இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறு

நான் தருவது: ஆதரவா!...அழிவா!

தி.ப 13: 14, 43-52
தி.வெ 7: 9, 14-17
யோவா10: 27-30கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சிறார்களே இளையஉள்ளங்களே சகோதர சகோதிரியரே

உயிர்ப்பின் காலத்திலே உன்னத இறைவன் ஒவ்வொரு வாரமும் நம் விசுவாசத்தை புதுப்பிக்கவும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கிறிஸ்தவ இல்லற சமூக கடமையையும் பொறுப்புணர்வையும் ஒரு அழைப்பாக உணர்ந்து வாழ அழைக்கின்றார். இவ்வாரம் நம் ஆயனாகிய இயேசுவின் ஆதரவில் நம்பாதையை அமைத்துக்கொண்டு நாமும் பிறருக்கு நன்மையின் பாதையில் ஆதரவு தரும் ஆயனாக செயல்பட விடுக்கும் அழைப்பை ஏற்று பின்தொடர்வோம் நன்றி கூறுவோம்.

வன்முறைகள் பல்வேறு கொடூரநிகழ்வுகள் தலைநகர் டில்லியிருந்து சிறிய கிராமம் வரை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு யார் என்ன காரணம்? சமூக தொடர்பு கருவிகளை தவறாக பயன்படுத்துதல் காரணமா? மேல் நாடுகளின் நுகர்வு கலாச்சார தாக்கங்கள் காரணமா? சூழ்நிலையா? நண்பர்களா? என நம்மில் பல கேள்விகள் எழலாம். இன்றைய வாசகங்கள் அதற்கு சிறப்பு பதிலாக அமைகின்றன. நன்மைக்கு ஆதரவு தரும் ஆயனாக இல்லாமல் அழிவை தேடிதரும் பொறுப்பாளர்களே இதற்கு காரணம்.

அவை என்றும் அழியா! என்பது போன்ற அடையாளமொழிகளின் ஆழமான அர்த்தங்களை யோவான் தன் நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். ஆயன் அன்று பாலஸ்தின பகுதிகளில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு அன்றாடவாழ்வின் எதார்த்த அனுபவம். ஆயன் தன்பொறுப்பிலுள்ள மந்தைகளை காட்டு விலங்குகள் போன்ற எதிர்ப்பு வரும்பொழுதுஅழியவிடாமல் ஆதரவு தந்து பாதுகாத்து யாரும் பறித்துசெல்லாதவாறு செயல்படுவது போல இயேசு அன்பு திருத்தூதர்களை நான் இருக்கின்றேன் அழியவிடாமல் யாரும் பறித்துசெல்லாமல் பாதுகாக்க என்ஆதரவை மறவாமல் நற்செய்தியை எடுத்துரையுங்கள் என்பதே நற்செய்தியின் சிறப்பு முக்கிய செய்தியாகும்.

முதல் வாசகம் நம்முன் பவுல் மற்றும் பர்னபாஸ் பணியை எடுத்துரைக்கிறது. பவுல் ஒரு யூதர் மற்றும் உரேமை குடிமகன். அனைவருக்கும் பரிச்சயமானவர் மற்றும் அனைவர் கவனத்தையும் பெற்றவர். காரணம் கிறிஸ்தவர்களை அடியோடு கொல்லசென்றவர் முழுமையாக மனம்மாறி கிறிஸ்துவே எனக்கு எல்லாம் என எடுத்துரைத்து அறியபடுத்ததுவங்கியதால். அந்தியோக்கியாவில் தான் கிறிஸ்தவர்கள் திருச்சபை என்ற பயன்பாடு துவங்கியது. ஒருயூதராக செபக்கூடத்திலே கூடி அங்கே கிறிஸ்துவின் தூதராக எடுத்துரைக்கிறார். அதைப்பற்றிய பேச்சு பரவத்தொடங்க மறுமுறை பெரியகூட்டத்திலே பேசும்பொழுது யூதத்தலைவர்கள் மற்ற உறுப்பினர்கள் பொறாமையால் எதிர்த்தனர் மறுத்தனர் பழித்தனர் மற்றும் எடுத்துரைக்க தடுத்தனர். பவுலோ என் ஆயன் ஆதரவு இருக்கும் பொழுது யாரும் எங்களை அழிக்கவோ நிறுத்தவோ இயலாது என பயணத்தை மகிழ்வோடு போற்றி புகழ்ந்து தொடர்ந்தனர்.

என்கையிலிருந்து பறித்து கொள்ளபடா என்ற வார்த்தைகள் என்றும் எப்பொழுதும் நம்மில் நமக்கு எதிர்ப்பு வன்முறை பாலியல் கொடூரம் தீமைகள் இருக்கும் நம்மை பறித்துச்செல்ல. நம் ஆயனாகிய இயேசுவின் ஆதரவில் என்றும் இருக்கவேண்டும் என்றும் நம் பொறுப்பில் உள்ளவர்களை எந்த தீமையும் வன்முறையும் பறித்துசென்று அழித்துவிடாமல் ஆயான ஆதரவு தந்து பாதுகாக்க அழைக்கப்படுகின்றோம்.

திருச்சபை பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு இரத்தம் சிந்திய மறைசாட்கிகளின் இரத்தவிசுவாசத்தால் கட்டபட்டது யாரும் அதை நிறுத்தவோ அழிக்கவோ பறிக்கவோ முடியாது காரணம். எதிர்ப்புகள் வன்முறைகள் கிறஸ்தவர்களை துன்புறுத்துதல் இன்றும் தொடர்கிறது என்றும் தொடரும். குஜராத் கலவரம் கிறிஸ்தவர்கள் எதிர்க்கப்படுதல் கந்தமால் ஒரிசா கொடூரம் எதுவும் நம் விசுவாசத்தை பறிக்கவோ நம் பணியை அழிக்கவோ முடியவில்லை. அருட்சகோதரிகள். ராணி மரியா மற்றும் வல்சா ஜான் மேலும் அருட்தந்தையர்கள் எ.டி. தாமஸ் - அருள்தாஸ் இம்மாதம் ஏப்பரல் 1-ம்தேதி பெங்களுரு புனித பேதுரு குருத்துவ கல்லூரியின் முதல்வர் தாமஸ் கொடுரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது எதிர்ப்பு வன்முறைகளின் தொடர் நிகழ்வின் எதார்த்தத்தை நம்முன் வைக்கிறது.

கடந்த திங்கள் கூடியிருந்த 80.000 மக்களுக்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் பலவகைகளில் பல நாடுகளில் துன்புறுத்துப்படும் சகோதர சகோதரிகளை நினைவுபடுத்தி உயி;ர்த்த இயேசுவின் ஆதரவும் பாதுகாப்பும் அவர்களை பற்றிக்கொள்ள செபம் செய்ய அனைவருக்கும் அழைப்புவிடுத்தார். நாமும் நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஆயனின் பாதுகாப்பை செபம்வழியாக என்றும் பெற்றுத்துருவோம்.

பெற்றோர்களாக நம்பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளை – மருத்துவராக-செவிலியராக-ஆசிரியராக-மேலாளராக-பொறுப்பில் உள்ள அதிகாரியாக நம்பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆயனாக செயல்பட்டு என்றும் அவர்களுக்கு நற்செய்தியின் பாதையில் அழியவிடாமல் ஆதரவுதந்து யாரும் எத்தீமையும் அவர்களை பறித்துச்செல்லாமல் கண்காணிப்போம் தொடர்பயணம்செய்வோம்-ஆமென்.