இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுகாலத்தின் பதிநான்காம் ஞாயிறு

என்னிலே இளைப்பாறுதல்…!

செக்9:9-10 உரோ8:9 11-3 மத்11:25-30



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். கடந்த வாரங்களிலே மழை வழியாக பெற்ற ஆசீருக்காக நன்றி செலுத்துவோம். திருப்பலி பீடம் நம்மை அழைக்கிறது-சேர்க்கின்றது-இணைக்கின்றது மேலும் ஒன்றாக இயங்க வைக்கிறது. எவ்வாறெனில் நம்மோடு ஒரே உடலாக மாறும் நற்கருணை இயேசு நம்மையும் ஒரே திருச்சபையின் அங்கமாக ஏற்று அவரே நம்மில் செயல்படுகிறார். அவரின் ஆறுதலை தேற்றுதலை பலத்தை முழுமையாக பெற்று மகிமையோடு வெளிப்படுத்துவோம்.

நாட்ல நடக்குற மாறுதல்கள் ஜிஎஸ்டி மற்றும் பல சட்டங்கள் நல்லதுக்கா தீமைக்கு அடையாளமா தெரியலை? என்பதே கடந்தவார சமான்யர்களின் சிந்தனைகளும் கேள்விகளாகும். கேஜி வகுப்பிலிருந்து கல்லூரி மற்றும் தொழில்நுட்ப படிப்புவரை துவக்கமுதலே லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்ப்பது கட்டாய சுமைகளா? சிறுபிள்ளைகள் வளரும் சமயத்திலே நீ நிமிர்ந்து நடக்கவேண்டாம் வளராதே புத்தக மூட்டை என்ற சுமையை சுமந்து கூனிந்து நட என்பது தேவையான சுமையா? நோயும் அதற்காக மருந்து மற்ற தொடர் சிகிச்சைகள் த சுமையா?

சில வருடங்களுக்கு முன்பு அதிகமாக பயன்னடுத்தாத வார்த்தை இன்று அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதுவே டென்ஷன்-ஸ்டெரெஸ்-டிப்ரெஸ்ஷன். இவைகளை மனஅழுத்தங்கள் என சொல்லலாம். இவை முடிந்துபோன நிகழ்வுகளினாலோ அல்லது இனிமேல் நடக்கயிருக்கின்ற நிகழ்வினால் நாமே உருவாக்கிகொள்வது. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களால் டென்ஷன் வரலாம். இன்றைய இறைவார்த்தைகள் இவைகளை சுமைகள் என அழைக்கின்றன. அதுவும் தேவையில்லா சுமைகள்- ஸ்டெரெஸ்கள் என சொல்லி அதிலிருந்து வெளியே வர வழிசொல்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் பாபிலோனிய அடிமைதனத்திலிருந்து பாரசீக அரசன் சைரஸால் விடுதலைபெற்ற மக்களாக மீண்டும் யூதாவிற்கு திரும்பசெல்லுஙகள். எருசலேமை மீண்டும் கட்டி உருவாக்கி புதிய வாழ்வை துவக்குங்கள் என அனுப்ப அம்மக்களோ நாங்கள் சுமந்த சுமைபோதும். தொடர்ந்து அடிமைத்தன அனுபவங்களே எங்களை கீழே அழுத்துகின்றன. எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தருவேன் நீங்கள் என் சொந்த மக்கள் என்றவர் ஏன் எங்களை தொடர்ந்து அடிமையாக்கினார். அசீரியர்களுக்கு அடிமை பாபிலோனியர்களுக்கு அடிமை பல்வேறு தருணங்களில் போர் பயம். வேண்டாம் எருசலேம் மீண்டும் வேண்டாம் எங்கள் மேல் எது சுமத்தப்பட்டாலும் இனிமேல் சக்தியில்லை என தங்களின் விரக்தியை வெளிப்படுத்தினர்.

செக்கரியா இறைவாக்கினர் கி.மு520-ல் தன் அழைப்புக்கு செவிகொடுத்து யாவே இறைவனின் சொல்லை எடுத்துரைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் தன் முதல் எட்டு அதிகாரத்தில் இம்மக்கள் கட்டிஎழுப்ப வேண்டிய எருசலேம் கனவினை காட்சியாக வெளிப்படுத்தி இன்று நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 9-ம் அதிகாரத்தில் உங்களை வழிநடத்த வரவிருக்கும் அரசர் குதிரையின் மேல் போரிட வெற்றி மட்டுமே தேடி அதிகாரத்திற்காக வரவில்லை மாறாக அமைதியை விரும்பி வெளிப்படுத்தும் அரசன் வருவதுபோல கழுதையின் மேல் சாந்தத்தின் அமைதியின் சமாதானத்தின் அரசராக உங்கள் சுமைகளை சோர்வுகளை எளிதாக்குவார். தேவையில்லா எண்ணங்களை எறிந்துவிட்டு புறப்படுங்கள் அவரில் எருசலேமில் இளைப்பாற என்று அழைக்கிறார்.

நற்செய்தியில் இருபிரிவுகளை நாம் காண்கிறோம். 1) அறிவால் மட்டுமே இறைவனை நெருங்க முடியாது மாறாக எளிமையான திறந்த மனத்தினால் மட்டுமே நெருங்க முடியும் என அவரில் இணைந்திருக்க வழிசொல்கிறார். 2) சட்டங்கள் கடுமையான கட்டளைகளாக சுமத்தப்பட்டு மக்கள் ஒய்வின்றி களைப்போடு கட்டளைகளின் இறைவனை நெருங்க இயலாது குழம்பியிருந்தபோது இருபக்கத்தின் நுகத்தில் ஒரு பக்கம் நான் சுமந்து பாரத்தை எளிதாக்குகின்றேன் இறக்கிவையுங்கள் தேவையில்லா மனக்கனங்களை சட்டங்களை களைப்புகளில் இளைப்பாறுதல் என்னிலே என அழைப்புவிடுக்கின்றார்.

எந்த மனஅழுத்தம் என் சுமையாக அழுத்துகிறது? எந்த டென்ஷன் பாரமாக அழுத்துகிறது? இறக்கிவைப்போம் நம் களைப்புகளில் அனைத்து பாரங்களை இளைப்பாறுதல் அவரே…அவரிலே.

டிவௌயிட் டேவிட் என்ற அமெரிக்க படைத்தளபதி இரண்டாம் உலகப்போரின் பொழுது கடுமையாக அமைதி அணுகுமுறைக்காக உழைத்து பல நாடுகளின் படைகளின் கோபத்தை எதிர்ப்புகளை சந்தித்த தருணத்தில் அவர் தன் ஆன்மிக வழிகாட்டி குருவானவரிடம பகிர்ந்துகொண்டது. ஒவ்வொரு இரவும் நான் உறங்க போகும்பொழுது இயேசுவே நீர் கொடுத்தபணியை என்னால் முடிந்தவரை செய்தேன் இனிநாளை வரை நீர் தான் என்னை சுமந்து செல்லவேணடும் உம்மிலே இளைப்பாற விரும்புகிறேன்என்பதே ஆகும்.

நாமும் அவரிலே இளைப்பாறுவோம் நம் களைப்புகளில்…..நற்கருணை பீடம் இன்று அந்த இளைப்பாறுதல் அனுபவத்தை நமக்கு தரட்டும்-ஆமன்.