இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுகாலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு முதலாம் ஆண்டு

தருவோம்…..பெறுவோம்…!

2அர4:8-11 14-16 உரோ6:3-4 8-11 மத்10:37-42கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் நம் ஞாயிறு ஒன்றுகூடுதல் இந்தவாரம் நம்மீது சுமத்தப்படும் பல்வேறு கட்டாய வரிகள் மற்றும் சுயஆதாயத்துக்கான சட்டங்கள் இவைகளினால் பாதிக்கப்படும் பாமர நடுத்தர மக்களின் மனங்களை எண்ணங்களை நமதாக்கி கொண்டுவருவோம் அப்ப இரசத்தோடு இயேசுவின் உடலாக மாறும் இக்காணிக்கைகள் நம் வாழ்வை மாற்ற வேண்டி அர்ப்பணிப்போம்.

எப்படி உனக்கு பாக்கெட் மணி வாரந்தோறும் கிடைக்கிறது? என்ற கேள்விக்கு பையன் சொன்னான். இரண்டு 5ரூபாய் காயின்கைளை கொடுப்பார்கள் நான் ஒரு 5ரூபாய் காயினை என் பையில போட்டுட்டு இன்னொன்னை மட்டும் காணிக்கைபோடுவேன் என்றான். திடீர்னு 10ரூபாய் காயினை கொடுத்தா என்னடா பண்ணுவே என்ற கேள்விக்கு ரொம்ப ஈஸி 10ரூபாய்போட்டு 5ரூபாயை எடுத்துக்கொள்வேன் என்றான். சரி 5ரூபாய் காயினை மட்டும் கொடுத்தாங்கன்னு வைச்சிக்க அப்ப என்ன பண்ணுவே? என்ற கேள்விக்கு கொஞ்சம் கஷ்டம் தான் 5ரூபாய் காயினை போடுறமாதிரி கையைவிட்டு எடுத்துவிடுவேன் என்றான்.

தருவதற்கு மனம் இல்லையைன்றால் வாழ்கையில் நிரம்பியிருந்தும் தரமாட்டார்கள். எத்தனை பேர் நம் குடும்பத்தின் புதுவீடு திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கிடைத்த மொய் கணக்கு நோட்டை வைத்திருக்கின்றோம் பெற்றதற்கு ஏற்றாற்போலவோ அல்லது குறைவாகவோ கொடுக்க. சில வீட்ல விருந்தாளிங்களை வெளிய அனுப்புற ஸ்டைலே அதிசயமாக இருக்கும். ச்சே சொல்லாம கொள்ளாம வந்திட்டிங்களே சொல்லியிருந்தா நான் என்னென்னோமோ பண்ணியிருப்பேன் கடைசிநேரத்தில கையும் ஒடல காலும் ஒடல அடுத்தமுறை இரண்டுநாளுக்குமுன்னாலே சொல்லிட்டு வாங்கனு சொன்னா. இப்ப போங்கன்னு அர்த்தம் மனசுக்குள்ள சொல்லிட்டு வந்தா நிம்மதியா வீட்டை பூட்டிட்டு போகலாமென்ற எண்ணமே.

சுரேஷக்கு தன் பெற்றோர் இருக்கும் முதியோர் இல்லத்திலிருந்து கடிதம் வந்தது. கடிதத்தோடு அவன் அனுப்பிய மணி ஆர்டரும் திரும்ப வந்திருந்தது. ஆச்சரியப்பட்டு அவன் வாசித்தான். அன்பு மகனுக்கு நீ கடமைக்கு என்று பணம் அனுப்புகிறாய் ஆனால் எங்களை சந்திக்க எங்களோடு தங்கிசெல்ல உன் பிள்ளைகளை அழைத்து வந்தால் நாங்கள் எவ்வளவு சந்தோசமாக உபசரிப்போம் எங்களுக்கு உன் கடமை பணத்தை பெற்றுகொள்வதைவிட இன்னும் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் அன்பை தரவே விரும்புகிறேன் மனம் இருந்தால் அழைத்து வா என எழுதியிருந்ததாம்.

இன்றைய இறைவார்த்தைகள் நம்மை மனமார தந்து மனம்விரும்பி தந்து முகம் சிரிக்க தந்து இறைவன் ஆசீரை பெற்றுகொள்ள அழைக்கிறது. முதல் வாசகத்தில் எலிசா இறைவாக்கினர் வருடம் தோறும் வரும்பொதேல்லாம் உபசரிக்கும் சுனேமுவைச்சார்ந்த பெண் தன் கணவனிடம் நாம் வெறும் உணவுமட்டும் கொடுக்காமல் ஒய்வெடுக்க நமது மேலறையை உறைவிடமாக தருவோமே என வெளிப்படுத்த அவர்களின் தாராள மனத்தை உபசரிப்பை கண்டு கேகசு என்ற தன்பணியாளனிடம் அவர்களுக்கு என்ன தேவை நான் என்ன செய்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என அவனோ அவர்களுக்கு குழந்தை பாக்கியம் தேவை என்றவுடன். என்னுடைய அடுத்த வருட சந்திப்பில் உங்கள் இல்லத்தில் குழுந்தை சப்தம் கேட்கும் என வேண்டிய வரத்தை அருளுகிறார். மீட்பின் வரலாற்றில் 8அதிசய பெறுதல்களை பிறப்புகளை உபசரிக்குப்பின் காண்கின்றோம். தொ.நூ 18 அபிரகாம்-சாரா:ஈசாக் 25 ஈசாக்-ரபேக்கா:ஏசாயு ஜேக்கப் 30 ரெய்ச்சல்:யோசேப்பு நீதி13: மனோவா: சாம்சன் 1சாமு1 ஹன்னா: சாமுவேல் 2அரச4:சுனேமுவைச்சார்ந்த பெண். இவர்கள் மனமுவந்து தந்ததால் சாத்தியமாகாது என கருதிய செயலை இறைவன் அவர்களுக்கு அருளினார்.

நற்செய்தியில் என்னுடையோராயிருக்க அவருக்கு சொந்தமானவாயிருக்க இயேசுவிடுக்கும் அழைப்பு இரண்டுவிதங்களில் அமைகிறது. முதலாவது கிறிஸ்தவ பெரிய குடும்பத்தில் ஒரே சகோதரமாக இணைந்திருப்பது. யூதகிறிஸ்தவர்கள் தங்களுடைய திருமுழுக்கினால் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டாடலும் தங்கள் பழைய யூத சட்டங்கள் மற்றும் குறுகிய குடும்ப மனப்பான்மையிலிருந்து வெளியே வரதயங்கினர். பிறமக்களை ஏற்க உபசரிக்க உறவாடது இருந்த அவர்களுக்கே என்குடும்பத்தோடு சொந்தமாக நீங்கள் குறுகிய குடும்ப மனநிலையை இழந்து அனைவரையும் சகோதரிகள் சகோதரர்களாக பாவித்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நீங்கள். செய்யும் சிறிய செயலும் பெரிய ஆசிரை பெற்றுத்தரும் என உறுதிஅளிக்கிறார். இரண்டாவது என்னை ஏற்போர் என்தந்தையை ஏற்கின்றனர் அதுபோல நீங்கள் பிறருக்கு உதவி தரும்பொழுது என்னை அங்கே கண்டு ஏற்கின்றனர். இச்செயல் பெரிய ஆசீரை பெற்று தரும் என்கிறார்.

ஏன் நான் தரவேண்டும் என்ற கேள்வி எழும்பொழுது அங்கே நான் எதிர்பார்ப்புகளில் என்னையே நான் இழந்திருக்கின்றேன். என் பெற்றோர்களிடமிருந்து எதிர்பார்ப்பு – திருச்சபை இறைவனிமிருந்து எதிர்பார்ப்பு – உறவுகளிடமிருந்து – நண்பர்களிடமிருந்து எதிர்பார்ப்பு. இத்தகைய எதிர்பார்ப்பு நம்மை குறுகிய மனநிலையில் சட்டங்கள் மீட்பைபெற்றுதரும் இவைகளை பின்பற்றினால் இறைவனுக்கு நெருக்கமாவோம் என எதிர்பார்த்தனர். உணவு உபசரிக்கும் பணியே தொழுகைக்கூட ஆசீரை பெற்றுத்தரும் என எதிர்பாராது புன்முறுவலோடு உபசரித்த பெண்ணின் மனதை நம்தாக்க நாம் அழைக்கப்படுகின்றோம். மனம்விரும்பி தருவோம் நிச்சயம் பன்மடங்கு பெறுவோம்.

நேரத்தை….நல்லவார்த்தையை-நம் அறிவை-திறமையை உபசரிப்பை தருவோம். தரும்பொழுது அங்கே நாம் ஒரு வானதூதரை காணலாம் என எபிரேயருக்கு எழுதிய 13வது அதிகாரம் 2வது வசனம் சொல்கிறது. பின்வரும் திருக்குறள் முகந்தால் வாடும் பூ ஆனால் மனம்கோணி வரவேற்றால் விருந்தினர் முகம் வாடிவிடும் என்பதையும் இல்லறச்செல்வம் உபசரித்து மகிழ்ச்சியை தக்கவைப்பதற்கே என வெளிப்டுத்துகிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
இருந்தோம்பி இல்வாழ்வுதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
எபி13:2 அந்நியரை வரவேற்று உபசரிக்கும் பொழுது நாம் அறியாமலேயே வானதூதரை மகிழ்ச்சிபடுத்துகிறோம். திருப்பயணம் நடைபயணம் செல்லும்பொழுது தொடர்ந்து உபசரிக்கும் உள்ளங்கள் அதை விவிலியம் சொல்வது போல ஒரு புனித பரிசுத்த நிகழ்வாக செய்வதுண்டு. அங்குள்ள வானதூதர்கள் நமக்கு ஆசீர் பெற்றுத்தருவார்கள். நாம் யாருக்கு எந்த அந்நியருக்கு புன்முறுவலோடு தந்து உபசரிக்க வேண்டும். தருவோம் பெறுவோம் பன்மடங்கு. பரிமாறு பிறருக்கு கைம்மாறு உனக்கு-ஆமென்