இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இருபத்தியொன்றாம் ஞாயிறு-

திறவுகோல்…… நீங்கள் அனுமதிக்கும் விசுவாசம்!

ஏசா22:19-23; உரோ11:33-36; மத் 16:13-28



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு இணைந்து அவரின் தென்கொரிய திருப்பயணம் பலனுள்ளதாய் வெற்றிகரமாய் அமைந்ததற்காய் இறைவனுக்கு நன்றிகூறுவோம். கடந்தவாரத்தில் அவர் குடும்பத்திலிருந்து வாகனவிபத்தில் அர்ஜென்டினாவில் பலியான தாய் மற்றும் இருபிள்ளைகளையும் நினைவுகூர்ந்து செபிப்போம். நற்கருணை சமூகமாய் பல்வேறு துன்ப துயரங்களில் வேதனைகளில் இருப்போருக்கு ஆதரவாய் அருகிலிருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஈராக் கலவரம் வன்முறை அதனால் பலியாகி பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அனைவரையும் இபாலா என்ற கொடியவைரஸிலிருந்து மனிதத்தை பாதுகாத்து பாராமரிக்க அனைவரையும் இறைபீடத்தில் நினைவுகளால் கொணர்ந்து அவர் நினைவாக கொடுக்ப்படும் அவருடலும் சிந்தப்படும் அவர்இரத்தமும் இந்த அனைத்துள்ளங்களைளயும் வலுப்படுத்தட்டும்.

குடும்பத்தில் ஒருவருடைய அதிகாரத்தை எதைவைத்து கணக்கிடலாம் என்ற கேள்விக்கு உடனே வந்த பதில்: யார் அதிகமான சாவிகளை வைத்திருக்கின்றார்களோ அதைப்பொறுத்துஆகும். யாருடைய கரத்திலோ இடுப்பிலோ அதிகசாவிக்கொத்து தொங்குகிறதோ அவர்கள் அதிகாரம் ஓங்கிய கை எனலாம். மாமியார் மருமகள் சாவிக்கொத்து பிரச்சனை யாவருமறிந்த ஒன்றாகும். இன்றைய வாசகங்களில் இருஇடங்களில் திறவுகோலைப்பற்றிய குறிப்புகளை நாம் காண்கிறோம். திறவுகோல் சாதாரணமாக சாவி எனப்படுவது நாம் அன்றாடம் பயன்படுத்துவது. திறவுகோல் நம் கையில் இருக்கும்பொழுது நம்கரங்களில் அதற்குரிய அதிகாரம் இருக்கிறது. நாம் முடிவுசெய்கிறோம் எப்பொழுது இச்சாவியைப்பயன்படுத்தி நகைப்பெட்டியை அல்லது பணம் வைத்திருக்கும் அலமாரியை அல்லது புதிய வீட்டினை எப்பொழுது திறக்வேண்டும் என நாம் முடிவுசெய்கிறோம். எசாயா திறவுகோலை உன்னிடமிருந்து எடுத்து மற்றவருக்கு கொடுப்பேன் என்றுசொல்வதின் அர்த்தமும் இயேசு திறவுகோலை உ;ன்னிடம் தருவேன் எனபேதுருவிடம் சொல்வதின் அர்த்தம் என்ன?

முதல் வாசகத்தின் பின்னனியை ஆராயும்பொழுது ஆகாசு அரசனின் இறப்புக்குப்பிறகு அவன் மகன் எசாக்காயா ஆண்டான் அவனின் அரசவையில் செபனா என்பவன் அரசமாளிகையின் சிறப்பு அதிகாரியாக இருந்தான். அவன் தோளில் அந்த அதிகாரத்திற்கான திறவுகோல் வைக்கப்பட்டிருந்தது. அக்காலங்களில் திறவுகோலானது மரத்தால் செய்யப;பட்டதாய் உயரமான கதவுகளுக்கு ஏற்றதாற்போல மிகப்பெரியதாக ஒரு கிரிக்கெட் மட்டையைவிட உயரமானதாக இருந்தது. எனவே அவ்வளவு கனமான சாவியை ஒருவர் தோள்மீது சுமந்து கண்காணிப்பதுண்டு. தோள் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் செபனாவோ தன்பொறுப்பை மறுத்து சாவியை மதிக்காது இரகசியமாக தனக்கென்று ஒருகல்லறையை உயரமான மலைப்பாறையில் உருவாக்கிகொண்டிருந்தான். அன்றையகாலங்களில் தங்கள் கல்லறைகளை உயிரோடுயிருக்கும்பொழுது பெரிதாக சிறந்த இடத்தில் கட்டுவதின் மூலம் தங்கள் அதிகாரத்தை யாரும் நெருங்கமுடியாது என்பதன் பொருளாகும். இப்படிப்பட்ட ஆவேசஆசையை செபனாவிடம் கண்ட ஏசாயா அவனிடம் உன்பொறுப்பை உதாசீனப்படுத்தியதால் அதைப்பறித்து எலியாக்கிடம் அவன்தோள்மீது வைப்போம். அவன் இவ்வரசமாளிகையின் தலைமைபொறுப்பாளனாய் பக்குவமாய் பாதுகாப்பான் என்றார்.

நறசெய்தியின் வரிகளைப்புரிந்துகொள்ள அதன்வரலாற்று மற்றும் சுற்றத்தின் பின்னனியை தெரிந்துகொள்ளவேண்டும். மத்தேயு எத்தருணத்தில் மக்களுடைய எந்ததேவைக்கு இந்நற்செய்தியை எடுத்துரைக்கிறார் எனவும் படித்தறிந்துகொள்ளவேண்டும். இன்றுசொல்லப்படும் நிகழ்வு கலிலேயா கடலின் வடதுபுறம் 20 மைல்களுக்குஅப்பால் அமைந்திருந்ததே செசாரியாபிலிப்பு பகுதியாகும். அகஸ்துசீசர் தனக்குபிறகு சொசாருக்குகொடுக்க அவர் அதை தனக்குபிறகுதன்மகனுக்கு கொடுக்க அவன் அதை முன்பிருந்த அவர்கள்பெயரை இணைத்து செசாரியாபிலிப்பு எனஉருவாக்கினார். இங்குதான் கிரேக்க உற்பத்தியின் கடவுளாக பான்என்றசிலைவழிபாடு அதிகமாக பரவலாகியும் இருந்தது. ஆகவே இயேசு அப்பொய்வழிபாட்டை தகர்த்து திருத்தூதர்களை உறுதிப்படுத்த அவர்கள் வழியாக மக்களை தன்பால்ஈர்க்க பேதுருவழியாக நானே உண்மையான மெசியா எனவெளிப்படுத்திக்கொள்கிறார்.

மத்தேயு நற்செய்தியாளர் இப்பகுதியை கி;பி 66-70ல் எருசலேம் ஆலயம் இரண்டாவதுமுறையாக தற்போது உரோமையர்களினால் இடிக்கப்படுகின்ற தருணத்தில் மக்களுக்கு கிறிஸ்தவசமூகத்திறகு நீங்கள்தேடிவரும் சமூகம் திருச்சபை பாறைமேல் உயர்ந்து நிமிர்ந்துநிற்கும் உறுதியானது எனவெளிப்படுத்துகிறார். ஆக நீங்கள் சார்ந்துயிருக்கும் புதிதாகதிருமுழுக்குபெற்று சேர்ந்துயிருக்கும் சமூகம் உறுதியான நிலையான பாறை எனக்கூறி இந்தபாறையிலிருப்பது உங்கள் கரங்களில்உள்ள திறவுகோலைப்பொறுத்தது. இதையே பேதுருவிடம் திறவுகோலை அனுமதிப்பதற்கும் தடைசெய்வதற்கும் உனக்குஉரிமைதருகின்றேன் விசுவாசச்செயலை அனுமதி அதற்குஎதிரானஎதையும் தடைசெய் என எடுத்துரைக்கிறார். ராபிகளிடம் மக்கள் எதை அனுமதிக்கலாம் எதை தடைசெய்யயவேண்டும் எனகருத்தும் முடிவும்கேட்க சாதாரணமக்கள் வருவார்கள். நீங்கள் யாரிடமும் செல்லவேண்டும் உங்கள் திறவுகோல் நீங்கள் பெற்றுள்ளவிசுசாசமே மறறவர்களுக்கும் விசுவாசக்கதவை அனுமதித்துதிறப்போம்.

திருத்தந்தை பிரான்சிஸின் சமீபத்திய தென்கொரிய பயணத்தில் வடகொரியா எந்தஅழைப்பையும் ஏற்கவில்லை ஆனால் அவர் தனக்குகொடுக்கப்பட்டுள்ள திறவுகோல்பொறுப்பை உணர்ந்து ஒரே கொரியா இப்பொழுது பிரிந்திருக்கும் ஒருகுடும்பத்துபிள்ளைகள் என எடுத்துரைத்தார். திருத்தந்தையர் தூரநாடுகளுக்கு திருப்பயணம்மேற்கொள்ளும்பொழுது எந்தநாடுகளையெல்லாம் கடந்துவிமானம்செல்கின்றதோ அந்நாட்டிற்கெல்லாம் டெலகராம் வாழ்த்துஅனுப்புவது வழக்கமுறையாகும். இதுவரை திருத்தந்தையர்களுக்கு சீனாவின் மேல்பரவஅனுமதிமறுக்கப்பட்டடிருந்தது. இம்முறை சீனாஉட்பட ஒன்பதுநாடுகளுக்கு டெலகராம் வாழ்த்து அனுப்ப சீனாவைத்தவிர மற்றநாடுகள் பதில்வாழ்த்து தெரிவித்திருந்தனர் திருத்தந்தைபிரான்சிஸோ தளராமல் பாறையாய் இரண்டாவதுமுறை சீனாவிற்குஅனுப்பினார். எத்தனையோ பேர் நான் எந்தமதமும் சாராதவன் என் இதயத்தை அவர்தொடுவதுபோல யாரோ என்விசுவாசக்கதவை திறக்கதயாராகயிருப்பதைபோல உணர்கின்றேன் என்றார்கள்.. அனுமதிப்போம் விசுவாசச்செயல்களை தடைசெய்வோம் மற்றவைகளை திறவுகோல் நம்கையில்.ஆமென்