மெட்யுகோரியோவில்(Medjugorje) 2014வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு2014-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இதன்மூலம் நீங்கள் எனது தூதர்களாக இருக்க முடியும் என்பதுடன், இருட்டில் வாழ்பவர்கள் எனது மகனைக் கண்டுணர ஒளியாகவும், இரக்கமுள்ள இதயமுள்ளவர்களாகவும் இருங்கள். எனது மகன் ஒருவரது இதயத்தில் பிறக்காவிட்டால் உங்களால் எவ்வித உதவியையும் செய்ய முடியாது, அவர் உங்கள் இதயத்தில் அரசராக வீற்றிருக்க வேண்டும். நான் உங்களோடு உள்ளேன். நான் தாயாக உங்களுடன் வருகின்றேன். நான் உங்கள் இதயங்களைத் தட்டுகின்றேன். சிலர் இதை உணராமல் உள்ளதால் இதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். நான் செபிக்கிறேன், நீங்களும் செபியுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே நீங்கள் எனது மகனின் மாசற்ற இதயத்தை திறப்பதுடன் காணிக்கைகளை அவர் வாக்குறுதியளித்தபடி பெற்றுக் கொள்ளத் திறக்கச் செய்யுங்கள். இதனால் நீங்கள் எனது மகனின் அன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும். இதனால் நீங்கள் எனது தூதர்களாக இருப்பதுடன், சுற்றுப்புறம் எங்கும், இறைவனின் அன்பின் ஊற்றுக்களைப் பரப்ப முடியும். உங்களிடமிருந்து மற்றும் உங்கள் ஊடாக நீங்கள் ஒன்றாக இருப்பதற்கு எனது மகன் அருள் புரிவார். இதன்பின் எனது தாய்க்குரிய இதயம் எனது பிள்ளைகள கொள்ளப்பட்ட- உங்கள் மேய்ப்பர்கள் அனைவருக்குமாக மிகவும் அன்புடன் ஆசீர் வழங்குகின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.2014-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதன்மூலம் உங்கள் செபங்களின் பலன்கள் நீங்கள் சந்திக்கும் ஏனையவர்களுக்கும் கிடைக்கட்டும். தூய விவிலியத்தை உங்கள் குடும்பத்தில் கண்ணுக்குத் தென்படும் இடத்தில் வைப்பதுடன் அதை வாசியுங்கள், இதன்மூலம் சமாதானத்தின் வார்த்தைகள் உங்கள் இதயத்தில் பாயத் தொடங்கட்டும். நான் உங்களுடனும், உங்களுக்காகவும் செபிக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதன்மூலம் நீங்கள் நாளுக்கு நாள் இறைவனின் சித்தத்திற்காக இன்னும் மேலாக உங்களைத் திறந்து கொள்வீர்களாக. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“2014-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு நேர்மையை கற்பிக்க விரும்புகிறேன். இதில் நீங்கள் சரியாக எனது தூதர்களாகச் செயற்படுவதுடன் ஒன்றிணைந்து நேர்மையுடன் இருப்பீர்களாக. நீங்கள் கடவுளின் இரக்கத்தின் ஆசீருக்கு உங்கள் உள்ளத்தைத் திறந்து வைத்திருப்பதை நான் விருமபுகின்றேன். நீங்கள் நோன்பு மற்றும் செபம் மூலம் வானகத் தந்தையின் இயற்கையான மற்றும் பரிசுத்தமான செயல்களைத் தெரிந்து கொள்வதை நான் விரும்புகின்றேன். இதை நிறைவேற்றுவதன் மூலம் எனது மகனின் பாதுகாப்பைப் பெறுவதுடன் எனது தூதர்களாக இருந்து, இறை வார்த்தைகளை அறியாத ஒவ்வொருவருக்கும் அதை அறிவியுங்கள். அதன்போது அந்த வழிகளில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ளுங்கள். எனது பிள்ளைகளே, ஆசீரின் மூலமாக இறைவனின் இரக்கம் உங்கள் மேல் பொழிவதாக. ஆனால் நீங்கள் நோன்பு, செபம், வெளிப்படுத்தல் மற்றும் ஒப்புரவாகுதல் ஊடாக அவைகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களிடமிருந்து விரும்புவதுபோன்று, உங்களுக்கு இவை பலன் அளிக்கட்டும். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், இறைவனின் இரக்கத்தின் கதிர்கள் உங்கள் வழிகளில் பிரகாசிக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“2014-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! அநேக மனிதர்களின் இதயத்தில் இறைவன் இல்லாமல் இருப்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள், கேட்கின்றீர்கள், உணர்கின்றீர்கள். அவர்களுக்கு இறைவன் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் செபத்திற்கு வெகு தொலைவில் இருப்பதுடன் சமாதானத்தை விரும்பவில்லை. நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், இறைவனின் கட்டளைகளின்படி வாழுங்கள். நீங்களே செபமாகுங்கள், நீங்கள் எனது அழைப்பிற்கு ஆரம்பம் முதலே “ஆம்“ என்று கூறியவர்கள். எனது இருப்புடன் இறைவனுக்கு சாட்சியாகுங்கள், மறக்க வேண்டாம், எனது அன்பான பிள்ளைகளே, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களை அன்பு செய்கின்றேன். நாளுக்கு நாள் நான் உங்கள் அனைவரையும் எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“2014-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் தாயாக உங்களிடம் வருகின்றேன், நீங்கள் என்னிடம் அடைக்கலத்தையும், தேறுதலையும், ஆறுதலையும் பெற நான் விரும்புகின்றேன். ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பை எடுத்துச் செல்லும் தூதர்களே, செபியுங்கள்! சலிப்படையாது செபிப்பதுடன், வானகத் தந்தை கொடுப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் செபியுங்கள். நான் உங்களை நம்புவது போன்று நீங்களும் நம்புங்கள், எனக்குக் கூறப்பட்டது போன்று, நான் ஆசீர்களைக் கொண்டு வருவேன். உங்களது இதயத்திலிருந்து, உதடு வழியாக, எப்பொழுதும், “உம் சித்தத்தின்படியே ஆகக் கடவது“ என வெளிவரட்டும். ஆகவே நம்புங்கள், மற்றும் செபியுங்கள், இதன்மூலம் நான் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்து பேசமுடியும், அவர் உங்களுக்கு வானக ஆசீரை வழங்குவதுடன் உங்களைத் தூய ஆவியினால் நிரப்புவார். அதன்பின் நீங்கள் இறைவனை அறியாத அனைவருக்கும் அவரை அறிவித்துக் கொள்ள முடியும். எனது தூதர்களான அன்பார்ந்தவர்களே, நீங்கள் முழு நம்பிக்கையுடன் அப்பா என அழைத்தால் அவர் உங்களுக்கு உதவுவார். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபிப்பதுடன் அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களை நம்புங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!“மிர்ஜானா சொல்டோ 18 பங்குனி 2014ல் பெற்ற வருடாந்தக் காட்சி

செறின் மிர்ஜானா றாகிசேவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரையாக நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். இறுதி நாட்களில் இடம்பெற்ற காட்சிகளின்போது இறை அன்னை, தனது 10வது மறை உண்மையில் நம்பிக்கை கொண்ட இவளுக்கு, வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல், காட்சி கொடுப்பதாக வாக்களித்தார். அப்படியே ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுடன் இவ்வருடமும் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் செபமாலை வழிபாட்டில் ஒன்றுகூடியிருந்தனர். காட்சி 13.46க்கு ஆரம்பித்து 13.51 வரையாக இடம்பெற்றது. "அன்பான பிள்ளைகளே! அன்னையாக நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் அன்னையின் அன்புடன் உங்களுக்கு உதவுவதுடன், நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்து அதில் நீங்கள் எனது மகனை முதல் இடத்தில் இருத்துவதை விரும்புகிறேன். நீங்கள் எனது மகனிடம் வைத்துள்ள அன்பு மற்றும் உங்கள் செபங்கள் ஊடாக இறைவனின் பிள்ளைகளாக ஒளிரவும், இறை இரக்கத்தால் உங்களை நிரப்பிக் கொள்ளவும் விரும்புகின்றேன். மறைவாகவும் நிழலாகவும் தொடரும், உங்களை நெருங்குவதையும், ஆட்கொள்வதையும் விலக்கிவிட நான் விரும்புகிறேன். நீங்கள் இறை ஆசீரால் நிரப்பப்பட்டு மகிழ்வதைக் காண நான் விரும்புகின்றேன். நீங்கள் மனிதக் குழந்தைகள், நீங்கள் இறைவனின் பிள்ளைகள், நீங்கள் என் பிள்ளைகள். ஆகவே, எனது பிள்ளைகளே, உங்களை எனது அன்பால் நடத்துபவர்கள், உங்களுக்கு அறிவைப் புகட்டுபவர்கள், வானகத்தந்தையின் பாதையைக் காட்டுபவர்களின் வழியில் செல்லுங்கள். என்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள், என்னைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தங்கள் இதயத்தைக் கடினமாக்கி வைத்துள்ளவர்களுக்காக என்னுடன் சேர்ந்து செபியுங்கள். உங்கள் மேய்ப்பர்கள் எப்பொழுதும் தமது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களால் இறைவனின் மங்கள ஆசீரை உங்களுக்கு வழங்க வேண்டும் என செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!"2014-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கிறேன்: ஆரம்ப நாட்களில் இருந்தது போன்று பாவத்திற்கு எதிராகப் போராட தொடங்குவதுடன், ஒப்பரவு அருட்சாதனத்துக்குச் சென்று உங்களைப் புனிதப்படுத்த முடிவுசெய்யுங்கள். இறைவனின் அன்பு உங்கள் மூலமாக உலகத்திற்குப் பரவ ஆரம்பமாவதுடன், உங்கள் இதயத்தில் சமாதானம் ஆட்கொள்ளத் தொடங்கி, இறைவனின் ஆசீரால் நீங்கள் நிறைவீர்களாக. நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகன் இயேசுவிடம் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“2014-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், உங்கள் செப மற்றும் தப வாழ்வால் நீங்கள் எனது மகனின் ஒளிக்கு அண்மையாக வர உண்மையாகவே முயற்சிப்பதால், நீங்கள் பாவத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு செபமும், ஒவ்வொரு திருப்பலியும் மற்றும் ஒவ்வொரு நோன்பும் எனது மகனுக்கு நெருக்கமாக உங்களை அழைத்துச் செல்லும் முயற்சி என்பதுடன், அவரது மாட்சிமையை நினைவுபடுத்தி பாவ வாழ்விலிருந்து விடுபடச் செய்கின்றது. இதுவே புதிதாக ஒரு நல்ல தகப்பனும் அவரது பிள்ளைகளும் ஒன்றுசேர்வதற்கான வழியாகும். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, திறந்த இதயத்துடனும் முழுமையான அன்புடனும் வானகத் தந்தையின் பெயரை உரக்கக் கூவுங்கள், இதனால் அவர் தூய ஆவியை அருளுவாராக. தூய ஆவி மூலமாக நீங்கள் இறை அன்பின் ஊற்றுக்களாக மாறுவீர்களாக. இந்த ஊற்றுக்களை, எனது மகனை அறியாதவர்கள், எனது மகனின் அன்பிலும் சமாதானத்திலும் தாகமாக இருக்கும் ஒவ்வொருவரும் அருந்தட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்! உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்காக செபிப்பதுடன், நீங்கள் எப்பொழுதும் அன்னையாகிய எனது கரங்களின் ஆசீரையும் எனது அன்னை இதயத்தின் உதவிகளையும் உணர்ந்து கொள்வதை விரும்புகிறேன்“2014-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் இதயத்தை, இறைவன் என் மூலமாக வழங்கும் இரக்கத்திற்காகத் திறவுங்கள், அது வெப்பமான சூரியக் கதிர்களைக் கண்டு விரியும் மலர்கள் போன்று திறக்கட்டும். இறைவனிடமிருந்தும் அவரது அன்பிலிருந்தும் விலகியுள்ளவர்களுக்காக செபிப்பதுடன் அவர்களையும் அன்பு செய்யுங்கள். நான் உங்களுடன் இருந்து உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் மன்றாடுவதுடன் நான் உங்களை அளவிட முடியாத விதத்தில் அன்பு செய்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!2014-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்கள் அன்னை, நீங்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் உங்கள் தேவைகள் விருப்பங்கள் காரணமாகவும் உங்களோடு உள்ளேன். வானகத் தந்தை உங்களுக்கு தனியாக முடிவெடுக்கவும் தனியாகப் புரிந்து கொள்ளவும் கூடிய சுதந்திரத்தைத் தந்துள்ளார். நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் உங்கள் தாயாக இருக்க விரும்புவதுடன், உங்களுக்கு உண்மையைப் கற்பிப்பதால் நீங்கள் திறந்த இதயத்துடன் அளவிடமுடியாத தூய்மையை அறிந்து கொள்வதுடன், உங்களிடமிருந்து பிறக்கும் ஒளி உங்கள் முன்பாகச் சென்று இருளை அகற்றுவதுடன், அந்த ஒளி நம்பிக்கையைக் கொண்டு வருவதாக. எனது பிள்ளைகளே, நான் உங்கள் வேதனைகளையும் துயரங்களையும் விளங்கிக் கொள்கிறேன். ஒரு தாயை விட எவரால் உங்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால் நீங்கள், எனது பிள்ளைகளே? மிகச் சொற்பமானவர்களே என்னைப் புரிந்து கொள்வதுடன் என்னைப் பின்பற்றுகின்றனர். தொலைந்து போனவர்கள் பலர், அவர்கள் எனது மகன் இயேசு குறித்த உண்மையை இதுவரை அறிந்து கொள்ளவில்லை. ஆகவே, எனது தூதர்களே செபியுங்கள் அதனால் பலன் கிடைக்கும். ஒளியைக் கொண்டு வாருங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள். நான் உங்களுடன் உள்ளேன். விசேடமாக நான் உங்கள் மேய்ப்பர்களுடன் உள்ளேன். தாயின் இதய அன்புடன் நான் உங்களைப் பாதுகாக்கின்றேன், அது எனது மகன் இயேசு உங்களுக்கு வாக்களித்தவாறு வானகத்திற்கு உங்களை வழிநடத்தட்டும்!2014-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள், அத்துடன் இறைவன் இல்லாவிட்டால் நீங்கள் தூசியைப்போல் இருப்பீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். ஆகவே, உங்கள் எண்ணங்களையும் இதயத்தையும் இறைவன் பக்கம் திருப்பி செபியுங்கள். அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். இறை ஆவியில் எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் சாட்சிகளாய் வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் பெறுமதியானவர்கள் என்பதுடன் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை தூயவர்களாக வாழவும் நித்திய வாழ்வு பெறவும் அழைக்கிறேன். எவ்வாறாயினும், இந்த வாழ்வு என்றோ ஒருநாள் மறைந்து விடும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நான் உங்களை அன்பு செய்வதுடன் உங்களது புதிய வாழ்விற்காகவும், நீங்கள் மனமாற்றம் பெறவும் அழைக்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“2014-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இந்த அமைதியற்ற காலத்திலே, நீங்கள் எனது மகனைப் பின்தொடரவும், அவரைப் பின்பற்றவும் மீண்டும் உங்களை அழைக்கிறேன். நான் உங்களது வேதனைகளை, துன்பங்களை மற்றும் தேவைகளை அறிந்துள்ளேன், அவற்றுக்காக எனது மகனில் நீங்கள் ஆறுதலடைவதுடன், அவரில் அமைதியையும் சுகவாழ்வையும் பெறுவீர்களாக. எனது பிள்ளைகளே, மறக்க வேண்டாம், எனது மகன் அவரது சிலுவை ஊடாக உங்களை மீட்டதுடன், உங்களை கடவுளின் புதிய பிள்ளைகளாகவும், வானகத் தந்தையை, தந்தாய் என அழைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் தந்துள்ளார். இதற்காக நீங்கள் இறைவனைப் புகழ்ந்து அன்பு செய்வதுடன், மன்னித்து வாழுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அன்பானவராகவும் மன்னிப்பவராகவும் உள்ளார். செபியுங்கள் மற்றும் நோன்பிருங்கள், ஏனென்றால் இந்த வெளிச்சமே உங்களுக்கு வழிகாட்டுவதாகவும், இந்த வழியே வானகத் தந்தையை அறிவதற்கும் அவரை ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். நீங்கள் தந்தையை அறிந்து கொண்டால், அவர் மட்டுமே தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நான் தாயாக மக்கள் இனத்தில் இருக்கும் எனது பிள்ளைகளிடமிருந்து அவர்கள் இறை வார்த்தையை கேட்கவும் அதன்படி நடக்கவும் விரும்புகின்றேன். ஆகவே, எனது பிள்ளைகளே, எனது மகனைப் பின்தொடருங்கள், அவரோடு ஒன்றித்திருங்கள், இறைவனின் பிள்ளைகளாக வாழுங்கள். எனது மகன் உங்களை எவ்வாறு அன்பு செய்கிறாரோ அதுபோன்று நீங்களும் உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்யுங்கள், அவரே இவர்களை உங்களுக்குப் பணியாற்றுவதற்காக அழைத்தார். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“2014-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! அனைத்திலும் உயர்ந்தவர், நான் உங்களுடன் இருப்பதற்கும் எனது வேண்டுதலின் மூலம் உங்களை அமைதியின் பாதையில் நடத்திச் செல்வதற்கும் எனக்கு இரக்கம் காட்டியுள்ளார். உங்கள் இதயமும் உங்கள் ஆன்மாவும் சமாதானத்திற்கும் அன்புக்கும், கடவுளுக்கும் அவரது மகிழ்வுக்கும் ஏங்குவதாக இருக்கட்டும். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள்! செபங்களில் நீங்கள் வாழ்வின் அறிவைக் கண்டடைவீர்கள். நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவின் முன்பாக பரிந்துரைப்பேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!2014-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இங்கு ஒன்றுகூடியிருக்கும் உங்களின் அன்னையாகிய நான், அனைத்துலகின் தாய், உங்களுக்கு அன்னையின் ஆசீரை வழங்குவதுடன் பணிவான வழிகளில் செல்லுமாறு உங்களை அழைக்கின்றேன். இந்தப் பாதையே எனது மகனின் அன்பை அறிந்துகொள்வதற்கு வழிசமைக்கும். எனது மகன் அனைத்து அதிகாரமும் கொண்டவர், அவரே அனைத்துமாக உள்ளார். எனது பிள்ளைகளே, நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளாது விட்டால், உங்கள் ஆன்மாவை இருளே ஆட்சிசெய்யும். பணிவாக வாழ்தல் மட்டுமே உங்களை குணமாக்க முடியும். எனது பிள்ளைகளே, நான் எப்பொழுதும் பணிவுடனும், துணிவுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தவள். கடவுள் எம்மிலும் நாம் கடவுளிலும் இருக்கிறோம் என்பதை நான் அறிந்துள்ளதுடன், இதையே நான் உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன். நீங்கள் அனைவரும் என்னுடன் எப்பொழுதும் இருப்பதையே விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் என்னில் ஒரு பாகமாக உள்ளீர்கள். உங்கள் வழிகளில் நான் இருந்து உதவுவேன். எனது அன்பு ஒரு போர்வை போன்று உங்களை மூடிக்கொள்வதுடன், எனது ஒளி உங்களுக்கு வழிகாட்டி இறைவனின் ஒளியைக் காட்டட்டும். அன்பால், நீங்கள் பணிவுக்கு முன்னிலை வழங்கி, இருள் உள்ள இடங்களில் ஒளியைப் பரப்புங்கள். நீங்கள் உலகின் ஒளியாக உள்ள எனது மகனிடம் வாருங்கள். நான் எப்பொழுதும் உங்கள் மேய்ப்பர்களுடன் இருப்பதுடன், அவர்கள் பணிவுக்கு முன்மாதிரிகையாகத் திகழ்வார்களாக. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்"ஜூலை 25, 2014 அன்று அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
கடவுளின் அருளால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்நேரத்தில் ஆண்டவர் மனமாற உங்களுக்கு அறிகுறி தருகிறார். கடவுளிடம் திரும்புங்கள். கடவுளிடம் மன்றாடுங்கள். செபத்தின் மூலம் கடவுளிடம் இணையுங்கள். செபம் உங்கள் இதயங்களை ஆட்சி செய்வதாக! உங்கள் குடும்பங்களை, குழுமங்களை ஆட்சி செய்வதாக! ஏனெனில் செபத்தின் வாயிலாக தூய ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். கடவுளின் விருப்பத்தை, திட்டத்தை தூய ஆவியானவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். நான் என்றும் உங்களோடு இருக்கிறேன். மேலும் புனிதர்களோடும், வானதூதர்களோடும் சேர்ந்து உங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி செபிப்பேன். எனக்கு செவிமடுத்தமைக்கு நன்றி02 ஆகஸ்டு 2014 நாளின் அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
நான் என்றும் உங்களோடு இருக்கிறேன்; நன்மை என்றும் வெல்லவேண்டும். அதற்காகவே உங்களோடு இருக்கிறேன். நன்மைத்தனம் என்ற அந்த இலக்கை அடைய இப்போது உங்களால் இயலாமல் போகலாம். என் மகன் இயேசு குழந்தை பருவத்தில் என்னோடு வளரும்போது எனக்கு சொன்னதை சில நேரங்களில் புரிந்துகொள்ள இயலாமல் போனதுபோலவே, இப்போதும் உங்களால் பலவற்றை புரிந்துகொள்ள இயலாது. இருப்பினும் நான் என் மகன் இயேசுவை விசுவசித்தேன், அவரை பின்பற்றினேன். நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: நீங்களும் என்னை நம்பி, பின்பற்றுங்கள். என் பிள்ளைகளே! என்னை பின்பற்றுங்கள் என்று நான் சொல்வதன் பொருள் என் மகன் இயேசுவை அன்புசெய்யுங்கள் என்பதுதான். ஒவ்வொரு மனிதரிலும் இயேசுவைக் கண்டு எந்த வித வித்தியாசமுமில்லாமல் எல்லோரையும் அன்பு செய்யவேண்டும். இதைச் செய்ய நீங்கள் தகுதிபெற வேண்டுமாயின், உங்களை ஒறுத்தல், நோன்பு, செபம் மூலமாக புதுப்பித்துக்கொள்ளுங்கள். உங்களை நற்கருணை திருப்பலி கொண்டாட்டத்திற்கு அழைக்கிறேன். இதுவே உங்கள் ஆன்மாவை வாழவைக்கும் உணவு. இவ்வுலகில் அன்பு, இரக்கம், கருணை போன்ற புண்ணியங்களை பரப்பும் ஒளியின் திருத்தூதர்களாக வாழ உங்களை அழைக்கிறேன்.

என் பிள்ளைகளே! உங்கள் வாழ்வை நித்திய வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒரு சிறு நொடிப்பொழுதே. என் மகன் இயேசுவின் முன்னால் நீங்கள் நிற்கும்போது, அவர் உங்கள் இதயங்களில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை பார்ப்பார். இவ்வுலகில் அன்பை விளைவிக்கவேண்டுமாயின், ஒற்றுமை உங்களிலே வளரவேண்டும். உங்களிடையிலும், உங்களுக்கும் உங்கள் ஆயர், குருக்களிடையிலும் ஒற்றுமை ஓங்க நான் என் மகன் இயேசுவிடம் மன்றாடுகிறேன். இயேசு, உங்கள் ஆயர்கள், குருக்கள் வழியாக உங்களை, உங்கள் ஆன்மாக்களை புதுப்பிக்கிறார். இதை மறவாதீர். உங்களுக்கு நன்றி!2014-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது விடயத்திற்காக மன்றாடுங்கள், சாத்தான் எனது திட்டத்தை குழப்புவதுடன் உங்களிடமிருந்து அமைதியைக் களவாட முயல்கின்றான். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். கடவுள் உங்கள் ஒவ்வொருவரது வேண்டுதலையும் கேட்கட்டும். உங்கள் இதயத்தை இறைவனின் சித்தத்திற்காக திறந்து வையுங்கள். நான் உங்களை அன்பு செய்வதுடன் உங்கள்மீது அன்னையின் ஆசீரை வழங்குகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைபப் பின்பற்றுவதற்கு!2014-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான், உங்கள் அன்னை, மீண்டும் அன்பின் காரணமாக உங்களிடம் வருகின்றேன், வானகத்தந்தையின் முடிவற்ற அன்பிற்கு எல்லையே இல்லை. நான் உங்கள் இதயங்களைப் பார்க்கும் போது, உங்களில் பலர் என்னைத் தாயாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் நேர்மையான மற்றும் தூய இதயத்துடன் எனது தூதர்களாக இருக்க விரும்புவதை நான் காண்கிறேன். ஆனால், உங்கள் நடுவில் என்னை தாயாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் மற்றும் தமது இதயத்தைக் கடினமாக வைத்திருப்பதால் எனது மகனின் அன்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கும் அன்னையாக இருக்க விரும்புகிறேன். எனது இதயம் எவ்வளவு துன்பப்படுகின்றது மற்றும் உங்களுக்காக எனது மகனிடம் எந்த அளவில் வேண்டிக் கொள்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் உங்கள் ஆன்மாவைக் குணப்படுத்துமாறு வேண்டுகின்றேன், இது அவராலேயே முடியும். தூய ஆவியின் வல்லமையை உங்கள்மீது பொழியுமாறு வேண்டுகிறேன். எனது மகன் மட்டுமே உலகின் ஒளியாகவும் மீட்பாகவும் இருப்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நான் எனது முழு இதயத்தாலும் செபிக்கிறேன். எனது பிள்ளைகளே, எனது தூதர்களே, உங்கள் இதயத்திலும் எண்ணத்திலும் எனது மகனை காவிச் செல்லுங்கள். அதாவது நீங்கள் அன்பை காவிச் செல்லுங்கள். எவர் ஒருவராவது அவரை அறியாதிருந்தால், உங்கள் அன்பில் அவரைக் கண்டுகொள்ளட்டும். நான் என்றும் உங்கள் பக்கத்தில் உள்ளேன். விசேடமாக நான் உங்களை மேய்ப்பவர்கள் பக்கத்தில் இருக்கிறேன், முடிவில்லா வாழ்விற்கு வழிகாட்ட அவர்களை எனது மகனே அழைத்துள்ளார். எனது தூதர்களே, உங்கள் இழப்புகளுக்கும் அன்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.2014-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை அழைக்கிறேன், நீங்கள் விண்மீன்கள் போன்று உள்ளதுடன், அவைகளின் பிரகாசத்தினால் அயலவர்களுவர்களுக்கு ஒளியையும் அழகையும் கொடுத்து மகிழ்விக்கின்றீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் பிரகாசம், அழகு, மகிழ்வு மற்றும் சமாதானம் இன்னும் விசேடமாக உங்கள் செபம், என்னை மற்றும் எனது மகன் இயேசுவை விட்டு விலகி இருப்பவர்களுக்குக் கிடைக்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் விசுவாசத்திற்கும் உங்கள் செபத்திற்கும் மகிழ்வுடன் சாட்சிகளாகுங்கள், இதயத்திலுள்ள உங்கள் விசுவாசத்தின் மகிழ்வால், இறைவனின் பெறுமதிமிக்க சமாதானத்திற்காக தொடர்து செபியுங்கள். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!02-10-2014 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! தாயன்போடு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள். தொடக்கத்திலிருந்தே என் மகன் இயேசு விரும்பியதைப்போல வானகத் தந்தையையும், அடுத்திருப்பவரையும் அன்பு செய்வதே உங்கள் முதன்மையான கடமையாக கொள்ளுங்கள். இதுவே உலகத்திலுள்ள அனைத்திலும் சிறந்தது.
என் அன்பு பிள்ளைகளே! இக்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள், அறிகுறிகள் என்னவென்பதை நீங்கள் உணரவில்லையா? உங்களை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களும் இவ்வுலகில் அன்பு குறைந்துவருகிறது அல்லது அன்பு இல்லாமையால் நடக்கிறது என்பதை காட்டவில்லையா? உண்மையான மதிப்பீடுகளில்தான் மீட்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். வானகத்தந்தையின் வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவரை அன்பு செய்யுங்கள்; அவரை மகிமைப்படுத்துங்கள். என் மகன் யேசு விட்டுச்சென்ற பாதையில் நடங்கள்.
என் பிள்ளைகளே! என் சீடர்களே! நீங்கள் என்னை எப்போதும் சூழ்ந்து நிற்பதற்கான காரணம், உங்களின் தாகமே. உங்களின் தாகம் அமைதிக்கான தாகம்; அன்பிற்கான தாகம்; மகிழ்ச்சிக்கான தாகம். என்னுடைய கைகளிலிருந்து பருகி அந்த தாகத்தைத் தணித்துக்கொள்ளுங்கள். என் கைகள் வழியாக என் மகன் இயேசுவே உங்களுக்கு வற்றாத ஜீவ ஊற்றை அருள்கிறார். அவர் உங்கள் விசுவாசத்தை புதுப்பிப்பார். உங்கள் மனதை தூய்மையாக்குவார். தூய்மையான இதயத்தை இயேசு அன்பு செய்கிறார். தூய்மையான இதயமே இயேசுவை நாடும். தூய இதயம் தாழ்ச்சி நிறைந்தது; உறுதியான விசுவாசம் கொண்டது. அத்தகைய தூய இதயத்தை அணிந்துகொள்ளவே நான் உங்களிடம் கேட்கிறேன். "நான் உலகனைத்திற்கும் தாய்" என்று இயேசு கூறுகிறார். உங்களின் வாழ்வு, செபம், தியாகம் அனைத்தினாலும் என்னை உங்கள் அன்னையாக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். நிச்சயம் நான் உங்களை அந்த வற்றாத வாழ்வுதரும் ஜீவ ஊற்றுக்கு அழைத்துச்செல்வேன்.
என் அன்பான பிள்ளைகளே உங்களுக்கு நன்றி! உங்களின் குருக்கள் தங்களது புனித கரங்களால் உங்களுக்கு ஒவ்வொரு திருப்பலியின்போது என் மகனின் உடலையும் இரத்தத்தையும் உங்களுக்கு தருகிறார்கள். இதற்காக இயேசுவின் தியாகத்தை எண்ணி அவருக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் குருக்கள் அதை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து, புதுப்பித்து வழங்குவதால் அவர்களுக்கும் நன்றி கூறுங்கள்.2014-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தில் இரக்கத்திற்காக செபிப்பதுடன், ஏற்கனவே ஒளியில் உள்ள புனிதர்களின் வேண்டுதல்களைத் தேடிக்கொள்ளுங்கள். அவர்கள் நாளுக்கு நாள் உங்களுக்கு முன்மாதிரிகையாக இருப்பதுடன் நீங்கள் மனம்திரும்ப உற்சாகம் வழங்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் வாழ்வு குறுகியது மற்றும் அழியக்கூடியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆகவே, முடிவில்லா வாழ்வை நினைத்து உங்கள் இதயத்தை செபத்தில் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனின் முன்பாக உங்கள் ஒவ்வொருவருக்காகவும் வேண்டிக்கொள்வதுடன், விசேடமாக என்னையும் எனது மகனையும் புனிதப்படுத்தும் அனைவருக்காகவும் மன்றாடுவேன். நன்றி நீங்கள் எனது அழைப்பை பின்தொடர்வதற்காக!2014-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் எனது மகனின் ஆசீரோடு, என்னை அன்பு செய்து என்னைப் பின்பற்ற முயற்சிக்கும் உங்கள் அனைவரோடும் உள்ளேன். அத்துடன் என்னை ஏற்றுக்கொள்ளாதவர்களோடும் இருக்க விரும்புகின்றேன். உங்கள் அனைவருக்காகவும் நான் எனது இதயம் நிறைந்த அன்பைத் திறந்து கொள்வதுடன், உங்கள் அன்னையாக எனது கரத்தால் ஆசீர் வழங்குகின்றேன். நீங்கள் விளங்கிக்கொள்ளும் அளவில் நான் உங்கள் ஒரு அன்னையாக உள்ளேன். நான் உங்களைப்போல் வாழ்ந்து, துன்ப துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிகளை அனுபவித்தேன், தமது துன்பங்களுடன் வாழ்பவர்கள் எனது துன்ப துயரங்களையும் அறிவார்கள், ஆனால் இருட்டில் வாழ்பவர்கள் எனது மகனின் ஒளியின் பிரகாசத்தை உள்ளேவர அனுமதிப்பதில்லை. ஆகவேதான் நீங்கள் எனக்குத் தேவைப்படுகின்றீர்கள், நீங்கள் அந்து ஒளியின் பிரகாசத்தைப் பெற்றவர்கள், நீங்கள் இந்த உண்மையை விளங்கிக் கொண்டவர்கள். உங்களைää எனது மகனிடம் மன்றாடுமாறும், அதன்மூலம் உங்கள் ஆன்மாவை வளப்படுத்தவும்;, உண்மையான தெய்வீகத்தை அடைந்து கொள்ளவும் அழைக்கிறேன். எனக்கு உதவிசெய்வது என்பதன் அர்த்தம், எனது மகனின் அன்பை இதுவரை அறிந்து கொள்ளாதவர்களுக்காக செபிப்பதாகும். இவர்களுக்காக செபிப்பதால் நீங்கள் எனது மகனை அன்பு செய்வதாகவும் அவரைப் பின்பற்றுவதாகவும் அவருக்குக் காட்டிக் கொள்கின்றீர்கள். சாத்தான் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என எனது மகன் எனக்கு உறுதியளித்துள்ளார், நீதியாளர்களின் ஆன்மாவைக் கொண்ட நீங்கள் இதயத்திலிருந்து எழுப்பும் செபங்களால், உங்கள் துன்ப துயரங்களை எனது மகனிடம் கூற முயற்சிப்பதுடன், வாழ்வு ஒரு இமைப்பொழுதில் முடிந்து விடும் ஆனால் வானக இராச்சியம் நிரந்தரமானது என்பதனை விளங்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்களை எனது தூதர்களாக ஆக்குவதுடன், நீங்கள் எனது இதயத்தை வெற்றி கொள்ள வழிசமைக்கும். ஆகவே, எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்தி எனது மகனிடம் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!2014-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று உங்களை விசேடவிதமாக செபிக்க அழைக்கிறேன், செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, அதன்மூலம், நீங்கள் யார் என்பதையும் நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கின்றீர்கள் என்பதையும் விளங்கிக் கொள்வீர்கள். நீங்கள் மகிழ்ச்சிச் செய்தியை அறிவிப்பவர்களாகவும் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர்களாகவும் இருந்து கொள்ளுங்கள். அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள். எனது பிள்ளைகளே, நீங்கள் இறைவனின் சித்தத்திற்கு ஏற்ப திறந்த மனதுடன் செபிக்கும்போது, நீங்கள் அவருக்கு அனைத்துமாகி, அனைத்தையும் நிறைவேற்றுவதுடன் அவர் உங்களுக்கு நித்திய வாழ்வை வழங்கி ஆசீர்வதிப்பார். நான் உங்களுடன் இருப்பதுடன் நாளாந்தம் எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!2014-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நீங்கள் நினைவிற் கொள்கின்றீர்களா, அதாவது நான் உங்களுக்கு கூறுகிறேன், அன்பே வெற்றிபெறும். எனக்குத் தெரியும், உங்களில் பலர் நம்பிக்கையை இழந்து விடுகின்றீர்கள், ஏனென்றால் உங்களைச் சுற்றி துன்பம், வேதனை, சந்தேகம், பொறாமை... போன்றவைகளையே காண்கின்றீர்கள். ஆனால் நான் உங்கள் அன்னை. நான் மோட்ச இராச்சியத்தில் இருக்கிறேன், இருப்பினும் இங்கு உங்களுடனும் உள்ளேன். எனது மகன் உங்களுக்கு உதவுவதற்காக மீளவும் என்னை அனுப்பியுள்ளார். ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், மாறாக என்னைப் பின்பற்றுங்கள், எனது இதயத்தை வென்றுவிடுவது கடவுளின் பெயராலேயே நடக்கக்கூடியது. எனது அன்பான மகன் எப்படி எப்போதும் உங்களை நினைப்பது போலவே தற்போதும் உங்களை நினைவிற் கொள்கிறார். அவரில் நம்பிக்கை கொள்வதுடன் அவரை அன்பு செய்யுங்கள். அவரே உலகின் வாழ்வாய் இருக்கிறார். எனது பிள்ளைகளே, எனது மகனை அன்பு செய்வதென்பதன் அர்த்தம், விவிலிய நற்செய்தியின்படி வாழ்வதாகும். இது இலகுவானதல்ல. இதன் அர்த்தம்: அன்பு, மன்னிப்பு மற்றும் இழத்தல் என்பதாகும். ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், மாறாக என்னைப் பின்பற்றுங்கள். மீண்டும் உங்களிடம் நான் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன், உலகின் முதல் ஆயரான எனது மகனையும் மற்றும் அவரது குடும்பமான முழு உலகையும் எப்பொழுதும் கண்டுணர்ந்து கொள்ள உங்கள் ஆயர்களுக்காகச் செபியுங்கள். நான் நன்றி கூறுகிறேன்"2014-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை என் கைகளில் ஏந்தி எனது மகன் இயேசுவிடம் உங்களுக்கும் உங்கள் மத்தியிலும் அமைதி உண்டாக வேண்டுகிறேன். செபியுங்கள், எனது மகனிடம் செபியுங்கள், இதன்மூலமே அவரது இதயத்திலிருந்து அமைதியும், மகிழ்வும் மீண்டும் கிடைக்கும். நான் உங்களுக்காக செபிக்கின்றேன், இதனால் நீங்கள் மென்மேலும் செபிக்கத் தூண்டப்படுவீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!