இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
புனிதவாரம்

நினைவாகச் செய்யுங்கள் .. நிஜமாகும் நற்கருணையும்…குருத்துவமும்.!

வி.ப12:1-8 11-14 1கொரி11:23-26 யோவா13:1-15இறைஇயேசுகிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதியரே சிறார்களே இளையோர்களே மற்றும் தொடர்ந்து பின்பற்றும் இணைய தள நண்பர்களே அனைவருக்கும் புனித வாரத்தின் புனித வியாழனின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இன்றைய நாள் நம் விசுவாசத்திற்கு நம் சமூக வாழ்வுக்கு விழாஎடுக்கவேண்டிய நாளாகும். பலர் இதை சந்தோசமும் சோகமும் கலந்தநாள் என்பார்கள். உண்மைதான் பரமன் பாமரமனிதத்தின் பாதங்களை கழுவி நம்மோடு இணைந்த நாள். மேலும் இறைமீட்பை தர சிலுவை சாவை அரவணைக்க தயாராகிய நாளாகும். இத்தகைய எதார்த்தங்களுக்கு மத்தியில் அவர் அன்பின் நனவாக குருத்துவத்தை நற்கருணையை பிறப்பெடுக்கச்செய்தநாளாகும். இன்றைய விசுவாச கொண்டாட்டம் நம் திருச்சபையின் ஒன்றிப்பை மகிழ்ச்சியை உற்சாகத்தை உறுதிப்படுத்தி பணிந்துபணிபுரியும் குருத்துவத்திற்கு துணையாகயிருக்க நற்கருணையின் சாட்சிளாக வெளிப்படுத்தி வாழ வரம் பெற்று தரட்டும். இம்மூன்று நாட்களும் அருள் தரும் தருணங்களாக அமையட்டும்.

இது வெறும் நினைப்பா அல்லது நிஜமா? நம்ப இயலவில்லை. இந்த மாதிரி ஆலயம் நிரம்பி பார்த்தது கிடையாது. எல்லாரும் குடும்பமா நேரத்துக்குமுன்பே கோயிலுக்கு வந்திருக்க நம்பமுடியல! நம்ப பாடல்குழுவா? இத்தனைபேரா இவ்வளவு அருமை இது நினைப்பல்ல நிஜம் தான் என என்னையே கிள்ளிப்பார்த்துக்கொள்ளவேண்டும் நான். ஆம் நினைப்பு நிஜமாகுவது மிக மிக கடினம் அதையும் கடந்து நினைத்த கணவர் மனைவி நினைத்த வேலை வீடு நினைத்த வீட்டிற்கு அருகில் ஆலயம் என்றாலும் அது நீடிப்பது கிடையாது நினைப்பை நிஜமாக்கிய கருணாலயத்து ஆலயம் பங்காக மாறாதது ஏன்? ஆம் நினைப்பது நிஜமாகாது என்று எத்தனை மாணவ உள்ளங்கள் தேர்வுக்கு முன்பே தேர்வுகளுக்கு இடையே தங்கள் நினைப்புகளை கருகச்செய்த தற்கொலை நிகழ்வுகள். முகமதிய நாடாக மற்றும் உலகமாக்க தங்கள் நினைவுகளை நிஜமாக்க ஜசிஎஸ் எடுக்கின்ற வெறிச்செயல் சமீபத்திய பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகர விமான நிலையத்தில் நடத்தப்பட்டு 34 பேரை பலியாக்கியிருக்கிறது.

நினைவுவேறு நிஜம்வேறு ப்பாதர் என சிறுவன் பிரகாஷ் சொல்ல என்னடா வித்தியாசம்னு கேட்டேன் அவன் சொன்னது. எங்க அப்பா வீட்டுக்கு வெளியே டிப்டாப்பா போறது ஹீரோனு நினைப்பு அவருக்கு ஆனால் வீட்டுக்குள்ள வரும்பொழுதுதான் ஜீரோதான் அவருடைய நிஜம்ன்னு……

சிறுமி ஜெயா சொல்றா நாங்க கிளாஸ் நிரம்பியிருந்தா எங்க டீச்சர் நினைப்பு அவங்கமேல எங்களுக்கு ஒருபாசவெறின்னு ஆனா அதைசகித்துக்கொள்கிற எங்களுக்குத்தான் புரியும் அவங்க டீச்சிங் ஒருகொலைவெறி என்ற நிஜம்……

வாலிபன் சார்லஸ் சொன்னது: ப்பாதர் நினைப்பு அவர்பிரசங்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஆனால் கேட்கிற எங்களுக்குத்தான் அது எங்களை அதிகமாகவே கடிச்சிருக்கு என்ற நிஜம்…..

பேப்பர் படிச்சிருந்த அங்கிள் சைமன் சொன்னாரு ஒட்டு கேட்கிற கூட்டணியை அடிக்கடி மாத்திற அரசியல்வாதிங்க நினைப்பு அவங்கதான் நாட்டை பாதுகாக்கிற அன்டிவைரஸ்னு ஆனா ஊரரிஞ்ச விசயம் அவங்கதான் நாட்டை அழிக்கிற ஸ்ளொவான வைரஸ்னு….

நம்மத்தியில் நினைவுகள் வேறு நிஜம் வேறு என முரண்பாடாக தெரிந்தாலும் நாம் நினைவுகளை நிஜமாக்க எடுக்கும் முயற்சிகள் தான் எத்தனை எத்தனை?

பிரான்சு நாடடின் பிரெஞ்சுபுரட்சியின் நூற்றாண்டுநினைவுச்சின்னம் உயர்ந்துநிற்கும் ஈபிள் கோபுரம் மீண்டும் புரட்சியை நிஜமாக்க முடியாது….

அமெரிக்கவிடுதலையின் வெளிப்பாடு உயர்ந்த உருவம் சுதந்திரதேவி இது நிகழ்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நினைவு சின்னமே…

.. முகாலயா அரசர் ஷாஜஹான் தன்பிரியமுள்ள மனைவிக்கு அன்பின்சின்னமாக எழுப்பியது வரலாற்று புகழ் தாஜமஹால் இது அவர் மனைவியை கண்முன் கொண்டுவரஇயலாது வெறும் நினைவுச்சின்னமே…

நம்மிடையேயும் மறைந்த நம் சொந்தங்களின் நட்புகளின் பொருட்கள் நினைவைக்கொண்டுவரும் நினைவுச்சின்னங்களாக நம்மில் பாதுகாக்கப்படுகின்றன. இவைகள் நினைவுபடுத்தும் நபர்களை நம்கண்முன் கொண்டுவர இயலாது மாறாக தோன்றி மறையும் நினைவுகள். நினைவுபடுத்தி நிழாலகயிருப்பது வேறு…. நினைவுகளோடு நிஜமாகவேயிருப்பது வேறு. நினைவு நிஜமாவது என்பது எந்நாளும் உடனிருப்பது….பிரசன்னமாகயிருப்பது…உயிராவது .

இறைமகன் இயேசு நினைவாக நினைப்பாக மட்டுமல்ல நிஜமாக உடன்உறைந்துயிருக்கின்றார் என உலகிற்கு உரைப்பதே இன்றைய பாஸ்கா இரவு இறுதி உணவுவிழா நினைவு திருவிழாவாகும். வாழ்வில் பல மைல்கற்களை கடந்து சென்றபொழுது இறைவனை நினைவில் தாங்கிசென்றார்கள். காயின் சந்ததியர் தங்கள் ஆடுகளை குளிர்காலத்தில் கோடைஇடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச்சொல்லும்பொழுது இதை பாதுகாப்பாக கடந்துசெல்ல உதவுபவர் யாவே இறைவனே என தங்கள் எண்ணங்களில் நினைவுகளோடு ஆடுகளை பலிசெலுத்தினார்கள். ஆபேல் சந்ததியினர் அறுவடை காலங்களில் யாவே இறைவனை நினைவுகளில் நிறுத்தி பலிசெலுத்தினர். இறைவனை அவர்கள் நினைவுகளில் தற்காலிகமாக வேண்டும்பொழுது நிறுத்தினர். ஆனால் நிரந்தரமாக அவரின் பாதையில் வாழவில்லை எகிப்திய அடிமைத்தனத்திலும் பாபிலோனிய கடத்தலிலும் நினைக்கமுடியாக மறக்கடிக்கப்பட்ட இறைவனாகவே யாவேயை பார்க்கவிரும்பினர். இவ்வாறு உழைப்பால் உணர்வால் குழுவாக பிரிந்திருந்த தருணத்தில் தான் நாங்கள் உங்களோடு இருப்பது நிஜமான நினைவு இதைநினைத்து நினைத்து கொண்டாடுங்கள் என்பதையே முதல் வாசகம் நமக்கு எடுத்துகூறுகிறது.

நினைத்து நினைவாக தொடர்ந்து செய்யுங்கள் நான் நிஜமாக பிரசன்னமாவேன் என பாஸ்கா உணவு வழியாகச்சொல்லி அதை எப்படி விடுதலையின் நினைவாக தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி கொண்டாடவேண்டும். காரணம் சொந்த நிலமும் வாழ்வின் வளமும் அடிமைநிலையிலிருந்து உரிமை வாழ்வும் தரும் இறைவன் நானே எனக்கொண்டாடியதை எடுத்துச்சொல்கிறது முதல்வாசக இறைவார்த்தைகள். வி.ப 12:14 “ இது ஒரு நினைவுநாளாகும். தலைமுறை தலைமுறையாகக் சலைக்காமல் கொண்டாடுங்கள் நினைவுகூறுங்கள் எடுத்துச்சொல்லுங்கள் எருசலேமை உற்றுநோக்கி என்று சொல்கிறார்.

வெறும் நினைவாகக்கருதி எருசலேம் வெறும் விலங்குகளின் பலியிடமாக மாறி மனிதச்சகோதர உணர்வு மறைந்தபொழுது நிஜமாக உடன்இருக்கவிரும்பி சொன்னதே லூக்கா22:19 என் நினைவாக நிகழ்த்தும்பொழுதெல்லாம் நான் நிஜமாகயிருப்பேன் என்பதே. இந்த நற்கருணை உணவு விருந்து பகிர்வு வேற்றுமைகளை உருவாக்கி வெறும் வாடிக்கையான நினைவாக மாறியபொழுது கொரிந்து சமூகத்திற்கு புனித பவுல் 1கொரி11:25ல் நிஜமாக தம்மை உடைத்துகொடுத்கும் இறைவனை உரிமையோடு உண்மையோடு சமத்துவமாக கொண்டாட நினைவுபடுத்துகிறார்.

நினைவாகச்செய்யும் பொழுது எவ்வாறு வளமாக நலமாக அனைத்துமாக இறைவன் நம்மோடு உடனிருக்கிறார். நினைவாக நிகழ்த்தும்பொழுது நான் நற்கருணையில் குருத்துவத்தில் நிஜமாக பிரசன்னமாயிருப்பேன் என இவ்விரண்டிற்கும் பிறப்பெடுக்கச்செய்த நாளே பெரியவியாழனாகிய இன்றைய நாளாகும். பாஸ்கா உணவு – எருசலேம் பலி உணவு உங்களில் ஒற்றுமையை இறைஉணர்வை தராது வேற்றுமையை பிரிவினையை பொய்தெய்வங்களை நாடச்செய்தது என நானே பலியாகின்றேன் உணவாகின்றேன் பலிப்பொருள் நான் பலியாகும் பீடம் நான் உணவு உறவின் இணைப்பை வெளிப்படுத்துகிறது எனவே பலமும் சக்தியாக நற்கருணை பிரசன்னம் அமைய முதல் நற்கருணை திருப்பலி நிவேற்றப்பட்ட நாளாகும். நினைவு வார்த்தைகளில் நிஜமாகும் இயேசுவை சந்தித்து நாம் இயேசுவாக மாறுகிறோமா? ஜிக்கரான் என்ற கிரேக்க நினைவுபடுத்துதல் நினைவுகூறுதல் என்பது நனவாக்குதல் மீண்டும் உண்மையாக்கி வாழ்தல் எனப் பொருளாகும். எவ்வாறு நற்கருணை பிரசன்னத்தை எவ்வாறு நாம் தொடர்ந்துபெறமுடியும்? அதற்கு இயேசு கொடுத்தது குருத்துவம் பணிக்குருத்துவம். குருக்கள். ஆம் குருத்துவத்தின் பிறந்த நாள் இன்று அனைத்துக்குருக்களை வாழ்த்துவோம் அவர்களுக்காக செபிப்போம். அவர்களின் போராட்டங்களில் இறையேசுவையே பற்றிக்கொள்வார்களாக. குருக்களுக்காக துணை நிற்போம் அவர்களும் நம்மிடமிருந்து அழைப்புபெறுபவர்களே அவர்கள் பலவீனத்தில் நாம் அவர்களை கீழேவீழ்த்தாமல் புரிந்து பலமாகயிருப்போம். பணிபுரியும் குருத்துவத்தில் நான் நிஜமாகபிரசன்னமாகயிருக்கின்றேன் என்கிறார்.

நற்கருணையில் நாம் நினைவுகூறும் இயேசு நிஜமாக பிரசன்னமாகயிருக்கின்றார் என்பதை வெளிப்படுத்த அவர் பிரசன்னத்தில் நம் நேரத்தை செலவிட இன்று சிறப்பாக நாம் அழைக்கப்படுகிறோம் அவரின் கெத்சமேனி போரட்டத்தில் நம்மையும் இணைத்துக்கொள்வோம்.

குருத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வே பாதம் கழுவும் சடங்கு ஆகும். குருக்கள் மக்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்த தருணத்தில் தங்களின் உயர் பதவியாக பார்த்தபொழுது வீட்டிற்கு உணவுஅருந்த வரும்பொழுது அவர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவுவது அங்கு பணிபுரியும் அடிமைகளின் வழக்கம் ஆகும். தான் யூதகுரு-போதகர் என்ற மேலாடையை கழற்றி அடிமைக்குரிய துண்டை இடுப்பில் சுற்றி இறங்கி வருவது தான் குருத்துவபணி. மற்றவர் நிலைக்கு இறங்கிவந்தால்தான் அவர்களை உயர்த்தமுடியும் அதுதான் குருத்துவத்தின் பணி திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவனின் பணி எனஉணர்த்துகிறார். குருவானவர் ஒருபணியாளர்: உபசரிக்கப்படவேண்டிய விருந்தாளி அல்ல மாறாக உபசரிக்கவேணடிய வேலையாள்.

மார்ச் 4ம் தேதி எமனில் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட 16 பெயரில் நான்கு அருட்சகோதரிகள் ஆவர். அவர்களுக்காக பணிபுரிந்து வந்த அருட்பணியாளர் தாமஸ் கடத்திச்செல்லப்பட்டு இன்றுவரை எந்தசெய்தியும் தெரியவில்லை 56வயதுடைய குருவானவர் நாளை பெரிய வெள்ளிஅன்று கொல்லப்படலாம் என வதந்திகள் சொல்லப்படுகின்றன. அவருக்காக அவர்போன்று பணிபுரியும் இடத்தில் பலியாகிகொண்டிருக்கும் குருக்களை நினைத்துச்செபிப்போம் நம் மத்தியில் உள்ள குருக்களை மதித்துஅவர்களுக்கு துணையாயிருப்போம்.

தன்னுடைய 58வது வயதில் கேன்சர் வியாதியில் மரணபடுக்கையில் 1993-ல் இதுபோன்ற ஒரு பெரிய வியாழன்று இத்தாலியைச்சேர்ந்த ஆயர் டோனி பெல்லோ தன் இறுதி அறிக்கைமடலை தன் மறைமாவட்டத்து குருக்களுக்கு “தோள்பட்டையும் –துண்டும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இதில்நற்கருணையிலுள்ள இயேசுவோடுள்ள இணைப்பை தோள்பட்டையும் – பணியில் மக்களோடுள்ள இணைப்பை துண்டும் வெளிப்படுத்தி வெளிக்கொணர்கின்றன. இறைவனோடும் மக்களோடும் இணைந்துவாழ பணியாளனாக அழைக்கப்பட்டவரே குருவானவர். குருத்துவத்தையும் நற்கருணையும் நிறுவிய நினைவுநாள். இது தோள்பட்டையின் மற்றும் துண்டின் திருநாள். இது அன்பின் மற்றும் பணியின் திருவிழா என்கிறார் தன் அனுபவ எழுத்துகளில்.

17டிசம்பர்1944ல் ஜெர்மனி நாசி வன்முறைக்கு பலியாகி சிறையில் இருந்தபொழுது பிரான்சு நாட்டு ஆயர் தன் சககைதியாகிருந்த திருத்தொண்டர் காரல் லேசனருக்கு சிறையில் குருப்பட்டம் கொடுக்க புதிய குருவான காரல் ஒவ்வொருநாளும் சிறையில் கொண்டாடி பகிர்ந்த சமதத்துவ நற்கருணையிலிருந்து பிறசககைதிகளோடுஒருசமத்துவ சகோதர சந்தோச உணர்வை இயேசுவின் உடனிருப்பை துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியில் கொடுத்தது எனச்சொல்லி 1945ல் விடுதலையை கோண்டாடிய சிலமாதங்களிலே மனநிறைவோடு இறக்கினறேன் எனசாட்சிபகர்ந்தார்.

1431ல் இங்கிலாந்தின் புனித ஜோனாப்பார்க் சிறையில் நெருப்பில் மரணதண்டனைக்கு முன்பு நீங்கள் உண்ணவீரும்பும் இறுதி உணவு என்ன? என்ற கேள்விக்கு அவர்சொன்னது நற்கருணையிலுள்ள இறைஇயேசு வேண்டுமே அவரே போதும் ஆவார்.

புனித தமியான் சொன்னது “நற்கருணை ஒரு சிறப்பு உந்துதல் சக்தி”..
புனித மாக்சிமில்லியன் “என் உடலிலுள்ள இரத்தம் இயேசுவின் இரத்தமே”…
புனித பீட்டர் ஜீலியன்… ”இயேசுவின் நெருப்பு நிறை பிரசன்னமே நற்கருணை” ஆகும்.
புனித 2ம் ஜான் பவுல் “நற்கருணையே நம் சொத்து”…
எக்குறைபாடுகள் நிலவினாலும் இயேசு நம்மில் நிலைத்தருப்பதபோல நற்கருணையும் குருத்துவமும் எந்நாளும் வாழும் உயரும்- நினைவாகச் செய்வோம்-நிஜமான அவரில் மகிழ்வோம்-ஆமென்.