இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








இயேசுவின உயிர்ப்பு - பெருவிழா

கல்லறை... மூடப்பட்டதா!.. திறக்கப்பட்டதா!

தி.பூ:34, 37-43
கொலோ3:1-4
யோவா20:1-9



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சிறார்களே இளையஉள்ளங்களே சகோதர சகோதிரியரே உங்கள் அனைவருக்கும் உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துக்கள். நம்பிக்கையின் ஆண்டிலே நம் அனைவரின் விசுவாசவாழ்வை ஆழப்படுத்தி உயிர்வாழும் இயேசுவின் பிரசன்னத்துக்கு சாட்சிகளாக திகழ பயணம் செய்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொடர் சவாலும் அழைப்புமாகிய வெளியே வாருங்கள் துயரத்தில் கஷ்டத்தில் தனிமையில் ஆதரவற்றவர்களின் வாழ்வே எதார்த்தம் அவர்களோடு பங்கெடுப்போம் உயிர்வாழும் இயேசுவாக நடப்போம் என்பதே உயிர்ப்பு ஞாயிறு அழைப்பும் ஆகும். கல்லறையில் முடங்கியிருக்கவில்லை இயேசு மாறாக உடைத்து கல்லறையை கடந்த வாழ்வை நமக்கு காட்டியிருக்கின்றார்.

உயிர்ப்பு ஞாயிறு அன்று காலையில் ப்பாதர் என்னை மன்னிடுசிடுங்க ஹாப்பி ஈஸ்டர் ப்பாதர் என்று ஒருவர் தடுமாறிக்கொண்டே வார்த்தைகள் தெளிவாகயில்லாமல் பேசமுயற்சித்தார். ஏனப்பா இத்தனை நாள் குடியைக் கட்டுப்படுத்திட்டு இன்றைக்கு ஈஸ்டர் சந்தோசத்திலே எல்லாம் சேர்த்து காலையிலே அதிகமாக குடிச்சிட்டியா என்றவுடன் அவன் சொன்னான்- ஆமாம் ப்பாதர் நாற்பது நாள் குடிக்காமயிருக்கணும்னு முடிவு செய்தேன் ஆனால் இந்த மூன்று நாளா முடியலே ப்பாதர் என்றான். என்ன சொல்றே புரியலையே என-அவன் தொடர்ந்தான். நாற்பது நாள் குடிக்காமயிருந்தேன் ப்பாதர் ஆனால் முந்தின நாள்பெரியவியாழன் அன்னைக்கு பக்தியாக கோயிலுக்கு வந்தேன் அன்னைக்கி இயேசு பாதங்களை கழுவிற அளவுக்கு நெருக்கமாக அன்புசெய்தார்னு நீங்க சொல்லி செய்ததை பார்த்து புல்லரிச்சுபோச்சு அந்த அன்பைநினைச்சு அழுது குடிச்சிட்டேன் - நேற்று பெரிய வெள்ளி இயேசுசாமி செத்துட்டார்ன்ற சோகத்தில தண்ணீர் அடிச்சிட்டேன் என்றவுடன் ப்பாதர் இன்னைக்காவது இயேசு உயிர்த்திட்டார் என்ற சந்தோசத்தில தானே குடிச்சிருக்கிற என்றவுடன் அவனோ நோ நோ ப்பாதர் நேற்று இரவு கோயிலுக்கு வந்தேன் நீங்க படிச்சிங்க கல்லறையிலே வைச்ச இயேசுவை காணோம்னு உடனே சோகம் தாளாம தண்ணியடிச்சிட்டேன் மன்னிச்சிடுங்க ப்பாதர் என்றான். இயேசுநாதர் கல்லறையை உடைத்து திறந்திட்டார் நீயோ குடிக்க காரணம் கண்டுபிடிச்சி மூடியகல்லறையில் இருக்கிறாய் என்றார் ப்பாதர். ஆம் நம் அனைவருக்கும் பல கல்லறைகள் உள்ளன அவைகள் மூடிய கல்லறைகளா அல்லது திறந்த கல்லறைகளா என சிந்திக்கஅழைப்பதேஇயேசுவின் உயிர்ப்பு ஆகும்.

கல்லறை என்பது நாம் சந்திக்கின்ற அல்லது நம்மை சுற்றியிருக்கின்ற போராட்டங்கள் - வலிகள்- ஏமாற்றங்கள் - நோய்கள் - கவலைகள் - குழப்பஙகள் - பொருளாதார கஷ்டங்கள் என்ற வாழ்வின் பல்வேறு எதார்த்தங்கள் ஆகும். இயேசு அனுபவித்த மறுதலிப்பு – துரோகம் - அவமானங்கள் – யாருமே கணிக்கமுடியா பாடுகள் - யாருமே கண்டிராத ஆணியின்வலிகள் - யாரும்இத்தனைநேரம் தாங்கியிராத சிலுவையில் குற்றவாளிபோன்ற கொடிய மரணம் - அந்நியநிலத்திலே கல்லறை. இவைகள் எல்லாம் சொல்லும் செய்தி நம்மோடு நம் நிலைமையில் நம் துயர துன்ப எதார்த்தில் கலந்து இந்த கல்லறை அனுபவங்கள் உங்களை முடக்கி வைக்ககூடாது அதிலிருந்து வெளியே வாருங்கள் என்ற அழைப்பே ஆகும்.

நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் உயிர்ப்பை எடுத்துரைக்கிறார்கள். நான்கு பேரும் வாரத்தின் முதல்நாள் ஞாயிறு நிகழ்வு மற்றும் அதிகாலை நேரம் என்பதில் ஒரே கருத்தாகசொல்வதை நாம் படிக்கிறோம். மகதலாமரியாளின் கல்லறை சந்திப்பையும் உண்மை என ஒருமித்து கொடுத்திருக்கிறார்கள். மரியாளும் உடன் சென்றதை நறுமணத்தைலத்தை எடுத்துசென்றதை மூன்றுபேர் மட்டுமே எழுதியிருக்கின்றனர். கல்லறைவாயிலின் கல்புரட்டப்பட்டிருப்பதை அனைவரும் அதிசயத்து சொன்னாலும் உயிர்த்த இயேசுவின் தோன்றுதலை வெவ்வேறு விதமாக படம்பிடித்து விளக்குகின்றனர். கல்லறை காலியாகயிருக்க அச்சத்தோடு கலக்கத்தேர்டு யாரே எடுத்து திருடிசென்றுவிட்டனர் என கலங்கினர். இயேசுவின் உடலைதிருடிமறைத்துவிட்டனர் என வருத்தப்பட்டனர். இயேசுஉயிர்த்திருக்கலாம் என்ற எண்;ணம் சிறிதளவும் அவர்களிடம் எழவில்லை. காரணம் இயேவை சீடர்கள் மற்றும் உடன்இருந்தோர் யாரும் முழுமையாக உண்மையாக புரிந்துகொள்ளவேயில்லை. இயேசுவின் போதனை – படிப்பினை –செயல்கள் அனைத்தும் ஒருபுதிய சிந்தனையை மாற்றத்தை தரவில்லை. எனவே காலியான கல்லறை இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றுஅல்ல. இயேசுவின் வாழ்வு கல்லறையோடு முடிந்துவிட்டது நம் வாழ்வும் மூடிய கல்லறைபோல்தான் மீண்டும் மீன்பிடிக்க செல்லவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டிருக்கையில் இயேசுவின் தோற்றம் உயிருள்ள இயேசுவின் தோன்றுதல் அவர்களின் மூடிய - மழுங்கிய - முடங்கிய எண்ணங்கள் மனங்கள் திறக்கப்படுகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய முதல் பொது சந்திப்பிலும் மற்றும் பெரியவியாழன் எண்ணெய் மந்திரிப்பு சடங்கிலும் வெளியே வாருங்கள் பல்வேறுவகையில் துயரப்படுவோரின் வாழ்வில் வெளியே சென்று பங்கெடுங்கள் என்ற சவாலான அழைப்புவிடுத்தார் இதுவே திறந்தகல்லறையின் உயிர்த்தஇயேசுவின் அழைப்பு ஆகும்.

பழைய ஏற்பாட்டு வாசகங்கள் தொடக்கநூலின் உருவாக்கும் இறைவன் - ஆபிரகாமை புதுவாழ்வுக்கு அழைக்கும் இறைவன் - விடுதலைப்பயணத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு விடுதலையின் பாதையை காண்பிக்கும் இறைவன் - இறைவாக்கினர்களின் வழியாக அடிமைத்தனத்தில் மற்றும் எருசலேம் அழிவுகளில் எழுந்து நடக்கச்சொல்லும் இறைவன் நிற்காத முடங்கியிருக்காத தயங்கிநில்லாத இறைவனாக எச்சூழலிலும் அது அடிமைத்தனமோ – அழிவுகளோ – அனைத்து தருணங்களிலும் கண்களை எண்ணங்களை மனங்களை திறந்து உயர்த்தி முன்நடக்கும் இறைவனின் வாழும் பிரசன்னத்தை கண்டு பின்தொடர்ந்து நடக்க அழைக்கின்றார்.

பாஸ்காதிரியும் இருளான மூடிய கல்லறையில் வெளிச்சத்தை தந்து கண்டு வெளியே வர அழைப்பதைபோல எத்தகைய மூடிய கல்லறை நிலையிலிருந்து எண்ணத்திலிருந்து நான் வெளியே வரவேண்டும் உயிருள்ள இயேசுவோடு இணைய வேண்டும் என சிந்திப்போம்.

இம்மானுவேல் கெல்லியின் வீரவார்த்தைகள் குறைபாடு ஒருவாய்ப்பாகும் நம்மை சிந்திக்க அழைக்கிறது. சதாம் உசேனின் போர் வன்முறைகொடுமைகளின்பொழுது போர்க்களத்தில் வெடிகுண்டுபெட்டியில் கைகால்கள் வளர்ச்சியின்று கண்டெடுக்கப்பட்வர்களே இம்மானுவேலும் அவன் சகோதரனும் ஆவர். அன்னைதெரேசா மடத்திலிருந்து மொரியா கெல்லி என்ற பெண் அவர்களை தத்துஎடுத்து ஆஸ்திரேலியாவிலே வளர்க்கின்றார் இம்மானுவேலும் அவன் சகோதரனும் பல அறுவைசிகிச்சைக்கு ஆளாகினர் இன்னும் பல மருத்துவசிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால் இம்மானுவேல் பலர் முடியாது என மூடிய கல்லறை உன்வாழ்வு என்று சொன்ன பொழுது என்னுடைய குறைபாடு வெளியே வர ஒருவாய்ப்பு என கல்லறையிலிருந்து வெளியே வந்து பாடலில் பிரபலமாகி எக்ஸ் பேக்டர் என்ற நிகழ்ச்சி வழியாக உலகிற்கு உயிர்த்த இயேசுவின் சக்தி மற்றும் சாட்சி நான் என நிரூபித்திருக்கின்றான்.

நாம் வாழுவது மூடிய கல்லறையிலா அல்லது திறந்த கல்லறையிலா? எந்த எண்ணங்கள் மனநிலைகள் திறக்கப்படவேண்டும்? உயிர்வாழும் இயேசு நம் வாழ்வாகட்டும்-ஆமென்.