இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
புனித வாரம் பாடுகளின் ஞாயிறு (குருத்து ஞாயிறு)

மாறுபாடுகள் நிரம்பிய நுழைவு!

எசா50:4-7
பிலிப்2:6-11
லூக் 22:14-23 23:56கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே,
ஒராயிரம் கதைசொல்லும்
ஒலிவ இசையின் வரலாறு பேசும் இன்றையஞாயிறு
ஒய்யாரமாய் அமைதிக்கு அரசன் தேடும் கழுதையிலே
ஒற்றை நாயகனாய் எருசலேமை நோக்கிய அவரின் நுழைவுப்பவனியே
நாம் நினைத்துக்கொண்டாடும் குருத்து மற்றும் பாடுகளின் ஞாயிறு
பாதையெங்கும் ஆரவாரம் நாவெல்லாம் கோலாகலம்
போர்வைவிரிப்புகள் தரைக்குமெத்தையாக
பார்க்கவந்த அனைவருக்கும் விடுக்கின்ற அழைப்பு
பங்கெடுங்கள்…என்னைப்போல்….என்னிலும்..அனைவரிலும் என்கிறார்.

ஏன் உங்க மகன் மூன்றுபாடங்களில் இவ்வளவு மதிப்பெண் குறைவாகஎடுத்திருக்கிறான்? என ஓபன்டேயில் கேட்டபொழுது தாய் சொன்னது நான் ஒருமூலையிலே டிவி சீரியல் அது இது சிங்கர் என பார்த்திட்டிருப்பேன் அவன் என்ன படிக்கிறான்னு ஒன்னும்தெரியாது என்பதே. தன்மகன் வாழ்வில் அவர் ஒரு பார்வையாளரா? பங்கெடுப்பவரா?

சில ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கவீட்ல யாரும் கோயிலுக்குவரதில்லேயே என்பதற்கு தந்தை சொன்ன பதில் காலையிலே தூங்கிட்டா மாலைகிடைக்கும் மாதா டிவி திருப்பலி – வெளியிலபோகனும்னா அதிகாலை கிடைக்கும் ஜெயாடிவி திருப்பலி அதுதான் சில ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதில்லை என்பதே-இவர்கள் எந்த ரகம் பார்வையாளரா? பங்கெடுப்பவர்களா?

கூட்டணிக்கு பேரம் பேசுதல் நடக்கிறது பின் ஏன் மாநாடுகள்? பணம் வாங்கி பார்வையாளர்களாக அனைவரும் செல்வதாலே!

நடுத்தெருவில் அடிப்பட்டு துடிக்கும் மனிதத்தை தொட்டு தூக்க மறுத்து போலிஸ் கேஸில் நாம் ஏன் மாட்டவேண்டும்-எனச்சொல்லும்பொழுது நாம் இரக்கமில்லா பார்வையாளர்கள்.

பேருந்தில் ஒருஇளம்பெண்ணை பலர் கிண்டல் செய்வதை நம்மக்கென்னவம்பு என கண்ணைமூடிக்கொள்ளும்பொழுது நாம் இரக்கமில்லா பார்வையாளரே!

எந்த குழுவும் எனக்கு பிடிக்கவில்லை நான் திருப்பலிக்குவந்து செல்வதுபோதும் என்பது வாடிக்கையாக வேடிக்கைப்பார்க்கும் பார்வையாளரை படம்பிடிக்கிறது!

கொடுரங்களும்-கொலைகளும் தவறுகளும்-தீமைகளும் கற்பழிப்புகளும்-கடத்தல்களும் பரிச்சயமாகிப்போவதற்கு காரணம் பங்கெடுக்கதவறி வெறும் வெற்றுப்பார்வையாளராக அதிகமானோர் இருப்பதாலே. சென்னையின் வரலாற்றுவெள்ளத்தில் மனிதம் நிரூபித்தது பங்கெடுத்து பாதுகாக்க உயிர்கொடுக்க மீட்பின் சீடர்கள் இன்றும் தோன்றுகிறார்கள் என்று.

என்னை பார்வையாளனாக வேடிக்கை பார்க்கவேண்டாம் என்னில் சமூகத்தில் மீட்பில் பங்கில் குடும்பத்தில் முழுமையாக பங்கெடுங்கள் பவனிவாருங்கள் என அழைப்புவிடுப்பதே பாடுகளின் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

பங்கெடுக்க பிறரின் வாழ்வில் நுழையவேண்டும். இன்றைய நிகழ்வு நற்செய்தியில் முதலில் எருசலேம் நுழைதலையும் மற்றும் கல்வாரிநுழைவையும் நம்முன் கொண்டுவருகின்றன. நுழைவது இணைவது ஒன்றாவது என்பதாகும். தன்தந்தையோடு இணைய அவர்திட்டதிற்கு முழுமையான பங்கெடுப்பைதர நுழைகின்றார். எந்த மக்கள் எருசலேமை வேடிக்கையின் இடமாக பார்த்தார்களோ அங்கே உங்களோடு பங்கெடுத்து எருசலேம் பங்கெடுக்கும் என்உடல் எனச்சொல்ல நுழைகின்றார்.

பங்கெடுக்க இன்று இது இப்பொழுதே இங்கேயே சாத்தியமாகும் எனநம்பவேண்டும். ஓசான்னா என்றால் இப்பொழுது மீட்புதாரும் இப்பொழுதே காப்பாற்றும் இப்பொழுதே விடுதலைபெற்றுதாரும் சட்டத்தினால் அழுத்தும் யூதமதக்குருக்களிடமிருந்து பல்வேறு புதிய அதிகாரமிகு உரோமை ஆட்சியாளர்களிடமிருந்து என மக்கள் இயேசுவின் இரக்கமிகு பங்கெடுப்பில் நம்பினர்.

பங்கெடுத்தல் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமைதியைப்பெற்றுதருகிறது. வெற்றியின்பொழுது குதிரையின் மீது வந்த அரசன் போரின்றி அமைதிச்செய்தியை அறிவிக்க கழுதைமீது வந்ததையும் ஒலிவ கிளைகளை நெற்றியில் ஏந்தி அமைதிச்செய்தியை வெளிப்படுத்தியதை பங்கெடுப்பு அமைதியை பிறப்பெடுக்கச்செய்கின்றது என உறுதிப்படுத்துகிறது.

பார்வையாளர்கள் பிடிப்பில்லாதவர்கள் ஆதாயம் தேடுபவர்கள் இரக்கமில்லா இறுகியமனம்கொண்டவர்கள். தன்வேலையைசெய்யும் யூதாசு – இருளிலிருந்து உறங்கின திருத்தூதர்கள்-பழிசெலுத்திய பயந்த தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பின்வந்த கூட்டம்.

பங்கெடுப்பவர்கள் உடன்இருப்பவர்கள் உடன் பயணம் செய்பவர்கள் பயணத்தில் முழுநம்பிக்கை கொள்பவர்கள். இது ஆண்டவருக்கு தேவை விட்டுவிடுங்கள் கழற்றிவிடுங்கள் அழைத்துவாருங்கள் என அனைத்தையும் இரக்கத்துடன் செயலாக்கம் கொடுக்கு விட்டுவிடுபவர்கள்.

யாருக்கு என் பங்கேற்பு தேவை…..எந்த செயலில் நான் செயல்பட மறுத்து நிற்கின்றேன்? ஆலயத்திலா? சமூகத்திலா? குடும்பத்திலா? பரிசுத்தவாரத்தின் பாடுகளின் வாரத்தின் அனைத்துநிகழ்வுகளிலும் முழுமையாக பங்கெடுக்கதயாரா? பாதம் கழுவும் திருச்சடங்கில்- நற்கருணை ஆராதனையில் மற்றும் பல்வேறு செயல்பாடுகளில்.