இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (A)

கல்லறை நமது வாழ்வின் தொடக்கமா? முடிவா?

எசேக்கியேல் 37:12-14
உரோமையர் 8:8-11
யோவான் 11:1-45

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! மனித வாழ்வின் தொடக்கமானது கருவரையில் ஆரம்பிக்கிறதா? அல்லது கல்லறையில் ஆரம்பிக்கிறதா? வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்ற பாடல் வரிகளை பல முறை கேட்டிருப்போம். கல்லறையிலே வாழ்வு முடிந்து விட்டது என பலபேர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கல்லறையில் தான் மனித வாழ்வு தொடங்குகிறது.

அந்தோணி என்பவர் அந்த ஊரிலே உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவர் தன்னுடைய தொழிலுக்கு உதவியாக பிரகாஷ் என்பவரை வைத்திருந்தார். அந்தோணியின் வங்கி கணக்கு, அவரது பயணங்கள், அவரது செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்தவர் பிரகாஷ் வருடங்கள் கடந்தோடின. காலப்போக்கில் இருவருமே தொழிலில் பங்குதாரர்களாக விளங்கினர். ஒருநாள் இருவருக்கும் ஒரு சின்ன பண பரிவர்த்தனையில் சந்தேகம் வர ஆரம்பித்தது. எனவே அந்தோணி தனித்து செயல்பட முடிவெடுத்து பிரகாஷை ஒதுக்க ஆரம்பித்தார். இதை பொருத்துக் கொள்ள முடியாமல் ஒருநாள் அந்தோணியை யாருக்கும் தெரியமால் கொலை செய்ய திட்டம் தீட்டி அவரை கொன்றுவிடுகிறார். பிரகாஷ் அந்த இறக்க சடங்கிலே கலந்து கொண்டு நல்லவன் போல நடிக்கிறான். அவனே அனைத்து வேலைகளையும் எடுத்து செய்கின்றான். குடும்ப உறுப்பினர்களும் பிரகாஷை முழுமையாக நம்பினர். இது பிரகாசுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. நிச்சயம் அந்தோணியின் அனைத்து சொத்துகளும் தன்பக்கம் வந்துவிடும் என நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியிலே இருந்தான். கடைசியாக அந்தோணியின் உடலை கல்லறைக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்கின்றனர். அடக்கம் செய்து பிறகு கல்லறையை விட்டு நடக்க முற்படுகிறான். அப்போது அந்த கல்லறையின் வாயிலே ஒரு வசனமானது தென்படுகிறது “இந்த இடம் இன்று எனக்கு நாளை உனக்கு” இந்த ஒருவசனத்தை உள்வாங்கியவாறு தனது வீடு திரும்புகிறான்.

ஆனால் அந்த இரவு அவனால் தூங்க முடியவில்ல. காரணம் இவ்வளவு செத்துகளைச் சேர்த்து, மக்களுக்கு மத்தியில் நல்லவனாக வாழ்ந்து, நல்ல கிறிஸ்தவனாக மரித்த இந்த அந்தோணி கடைசியில் எதையுமே எடுத்துச் செல்லவில்லை. ஆனால் எனக்கு நல்லதொரு வாழ்க்கை கொடுத்தவர் இந்த அந்தோணி. ஆனால் இன்று அவரைக் கொன்று அவரது சொத்துகளை நான் எடுத்துக்கொள்ள முற்படுகிறேன். அந்த கல்லறையில் இருந்த வசனத்தைப் போல நானும் நாளையே இறந்துவிட்டால் நான் சேர்த்த சொத்தெல்லாம் எங்கு செல்லும்;, யாருக்கு செல்லும் என்று குழம்பியவனாக அந்த கல்லறையின் இருந்த வசனம் மீண்டும் மீண்டும் அவனை சிந்திக்க வைத்தது. கடைசியில் ஒருவழியாக மனது தெளிந்தவனாய் அந்தோணி வீட்டாரிடம் சென்று தான் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கிறான். சிறைத்தண்டனை முடிந்து வீடு திரும்பியவுடன் அந்தோணி பவுண்டேசன் என்ற பெயரில் பல நல்ல காரியங்களை அவன் இன்று செய்து வருகிறான். தற்போது நல்ல கத்தோலிக்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

இயேசுவில் பிரியமானவர்களே கல்லறையில் தான் பிரகாஷக்கு உண்மையான வாழ்வு தொடங்குகிறது. அதேவேளையில் அந்தோணி இறந்து விட்டாலும் பிரகாஷ் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் வழியாக அந்தோணி இன்றும் வாழ்ந்து கொண்டு வருகிறார். யோவான் 12:24-ல் நாம் வாசிப்பது போல “கோதுமை மணியானது மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அப்படியே தான் இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சல் தரும்”. உதாரணமாக நமதாண்டவர் இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து, வாழ்ந்து, இறந்து, கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டவர். ஆனால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் நமது முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் வேண்டுமானால் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றும் அவர்பெயரால் பல நல்ல காரியங்களை நாம் செய்யும் போது இன்றும் அவர் பல மனிதர்கள் உருவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

‘எவ்வளவு நல்ல மனுசன் பாதியிலே போயிட்டாரே, அவரு இறந்து போனாலும் இன்னக்கியும் நம்ம மத்தியில வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்’ என்றும், ‘இவன் வாழ்ந்த வாழ்கைக்கு இப்படித்தான் சாவு வரும், இவனெல்லாம் செத்தும் நம்மை நிம்மதியா விட்டபாடில்லை’என்ற வசனங்கள் தான் நாம் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆக மனிதர்களுக்கு கல்லறையோடு வாழ்வு முடிந்து விடுவது கிடையாது. மாறக அதற்கு பிறகுதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.

எப்படியென்றால் ஒரு மரம் நடவேண்டும் என்று சென்னால் முதலில் நிலத்தை பண்படுத்த வேண்டும், நல்ல மரவிதைகளை நாற்று இடவேண்டும், அந்த நாற்றுகளை பறித்து நன்கு பக்குவப்படுத்தபட்ட இடத்தில் நடவேண்டும், அதற்கு போதிய அளவு உரம், தண்ணீர் விட்டு தினமும் கண்காணிக்க வேண்டும், அதன் பிறகு தான் கனிகளை நாம் எதிர்பார்க்க முடியும்.

அதைப்போலத்தான் இந்த உலகமானது வயல்வெளி போன்றது. விதைகள் மனிதர்களாகிய நாம் அனைவருமே. கடவுள் நம் அனைவரையும் விதைகளாக தாயின் கருவரையிலே விதைக்கிறார், பத்து மாதம் களித்து செடிகளாக இம் மண்ணில் நாம்மை வளர விடுகிறார். ஆக நாம் வாழும் இந்த உலகமானது பெற்றோர்கள், நண்பர்கள், திருச்சபை வழியாக நம்மை பக்குவப்பட வைக்கிறது. நாம் நல்ல கனிகளைத் தருகிறோமா? அல்லது கெட்ட கனிகளைத் தருகிறோமா என்பது நம்முடைய அடக்கத்திற்கு பிறகு தான் தெரியும். ஆக எப்படிப்பட்ட மனிதர்களாக நம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் மனிதனின் வாழ்வானது அவனது கல்லறைக்கு பிறகுதான் தொடங்குகிறது.

இதைத்தான் மத்தேயு நற்செய்தி 13:38-ல் “நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன், வயல் இவ்வுலகம், நல்ல விதைகள் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், தீயோனைச் சேர்ந்தவர்கள் அலகை விதைக்கும் பகைவர்கள், அறுவடை உலகின் முடிவு,” இப்படியாக நாம் நல்லவர்களா? கெட்டவர்களா என்பது கல்லறைக்கு பிறகு வரும் வாழ்வு என்று இயேசு தெளிவுபட விளக்குகிறார். இன்றைய வாசகங்களும் கல்லறைக்கு பிறகு வாழ்வு உண்டு என்று நமக்கு தெளிவுபடுத்துகின்றன. முதல் வாசகத்தில் நான் உங்களை கல்லறையில் இருந்து வெளிக்கொணருவேன். அப்போது உங்களுக்கு உங்கள் நாட்டை திரும்ப கொடுப்பேன், அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்கிறார். மேலும் நற்செய்தி வாசகத்தில் இறந்து போன இலாசருக்கு புதிய வாழ்வைக் கொடுத்து வாழ வைக்கிறார். இன்று நம்மையும் தேடிவந்து நமக்கு வாழ்வு தர இருக்கிறார். வாழ்வை பெற்றுக்கொள்ள யாரெல்லாம் தயராக இருக்கிறோம்?

ஆண்டவரே உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்.
யாரெல்லம் ஆண்டவருடைய நண்பர்கள்?
யோவான் 15:14– ல் “நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நன்பர்களாய் இருப்பீர்கள். யாரெல்லாம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அனைவருமே இயேசுவின் நண்பர்கள். இன்று நாம் இயேசுவுக்கு நண்பர்களா? எதிரிகளா? கடவுள் சொல்வதை கடைபிடிக்கிறோமா? அல்லது கடவுளின் கட்டளைகளை ஊதாசினப்படுத்துகிறறோமா?

ஆண்டவருடைய நண்பர்கள் எந்தெந்த நோயினால் ஆட்கொள்ளபட்டுள்ளனர்?
இன்று ஆண்டவரின் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம், (தெரிந்ததையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்…) என்ற நோயினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம்.

இயேசு கண்ணீர் விட்டு அழுதது யாருக்காக?
தன்னுடைய நண்பர் இலாசர் தன்னைவிட்டு பிரிந்ததற்காக இயேசு கண்ணீர் விட்டு அழுகிறார். இன்றும் எப்பொழுதெல்லாம் கடவுளைவிட்டு பிரிந்து தீய எண்ணங்களையும், தீய செய்களை நாம் செய்கிறோமோ அப்போதெல்லம் இயேசுவும் கண்ணீர்விட்டு அழுகிறார்.

ஏன் கல்லை அகற்றிவிடுங்கள் என்றார் இயேசு?
கடவுளின் மாட்சியை காண வேண்டுமென்றால் கற்களை அகற்ற வேண்டும் (யோவா11:40) இன்றும் நம்மிடையே இருக்கும் கல்லான இதயங்களை நாம் மாற்றும் போது நாமும் கடவுளின் மாட்சியை காணலாம். எசேக் 36:26-ல் “உங்கள் உடலில் இருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு சதையிலான இதயத்தை பொருத்துவேன்” என்கிறார் நமதாண்டவர். நம்மிடையே உள்ள கல்லான இதயத்தை அகற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

ஏன் இலாசரை வெளியே வரச் சொன்னார்?
சாவு என்பது முடிவு கிடையாது. கிறிஸ்தவர்களுக்கு சாவோடு வாழ்வு முடிந்து விடுவது கிடையாது. ஆனால் சாவுக்கு பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறார். அதனால் தான் யோவா 1:4-ல் “அவரோடு வாழ்வு இருந்தது” என்று சொல்லும் போது இயேசு வழியாகத்தான் மனிதர்களுக்கு வாழ்வு என்பதை தெரியப்படுத்துகிறார். மேலும் இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கமே நம் அனைவரும் நிலை வாழ்வை கொடுப்பதற்காக “மக்கள் வாழ்வு பெறும் பொறுட்டு அதுவும் நிலைவாழ்வை பெறும் பொருட்டு வந்தார் யோவா 10:10. எனவே நாமும் நம்முடைய சுயநல கட்டுகளில் இருந்து வெளியே வரும்போது நமக்கும் புதிய வாழ்வு காத்திருக்கிறது.

(உயிர்புக்கு பிறகு லாசரின் வாழ்வு எப்படி இருந்தது?
புனித சைப்பிரஸ் எப்பிபானுஸ் கூறுவார் இலசரை இயேசு உயிர்பித்த போது அவருக்கு வயது 30. அதன் பிறகு 30 ஆண்டுகள் இவ்வுலத்தில் வாழ்ந்தார் என்று விளக்குகிறார். மேலும் இலாசர் யூதர்களுக்கு பயந்து சைப்பிரசில் உள்ள கீதோன் என்னும் இடத்தில் குடியேறி வாழ்ந்து வருகிறார். அப்போது புனித பவுலும், புனித பர்னபாவும் அவரை சந்திக்கின்றனர். இவர்கள் இருவரும் கீதோனில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்துவதற்காக இலசரை முதல் ஆயராக தேர்வுசெய்து அர்சிக்கின்றனர். அதன்பிறகு கி.பி 63-ல் இலாசர் மீண்டும் மரிக்கிறார். இன்று திருச்சபையில் ஒரு புனிதாரக போற்றப்பட்டு வருகிறார்.)

ஏன் கட்டுகளை அவிழ்த்துவிட்டு போக விடுங்கள் என்றார் இயேசு?
இலாசருக்கு பாவம் என்ற கட்டிலிருந்தும், இறப்பு என்ற கட்டிலிருந்தும் விடுவித்து வாழ்வு என்னும் புதிய பாதையை வாழ இலாசரை அனுப்பிவிடுகிறார். ஆம் அன்புக்குரியவர்களே! இன்றும் நமதாண்டவர் நம்முடைய பாவகட்டுகளில் இருந்தும், சாத்தானின் தீய கட்டுகளில் இருந்தும், பணம், பதவி என்னும் உலக கட்டுகளில் இருந்தும், பாசம் நேசம் என்ற உறவு கட்டுகளில் இருந்தும் நமக்கு விடுதலை அளித்து ஆண்டவருக்காகவும், அவருடைய பணிக்காவும் வாழ அழைப்பு விடுக்கிறார். எனவே இந்த தவக்காலத்தில் நம்மையே நாம் சுயஆய்வு மேற்கொண்டு கல்லறைக்கு பிறகு தான் உண்ணமையான வாழ்வு உண்டு என்பதை உணர்ந்து அதற்காக நம்மையே நாம் இந்த தவக்காலத்தில் தயாரிப்போம்.

புனித இலாசர் நமக்காக பரிந்து பேசட்டும். ஆமென்.