இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
தவக்காலம் வாரம் 5

பற்றுவோம்.... இறைவனின் வாய்ப்புகளை...!!!

ஏசா 43:16-21
பிலி 3:8-14
யோவா 8:1-11கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே நம்முடைய வாழ்நாளில் மீண்டும் ஒரு புதிய திருத்தந்தையை காண அவரின் தலைமைத்துவத்தில் நாம் பயணம் செய்ய இறைவன் கொடுத்த வாய்ப்புக்காக நன்றி செலுத்துவோம். தூய ஆவியின் துணைக்கும் கர்தினால்மார்களின் சிறப்பு முயற்சிக்கும் நன்றி செலுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனைத்து பணிமுயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைத்து இறை இயேசுவின் எளிய உயரிய வாழ்வுக்கு இன்றைய சூழ்நிலையில் சாட்சி பகர முன்வருவோம். பரிசுத்த வாரத்திற்கு முன்அமைந்துள்ள இவ்வார திருவழிபாடு நம்மை தொடரும் இறைவனின் வாய்ப்புகளை பற்றிக்கொள்ள அழைக்கின்றது. அழைப்பை ஏற்போம் முழுமனதோடு பற்றிக்கொள்வோம்.

இயேசு குனிந்து என்ன எழுதினார்? ஏன் பரிசேயர்கள் ஒருவர் பின் ஒருவாராக அங்கிருந்து வெளியேறினார்கள்? என்ற கேள்விக்கு மறைக்கல்வி வகுப்பில் ஜேம்ஸ் சொன்ன பதில் இயேசு குனிந்து எழுதியது அங்கு வந்த பரிசேயர்கள் அனைவரின் பாவங்களையே. ஆகவே அனைத்து பரிசேயர்களும் அங்கிருந்து வெறியேறிவிட்டனர்.

இயேசு சமூகபாவ தீமைகளுக்கு அனைவரும் காரணம் என சவால் விடுகிறார். புpறரை காரணம் சொல்வது நீ பாவி குறையுள்ளவன் குறையுள்ளவள் என தீர்ப்பிடுவது ஒருவரின் புதிய பாதைக்கு வாழ்வுக்கு தடையாக இருந்து குறை கூறியேவாழ்வது தங்கள் கறையை மறைப்பதற்காகவே ஆகும் மேலும் இதுவே பல்வேறு சமூக பாவங்கள் தொடர்ந்திருப்பதற்கு காரணமாக அமைகிறது என எடுத்துரைக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தபோதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன் இதனால் என்னை யாரும் என் குடும்பத்தில் சுற்றுப்புற சமூகத்தில் மதிக்கவில்லை மாறாக என்னை தீர்ப்பளித்து குறையையே சுட்டிக்காட்டினர் நானோ வீட்டை வீட்டு வெளியேறி பல்வேறு துன்பங்களைசந்தித்து இப்பொழுது நன்றாகயிருக்கின்றேன். நான் மாறியதை நம்பாமல் இன்னும் என்னை அவலமாக பார்க்கும் அவர்களால் நான் திரும்பவும் பழைய போதைக்கு சென்றுவிடுவேனா என பயமாகஇருக்கிறது எனடேவிட் என்ற இளைஞன் என்னை அணுகி ஆலோசனை கேட்டான். டேவிட்டைபோல பலரை ஒரு தீமையிலிருந்து வெளியே புதிய பாதைக்கு பதுவாய்ப்புக்கு அழைக்காமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாக அமைகின்றோம்.

வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன....பற்றிக்கொள்ள...பிறருக்கு பாதையாகயிருக்க நாம் தயாரா! ஏசாயா இறைவாக்கினர் வழியாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் அவரின் வாய்ப்புகளை மக்களுக்கு உணர்த்துகிறார். எழுபது ஆண்டுகலாக பாபிலோனிய அடிமைதளத்திலிருந்த மக்கள் அடிமைத்தனம் தான் நிரந்தரமா? விடுதலை என்ற புதுவாழ்வு நமக்கு கிடையாதா? நம்முடைய பாவம் தான் இறைவன் கண்முன் உள்ளதா? ஏன்ற கேள்விகளோடு வாழ்ந்தபொழுது. ஏசாயா அந்த மக்களிடம் நம் இறைவன் ஒரு புதிய விடுதலைப்பயணத்திற்கு உங்களை அழைக்கிறார். இது அவர் உங்களுக்கு தரும் தொடர்வாய்ப்பாகும். அன்று எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பைதந்து உங்கள் பயணத்தில் பாலைநிலத்தில் பாறையிலிருந்து நீருற்று தண்ணீரை வானிலிருந்து மன்னா உணவை தந்த இறைவனே இன்றும் உங்கள் சொந்த கானான் நாட்டை இழந்து இந்தபாபிலோனிய வெறுமையான வாழ்விலிருந்து மீண்டும் புதியவாய்ப்பை தருகிறார். எருசலேமை நோக்கி அழைக்கிறார். பாலஸ்தீன நீர்வளம் வழியாக உங்களை அழைக்கிறார் பாதுகாப்பாக அவரேஉங்களை வழிநடத்துவார் அவர் தரும் வாய்ப்பை உங்கள் முன்னோர்கள் பற்றிக்கொண்டதுபோல நீங்களும் பற்றிக்கொள்ளுங்கள் இறைவனே உங்கள் பாதையாவார். இது உங்கள் முன்னோர்களின் கனவுகளை வாழ அழைக்கும் புதிய விடுதலைப்பயணமாகும் என்கிறார். அடிமைத்தனம் நிரந்தரமல்ல.. இறைவன் தரும் வாய்ப்புகளே என்றும் நிரந்தரம்.

இன்றைய நற்செய்தி பகுதி எருசலேம் சூழ்நிலையில் அமைகிறது. இயேசு கூடியிருந்த மக்களுக்கு போதித்து கற்பித்துகொண்டிருந்தபொழுது பரிசேயர் இயேசுவின் மீது குற்றம் காண சோதிக்க ஒருபெண்ணை கொண்டுவருகின்றனர். சிலைவழிபாடு – கொலை – விபச்சாரம் இவைகள் மரணதண்டணையைபெற்று தரும் என சட்டம் சொல்லியது. எனவே இப்பெண் விபச்சாரத்தினால் கல்லால் அடித்து கொல்லப்படவேண்டும் எனமுறையிடுகின்றனர். உரோமை குடியுரிமையுள்ளவர்கள் கல்லால் எறியபடக்கூடாது மரணதண்டனைக்காக என உரோமை சட்டம் சொல்லியது. மோசே படிப்பினை கட்டளை கல்லால் எறிந்துகொல்லப்படவேண்டும் என்றது. இயேசு எந்தபக்கமும் சாய்ந்து முடிவுஎடுக்கமுடியாது. இயேசு இறைத்தந்தையின் பக்கம் சாய்ந்து அவர் தரும் தொடர்வாய்ப்புகளை உணர்ந்து சட்டங்களை கடந்து செல்லுகிறார். அனைத்து சமூகபாவங்கள் மற்றும் தீமைகளுக்கு காரணம் பரிசேயர்களே நீங்களும் உங்கள் சுயநலமிகுகட்டளைகளுமே என சவால் விடுகிறார். கையும்மெய்யுமாக பிடிபட்டாள் என்றாள். அங்கிருந்த ஆண் எங்கே? பெண்களை வேறுபடுத்தி தப்பிக்கும் இப்படிப்பட்ட ஆண்களை வளரவிடும் சமூகமே இத்தீமைகளுக்கு காரணம் என்கிறார்.

உங்களில் கறையில்லாதவர்கள் யார் என்பதன் மூலம் - குறையையே சுட்டி காட்டி பிறரை தீர்ப்பளிப்பது உங்கள் பாவங்களை கறைகளை மறைக்க மதபோதனையை சட்டத்தை பயன்படுத்துவது உங்களுடைய வழக்கமாகிவிட்டது இந்த குறைகூறும் பழக்கம் தான் பல்வேறு சமூக தீமைகளுக்கு காரணம் என அவர்களை தாக்குகிறார். இறுதியாக நீ போகலாம் உனக்கு மீண்டும் ஒரு புதியவாய்ப்பு பாதை தரப்பட்டுள்ளது. இறைவன் தரும் வாய்ப்பும் பாதையும் நிரந்தரம் உன் பழைய பாவ வாழ்வு தற்காலிக கனவு என அவளுக்கு பாதையாகிறார்.

திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம். "எதிர்மறை எண்ணங்களும் உன்னை தாழ்த்தும் குறைவான சிந்தனைகளும் உன்னை சுற்றிவரும் சாத்தான்கள் அவைகளுக்கு நீ ஆளாகிவிடாதே" என்ற அழைப்பு இன்று மார்ச் 15ம்தேதி புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அனைத்து கர்தினால்மார்களுக்கும் உரையாற்றியபொழுது சொன்னதாகும். இயேசு சபையைச்சார்ந்த முதல் திருத்தந்தை – ஜரோப்பிய நாடுகளை கடந்த இலத்தின் அமெரிக்காவைச்சார்ந்த முதல்திருத்தந்தை – எளிமையின் சின்னமான புனித பிரான்சிஸின் பெயரை ஏற்றுக்கொண்ட முதல் திருத்தந்தை – உங்களுக்கு ஆசீர் வழங்குமுன் எனக்காக செபியுங்கள் என குனிந்து மக்களோடு ஒன்றான முதல்திருத்தந்தை இறைவன் நமக்கு அருளும் மற்றுமொருபுதிய வாய்பபாகும் நன்றி செலுத்தி அவர்வழிபயணம் செல்வோம். -ஆமென்