இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருவருகைக்காலம்; - இரண்டாம் ஞாயிறு

காத்திருப்போம்.....திருப்பங்களோடு…..!

ஏசா11:1-10 உரோ15:4-9 மத்3:1-12



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே உங்கள் அனைவரையும் நம்பிக்கையின் ஆசீர்தரும் திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்திற்கு அன்பாக அழைக்கின்றோம். பல்வேறு எண்ணங்களோடு அநேக எதிர்பார்ப்புகளோடு நிறைய வேண்டுதல்களோடு நாம் ஒவ்வொருமுறை இறைபீடத்தை அணுகிவருகிறோம். அப்பொழுது நம் தேவைகள் நம் விண்ணப்பங்கள் உடனடியாக இப்பொழுதே நிறைவேற்றப்படவேண்டும் என ஆசைப்படுகிறோம். இன்றைய இறைவழிபாடு நமக்கு தேவை நல்ல திருத்தங்களும் நன்மைமிகு திருப்பங்களும் இவைகளே இறைவன் தரும் வரம்வரை நம்மை காத்திருக்கவைக்கும் என அழைப்புவிடுக்கிறது. திருத்திக்கொள்வோம் திருப்பங்களுக்கு இன்றைய திருப்பலியில்.

மீனவன் மீனுக்காக பலமணிநேரங்கள் காத்திருக்கிறான். தற்காலிக பயணத்திற்கு வெளிநாடு சென்ற கணவனுக்கு மனைவி சில வாரங்கள் காத்திருக்கிறாள். குறிப்பிட்ட வேலைக்காக மற்றும் ஒரு சிகிச்சை முடிந்து குணம்பெற பல மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. நாட்டின இராணுவ பணிக்காக சென்ற மகன் திரும்பவரும்வரை தாயானவள் பல ஆண்டுகள் காத்திருக்கிறாள்….காத்திருத்தல் எவ்வாறு தவமிருத்தலாகும்.

ஏடிமில் காத்திருக்கும் அனுபவம் பலருக்கும் சமீபத்தில் உண்டு மனைவிமார்களை சரவணா-போதிஸ் கடைகளில் விட்டுவிட்டு காத்திருக்கும் கணவன்மார்கள் அனுபவம் வித்தியாசமானது. இரயில் பயணடிக்கெட் உறுதியாக-மருத்துவசிகிச்சை முடிவுக்காக காத்திருக்கதயங்குகிறோம்

காத்திருக்கும் காலங்கள் அதிகமானால் பயமும் கோபமும் நம்மில் எழுகிறது. நாம் தயாரகயில்லை காத்திருக்காமல். உடடனடியாக அனைத்தும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறோம். அனைத்து மொபைல்கள் ரிமோட்கள் அனைத்தும் ஒருதொடும் தருணத்தில் நமக்கு பதில்கிடைக்க தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்க அதே ஒரு நிலை நம் அர்த்தமுள்ள காத்திருத்தலுக்கு தடையாகயிருக்கிறது. திருமணமான புதிய தம்பதியர் ஒருவருடத்தில் குழந்தையை பெற்றெடுக்க தாமதமானல் சுற்றியிருக்கும் சமுதாயம் காத்திருக்கமறுத்து அவர்கள் வாழ்வை ஒருமுற்றுபுள்ளியுள்ள செத்துபோன வாழ்வாக சொல்லிக்காண்பிக்கின்றது.

திருவருகக்காலம் காத்திருத்தலின் காலம். செயல்பாட்டுள்ள காத்திருத்தலின் வரலாறே திருவருகைக்காலமாகும். இன்றைய முதல் வாசகம் காத்திருக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடும் நிலையிருந்து இஸ்ராயேல் மக்களை நம்கண்முன் வைக்கிறது. காரணம் யாவே இறைவன்தெரிந்தெடுத்த ஒரேமக்கள்இனம் யூதா மற்றும் இஸ்ராயேல் எனபிரிந்து பாபிலோனிய அடிமைத்தனத்திற்குபிறகு அசீரியர்களால் கைபிடிக்கப்பட்டு புறஇனக்கடவுள்களை கலாச்சார பழக்கங்களை பற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனுவித்த ஆனந்தமான வாழ்க்கை முடிந்துவிட்டது சாலமோன் மற்றும் தாவீது போல அரசர்கள் கொண்டுவந்த பெயர் புகழ் ஆசீர் பந்தம் புதைக்கப்பட்டுவிட்டது மீண்டும் அந்தவாழ்வு கிடைக்காது. அவர்களின் குலமரத்தின் கிளைகள் செத்துப்போய்விட்டன எனநம்பிக்கையிழந்து காத்திருத்தலில் அர்த்தமில்லை என இருந்தனர்.

அம்மக்களுக்கு இத்தருணத்திலே ஏசாயா இறைவாக்கினர் யாவே இறைவனின் வார்த்தைகளான “நீங்கள் அழிந்து முடிந்துவிட்டது இறந்துவிட்டது என்று கருதிய ஈசாயின் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்” என்ற நம்பிக்கையின் வார்த்தைகள் தாவீதின் தந்தை ஈசாயின் மரபின் குடும்ப மரத்திலிருந்து புதிய உயிர் புதுவாழ்வு மெசியாவாக உங்கள் மத்தியில் உதிப்பார். விலங்குகள் தாக்கிக்கொள்ளாமல் ஒன்றித்து சமமாக அமைதியாக இருப்பதுபோல் அவர் அதே சமத்துவ சகோதர ஒன்றிப்பை ஏற்படுத்துவார் என சொல்லி அதற்காக தங்கள் எண்ணங்களை திருத்தி முடிவுகளை திருப்பங்களோடு மாற்றி காததிருங்கள் என அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி பழைய ஏற்பாட்டின் இறுதி இறைவாக்கினரை புதிய ஏற்பாட்டின் ஒரே சிறந்த இறைவாக்கினரை நமக்கு பாடமாக கொடுத்திருக்கிறது. திருமுழுக்குயோவானின் உடை உணவு மற்றும் பணி செயல்பாடுகள் எலியா இறைவாக்கினரையே மக்களுக்கு நினைவுபடுத்தியது. பரிசேயர்கள் சதுசேயர்கள் சமயகுருக்கள் பலவீனமான நலமற்ற விலங்குகளை பலியாக்கி சட்டங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் எனவெளிப்படையான வெளிவேடவாழ்க்கைக்கு மற்றவர்களையும் ஈர்த்தனர். மக்களும் வெளிவேட பொய்வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கையில் திருமுழுக்குயோவான் அழுத்தமாக ஆணித்தரமாக எடுத்துரைத்து மாறுங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் திருத்தங்களும் திருப்பங்களுமே அர்த்தமுள்ள காத்திருதலுக்கு தேவை என உறுதியாக அழைக்கிறார். அதற்கா பழைய வாழ்விலிருந்து கழுவி தூய்மைபடுத்திக்கொள் யோர்தானில் மூழ்கச்சொல்லி அணுகுகிறார்.

நமக்கு தேவையான திருப்பங்கள் என்ன? எங்கே என்னை நான் தூய்மைபடுத்திக்கொள்ளவேண்டும்? நான் காத்திருக்க தயாரா? என் நாள் இன்றைய நாளாகயிருக்க கூடாதா என நான் செபித்தபொழுது எனக்கு வந்ததெல்லாம் கோபமும் எரிச்சலுமே என்று லூக்கா நற்செய்தியை படிக்கத்தொடங்கினேனோ அன்றிலிருந்து இறைவா நீர் எனக்காக விரும்பி வரம்தரும்நாள் எந்தநாளாவது இருக்கட்டும் அதுவரை காத்திருப்பேன் பல திருப்பங்களோடு என கேத்தரீன் என்ற மாற்று உறுப்புக்காக காத்திருக்கும் கேத்தரீன் சொன்னது நமக்கும் ஒருபாடமும் ஒரு திருப்பமும் ஆகும்.

காத்திருத்தலின் கதைசொல்லும் லூக்கா நற்செய்தியில் செக்கரியா – எலிசெபெத்து – மரியாள் – அன்னா-சிமியோன் அனைவரும் ஒரு நன்மையான நிகழ்வுகளுக்காக காத்திருந்தனர். அது ஒரு அர்த்தமுள்ள காத்திருப்பு. காத்திருப்போம் …..எந்த திருப்பங்களோடு-ஆமென்.