன்பு செய்கின்றேன். என் எல்லா பிள்ளைகளையும் அன்பு செய்கின்றேன். நீங்கள் எல்லாரும் தாயாகிய என்னுடைய அன்புக்கு உரியவர்கள். எனக்கு உங்கள் எல்லோரையும் இறைவனுடைய உண்மை அன்பினை நோக்கி வழி நடத்துவதே, என் நோக்கம். அதனால் தான் உங்களை அழைக்கின்றேன். இறைவனுக்காக திறந்த இருதயத்தோடு இறைவனது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து மற்றவர்களை ஆண்டவரின் பாதையில் வழிநடத்தும் எளிமையான அப்போஸ்தலர்கள் எனக்குத் தேவை. இதை செய்வதற்கு, நீங்கள் உபவாசித்து செபிக்க வேண்டும். உங்களை அர்பணித்து வாழவேண்டும். மற்றவர்களுக்கு செவிகொடுக்க கற்று கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களை இறைவனிமிருந்து பிரிக்கும் எல்லாவற்றையும் விட்டு விலகிவிட கற்று கொள்ள வேண்டும். ஆண்டவரிடம் உங்களை கூட்டி சேர்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் நாடித்தேட வேண்டும். பயப்பட வேண்டாம், நான் உங்களோடு இருக்கின்றேன். நீங்கள் தனித்தவர்கள் இல்லை. தூய ஆவியானவர் உங்களை பலப்படுத்த் வேண்டுமென்று, உங்களுக்காக வேண்டுகின்றேன்.
நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது, நீங்களும் குணமாக வேண்டுமென்று நான் தூய ஆவியானவிடம் வேண்டுகின்றேன். தூய ஆவி வழியாக, நீங்கள் கடவுளுடைய பிள்ளைகளாகவும் என் அப்போஸ்தலர்களாகவும் இருக்க வேண்டுகின்றேன்.

இறுதியாக மிகுந்த கவலையோடு அன்னை மரியாள் கூறினார்.
இயேசு கிறிஸ்துவாகிய எனது மகனின் பொருட்டு, அவர் தமது சேவைக்காக அழைத்தவர்களை அன்புசெய்யுங்கள். இயேசு அபிஸேகம் செய்த, அவர்கள் வழியாக இறையாசீர் பெற ஆர்வமுள்ளோராய் இருங்கள். சாத்தான் உங்களை ஆளுகை செய்ய அனுமதிக்காதீர்கள். மீண்டும் சொல்கின்றேன், அவர்களுடன் சேர்ந்தே எனது இருதயமும் பேருகவை கொள்ளும். குருக்களிடமிருந்து உங்களை பிரிக்கும் எந்த சாத்தானையும் அனுமதிக்காதீர்கள். நன்றி2013-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் செபங்களின் வடிவம் நாளாந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக அமையட்டும். செபங்கள் உங்களுக்கும், உங்கள் மூலமாகவும் புதுமைகளை வழங்கட்டும், ஆகவே அன்பான பிள்ளைகளே, செபம் உங்களுக்கு மகிழ்வைக் கொடுக்கட்டும். அதன்பின் உங்கள் வாழ்வின் நிலை மேலும் ஆழமாகவும் திறந்த மனதுள்ளதாகவும் இருப்பதோடு, உங்கள் வாழ்வு உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட ஒரு கொடை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!2013-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே,
தாயின் அன்பாலும் பொறுமையாலும் உங்களை அன்பு செய்து, உங்களுடைய அன்பிற்காகவும் ஒற்றுமைக்காகவும் காத்திருக்கின்றேன். நீங்கள் அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளாகவும் என்னுடைய பிள்ளைகளாகவும் இருக்க செபிக்கின்றேன். ஒரே சமூகமாக நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் என்மகனை அன்பு செய்து விசுவாசவாழ்விற்கு மீண்டும் வர வேண்டுமென்று செபிக்கின்றேன். நான் உங்கள் அனைவரையும் எனது சீடர்களாக ஒருங்கிணைத்து எனது மகனின் அன்பைப்பற்றியும், நற்செய்தியை மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டுமென்று நான் கற்பிப்பேன். உங்களுடைய தூய்மையான திறந்த உள்ளத்தை என்னிடம் கொடுக்கவும், நான் எனது மகனின் அன்பால் உங்களை நிரப்புவேன். அவருடைய அன்பு உங்களுடைய வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கும். நான் உன்னோடு இருப்பேன். வானகத் தந்தையை சந்திக்கும்வரை நான் உங்களோடு இருப்பேன். என்னுடைய பிள்ளைகளே அன்பிலும் விசுவாசத்திலும் வானகத் தந்தையை நோக்கி நடப்பவர்கள் மீட்புப் பெறுவார்கள். பயப்பட வேண்டாம் நான் உங்களோடு இருக்கின்றேன். என்னுடைய மகன் தான் தேர்ந்தெடுத்தவர்களை நம்பியதுபோல் நீங்களும் உங்களுடைய மேய்ப்பர்களை நம்ப வேண்டும். அவர்கள் உங்களை வழிநடத்த பலமும் அன்பும் இருக்க செபிக்க வேண்டும். நன்றி2013-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை இறைவனிடம் செபிக்க முன்வருமாறு அழைக்கிறேன். செபங்கள் உங்களுக்கும், உங்களாலும் புதுமைகளை ஏற்படுத்தும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இலகுவான இதயத்தோடு நீங்கள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டும்போது, அவர் தனது பிள்ளைகளாகிய உங்களுக்கு உறுதியைத் தருவார், இதன்மூலம் காற்றில் அசைந்தாடும் கிளைகளைப்போல சாத்தான் உங்களை உலுப்ப முடியாது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே! நீங்கள் கடவுளுக்காக புதியனவற்றை முடிவுசெய்வதுடன் அவரது சித்தத்தின்படி நடந்து கொள்வதால் அவரில் நீங்கள் மகிழ்வையும் சமாதானத்தையும் அடைந்து கொள்வீர்கள். எனது அழைப்பை பின்பற்றுவதற்காக நன்றி!2013-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அன்னையாக உங்களை நான் மீண்டும் அழைக்கிறேன், நீங்கள் அன்பு செய்து, வரம்பெற இடைவிடாது செபிப்பதுடன், வானகத் தந்தையின் அனைத்து நன்மைகளுக்காகவும் அன்பு செய்யுங்கள். நீங்கள் அவரை அன்பு செய்தால், நீங்கள் உங்களையும் உங்களது அயலாரையும் நேசிப்பீர்கள். அதை நிறுத்தாதீர்கள். வானகத் தந்தை ஒவ்வொரு மனிதரிலும் இருக்கிறார், அவர் ஒவ்வொருவரையும் நேசிப்பதுடன், அவர் ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். ஆகவே, எனது பிள்ளைகளே, செபத்தினூடக வானகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுங்கள். அவருடன் பேசுங்கள். தந்தையுடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம்- எனது பிள்ளைகளே உங்கள் உறவுகளிடமும், எனது விருப்பத்தை மேலும் ஆழமாக்குங்கள். அன்னையாக, நான் உங்களிடமிருந்து விரும்புவது, நீங்கள் அன்பின் மூலம் வானகத் தந்தையை அவமதிக்காது பிறருக்கு உதவி செய்யுங்கள், இதன்மூலம் படிப்படியாக வானகத் தந்தையை கண்டறிவதுடன் அவருக்கு அண்மையாக வருவீர்களாக. எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், அன்பைப் பகிர்வதற்காக செபியுங்கள், அந்த அன்பு எனது மகனாகவுள்ளது. உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், இதன்மூலம் அவர்கள் எப்பொழுதும் உங்களுடன் அன்பாக இருப்பார்களாக, எப்படி எனது மகன் இருந்தாரோ, வாழ்ந்து காட்டினாரோ, அதேபோன்று அவர் அவர் தனது வாழ்வை உங்களது மீட்பிற்காக வழங்குவார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.2013-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று உங்கள் அனைவரையும் செபிக்க அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் இதயக் கதவுகளை செபத்திற்காக அகலத் திறவுங்கள், இதயத்தால் செபிக்கும்போது, மாட்சிமை பொருந்தியவர் உங்கள் மனந்திரும்பலை ஏற்றுக்கொள்வார். நம்பிக்கை உறுதியாகும்போது நீங்கள் உங்கள் முழு இதயத்தாலும் கூறுவீர்கள்: எனது கடவுளே எனக்கு அனைத்தும் என! எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இவ்வுலகில் அனைத்தும் மறைந்துவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நன்றி, எனது அழைப்பை நீங்கள் பின்பற்றுவதற்காக!“2013-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

மரியன்னையின் செய்தி 2 மார்கழி 2013 அன்பார்ந்த பிள்ளைகளே! தாயின் அன்புடனும் அன்னையின் பொறுமையுடனும் உங்களது தொடர் பிழைகளையும் தவறல்களையும் நான் பார்க்கிறேன். ஆகவேதான் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், முதலில் நீங்கள் உங்களை அறிந்து கொள்ள வேண்டும், அதன்மூலம் உங்களுக்கு வானகத் தந்தையை உங்கள் இதயத்தால் அன்பு செய்வதற்கு எவை அனுமதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனது பிள்ளைகளே, தந்தையை நீங்கள் சிலுவைகள் ஊடாக அறிந்து கொள்வீர்கள். ஆகவே, சிலுவைகளை மறுக்காதீர்கள், அதை விளங்கிக்கொள்ள முயல்வதுடன் எனது உதவியுடன் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த உடனேயே, நீங்கள் வானகத் தந்தையின் அன்பை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் எனது மகனுடனும் என்னுடனும் செல்வீர்கள், நீங்கள் வானகத் தந்தையின் அன்பை அறிந்திராதவர்கள், மற்றும் அவரின் வார்த்தைகளைக் கேட்காதவர்கள், அவரை விளங்கிக் கொள்ளாதவர்கள், அவருடன் செல்லாதவர்கள், அவரை உணர்ந்து கொள்ளாதவர்கள் இடையே வித்தியாசம் காணப்படுவீர்கள். நீங்கள் எனது மகன் குறித்த உண்மையை அறிவதுடன், எனது தூதர்களாக, இறைவனின் பிள்ளைகளாக, மனித சிந்தனைகளுடன் எப்பொழுதும் கடவுளின் புதிய திட்டங்களை தேடுபவர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எனது பிள்ளைகளே, செபம் செய்வதுடன் தவமிருங்கள், இதன்மூலம் நான் எதற்காக உங்களை அழைக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள் இதன்மூலம் வானகத் தந்தை, உங்களுடன் சேர்ந்த அனைவருக்கும் அன்பைப் பொழிவதைக் கண்டுகொள்வீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.2013-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்களுக்கு சமாதானத்தின் அரசரைக் கொண்டு வருகிறேன், இதன்மூலம் அவர் உங்களுக்கு அவரது சமாதானத்தை வழங்குவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபம் செய்யுங்கள், செபம் செய்யுங்கள், செபம் செய்யுங்கள். செபத்தினது பலனை மனிதர்கள் தமது வரலாற்றில் காண்பதுடன், அவை இறை சந்நிதியில் கேட்கப்படுகின்றது. நான், எனது மகன் இயேசுவுடன் சேர்ந்து, உங்கள் அனைவருக்கும் சமாதானத்தின் ஆசீர்களை வழங்குகின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!