இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








நள்ளிரவு திருவிருந்து

குழப்பங்களில்…….விடியலாய் நம்மிடையே !

ஏசா2:1-6, தீத்2:11-14, லூக்2:1-14.



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தன் பிறப்பால் தரணிக்கு முடிவில்லா மற்றற்ற மகிழ்ச்சியை தாரைவார்த்த பாலன் இயேசுவின் பிறப்பின் விழா வாழ்த்துக்களோடு திருவிழா திருவிருந்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். நம் குடும்பத்தின் சமூகத்தின் திருச்சபையின் பாருலகின் அமைதிக்கு அனைத்து நலன்களுக்கு அவர் அருகாமை அவர் ஒன்றிப்பு அவர் தந்த முகவரி என்றும் துணையாக இணையாக அனைத்துமாக அமைய வரம் வேண்டி இணைந்து கொண்டாடுவோம். இனிதாய் பகிர்வோம் அவர் பிறப்பின் மகிழ்ச்சியை. இறையவன் நம்மோடு.

எடுக்க கொடுக்க பணம் இல்லை நோ கேஷ் என்ற நிரந்தர அறிவிப்பு பணமில்லா பேங்க் எரிச்சலை தரலியா என வாலிபன் சொன்னான்…உங்க பேங்க் எம்டியா போகலாம் என் பேங்க் எப்பொழுதும் ப்புல்லாகயிருக்கும் என்றான். அது எப்படி என்பதற்கு அவன் சொன்னான். என் கிட்ட இருப்பது பவர்பேங்க் இப்ப இந்த பேங்க்குதான் டிமேண்ட் என்றான். பவர்க்கு ஒரு பேங்கா குழப்பமாயிருக்கே!

கருப்பு பணம் எங்கேயிருக்கு வெள்ள பணம் எங்கே யிருக்கு என்பதற்கு வந்த பதில்.: நம்மிடமிருந்து சேகரித்தபணம் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வெள்ளபணம் புதிசா சாயம்பூசிதரப்பட்ட 2000 ரூபாய் நோட்டு கறுப்புபணம். ஆக அங்கயிருந்த கருப்பு நம்மிடம்வர நம்மகையிலே இருந்த வெள்ள அங்கேபோயிடுச்சு. என்னடா இது புது குழப்பமாயிருக்கு.

வர்தா புயல் என்ன செய்தது என்றால் மரத்தை சாய்க்கல வரலாற்றை சாய்க்கல மாறா வரவேண்டிய வசூலைதான் பாதிடிச்சு. மரம் நின்றால் தான் பணம்…அதே மரம் விழுந்திட்டா நோ பணம். இது என்ன புது குழப்பம்.

இரண்டு பேர் மற்றும் இரண்டே இடம் தான் மக்களை இன்று அதிகமாக குழுப்புகிறது ஒன்று வாட்ஸ்அப் மற்றொன்று சென்ரல் கவர்மென்ட்.

வீட்ல உயிர்போறதிற்கும் ஹாஸ்பிடலுக்கு இறப்பதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விற்கு ஆளவிட்டாபோதும் என்று செல்லவேண்டியதாயிற்று. நமக்கு ஏற்படும் குழப்பங்களை விட இன்று நம்மை குழப்பி நம்மை குழப்பங்களிலே தக்கவைக்க ஒருகூட்டம் அலைந்துகொண்டிருக்கிறது. மீடியா அதில நம்பர் ஒன்று.

இஸ்ராயேல் மக்களை குழப்பத்தில் வைத்திருந்தது அன்றைய புறஇனத்து அரசசமூகம்.எகிப்திய அடிமைத்தனம் பிறகு பாபிலோனிய அடிமைத்தனம் தொடர்ந்து அசூரியர்களால் கைப்பற்றபட்டு விடுதலை பெறும் தருவாயில் இது ஒரு தற்காலிகவிடுப்பு உங்கள் இறைவன் மறந்துவிட்டார் கைவிட்டு தொலைந்து தூரசென்றுவிட்டார்.ஆகவே எங்கள் புறுஇனத்து கடவுளைவழிபடுங்கள் எங்கள் வாழ்க்கையோடு அமைத்துக்கொள்ளுங்கள் எருசலேமை மறங்கள் உடனபடிக்கையை மறங்கள் யாவேயை மறந்துவிடுங்கள். என குழப்பிவிட்டு அறிக்கையிட.மக்களும் தாவீது போன்ற அரசன் கிடைக்கமாட்டாரா அல்லது மோசே போன்ற எங்கள் முன்னோருக்குஉடன்முகமாயிருந்து தலைவர் வரமாட்டாரா? என மக்களும் குழம்பியிருக்க எசாயா இறைவாக்கினர் உங்கள் இருள் நிரம்பிய குழப்பத்தில் வெளிச்சமாய் பேரொளியாய் அருகாமையில் மெசியா பிறப்பார். உங்களிடையே இருக்கப்போவது குழப்பம் அல்ல மாறாக மெசியாவின் குழந்தைஇயேசுவின் அருகாமை என தெளிவாக எடுத்துரைக்கிறார். வியத்தகு ஆலோசகர் – என்றுமுள்ள தந்தை என்பவைகள் அவர் எவ்வளவு அருகாமையிலிருந்து வளர்ச்சிக்கு உயர்வுக்ளு ஆசீருக்கு முகமாய் அனைத்துமாய் இருப்பார் என்பதை வெளிப்படுத்துகின்றன

லூக்கா நற்செய்தியில் ஒவ்வொரு யூதரும் தன் மகனாய் மெசியாபிறப்பார்என பாகுபாடு எண்ணத்தோடு பல மனிதங்களை பிரித்துப்பார்த்து தனித்துவைத்து குழப்பத்தை உருவாக்கி பல்வேறு ஏற்பாடோடு எதிர்பார்க்கையில் அவர் அரசராக அல்ல ஆட்சி செய்ய அல்ல அதிகாரம் காட்ட அல்ல ஆன்மிகசாயலாக அல்ல மாறாக ஒதுக்குப்புறமான ஒரங்கட்டப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பெத்லேகமில் நாசேரத்துவில் யாரும் கண்ணுக்கும் படாத மாட்டுத்தொழுவத்தில் முகமானார் என எடுத்துக்கூறுகிறார். பெத்லேகம் என்பது அப்ப வீடு அல்லது உணவு இடம் எனப்படும். மாட்டுத் தொழுவ தீவனத்தொட்டி எனப்படுவது ஆடு மாடுகளுக்குரிய உணவுஇடம் ஆக இடையர்களே ஆடுமாடுகளுக்குரிய உணவு இடத்திலே உங்களுக்கு உணவாக உயிராக உறவாக முகமாக உங்கள் மத்தியில் தோன்றியிருக்கிறார் மாபரன் என வெளிப்படுத்துகிறார். பொதிந்த துணியில் கிடத்தியிருப்பார்கள் என்பது சில சமயம் அது நீண்ட துணியாக குழந்தையை சுற்றி போர்த்திவைக்க பயன்படுத்தியது மானிடத்தை முழுவதுமாக மீட்க மானிடமுகமாக தன் பொதிந்ததுணியில் நம்மையும் சுற்றி போர்த்திகொண்டார் என்பதாகும். அவர்தந்த முகத்தை முகவரியை நம்மில் புதுப்பித்துக்கொள்வோம்.

1914-ல் முதல் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் பெல்ஜிய நாட்டு எல்லையில் டச்சுஆங்கிலேயே படைகள் பிரான்சோடு இணைந்து மறுபுறம் உள்ள ஜெர்மாகிய படைகளோடு தீராது போரிட்ட சமயமது அவர்களிடம் குழம்பியஎண்ணம் கனமான எதிரியை அழிக்கவேண்டும் என்ற எண்ணங்களே….மற்றும் போரிலும் வீரத்திலும் அதிகாரத்திலும் தங்களை இழந்திருந்து கலப்படமான மற்றும் காணாமற்போன முகங்களோடு போரில் இறப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்க அது டிசம்பர் மாதம் 24ம்தேதி நள்ளிரவு அருகாமையிலிரு;க அன்றைய திருத்தந்தை 15ம்பெனடிக்ட்டின் அமைதிவேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. நாடா! விடுதலையா! நம் குடும்பங்களா! நம்வெற்றிவெறியா! என குழம்பியிருக்கையில் அதிசயம் நிசழ்ந்தது 1914-ல் டிசம்பர் 24ம்தேதி இரவு ஜெர்மானிய படைகள் மரங்களை அலங்கரித்தனர் சிறிது நேரம் கழித்து மெழுகுவர்த்திகள் ஏற்றினர். தொடர்ந்து போர்வீரர்கள் கிறிஸ்துபிறப்பு பாடல்கள் பாடினர் இதைக்கேட்டு மறுபுறத்தில் உள்ள ஆங்கிலேயே பிரெஞ்சு படைகளும் பாடத்துவங்கினர். எந்த எல்லைக்காக போரிட்டார்களோ அந்த யாருக்கும் சொந்தமில்லா எல்லையை நோக்கி அவர்கள் கால்கள் நகர்ந்தன கரங்களிலிருந்த போர்கருவிகள் தரையைத்தொட்டன. ஆங்காங்கே இறந்திருந்த போர்வீரர்கள அனைவரும் இணைந்து கலந்து அடக்கம் செய்தனர். மதுபானங்களை சிகரெட்டுகளை பறிமாறிக்கொண்டனர். தங்கள் குடும்ப புகைப்படத்தை பர்சுகளிலிருந்து எடுத்து பேசிப்பழகி நினைவுகளை வெளிப்படுத்திக்கொண்டனர் கட்டித்தழுவி தங்கள் ஞாபகமாக சிறுபொருள்களை உடையின் பட்டன்களை மாற்றிக்கொண்டனர். நள்ளிரவு அவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொணர்ந்தது வெறியை எதிர்ப்பை உறவாக உண்மையாக உடன்இருக்கும் முகவரியாக மாந்றியது மாபரன் பாலனின் பிறப்பின் இரவு. நம் குழப்பங்கள அழித்து அவர் தந்த தெளிவை இவ்விரவிரலே புதுப்பித்துக்கொள்வோம் அவர்முகமாக நம்மருகில் நம்மோடு நம்மில் இருப்பதை உணர்வோம் எந்நாளும் குழப்பங்களை குழப்பவாதிகளை எதிர்ப்போம்-ஆமென்.