இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு-

உன் சந்தேகங்களை… வெற்றிக்கொள்…!

ஏசா56:1 6-7; உரோ11:13-15 29-32; மத் 15:21-28கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. நம்மை மீண்டும் இறைவனவர் பிரசன்னத்தில் ஒன்றுசேர்த்தமைக்காக நன்றிகூறுவோம். நாம் ஒவ்வொருமுறை இறைபீடத்தை நோக்கிவரும்பாழுது நம்மில் பல்வேறு விருப்பங்களை விண்ணப்பங்களை தாங்கிவருகிறோம் வேண்டிசெபிக்கிறோம். இவைகளோடு பல்வேறு சந்தேககங்களையும் சுமந்துவருகிறோம். இறைதிருவிருந்தில் வேண்டுதல்களையும் மற்றும் நம்மில் ஒளிந்துகொண்டிருக்கும் பல்வேறு சந்தேகங்களையும் அப்ப ரசத்தோடு அர்ப்பணித்து இக்காணிக்கைகள் இயேசுவின் திருஉடலாக திருஇரத்தமுமாகமாறும்பொழுது நம் சந்தேகங்களும் நம்மைவெற்றியின் சீடர்களாக திரப்பயணிகளாக உள்ளமாற்றத்தை பெற்றுத்தரட்டும். சிறப்பாக ஈராக் பகுதியில் பலியான அனைத்து பிள்ளைகள் மற்ற உள்ளங்களையும் பாதிக்கப்பட்டு பரிதவிக்துநிற்போர் மேலும் ஈபோலா கொடியவைரஸினால் பலியான 1000 பேருக்கும் வெறுமையுணர்வோடு இழந்துநிற்கும்மற்ற உள்ளங்களையும் இறைவன் அவர் அன்புகரங்களால் அரவணைத்து இணைந்துயிருக்கிறேன் என்ற உரிமைஉறுதியை தர சேர்ந்து செபிப்போம் சிதறிதுண்டுகளாகிய ஆசீரைபெறுவோம்.

பலவாரங்களாக மருத்துவமனையிலிருக்கும் பெண்மணியொருவர் இந்தகேள்வியை என்னிடம் கேட்டார். ப்பாதர் நான் நினைக்கின்றேன் என்மருத்துவமனை சிகிச்சை மற்றும் மற்றவேதனைகள் என்னுடைய உத்தரிக்கும் நிலையை இங்கேயே கழித்துவிட்டேன் என்நேரம் வந்தவுடன் இனிநேராக விண்ணகம் தான் என்று சொல்லமுடியுமா? என்று சொல்லிவிட்டு சிறிதுநேரத்தில் ஆண்டவரின் விண்ணகப்பட்டியலில் என்பெயரிருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது என்றார். இந்தசந்தேகத்தின் பின்னனி என்ன என்றுவினவியபொழுது அவர் சொன்னது என் மகன் திரும்ப நம்விசுவாசத்தை ஏற்று திருச்சபையின் உறுப்பினராக மாறவேண்டும் என்று வேண்டினேன் நிறைவேறவில்லை. எனக்கு அறிமுகமான நல்ல நட்புள்ள பெண்மணி தன்மகளுக்கு பிள்ளைவரத்திற்காக செபிபத்தார் ஆனால் இறைவன் ஒருபதிலும் தரவில்லை. எனக்கு மிகப்பெரிய சந்தேகம் அடிக்கடி எழுகின்ற சந்தேகம் என்னவென்றால் ஏன் நான் என்வேண்டுதல் நிறைவேற்றப்படவில்லை. ஏன்என்பெயர் இறைவனின் பட்டியலில் இடம்பெறவில்லை. அவரின் விண்ணகப்பட்டியலில் என்பெயர் இருக்கின்றதா என்பது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. பயத்தையும் தருகிறது. அதேசமயம் எனக்கு தெரிந்த சுற்றியுள்ள அநேகரின் தேவைகளை நிறைவேற்றும் அவர் ஏன் என்னை அவருடைய வட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. நான் ஏன் அவருடைய கவனத்திலிருந்து அவருடைய பார்வையிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றேன் என்றார்.

நம்மிடமும் இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இது இறைவனைப்பற்றிய சந்தேகம் அல்ல மாறாக என்னைப்பற்றிய சுயசந்தேகங்களே காரணம். கடந்தவாரத்தில் நம் பயம் மனஅழுத்தம் என்ற குகைகளிலிருந்து எலியாவைப்போல வெளியே வரவேண்டும் எனசிந்தித்ததும் வெளியே வந்தவுடன் நம்மிடம் எழுவது சந்தேகங்களே ஆகும் இச்சந்தேகங்கலிருந்து வெற்றிகண்டு வெளியே வர இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

நற்செய்தியிலே கானானேயேப்பெண் தன்மகளுக்கு குணம்வேண்டி இறைவனிடம் விடாமல் வேண்டுவதை நாம்காண்கின்றோம். இயேசு ஏன் மூன்றுமுறை திருத்தூதர்களோடு புறக்கணித்து அவமான பதில்களை தந்து நான்காவதுமுறை குணத்தை உரிமையாக்குகிறார். காரணம் மத்தேயு நற்செய்தியை சிறப்பாக இப்பகுதியை தங்கள் யூதேயா மதப்பபழக்கத்திலிருந்து கிறிஸ்தவ சமூகத்தோடு இணைய குழும்பியிருந்தவர்களுக்கு பழங்கான யூதமதசட்டங்களையும் பற்றிக்கொள்ளவிரும்பியவர்களுக்கு சட்டங்களால் இறைவனை விட்டுவிலகியில்லாமல் அவற்றைவி;ட்டுவிட்டு கிறிஸ்தவசமூகத்தில் இணைந்துகொள்ளுங்கள் இறைவன்உங்கள் அருகாமையில் உங்கள் சமூகத்தில் இருக்கிறார் என்றசெய்தியை கானானயப்பெண் நிகழ்வுவழியாக என்னைதேடிவரும் உங்கள் யாரையும்விலக்கி பறுக்கணித்துவைக்கஇயவாது என்றார். தன்இஸ்ராயேல் பகுதியிலிருந்து தனித்திருந்த கானானயப்பகுதியிலே இயேசுவை கானானயப்பெண்ணை சந்திக்கிறார். தீர் சீதோன்பகுதி கடலோரம் இணைந்திருந்த இருநகரங்கள் ஆகும். யூதர்கள் கானானையர்களையம் அவர்கள் வாழ்ந்தபகுதியையும் தங்கள் பழம்பாலந்தொட்டே நிரந்தர எதிரிகளாக அவர்களை கருதினார்கள் அவர்களை எதிரிகளாக புறஇனத்தவர்களாக சிலைவழிபாட்வர்களாக தீட்டுபட்டவர்களாக புறக்கணித்துவைத்தார்கள். ஆனால் யூதராகிய இயேசுவிடம் தான் வாழும் பகுதியில் தன்னை எதிர்கொண்டபொழுது தன்வேண்டுதலை தொடர்செபத்தை சந்தேகத்தை நிறுத்தாமல் வெளிப்படுத்துகிறார்.

ஏன் நாயோடு ஒப்பிட்டு இயேசு அவமானப்படுத்துகிறார். திருத்தூதர்கள் புறக்கணிக்கிறார்கள். இயேசு திருத்தூதர்களின் எண்ணத்தை அறியவிரும்புகிறார். அதேசமய் அப்பெண்ணிண் ஆழமான விருப்பத்தை வெளிப்படுத்த பிறருக்கு ஒருபாடமாக்கதொடர்கிறார். ஆகவே நான்காவதுமுறையே குணம்பெறுவாய் என்கிறார். நாங்கள் புறக்கணிக்ப்பட்டவர்கள் என்பவர்களுக்கு அவள் எண்ணங்களை ஒருபாடமாக்கி நான் யாரையும் விலக்கிப்பார்ப்பது இல்லை உணருங்கள் என்னைநோக்கிவாருங்கள் என அழைக்கிறார். யூதர்கள் கானானையரை புறஇனத்தவரை நாயாக கருதினார்கள். காரணம் ஏதையும் உண்ணதயாராகயிருக்கும் அவர்கள் வெறுத்தபன்றியின் இறைச்சி உட்பட எனவே நாயையும் பிறஇனத்தவரோடு இணைத்து தீட்டாககருதினார்கள். இயேவின் ஏளன நகைச்சுவை பதிலுக்கு மறுபதிலாய் ஆமாம் நாய்களும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்துவிழும் சிறுதுண்டுகளைபெறுகிறதே என்பது மிகசிறப்பான மறுபதிலாகும். கிரேக்கமொழியில் இயேசு இங்கு நாய் என்றுசொல்லும்பொழுது தெருக்களில் யாருக்கும் சொந்தமில்லாது திரியும் தெருநாயாக அல்லாமல் ஒருவரின் வீட்டுநாயாக வீடுகளில் உரிமைகொடுத்து சொந்தமாக பாசமாக வளர்க்கும் ஒருநாயாகவெளிப்டுத்துகிறார். ஆகவேதான் அவள் உரிமையாளர் என்ற வார்த்தையைப்பயன்படுத்தி நான் புறக்கணிக்கப்பட்ட திரிகின்ற ஒருதெருநாயல்ல என்றுநீரே சொல்லிவிட்டீர். நான் உரிமையாளராகிய உம்வீட்டில் பாசமாக வளர்க்கப்படுகின்ற நாய் ஒவ்வொருசிறுதுண்டுகளும் ஆசீர்கள் அன்புகள். உங்கள் உணவுமேசையருகே இடமில்லாவிட்டாலும் உங்கள் வீட்டில் உங்கள் மடியில் எனக்குசிறப்பு இடம் உண்டல்லவா என்று சுற்றியிருந்த சமூகம் என்னை புறக்ணித்து விலக்கினாலும் எனக்கு தெரியும் நான்உம்வட்டத்தில் உம் பட்டியலில் இருக்கின்றேன் என்றவுடன் இயேசு உம்நம்பிக்கைபெரிது என்கிறார் கடந்தஞாயிறு அருகிலிருந்து சந்தேகங்களுடன் மூழ்கிய பேதுருவை குறைவான விசுவாசமுள்ளரே என்றவர் இங்கு உலகின்பார்வைக்கு தீட்டான அவர்களுடைய உரிமைவிசுiவாசத்தைகண்டு நமபிக்கைமிகப்பெரிது யாரும் உங்களை என்னிடமிஐந்துபிரிக்க இயலாது உன்மகள குணம்பெறுவாள் என்கிறார். மகளின் உடல்நலமும் அவர்களின் மனமும் குணம்பெற்று சமூகத்தோடு அவர்களை இணைக்கிறது.

முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் பாபிலோனியவிடுதலைக்குப்பிறகு திரும்ப எருசலேம்செல்ல ஒருகுழுதயாரானபொழுது மற்றவர்கள் பலஆண்டு அடிமைத்தனத்தின்பொழுது புறஇனத்தவர்களோடு திருமணம்முடித்து அவர்கள் சமூகத்தோடு கலந்த யூதர்கள் நாங்கள் அங்கே சென்றால் மதத்தால் சமூகத்தால் புறக்கணிக்ப்படுவோம் இங்கேயே இருந்துவிடுகிறோம் என்றபொழுது அவர்களை நோக்கி நீங்களும் புறப்பட்டுசெல்லுங்கள் எருசலேமும் உங்கள் வாழ்வும் புதுப்பிக்கப்பட்டு புதுமையாகஉருவாக்கப்படும். எருசலேம் அனைவருக்கும் சொந்தம் அனைவரும் எருசலேம் ஆலயத்தில் பலிசெலுத்த வழிபடஉரிமைபெற்றவர்கள் காரணம் அனைவரையும் அரவணைக்கும் யாவேஇறைவன் அவரே என்பதை “ என் இல்லம் மக்கள் அனைவருக்கும் உரிமையான இறைமன்றாட்டின் இல்லம்” என்கிறார். என் இறைவன் என் சந்தேகங்களைவிட பெரியவர் என நம்புவோம் எந்த ஒரு சந்தேகங்களையும் நாம் வெற்றிகொள்ளமுடியும்-ஆமென்.