இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A)

மாற்றங்கள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன!

தெடக்கநூல் 12:1-4
2 திமொத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! நம்முடைய அன்றாட வாழ்க்கையை சற்று உற்று நோக்கினால் எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் மாற்றங்கள் இருப்பதை நம்மால் காணமுடியும். இன்றைய நம்முடைய உலகமானது ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று இருந்தது இன்று இல்லை> இன்று இருப்பது நாளைக்கு இருக்குமா என்ற ஒரு கேள்வியில் தான் நமது வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. கருப்பையில் இருந்து கல்லறை வரை எங்கு பார்த்தாலும் ஒரே மாற்றம். குழந்தைகள் கருத்தரிப்பதிலே மாற்றங்கள்> குழந்தையின் நடையிலே மாற்றம்> அதன் உடையிலே மாற்றம்> பாவனைகளில் மாற்றங்கள். படிப்பிலே மாற்றம்> உண்ணும் உணவிலே மாற்றம்> செய்யும் தொழிலிலே மாற்றம்> பார்க்கும் பார்வையிலே மாற்றம்> பேச்சும் தொனியிலே மாற்றம்> நாட்டின் பொருளாதரத்திலே மாற்றம்> அரசியல் நிகழ்வுகளில் மாற்றம்> ஆலய வழிபாடுகளில் மாற்றம்> நாம் பயன்படுத்தும் பணத்திலே மாற்றம்> அடக்கம் செய்யும் கல்லறைகளில் கூட மாற்றம். இப்படியாக மாற்றமே மனிதனின் வாழ்வை மாற்றிவருகிறது. எதுவுமே இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஏன் நம்முடைய இந்த தவக்காலமும் நம்முடைய மாற்றத்தை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறது. பாவவாழ்க்கை வாழும் அனைத்து மனிதர்களும் மனம் மாறி புதிய மனிதர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது.

மாற்றங்கள் மனிதர்களுக்கு தேவையா? அல்லது தேவையற்றதா?
மாற்றங்கள் மனிதர்களுக்கு தேவையா அல்லது தேவையற்றதா என்பதைவிட மாற்றங்களுக்கு மத்தியில்தான் மனிதன் தன்வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பது தான் நிதர்சன உண்மையாகும். ஆம் அன்புக்குரியவர்களே! குறிப்பாக பிறந்த குழந்தை அப்படியே குழந்தையாகவே இருந்தால் மனிதர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காது காரணம் பிறந்த குழந்தையானது தவழ்ந்து எழுந்து ஓடி> ஆடி விளையாடுவதைத்தான் அனைவரும் விரும்புகிறோம். அதற்கு மாறாக பிறந்த குழந்தையானது வளர்ச்சியில்லாமல்> மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தால் அக்குழந்தை நோய்வாய்ப்பட்ட குழந்தை என்பது தான் அர்த்தம். அதைப்போலவே பள்ளிக்குச் செல்லும் குழந்தை ஒவ்வொரு வருடமும் மாறிச்செல்லாமல் ஒரே வகுப்பிலே பலவருடங்கள் படித்தது வந்தால் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எந்த பெற்றோரும் அதை விரும்புவதில்லை. ஆக மாற்றங்கள் நிச்சயம் மனிதர்களுக்குத் தேவையாகும். ஏன் இன்றைய நற்செய்தியிலே இயேசுவும் உருமாற்றம் அடைந்ததைத்தான் இன்று நாம் தியானிக்கிறோம். எனவே> மனிதராக பிறந்த அனைவருமே மாற்றங்களை சந்திக்கின்றனர்.

இயேசுவுக்கு உருமாற்றம் தேவைதானா?
இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! இந்த கேள்வியை நான் ஒருவரிடம் கேட்டேன் அவர் கூறினார்> மனிதராக பிறந்த அனைவருமே மாற்றங்களை சந்திக்கின்றனர். எனவே இயேசுவும் மனிதராக பிறந்தார் எனவே அவருக்கும் மாற்றம் தேவை என்றார். இது சரியான பதிலா?

இயேசுவின் இந்த தோற்றம் மாறும் நிகழ்வானது இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கைக்கு பிறகு எழுதப்பட்டு இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பார்த்து நான் யார் என்று கேட்கிறார்? அதற்கு பேதுரு “நீர் மெசியா> வாழும் கடவுளின் மகன் என்று வெளிப்படுத்துகிறார்”. இதற்கு இயேசு ‘யோனாவின் மகன் சீமோனே நீ பேறுபெற்றவன்’ என அவரைப் பாரட்டுகிறார். பேதுரு சொன்ன பதிலுக்கு தகுந்த சன்மானத்தையும் இயேசு கொடுக்கிறார். (விண்ணரசின் திறவுகோல், பாவத்தை மன்னிக்கும் அதிகாரம்) ஆக இப்போது பேதுருவும் சீடர்களும் மகிழ்ச்சியிலே மிதந்து கொண்டிருக்கின்றனார். இத்தருணத்தில் இயேசு அவர்களிடத்தில் தனது சாவை அறிவிக்கிறார். அப்போது பேதுரு ஆண்டவரே இது உமக்கு வேண்டாம். இப்படி நடக்கவே கூடாது என்றார். உடனே இயேசு “என் கண் முன் நில்லாதே சாத்தானே. நீ எனக்கு தடையாக இருக்கின்றீர். கடவுளுக்கு ஏற்றவையைப் பற்றி என்னாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றி என்னுகிறாய்” என இயேசுவை கடிந்து கொள்கிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே! இப்போது சீடர்கள் குழப்பம் அடைந்த நிலையில் இருக்கின்றனர். இந்த இயேசு யார்? என்பதை அவர்களாhல் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே குழப்பமும்> சந்தேகத்தோடு இருந்த சீடர்களை இயேசு அழைத்துச் சென்று அவர்களுக்கு தான் யார் என்பதை உருமாற்ற நிகழ்வு வழியாக நிருபிக்கிறார். மனிதர் என்ற முறையிலே துன்பத்தை அனுபவிக்கவும், கடவுள் என்ற முறையில் தனது மாட்சியை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வானது தான் சந்திக்க கூடிய பாடுகள்> துன்பங்கள்> சிலுவை மரணம் இவை அனைத்தையும் தாங்கிக்கொள்வதற்கு தைரியத்தை கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். இரண்டாவதாக இந்த இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வானது தனது சீடர்களின் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. மேலும் இயேசுவின் இறப்புக்கு பிறகு பயந்து போய் இருந்த சீடர்களுக்கு இந்த உருமாற்ற நிகழ்வு இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சியாகவும்> அவர்களது நம்பிக்கையை பெலப்படுத்துவதாகவும் இருக்கிறது. 2பேதுரு1:16-18ல் நாங்கள் இயேசுவின் மாண்பை நேரில் கண்டவர்கள் என்று தங்களது தாபோர் மலை அனுபவத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன?
கடவுளும் மனிதருமான இயேசுவுக்கு உருமாற்ற நிகழ்வு தேவைப்பட்டது. அதைப்போலவே மனிதர்களாகிய நாம் அனைவரும் மாற்றங்களை அன்றாடம் அனுபவித்து வருகிறோம். எனவே எப்படியெல்லாம் இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சிந்திப்போம்.

1. கடவுளுடைய ஆசீர்வாதத்தால் மாற்றங்கள் நிகழ்கின்றன.
கடவுள் யாரையெல்லாம் ஆசீர்வதிக்கிறாரோ அவர்களுடைய வாழ்வு முற்றிலும் மாற்றம் அடைகிறது.
அந்த சிறிய கிராமத்திலே புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் சிறு சிறு குழப்பங்களும்> சந்தேகங்களும் தலையெடுக்க ஆரம்பிக்கின்றன. காரணம் அத்தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத சூழல். எனவே பலவிதமான மருத்துவர்களின் உதவியை நாடி> மருந்துகளையும் உட்கொள்கின்றனர். மேலும் நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கோயிலாக செல்கின்றனர். பக்தி முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் அந்த கணவனுக்கு வேறுதிருமண ஏற்ப்பாடுகளை செய்யத் தொடங்குகின்றனர். மனைவியை அடித்து துன்புறுத்துகின்றனர்> குழந்தை பெற தகுதியற்றவள் என அனைவராலும் ஏளனம் செய்யப்படுகிறார். அந்த அத்தருணத்தில் அந்த மனைவி மிகவும் மனம் உடைந்த நிலையில் கடவுளே முழுமையான தஞ்சம் என்று இன்னும் அதிகமாக ஜெபிக்கிறாள். மடிப்பிச்சை ஏந்தி கடவுளிடம் ஜெபிக்கின்றாள். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் அக்குழந்தையை கடவுளுடைய பணிக்காக நிச்சம் அர்ப்பணிப்பேன் என்று ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுக்கிறாள். சிலநாட்களில் ஆண்டவருடைய ஆசீர்வாதம் அந்த பெண்ணுக்கு கிடைக்கிறது.

ஒருவருடத்தில் ஓர் அழகான ஆண்குழந்தையை அவள் பெற்றெடுக்கிறாள். அந்த குடும்ப வழக்கப்படி முதல் குழந்தை ஆண் குழந்தை என்பதால் அதற்கு ஜாதம் பார்க்க செல்கின்றனர். அந்த ஜோதிட எழுத்தாளர் இந்த குழந்தை இக்குடும்பத்திற்கு இராசியான குழந்தை கிடையாது. நிச்சயம் இந்த குழந்தை வீட்டில் இருந்தால் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். பொருளாதாரம் வளர்ச்சியடையாது. விவசாயம் முன்னேறாது. சீக்கிரம் இந்த குடும்பத்தில் யாரவது ஒருவர் இறந்துவிடுவார் என்று பலவித கருத்துகளை வைத்து அந்த ஜேசியர் இந்த குழந்தையின் ஜாதகத்தை எழுதுகிறார். இந்த செய்தி அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. கடவுளின் வரத்தால் அக்குழந்தை பிறந்தது என எண்ணினர். ஆனால் அக்குழந்தையே குடும்பத்திற்கு அழிவைத் தரப்போகிறது என்றவுடன் மீண்டும் அந்த குடும்பத்தில் குழப்பமும்> சண்டைகளும் ஆரம்பமாகிறது. எனவே> அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இக்குழந்தையை எங்காவது விட்டுவிடலாம் என நினைத்து அந்த பெண்ணின் வீட்டாரை வரவழைத்து இந்த குழந்தையால் எங்களுக்கு எந்த பலனும் கிடையாது. வேண்டுமானால் நீங்கள் இந்த குழந்தையை வளர்த்தெடுங்கள். இல்லையென்றால் நாங்கள் எங்காவது சென்று இந்த குழந்தையை ஒப்படைக்கலாம் என்று இருக்கிறோம் என்று கூறுகின்றனர். அந்த முதியவர்கள் கடவுள் பக்தியிலே சிறந்தவர்கள். கடவுளின் மீது நம்பிக்கை வைத்து கடவுள் கொடையாக வந்த இந்த பச்சிளம் குழந்தையை அவர்கள் எடுத்துச்சென்று வளர்க்க ஆரம்பிக்கின்றனர். தன்னுடைய சொந்த தாய்> தந்தையரால் இக்குழந்தை புறக்கனிக்கப்படுகிறது. தாய் பாசம் இல்லாவிட்டாலும் அந்த பாட்டி அளவுகடந்த பாசத்தோடு அக்குழந்தையை வளர்க்க ஆரம்பிக்கிறார். கடவுள் பக்தியிலே அந்த குழந்தையும் வளர ஆரம்பிக்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் பாசத்தை விட கடவுளின் மீது உள்ள பாசமும்> தனது தாத்தா> பாட்டியிடம் உள்ள பாசமும் அதிகமாகிறது.

எப்போது இக்குழந்தை அந்த வீட்டைவிட்டு சென்றதோ ஜோசியர் சொன்னது போல பல நல்ல காரிங்கள் அந்த வீட்டில் நடந்தேறுகின்றன. அதன்பிறகு தொடர்ந்து அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கிறது. விவசாயத்திலே முன்னேற்றம் ஏற்படுகிறது> பொருளாதாரத்திலே வளர்ச்சி காணப்படுகிறது> அனைவருக்கும் மகிழ்ச்சி. அதன்பிறகு கடவுளின் அருளால் பிறந்த குழந்தையை அவர்கள் கண்டுகொள்வது கிடையாது. நாட்கள் நகர்கின்றன. ஒருகட்டத்தில் அந்த குழந்தையை பாசத்தோடு வளர்த்த அதன் பாட்டி இறக்கிறார். அக்குழந்தை இரண்டாவது முறையாக மீண்டும் தனிமைப் படுத்தப்படுகிறது. அந்த குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு ஆட்கள் கிடையாது. இப்போது வேறுவழியில்லாமல் பெற்றோரே அக்குழந்தையை வளர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். வேறுவழியில்லாமல் பெற்றோர் இந்த குழந்தையை வளர்க்க முற்படுகின்றனர். இந்த குழந்தை வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் பிரட்சனைகள் ஆரம்பமாகின்றன. முதியோர்கள் இறக்கின்றனர்> விவசாயம் நலிவடைகிறது. பொருளாதாரம் குறைகிறது. ஒவ்வொருநாளும் இக்குழந்தை பல துன்பங்களை தன் பெற்றோர் வழியாக அனுபவிக்கிறது. மற்ற குழந்தைகளுக்கு முன்னால் இக்குழந்தை பார்த்து நீ இராசியில்லாதவன்> உன்னால் எங்களுக்கு இழப்புகள் தான் அதிகம்> நீ எதற்க்கும் விளங்காதவன் என்று அந்த குழந்தையின் முன்பாகவே பெற்றோர்கள் பேச ஆரம்பிக்கின்றனர். ஆறுதலும்> அரவனைப்பும் இல்லாததால் அக்குழந்தையின் படிப்பிலே கவனம் குறைகிறது. ஆனாலும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை மட்டும் அக்குழந்தை இழக்கவில்லை.

இத்தருணத்தில் அந்த குழந்தை படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும்> சக வகுப்புத்தோழர்களும் அந்த குழந்தைக்கு நண்பர்களாகிறனர். வருடங்கள் நகர்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை தனது மேல்நிலைப் படிப்பை முடிக்கிறது.இதற்கு மேலும் அந்த குழந்தை வீட்டில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து நேரும் என உணர்ந்து கடவுளுக்கு வாக்களித்தது போலவே கடவுளுக்காக அக்குழந்தையை அர்ப்பணிக்கின்றனர். ஆண்டவரும் அக்குழந்தையை தமது பணிக்காக தேர்ந்து கொள்கிறார்.

இதைத்தான் தூய பவுலடியார் 1கெரிந்தியர் 1:27-29-ல் “மடமையென உலகம் கருதுபவற்றை கடவுள் தேர்ந்து கொண்டார்”. கடவுள் தகுதியானவர்களை அழைப்பது கிடையாது மாறாக தம்மால் அழைக்கப்பட்டவர்களை கடவுள் தகுதிப்படுத்துகிறார். இப்படியாக அந்த குழந்தையின் வாழ்வு முற்றிலுமாக மாற்றம் பெருகிறது. ஆம் நண்பர்களே! கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல்லாயிற்று என்ற இறைவார்த்தையின்படி இக்குழந்தை இராசியில்லாதவன்> ஒன்றுக்கும் உதவாதவன்> என்று மனிதர்கள் ஒதுக்கினாலும் கடவுளின் ஆசீர்வாதம் அக்குழந்தையின் வாழ்வை மாற்றுகிறது. கடவுள் அந்த குழந்தையின் வாழ்வை மாற்றியதால் இன்று ஆயிரக்கணகான மக்களுக்கு ஆசீர்வாதத்தின் கருவியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறார். கடவுள் தன்னை ஆசீர்வதித்து வருவதை உணர்ந்த அந்த மனிதர் “ஆசீர்வாதத்தின் கருவியாக” என்ற விருது வாக்கோடு குருவாக கடவுள் பணியாற்றி வருகிறார். ஆம் அன்புக்குரியவர்களே! கடவுள் யாரையெல்லம் ஆசீர்வதிக்கிறாரோ அவர்கள் வாழ்வு அனைத்தும் அடியோடு மாற்றம் பெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசத்திலே நாம் வாசித்தோம்.

இயேசுவில் பிரியமானவர்களே! உங்களிடம் ஒரு கேள்வி. ஈசாக்கின் தாத்தா பெயர் யாருக்காவது தெரியுமா? அவரது பெயர் தொர. இவர் 205 ஆண்டுகள் வாழ்ந்தார். தொ.நூல்11:10-32 இவருடைய மகன்தான் ஆபிராம் நம்முடைய முதுபெரும் தந்தை ஆபிரகாம் ஆவார். இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் இந்த ஆபிராமுக்கு தன்னுடைய ஆசீர்வாதங்களை கொடுத்து அழைக்கிறார்.; “ஆண்டவர் ஆபிராமை நோக்கி உன் நாட்டிலிருந்தும், உன் இனத்தவரிடமிருந்தும், உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்;> உனக்கு ஆசி வழங்குவேன்> உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோறுக்கு நான் ஆசிவழங்குவேன். உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன். உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்”(தொ.நூல் 12:1-3). ஆண்டவருடைய வார்த்தையக் கேட்டு அதன்படி நடந்ததால் ஆபிராம் என்ற அவர் ஆபிரகாமாக மாறுகிறார். ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்தவர் ஓர் இனத்தின் தந்தையாக மாறுகிறார். பழைய ஏற்பாட்டு மக்களுக்கும்> பதிய ஏற்ப்பாட்டு மக்களுக்கும் முதுபெரும் தந்தையாக மாறுகிறார். ஏன் உங்களுக்கும் எனக்கும் இன்னும் வரக்கூடிய சந்ததிகள் அனைவருக்கும் நம்பிக்கையின் தந்தையாக மாறுகிறார். ஆக கடவுளுடைய ஆசீர்வாத்தால் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து இன்றும் நம்மோடு நம்பிக்கையின் தந்தையாக வாழ்ந்து வருகிறார். எனவே> கடவுளின் ஆசீர்வாத்தால் மனிதர்களின் வாழ்வு மாற்றம் அடைகிறது.

புதிய ஏற்ப்பாட்டில் ஆபிரகாமின் மகன் யார்?
மற்றொரு குழு ஒன்று தருகிறேன் பணக்காரனாக இருந்து மிகவும் ஏழையாக மாறியவன் யார்?இயேசுவில் பிரியமானவர்களே! உதாரணமாக நான் ஒரு மிகப்பெரிய ஏழை என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் ஜந்து பைசா கூட இல்லை. மிகப்பெரிய ஏழை. ஒரு நாள் ஒருவீட்டில் 100 ருபாய் திருடுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். இப்போது என்னிடம் எவ்வளவு இருக்கும் 100 ருபாய். அன்று மாலை ஆலயத்திற்கு வருகிறேன். என்னுள்ளே தீடிரென ஒரு மனமாற்றம். நான் கடவுளித்திலே கூறுகிறேன். இறைவா என்னுடைய சொத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறேன். ஆக 100 ருபாயில் பாதி 50 ருபாய் அதை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறேன். இப்போது என்னிடம் எவ்வளவு இருக்கும் 50 ருபாய் மட்டுமே. மீண்டும் கடவுளிடம் இறைவா நான் எவருடைய சொத்தையாவது அபகரித்து இருந்தால் அதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன். இப்போது நான்கு மடங்கு என்று சொல்லும்போது நான் திருடியது 100 ருபாய் நான்கு மடங்கு என்று சொல்லும் போது 400 ருபாய் நான் திருடிய வீட்டிற்கு கொடுக்க வேண்டும் அப்படித்தானே. என்னிடம் இருப்பதோ 50 ருபாய் ஆக 400 ருபாய் கொடுப்பதற்கு நான் நேர்மையான வழியில் உழைத்து அந்த கடனை அடைக்கிறேன் என்று கடவுளிடம் நான் வாக்கு கொடுக்கிறேன். ஒருகாலத்தில் ஏழையாக இருந்தேன்> பண ஆசை வந்த போது பிறர் பொருளை அபகரித்து பணக்காரனாக மாறினேன். எப்போது கடவுள் என்னை சந்தித்தாரோ மீண்டும் பரம ஏழையாக மாறிவிட்டேன். ஆனால் கடவுள் என்னை சந்தித்தார். என்வாழ்வை மாற்றினார். அதனால் நானும் ஆபிரகாமின் மகனாக மாறினேன். யார் இந்த மனிதர்?

இவர்தான் குள்ளன் சக்கேயு (லூக் 19:1-10). இயேசு நான் உன்வீட்டில் தங்கவேண்டும் என்று சொன்ன மாத்திரத்தில் அவன் தன்னுடைய வாழ்வு முழுவதையும் முற்றிலுமாக மாற்றுகிறான். இங்கு சக்கேயுவுக்கு தைரியமும்> கடின உழைப்பும் தேவைப்படுகிறது. காரணம் இதுவரை பாவவாழ்வு வாழ்ந்த மனிதன் தீடிரென மாறுகிறான் என்று சொன்னால் அதற்கு கடுமையான முயற்சி செய்ய வேண்டும். நாமும் எத்தனை முறை இந்த பாவத்தை செய்யமாட்டேன் என பாவசங்கீர்தனத்திலே கூறுகிறோம். எத்தனை மனிதர்களால் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நாம்மால் காப்பாற்ற முடிகிறது. கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற எவ்வளவு போரடா வேண்டியிருக்கிறது. ஆனால் சக்கேயு தைரியமாக முடிவெடுக்கிறான். நேர்மையாக வாழ கடவுளுக்கு முன்னிலையிலே சத்தியம் செய்கிறான் எனவேகடவுளும் சக்கேயுவை ஆசீர்வதிக்கிறார்.

எனவேதான் இயேசு “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு> ஆசீர்வாதம் உண்டாயிற்று> ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகன் தானே” (லூக் 19:9-10). ஆக கடவுளின் ஆசீர்வாதத்தால் மனிதர்களின் வாழ்வு மாற்றம் அடைகிறது. நம்முடைய வாக்குறுதிகளாளும்> கடின உழைப்பாலும்> மனத்தைரியத்தாலும் நாம் செயல்படும்போது கடவுளின் ஆசீர்வாதத்தால் நம்மால் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியும். இப்படி மாற்றங்களை ஏற்ப்படுத்தி கடவுளுக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழும் போது நிச்சயம் நீங்களும்> நானும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான். நம் வழியாக நமது குடும்பத்தையும் நமது சந்ததிகளையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே! கடவுள் யாரையெல்லம் ஆசீர்வதிக்கிறாரோ அவர்கள் வாழ்வு அனைத்தும் அடியோடு மாற்றம் பெறுகிறது. மாற்றங்களே மனிதனின் வாழ்வை அழகுபடுத்துகின்றன. குறிப்பாக இந்த தவக்காலத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நம்முடைய வாழ்வில் செயல்படுத்த இறைவனின் வரம் வேண்டி திருப்பலியிலே பக்தியோடு பங்கெடுப்போம். மேலும் தன்னுடைய தோற்றத்தை மாற்றிய இறைவன் நம்முடைய பாவ வாழ்வை மாற்றநம்மை ஆசீர்வதிப்பாரக!

மாற்றங்கள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன!