இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு

எதிர்ப்புகள்…..என்னை நிறுத்தாது!...........

ஏரே1:4-5,17-19
1கொரி12:31–13:13
லூக்4:21-30



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். ஒவ்வொரு வாரமும் நம்மை ஒன்றிணைத்து அழைக்கும் இறையேசுவின் நற்கருணை திருவிருந்தில் நாம் துவங்கும் இப்புதிய வாரத்தை அர்ப்பணிப்போம். கடந்தவாரத்தில் நாம் பெற்ற அனைத்து ஆசீர்களுக்காக இறைபிரசன்னத்தில் நன்றிசெலுத்தி நம் தொடர்பயணத்திற்கு எந்நாளும் துணைநிற்கும் அவரின் திருக்கரங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் அனைத்து நிகழ்வுகள் திட்டங்கள் மற்றும் பிள்ளைகளின் படிப்புகளை அர்ப்பணிப்போம். அதேசமயம் நாம் சந்திக்கவேண்டிய அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு கடந்து தொடர்பயணம்செய்ய வரமும் உறுதுணையும் வேண்டி திருப்பலியில் இணைவோம்.

ஏண்டா ஸ்கூலுக்கு போனஉடனே வந்திட்டே அதுவும் ஒருவெறுப்பா தோன்ற என்ற கேள்விக்கு மகேஷ் சொன்னபதில் ஆமா அந்த டார்ச்சர் தான் காரணம் ஸ்கூல இருந்துதாண்டா வர்றேன் ஆமாம். அங்கே டீச்சர் தான்டா இருப்பாங்க யார்ரா டார்ச்சர் என்பதற்கு அவன் சொன்னான் அதுங்க வெறும்டீச்சரே கிடையாது டார்ச்சர் டீச்சர் காரணம் உற்சாகப்படுத்தி படுத்தி படிக்கவைக்கவேண்டியவர்களே எங்களை முட்டாள்கள் என்று எங்கள் வாழ்வுக்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்புகிறார்களே என்றான்.

நீ மட்டும் ஏன் அப்படிபார்க்கிற என்றதற்கு அவன் பதில் சொன்னது நீங்கவேற போனவருடம் ஒருபயன் இன்னொரு வகுப்பில டீச்சர்ஸ்டே அன்று ஹாப்பி டார்ச்சர்ஸ்டே என்று எழுதி மாட்டிக்கிட்டான் பாவம்.

இன்று சொந்த உறவுகள் தாய் தந்தை கணவன் மனைவி அலுவலகத்தில் பணிபுரியும் உடன் அலுவலர்களை நாம் அவங்க கொடுக்கிற டார்ச்சர் தாங்கமுடியல அப்பப்பா என்கிறோம். சிலர் எனக்கு அடுத்த சீட்லஇருக்கிறவர் மற்றும் என் டீம் லீடர் பண்ற டார்ச்சர் தாங்கமுடியல அதனாலேயே வேறு இடத்துக்கு அப்ளிக்கேஸன்ஸ் போட்டுஇருக்கேன் சம்பளம் குறைவாகயிருந்தாலும் நல்ல வேலை மற்றும் நல்ல இடம்னா உடனே மாறிடுவேன் என்கிறார்.

கடந்த வாரங்களில் ஜதராபாத் மற்றும்; நம் தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவியரின் தற்கொலைகள் அதன்பின் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகள் டார்ச்சர்கள். நம்மை இளைய உள்ளங்களை சுயஆய்வு செய்ய அழைப்புவிடுக்கின்றது.

அதிகமான நிலுவையிலுள்ள வழக்குகள் ஒன்று சொந்த இரத்தஉறவுகள் வீடு-சொத்து மற்றும் நிலத்தின் மேல் உ;ள்ள உரிமை பிரச்சனை வழக்குகளோ அல்லது மணஉறவுகள் பிரிந்துவாழவிரும்பிய வழக்குகளே ஆகும். ஆக எதிர்ப்பு அதிகம் வருவது உடன் சம்பந்தப்பட்ட பரிச்சயமான ஒன்றாக வளர்ந்த உறவுகளிடமிருந்தேவருகிறது. எதிர்ப்புகள் எதிர்ப்பவர்கள் நமக்கு உறுதுணையாகயிருக்க வேண்டியவர்களே எதிர்முனையாக இருக்கின்றர்கள்.

ஆலயத்தில் பங்கு தந்தைக்கு அதிகமாக பங்குபேரவையே எதிர்ப்பாகயிருக்கலாம்……
தலைமைஆசீரியருக்கு சில ஆசிரியர்கள் எதிர்ப்பாகயிருக்கலாம்…….
உடன் உழைக்கின்ற அடுத்தசீட்ல குட்மார்னிங் சொல்றவர் எதிரியாக அமையலாம்…

உறுதுணையாருமில்லை எதிர்முனையாகயிருப்பவர்களால் நான் எதையும் தொடர்ந்துசெய்ய இயலவில்லை என்று நாம் முடித்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு படுத்துக்கொள்ளும் நம் பணிகளுக்கு உறுதுணை நானே தொடரட்டும் பணிநிரம்பிய பயணமும் முயற்சிகள் அனைத்தும் என இன்றை இறைவார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.

முதல்வாசகத்து கதாநாயகர் இறைவாக்கினர் ஏரேமியா அவர்கள். கி.மு 627 லிருந்து கி.மு587 வரை நாற்பது ஆண்டுகளாக ஆற்றுகின்ற பணியிலே வழக்கமான யூதா அரசுபகுதிகளை கடந்த மற்ற புறஇனத்து மக்களுக்கும் தன் போதனையை அமைத்துக்கொள்கிறார். யாவே இறைவனை மறந்து புறக்கணித்த அழைக்கப்பட்ட இஸ்ராயேலை கண்டித்து உங்களை கடந்து இறைவன் புறஇனத்தாருக்கு உரிமைவாழ்வை வளங்களை நலன்களை தருவார் என்ற பொழுது தாக்கப்படுகின்றார் தன் உடன் இருந்தஉறவுகளால் அரசுகளால். எதிர்ப்பை கண்டு தயங்கியபொழுது இன்றைய இறைவார்த்தைகள் நான் உன்னை கருவறைதொடக்கத்தில் அறிந்து உன்னை உருவாக்கி எந்நாளும் உடன் உறுதுணையாகயிருக்கின்ற இறைவன் தொடரட்டும் உன்பயணமும் பணியும் என நினைவுபடுத்தி உறுதுிபடுத்துகிறார். அரண்போன்ற நகர்-இரும்புத்தூண் மற்றும் வெண்கலச்சுவர் என்பதுபோன்றது என்பாதுகாப்பு எனவெளிப்படுத்துகிறார். இது எதுவும் உன்னை நிறுத்தாது எனச்சொல்கிறார். எந்ததீமையும் உன்னை வெற்றிகொள்ளா என்று அழைக்கப்பட்ட அபிரகாம்-மோசே-ஏசா என்ற தலைவர்கள் இறைவாக்கினர்கள்-நீதிபதிகள்-அரசர்கள் அனைவரும் பல்வேறு எதிர்ப்பை கண்டு பின்திரும்பியபோது இவ்வாறே உடனிருப்பை உறுதுணையை அறிவுறுத்துகிறார்.

நாம் நாயகர் இயேசுகிறிஸ்து நற்செய்தியிலே சந்திக்கின்ற எதிர்ப்பு சொந்தங்களிடமிருந்தே. வழக்கமான தொழுகைகூடம் இன்று தன்னை எதிர்க்கும்கூட்டமாகமாற இன்று நிறைவேறிட்டு என்பதை மன்னிக்கவும் நான் திரும்பவும் என் தந்தையோடு தச்சுத்தொழிலுக்கு திரும்ப செல்கிறேன் என சொல்லாமல் எதிர்ப்பு என்னை நிறுத்தாது என தொடர்ந்து நடந்து சென்றார் தொடர்பணிக்கு எனபடிக்கின்றோம் தந்தையின் உடன்பிரசன்னம் உறுதுணையையும் அவர் என்றும் மறக்கவில்லை.

எலியா மற்றும் எலிசா இறைவாக்கினர்கள் எவ்வாறு தங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சாரிபாத் கைம்பெண்ணால் மற்றும் அமானிய நாமானால் ஏற்றுக்கொள்ளப்பட்டு யாவேஇறைவனை இறைவாக்கினர்கள் மூலமாக அரவணைக்கிறார்களோ அதுபோலவே தன்னையும் புறஇனத்தவர் மற்றும் அரவணைக்க தயாரகயிருக்கும் அனைவருக்கும் என்பணிதொடரும் என்றும் எதுவும் நிறுத்தாது என்கிறார். நாமான் சொன்னது இப்பூமியில் இஸ்ராயேலின் கடவுளை தவிரவேறுஏதுமில்லை என்பதே. இங்கு சிமியோனின் வார்த்தைகளான என் கண்கள் மீட்பை கண்டுகொண்டன…..இதுவே புறஇனத்தாருக்கு வெளிப்படுத்தும் ஒளி நம் நினைவுக்கு வருகின்றன.

மாவீரன் நெப்போலியன் தன்படைகளில் குறைவான எண்ணிக்கையிருந்து எதிர்முனையில் மிக அதிகமான எண்ணிக்கையிருந்தும் எவ்வாறுவெற்றிகொள்ள முடிந்ததென்றால் நெப்போலியன் எதிரிகளை எதிர்படைகளை போர்களத்தில் வெற்றிகொள்ளவதற்று முன்பாக தன் மனதில் எண்ணத்தில் வெற்றிகொண்டான் என்று.

இயேசுசபையின் புகழ்பெற்ற அருட்தந்தை பேதுரு அருபேவை நீங்கள் எவ்வாறு பல்வேறு எதிர்ப்புகள் உங்களை அணுகினாலும் ஒன்றும் பாதிக்காதவாறு பணிசெய்யஇயலுகிறது என்று கேட்டபொழுது அவர் குறித்துகாட்டி சொன்னது. இதோ என் அறையில் நெயில் ஆம்ஸடாராங் நிலாவிலிருந்து பூமியை எடுத்தபடம் எனக்கு கொடுத்ததை நான் எதிர்ப்புகள் என்னை சோதிக்கும்பொழுது உற்றுநோக்குவேன் எனக்குநானே சொல்லிக்கொள்வேன் இப்பூமியே நிலாவிலிருந்து இவ்வளவு சிறிதாயிருந்தால் என் பிரச்சனைகள் எதிர்முனை எதிர்ப்புகள் ஒன்றிமில்லை மிக மிகச்சிறியது உறுதுணையாகயிருக்கின்ற என்இயேசுவோ மிகமிகப்பெரிவர். என்ற தன் அனுபவத்தை பகிர்ந்தார். உறுதுணையாயிருக்கும் இயேசுவை பற்றுவோம் எதிர்முனை எதிர்ப்புகள் நம் பயணத்தை முயற்சியை நிறுத்தமுடியாது. டார்ச்சர்களுக்கு நாம் டீச்சர்ஆவோம்-ஆமென்.