இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தவக்காலம் வாரம் 2

தொடர்வோம்......இறைவனின் பயணங்களை...!!!

தொ நூ 15:5-12, 17-18
பிலி 3:17—4:1
லூக் 9:28டி-36



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே
நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருவிருந்தும் இறைவன் நம்மிடம் ஏற்படுத்திய உடன்படிக்கையின் உறவை புதுப்பிக்கிறது. இந்த உடன்படிக்கையின் உறவு ஒரு பயணிக்கும் உறவாகும். நம் சமூகத்திலும் நாம் வாழும் உலகிலும் நாம் சார்ந்திருக்கும் திருச்சபையிலும் இப்பயணிக்கும் உடன்படிக்கை உறவை வாழ்ந்து சாட்சி பகர நாம் அழைக்கப்பsடுகின்றோம். இது இறைவன் இயேசு நமக்கு காட்டிய ஒரு தொடர் பயணமே என்பதை இன்றைய திருப்பலி இறைவார்த்தைகள் நமக்கு உணர்த்தட்டும்.

கடந்தவாரம் ஜெனட் என்ற பெண்மணி அவர்கள் எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா என்றார்கள். எனக்கு தெரிந்தால் தெளிவுபடுத்துகிறேன் தெரியவில்லை என்றால் தொடர்ந்துதேடுங்கள் என்றேன். அவர்கள் சொன்னார்கள். நான் தொலைக்காட்சி நிகழ்விலும் - ரேடியோ தொடர்களிலும் கேட்டது அடுத்து தேர்ந்தெடுக்கப்படயிருக்கின்ற திருந்தந்தை இறுதி மற்றும் கடைசிதிருந்தந்தையாக இருப்பார் இதோடு திருச்சபையின் பயணம் உலகின் மற்றும் மனிதத்தின் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என. நானோ இதை எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ள அல்லது நம்ப முடிகிறது என்றேன். ஜெனட் அவர்கள் தொடர்ந்து சொன்னது. 900 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஆயர் புனிதர் மலாக்கி தன்எழுத்துக்களில் தி.வெ குறிப்பிட்டு திருத்தந்தை செலஸ்டின் முதல் 112வது திருத்தந்தையே பேதுருஸ் ரோமானுஸ் என்ற உரோமையின் கடைசி ஆயர் திருச்சபையின் கடைசி திருத்தந்தை ஆவார்;. உரேரமை நகரம் அழிக்கப்பட அதுவே இறுதிபயணமாகும். முதல் திருத்தந்தை பேதுருவைப்போல கடைசி திருத்தந்தையும் பேதுருவாகயிருக்கலாம் கானாவைச்சார்ந்த கர்தினால் பீட்டர் டர்க்ஸன் தேர்ந்தெடுக்கப்படலாம் அவர் பேதுருபெயரைத்தாங்கியிருப்பதால் எனவும் பேசப்படுகிறது. நான் சொன்ன பதில் இதுவே-யாரும் திருச்சபையின் பயணத்தை நிறுத்தவோ முடிவுக்கு கொண்டுவரவோ முடியாது. இது பாறையின்மேல் கட்டப்பட்ட பலரின் இரத்ததால் கட்டப்பட்ட திருச்சபை. பல போர்களை எதிர்ப்புகளை துனபுறுத்தல்களை கடந்துவந்திருக்கிறது ஆகவே அறிவியல் - தொழில்நுட்ப மற்றும் ஊடக வளர்ச்சிகள் உலகின் பயணத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியாது. நம்வாழ்வு முடிவு அடைவதில்லை இறைவனில் தொடர்கிறது அதுபோல என்றும் உலகின் திருச்சபையின் பயணம் தொடரும். முடிவுக்கு வந்துவிடும் அழியப்போகிறது என சொல்லும்பொழுது நாம் நம் வாழ்வின் விசுவாசப்பயணத்தை தொடரவிரும்பாததற்கு காரணம் நாம் சந்திக்கின்ற வலிகளும் நோய்களும் துயரங்களுமே காரணம். நம்முடைய மனஅழுத்தங்களுக்கு மனகுறைபாடுகளுக்கு ஏமாற்றங்களுக்கு நாம் எடுக்கின்ற தவறான முடிவாகிய நம் விசுவாசப்பயணத்தை முடிவுக்குகொண்டுவந்து அல்லது நிறுத்திக்கொள்வதே ஆகும். நம் வாழ்வை – நம் விசுவாசத்தை ஒரு தொடர்பயணமாக பார்க்க வாழ நாம் நம்முன் நிறுத்தவேண்டியது இறைவனின் உடன்படிக்கை உறவையும் மற்றும் உடன்இருக்கும்அவரின் ஆசீரையுமே ஆகும்.

தொடக்கநூலிலிருந்து அமையும் இன்றைய முதல் வாசகம் நமக்கு இந்த கருத்தையே வலியுறுத்துகிறது. ஆபிராம் 80 வயதைக்கடந்தவராகவும் அவர் மனைவிசாராய் 70வயதை கடந்தவளாகவும் இருக்க பிள்ளைவரமின்றி உலகம் சமூகம் சொந்த உறவுகள் அவர்களின் மகிழ்ச்சிக்கு சந்ததிக்கு எதிர்காலத்திற்கு இறைஆசிருக்கு முற்றுபுள்ளி வைத்து அவர்களின் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் இச்சூழலில் இறைவன் உன் பயணம் என்றும் தொடரும் ஆசீர்உன்னுடன் என்றும் இருக்கும் உடன்படிக்கையால் நம் உறவு நெருக்கமாகும் எனவிரும்பி வானத்து விண்மீன்களைகாட்டி எண்ணஇயலாத இவ்விண்மீன்களைப்போல உன்வழிமரபு எண்ணமுடியாத அளவுக்கு உயர்த்தப்படும் நீயே அனைவருக்கும்தந்தையாவாய் என்கிறார். மேலும் நாடும் நிலமும் உடன்படிக்கைஉறவின் வெளிப்பாடுகள் எனஉறுதிசெய்கிறார். எண்ணஇயலாவழிமரபு உடனிருக்கும் இறைவனின் ஆசீர்கள். நிலமும் நாடும் உடன்படிக்கiயின் வெளிப்பாடுகள். எண்ணிக்கையில் அதிகமான வழிமரபினரையும் எண்ணஇயலா சொந்த உரிமையுள்ள நிலங்களை கொண்டிருப்பது இறைவன் மனிதனாக ஆபிராமை உயர்த்தியது. ஆசீரோடு உரிமையுள்ள நிலங்களோடு தொடர்பயணம் மேற்கொள்ள இறைவன் அழைப்புவிடுக்கின்றார்

நற்செய்தியில் இயேசுவின் தோற்றமாற்றமானது கொடுக்கப்படுகின்றது. மேகமும் மலைஉச்சியும் இறைவனின் பிரசன்னமாக இறைவன்வாழும் உறைவிடமாக கருதப்பட்டது. மோசேயின் தோற்றம் இறைஆசீரையும் எலியாவின் தோற்றம் உடன்படிக்கையின் உறவையும் வெளிப்படுத்துகிறது;. பேதுரு நம்பயணம் இதோடு முடிவுபெறட்டும் கூடாரம் இங்கே அமைத்து இங்கேயே இருந்துவிடலாம் எனசொல்லும்போது அந்த எருசலேம் தொடர்பயணம் வேண்டாம் என்பதையே மறைமுகமாகச்சொல்ல அப்பொழுது அங்கு காணும் மோசே மற்றும் எலியா அவர்களும் தடுமாற்றத்தில் ஏமாற்றத்தில் மக்களின் எதிர்ப்புகளில் தங்கள் பயணத்தை தொடர முடியாது என்று நினைத்தபொழுது ஆசிர் நிரம்பிய இறைவனே மற்றும் உடன்படிக்கையின் இறைவனே அவர்களின் தொடர்பயணத்திற்கு காரணமானார் என்பதை அங்கு குறிப்பிட்டு சொல்கிறது. எருசலேமுக்கு நான் செல்லவெண்டும் என்று இயேசு சொன்னபொழுது அதை திருத்தூதர்கள் மறுத்து இங்கேயே இருந்துவிடலாம் என்கின்றனர். பயணத்தை நிறுத்தி முடித்துவிடலாம் என்ற எண்ணங்கள் நிரம்பியிருந்த தம் அன்பு திருத்தூதர்களை புரியவைக்க பயணம் என்றும் தொடரவேண்டும் எருசலேம் கல்வாரி முடிவல்ல மாறாக பயணத்தின் ஒருமைல்கல்தான் என வெளிப்படுத்துகிறார். இதோ என் மைந்தர் நான் தேர்ந்துகொண்டவர் இவரே என்ற இறைத்தந்தையின் ஆசீரும் உடனிருக்கும் உடன்படிக்கையும் இயேசுவின் பயணத்தை தொடர்பயணமாக்கியது.

மீட்பின் வரலாற்றில் இஸ்ராயேல் மக்களின் தொடர்பயணத்திற்கு துணையாயிருந்தது இறைவனின் ஆசீரும் மற்றும் உடனிருந்த உடன்படிக்கையுமே ஆகும். தலைவர்கள் - இறைவாக்கினர்கள் - அரசர்கள் தடுமாறியபொழுது அழைத்த இறைவனின் ஆசீர்களும் செய்துகொண்ட உடன்படிக்கையின் நினைவுகளுமே அவர்களையும் அவர்கள் பணியையும் ஒரு தொடர்பயணமாக்கியது.

15வயது நிரம்பிய மலாலா என்ற பாகிஸ்தானிய பெண் பெண்பிள்ளைகளின் படிப்புஉரிமையை வெளிப்படையாகச்சொல்ல அதற்காக தாலீபான் அமைப்புளால் சுடப்பட்டு தாக்கப்பட்டாள். இலண்டனில் அறுவைசிகிச்சை முடிந்து குணமாகிக்கொண்டிருக்கும் பொழுது ஊடகங்கள் பேட்டிகண்டபொழுது – அவள் நான் கோபமாகவோ பயமாகவோ இல்லை மேலும் இதுவே என் பயணத்தின் இறுதி நிலை என மன அழுத்ததோhடு சொல்லாமல் மாறாக தொடர்ந்து விசுவாசப்பயணத்தில் வலியுறத்தி வெளிப்படையாக ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் படிக்க முழுஉரிமையிருக்கு எனச்சொல்லி உங்களுடைய செபத்தினால் ஆதரவினால் மருத்துவர்களின் திறமையினால் கிடைத்த கிடைக்கப்பெற்ற புதுவாழ்வில் மறுவாழ்வில் என் பயணம் பணி என்றும் தொடரும் ஒவ்வொரு பெண்குழந்தையும் படிக்க முழு உரிமையிருக்கு. என்றுரைக்கம் அவளின் தொடர்பணி வெற்றியாக அமையட்டும்.

என் விசுவசாச - இல்லற – சமூக பயணத்தை தொடர்கின்றேனா? அல்லது ஒரு சில தளர்ச்சியினால் பயணத்திற்கு முற்றுபுள்ளி வைக்கின்றோனா? எண்ணுவோம் இறைவனின் ஆசீர்களை மேலும் பற்றுவோம் உடன்படிக்கையின் உறவை-ஆமென்.