இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









குருத்து ஞாயிறு (பாடுகளின் ஞாயிறு)

நான் அன்பு செய்பவனா? அன்பு செய்ய மறுப்பவனா?

ஏசாயா 50 4-7
பிலிப்பியர் 2:6-11
மாற்கு 14:1-15,47

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்று நமக்கெல்லாம் ஓர் முக்கியமான நாள். தாயாம் திருச்சபையானது குருத்து ஞாயிறை சிறப்பிக்கின்றது. அதே வேளையில் கிறித்தவர்களாகிய நமக்கு ஓவ்வொரு ஞாயிறும் உயிர்ப்பு ஞாயிறு தான் ஆனால் இன்று இந்த ஞாயிறு மட்டும் பாடுகளின் ஞாயிறு என அழைக்கப்படுகின்றது. காரணம் இந்த நாளில் நாம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை பற்றி தியானிக்க இருக்கின்றோம். இயேசுவின் இந்த பாடுகள் எதற்காக? இயேசு ஏன் பாடுகள் படவேண்டும்?

அன்புக்குரியவர்களே கடவுள் தான் படைத்த உலகையும், தன்னுடைய சாயலில் படைக்கப்பட்ட மக்களையும் அன்பு செய்கின்றார். தான் அன்பு செய்த ஓரே காரணத்திற்காக இயேசு பாடுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றார். உதாணமாக
யோவான் நற்செய்தி 3:16-ல் “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் (அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும்) அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்”. இதே இயேசு கிறிஸ்து மாற்கு நற்செய்தி 8: 31-ல் "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு ஒவ்வொரு முறையும் தனது சீடர்களுக்குக் கற்பித்து வந்தார். ஆக இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் இவையனைத்தும் இயேசுவின் அன்பின் வெளிப்பாடுகள்.

அப்படியானால் யாரெல்லாம் அன்பு செய்கின்றனரோ அவர்கள் அனைவரும் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும், பாடுகள் பட்டுத்தான் ஆக வேண்டும். எனவே உண்மையிலே அன்பு செய்யும் ஒவ்வொருவரும் இயேசுவைப்போல துன்பங்களை தைரியமாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அன்பு செய்ய மறுப்பவர்களோ மற்றவர்கள் மீது துன்பங்களை திணிக்கின்றனர். இன்று நாம் துன்பங்களை ஏற்றுக்கொள்பவர்களா? அல்லது துன்பங்களை மற்றவர்கள் மீது திணிப்பவர்களா? நான் அன்பு செய்பவரா? அல்லது அன்பு செய்ய மறுப்பவரா என்று சிந்திப்போமா?

அன்புக்குரியவர்களே, அன்பு செய்ததால் நடந்த உண்மைச் சம்பவம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் நிஜர் என்ற ஒரு நாடு இருக்கின்றது. இங்கு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு மறைபணியாற்ற பல குருக்கள் இருக்கின்றனர். இவர்களில் நமது கோயமுத்துரைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவரும் அவரோடு சேர்ந்து மற்ற 2 அருட்தந்தையர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். ஒருநாள் மாலை நேரம் 15-முதல் 20 தீவிரவாதிகள் இந்த தந்தையர்கள் வாழ்ந்த இடத்தை முற்றுகையிட்டு துப்பாக்கியால் சரமரியாக சுடுகின்றனர். ஆலயத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துகின்றனர், நற்கருணை பேழையை உடைத்தெறிகின்றனர், சிருபங்களை உடைக்கின்றனர். இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு உள்ள ஒரு தந்தை வெளியே வருகின்றார். அந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் இவரை சுடுகின்றனர். அந்த இடத்திலேயே இரத்தம் சிந்தி உயிரை விடுகின்றார்.

மற்றொரு அருட்தந்தை அருகில் உள்ள கன்னியர் மடத்திற்கு சென்று அங்குள்ள அருட்சகோதரிகளை பத்திரமாக இருக்கச் சொல்ல அங்கு செல்கின்றார். அந்த அருட்கன்னியர்கள் அனைவரும் ஒரு அறையில் பதுங்கிக் கொள்கின்றனர். ஒருசில அருட்சகோதரிகள் அவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஓர் பழைய குடோன் இருக்கின்றது. அதிலே அவர்கள் ஒளிந்து கொள்கின்றனர். இந்த தீவிரவாதிகள் அங்கும் செல்கின்றனர். ஒவ்வொரு அறையாக திறந்து அங்குள்ள அனைத்தையும் சுட்டுதள்ளுகின்றனர். கடைசியாக அவர்கள் வாகனத்திற்கு தீயிடுகின்றனர். அந்த கரும்புகை தாங்காமல் ஒரு சகோதரி வெளியே வருகின்றார். அவரையும் துப்பாக்கியால் சுட்டுகின்றனர். இரத்தவெள்ளத்தில் அவரும் மரிக்கின்றார். இந்த செய்தியை செல்லச் சென்ற அந்த தந்தையையும் அவர்கள் பிடித்து சித்ரவதை செய்து கொல்கின்றனர்.

கடைசியாக இந்த தந்தை எப்படியாவது நாம் தப்பிக்க வேண்டும் என நினைத்து சுவர் ஏறி குதித்து ஒடுகின்றார். அவரையும் விடாமல் துரத்துகின்றனர் அவர் ஓடிச்சென்று ஓர் புதரில் மறைந்து கொள்கின்றார். மீண்டும் அங்கிருந்து ஒட ஆரம்பிக்கின்றார். ஒருநாள் அல்ல இரண்டுநாள் அல்ல இரண்டு வாரம் அந்த பாலைவனப்பகுதியில் ஓடுகின்றார். சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை, குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. இப்படியாக எங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைகின்றார். அவர் கொடுத்த தகவலின் படி அங்குள்ள மக்கள் அவரை எங்கள் இடத்திற்கு அழைத்து வருகின்றனர்.

நாங்கள் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தோம். ஒரு இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் எங்களிடம் திரும்பி வந்தார். அப்போது அவர் நான் மீண்டும் நீஜருக்குச் சென்று பணியாற்ற விரும்புகின்றேன் என்றார். நாங்கள் அங்கு தான் இன்னும் பிரட்சனைகள் முடியவில்லையே ஏன் அங்கு செல்கின்றீர்கள்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்
“இந்த மக்கள் எதுவும் அறியாத பாமர மக்கள், படிப்பறிவில்லாத மக்கள், ஆனால் கடவுள் பக்தி மிகுந்தவர்கள், அன்பும், பாசமும் நிறைந்தவர்கள். அவர்கள் மீது எனக்கு பாசம் அதிகம். நிச்சயம் நான் சென்று அந்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்” என கூறினார்.

அன்புக்குரியவர்களே தன் கண்முன்னாலே இரத்த வெள்ளத்தில் மரித்த தனது சக குருக்களையும் பார்த்தவர், தனது உயிருக்காக போரடியவர், உண்ணவும், தாகத்திற்கும் தண்ணீர் இல்லாமல் அழைந்தவர் ஆனாலும் எனது மக்களுக்காக நான் திரும்பி வந்திருக்கின்றேன். மீண்டும் அதே மக்களுக்கு பணியாற்ற செல்கின்றேன் என்று கூறினால் இது தான் அன்பின் உச்சக்கட்டம். தான் அன்பு செய்த குருத்துவ பணிக்காகவும், தான் அன்பு செய்த மக்களுக்காவும் எல்லாவித துன்பங்களையும், துயரங்களையும் பொறுத்துக்கொண்டு மறைபணியாற்றுகின்றார். இயேசு தான் அன்பு செய்த மக்களுக்காக தனது உயிரையும் கையளித்தவர். அன்பு செய்பவர்கள் நிச்சயம் துன்பத்தை அனுப்பவிக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.

அதனால்த்தான் தூய பவுல்
1கொரிந்தியர் 13:4-13ல் “அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது என்கின்றார்”. ஆக அன்பு செய்பவர்கள் துன்பத்தை தங்கள் மீது ஏற்றுக்கொள்பவர்கள். ஆனால் அன்பு செய்ய மறுப்பவர்களோ தன்னை சுற்றியிருக்கும் அனைவரிடமும் துன்பத்தை கொடுப்பவர்கள்.

சந்தோஷ், சாந்தி இருவரும் பெற்றோர்கள், உற்றார் உறவினரின் ஆசீர்வாதத்தோடு தங்களது திருமண வாழ்வைத் தொடங்கினர். சந்தோஷ்க்கு இருப்பது ஒரு தாய் அவரும் கண்பார்வை மங்கலானவர், கால் நடக்க முடியாதவர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விடுவர். இந்த தாய் வீட்டில் தனியாக இருப்பதாலும், பாவம் பிள்ளைகள் வேலைக்குச் சென்று களைப்புடன் வருவதால் தனக்கு தெரிந்த வகையில் சமையல் செய்வது வழக்கம். கண்பார்வை சரியாக தெரியாததால் மசாலா பொருட்களை மாறி மாறி போட்டு சமையல் செய்து விடுவார். (உப்புக்கு பதில் சர்க்கரை) இதனாலேயே வீட்டில் அவ்வப்போது சண்டைகள் ஆரம்பமாகும். பேரப்பிள்ளைகளை வைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பார், தான் சாப்பிடும் உணவை அவர்களுக்கு ஊட்டி விடுவார். இதனால் ஒவ்வொரு நாளும் எரிச்சல் அடைவார் அவரது மனைவி.

ஒருநாள் அந்த தாய் பாத்ருமில் தவறிவிழுந்து மற்றொரு காலையும் உடைத்துக் கொண்டார். அந்த மாதம் மருத்துவச்செலவு அதிகமாகிப்போனது. இப்போது ஒவ்வொரு நாளும் அனைத்து வேலைகளையும் மனைவி தான் செய்ய வேண்டும். ஒருநாள் தனது கணவனிடம் நாம் இருவரும் சாம்பாதிக்கும் பாதிப்பணம் உங்களது தாயின் மருத்துவச் செலவிற்கே போய்விடுகின்றது, இப்படியே சென்றால் நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒன்றுமே இருக்காது, உமது தாயாரால் நமக்கு எந்த இலபமும் கிடையாது, உங்கள் தாய் இப்படி இருப்பதால் நாம் எங்குமே தனியாக ஒரு இடத்திற்கோ, சுற்றுலாவிற்கோ, சுபநிகழ்ச்சிகளுக்கோ எங்கும் சென்றுவர முடிவதில்லை, ஒவ்வொருநாளும் அவரை குளிப்பாட்டி விடுவதற்கு நான் என்ன வேலைக்காரியா? அவர்கள் நமது குடுப்பத்திற்கு ஓர் மிகப்பெரிய சுமை. எனவே ஒன்று அவரை அழைத்துக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டுவிடுங்கள், அல்லது யாருக்கும் தெரியாத ஓர் இடத்தில் அவரை விட்டுவிட்டு வந்துவிடுங்கள். இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமா? அல்லது உங்களது அம்மா இருக்க வேண்டுமா? நீங்களே இன்று மாலைக்குள் முடிவு எடுங்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள்.

கணவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. முதியோர் இல்லத்தில் சேர்த்தால் மீண்டும் மாதமாதம் வந்து பார்க்க வேண்டும், மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும், மீண்டும் தனது தாயால் நமக்கு தொல்லைதான் என நினைத்து அவரை தனது காரில் ஏற்றி திருச்சி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றவன் தான் மீண்டும் வரவே இல்லை. அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஓர் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அவர்கள் கடைசியாக சாகும் தருவாயில் சொன்ன வார்த்தைகள்


பிரியமானவர்களே கணவன் தன்னுடைய தாயை அன்பு செய்தவன் தான். ஆனால் எப்போது அன்பை எடைபோட்டு பார்த்தானோ (தாயா? தாரமா? பணமா, பாசமா?) அப்போதே அன்பு அங்கு செத்துவிட்டது. அதைப்போலவே மனைவி தன்னுடைய தாயை அன்பு செய்தவள், வயதான காலத்தில் தனது தயை குளிப்பாட்டி, தாய்க்கு வேண்டிய அனைத்தையும் செய்ய ஆசைப்படுபவள். ஆனால் இங்கு இவரை மாமியார் என்று பார்க்காமல் தனது தாய் என்று அவரை நினைத்திருந்தால் நிச்சயம் வீட்டைவிட்டு வெளியேற்ற சொல்லியிருக்க மாட்டார்.

பிரியமானவர்களே!
உண்மையான அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும் ஆனால் பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.



இன்றைய நாளில் குருத்தோலைகளை கையில் ஏந்தி இயேசுவின் பாடுகளை தியானிக்க நாம் வந்துள்ளோம். தான் படைத்த மக்களை அன்பு செய்த காரணத்திற்காக கடவுளாய் இருந்தும் இயேசு அனைத்தையும் தாங்கிக்கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில் “அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை” என்றறிவேன் என்கின்றார். காரணம் யோவான் 15 : 13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என அன்பிற்கு இலக்கணம் வகுத்தவர் நமதாண்டவர். இன்று நம்மோடு இருப்பவர்களை நாம் அன்பு செய்யும் போது அவர்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை கொடுத்து அவர்களை மகிழ்விக்கின்றோம். ஆனால் இயேசு மக்களை அன்பு செய்தார். அதற்காக மக்கள் கொடுத்த பரிசுகள்:



ஏன் கழுதைக்குப் பதில் குதிரைளை பயன்படுத்துவேமே என்று ஒரு சீடர்கள் கூட பேசவில்லையே! இயேசு சீடர்களை அன்பு செய்தார். ஆனால் சீடர்களோ தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாதிட்டனர், இடதுபுறமும், வலது புறமும் யார் அமர்வது என பட்டிமன்றம் நடத்தினர், பரிந்து பேச தன் தாயை அழைத்து வந்தனர், மேலும் பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் வீட்டில் இயேசு இருந்த போது ஒரு பெண் கலப்பற்ற, விலையுயர்ந்த இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றியபோது ஏழைகள் மீது பாசம் வைத்திருப்போல நினைத்து "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, என்று தங்களுக்குள் பணத்தை பங்கு போட நேரம் இருந்தது. ஆனால் என்னுடைய அரசருக்கு, என்னுடைய மெசியாவிற்கு ஏன் இந்த கழுதைப்பயணம் என ஒருவர் கூட பேசவில்லையே!


2. நம்பிக்கைத் துரோகம்
இயேசு தான் வாழ்ந்த சமூதாயத்தில் தனக்கு நம்பிக்கைக்கூறியவர்கள் என நினைத்து 12 நபர்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய சீடராக மாற்றுகின்றார். அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து அவர்கள் நடுவே மூன்று வருடம் இருந்து அவர்களின் தேவைகளையெல்லாம் பூர்தி செய்கின்றார். தன்னுடைய சீடர்களை முழுமையாக நம்பி தனக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றார். ஆனால் இயேசுவின் கூட்டத்தில் நிதியமைச்சராக இருந்த தர்மயுத்த தலைவன் யூதாசு இஸ்காரியோத்து
தலைமைக் குருவிடம் வந்து இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

அத்தோடு மட்டுமல்லாமல் இயேசுவே அவனுக்கு அறிவுறுத்துகின்றார் மத்தேயு 26 : 21-25 அவர்கள் உண்டு கொண்டிருந்த பொழுது இயேசு, "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். மேலும் அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்கின்றார். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் "ரபி, நானோ?" என அவரிடம் கேட்க இயேசு, "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

ஆக இயேசு வெளிப்படையாக நீர் தான் காட்டிக்கொடுக்கப் போகின்றாய் என்று சென்ன பின்பும் பணம் என்ற போதை அவனது கண்ணை மறைத்து விட்டது. எனவே நட்பிற்கு துரேகம் வருவிக்கின்றான். யூதாசு, இயேசுவை அன்பு செய்யவில்லை மாறக அவரால் வரும் பணத்தையும், புகழையும் அன்பு செய்தான். இன்றும் நமது சமூதாயத்தில் அப்படித்தானே நடந்து வருகின்றது.


3. துன்பப்படுபவர்களோடு நமது பங்கு: துக்கமா? தூக்கமா?
அன்புக்குரியவர்களே, உதாரணமாக,


உண்மையான அன்பு இருந்தால் அவர்கள் அந்த பிரட்சனைகளை விட்டு வெளியே வரும் வரை நிச்சயமாக நம்மால் சாப்பிட முடியாது, உறக்கம் வராது, எந்த வேலையும் செய்ய பிடிக்காது. ஆனால் இயேசு தனது பாடுகளை அறிவித்த பிறகும், கெத்சமனிக்கு தனது சீடர்களை அழைத்துச் சென்று “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று சொல்லிவிட்டு தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்”. தமிழில் ஓர் பழமொழி உண்டு என்று. இந்த சீடர்களுக்கு இயேசுவின் மீது எவ்வளவு அக்கறை என்று பாருங்கள். தான் துன்பப்படப் போகின்றேன், என்னை காட்டிக் கொடுக்க போகின்றீர்கள், என்று திட்டவட்டமாக கூறிய பின்னரும் சீடர்களோ உறங்கிக் கொண்டிருந்தனர். இயேசுவைப் பற்றிய கவலையில்லை, அவரது பாடுகளைப் பற்றிய சிந்தனை இல்லை. இயேசு பேதுருவிடம், "சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? என்று கேட்டுவிட்டு மீண்டும் விழித்திருந்து ஜெபியுங்கள் என்கின்றார் அதைக் கேட்ட பிறகும் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றர். இன்று நம்மோடு துன்பப்படும் மக்களோடு நாம் துக்கம் கொண்டாடுகின்றோமா? அல்லது நமக்கு சொகுசான வாழ்வை தேர்ந்தெடுக்கின்றோமா?


என்று! அப்படித்தான் பேதுருவுக்கும். இயேசு பேதுருவை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால்த்தான் தனக்கு பிறகு தன்னுடைய பணியை தலைமை பொறுப்பேற்று நடத்த தகுதியுள்ளவர் என நினைத்து அவரை தேர்வு செய்கின்றார். மேலும் அவரிடம் இன்று மூம்முறை என்னை மறுதலிப்பாய் எனக் கூறியும் பேதுரு இயேசுவை மறுதலிக்கின்றார்." “பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ஒரு பெண் "நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே" என்றார். அதற்கு பேதுரு நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும், ஆணையிடவும் தொடங்கினார். இந்த சீடர்கள் இயேசுவை அன்பு செய்தவர்கள் தான். ஆனால் தனக்கு ஒரு பிரட்சனை என்று வந்தவுடன் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டனர். இன்று நாமும் நமது வீட்டில் ஒருபிரட்சனை என்றால் முதியோர்களை வீட்டைவிட்டு துரத்துகின்றோம், பணம் சேர்பதில் பிரட்சனை இருப்பதால் நாம் பெற்றறெடுத்த பிள்ளைகளை கவனிக்க நமக்கு நேரமில்லாமல் வேலையாளை வைத்து பார்த்துக் கொள்ள செய்கின்றோம். அதற்கு நாம் கூறுவது நான் எனது குடும்பத்தையும், எனது பிள்ளையையும் அன்பு செய்கின்றேன் என்று. உண்மையான அன்பு யாரையும் உதறிவிடாது…