இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் வாரம்

எனது நேரம் சரியில்லை!...எனது நேரம் வரவில்லை!

எசா62:1-5
1கொரி12:4-11
யோவா2:1-11



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர, சகோதிரியரே திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இறைவனின் கரம் நம்மை தொடர்ந்து வழிநடத்திட இன்றைய திருவழிபாட்டில் நம்மை இணைத்துகொள்வோம். அனைத்து காலங்களும் நேரங்களும் தருணங்களும் நல்லவைகளே. அவைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மறுப்பதற்கும் நம் மன நிலைகளும் எண்ணங்களுமே காரணம.; இறைவன் தொடக்கநூலில் படைத்த அனைத்தையும் நல்லதென கண்டார் இந்த நன்மைத்தனத்தை உறுதிப்படுத்தும் இன்றைய இறைவார்த்ததைகள் நம் சிந்தனைகளை புதுப்பிக்கட்டும்.

அவனுக்கு நேரம் சரியில்லை....என் மகனுக்கு நேரம் இன்னும் வரவில்லை ஆணி போய் ஆவடி வந்து சனி தீர்ந்தபிறகு என் மகன் ஜகஜோதியா தானா மேல வருவான் இப்ப அவன் எப்படியாவது போறான் என்ற சமீபத்திய திரைப்படத்தில் ஒருதாய் தன் மகனை காப்பாற்றிக்கொள்ள சொல்லும் வசனம் நம் அன்றாட வாழ்வில் உள்ள இத்தகைய எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.

சொந்த வீடு வாங்க எனது நேரம் இன்னும் வரவில்லை.... திருமணம் முடிக்க என்நேரம் இன்னும் வரவில்லை.... பங்குகுழுக்களில் ஈடுபட்டு செயல்பட எனது நேரம் இன்னும் வரவில்லை...முறிந்து இருக்கும் உறவுகளோடு இணைய முயற்சிக்க எனது நேரம் வரவில்லை...அடிமையாகியிருக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர எனது நேரம் இன்னும் வரவில்லை... இவ்வாறு ஒரு நல்ல செயலை அல்லது நல்ல காரியத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு அல்லது தவறான பழக்கத்தை மறுக்காமல் தொடர்வதற்கு நாம் சொல்லும் காரணங்களும் சாக்குபோக்குகளுமே நேரம் சரியில்லை மற்றும் நேரம் இன்னும் வரவில்லை என்பன. இவ்வாறு சொல்லும்பொழுது மறைமுகமாக நான் செய்ய செயல்பட முயற்சிக்க விரும்பவில்லை அல்லது தயங்குகிறேன் பயந்துயிருக்கின்றேன் என்பனவே மறைந்துயிருக்கும் காரணங்களாகும்.

இன்றைய வாசகங்களின் இறைவார்த்தைகள் நேரம் தருணம் அனைத்தும் இறைவனிடமிருந்தே வருபவை அவை நன்மைநிறைந்தவை என்று காண நம்ப அணுக நம்மை அழைக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் யோவான் தன் நற்செய்தியின் 7 அடையாளங்களில் அருங்குறிகளில் முதன்மையாக சொல்வதே கானாவூர் திருமணவிழா நிகழ்வு ஆகும். அருங்குறிகள் அடையாளங்கள் வெளிப்பாடுகளின் நிகழ்வுகளே. எத்ததைகய வெளிப்பாடு என்பதை இறைவனின் அவரின் ஆசீரின் மாட்சிமையின் முழுமையின் நிறைவின் மற்றும் உண்மையின் வெளிப்பாடு நமக்கு தெளிவாக்குகிறது. இயேசுவின் மாட்சியின் நேரம் மகிமையின் நேரம் வெளிப்படுத்தபடுகிறது. மரியாள் அந்த நன்மையின் நேரத்தை இயேசுவுக்கு முழு நம்பிக்கையோடு சுட்டிக்காண்பி;க்கிறாள். யூத பழக்கத்தில் திருமணவிழா 7நாட்கள் நடைபெறும் உறவினர்கள் அனைவரும் வந்து செல்வர் எனவே அனைத்து நாட்களிலும் அப்பமும் நீரும் மற்றுமு; இரசமும் குறையில்லாமல் நிரம்பியிருக்கவேண்டும் குறைபாடிருந்தால் அது திருமணவீட்டாருக்கு சிறப்பாக மணப்பெண் மற்றும் மணமகனுக்கு கிடைக்கும் பெரிய அவமானம் ஆகும். இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்பட குறைகளை கூர்ந்து கண்டுகொண்டு அதைஎளிதாக தீர்க்கும் அன்னை மரியாள் இரசம் தீர்ந்துவிட்டது என மகனுக்குகூற அவர் சொல்லும் தயக்கமான பதில் எனதுநேரம் இன்னும் வரவில்லை என்பதே. மரியாள் இயேசுவை உற்றுநோககி அவர்சொல்வதுபோல் செய்யுங்கள் என்றுரைத்தது உனது நேரம் இதுதான் வெளிப்பாட்டின் நேரம் நன்மையின் நேரம் அருளின் தருணம் என உறுதிப்படுத்த தண்ணீர் இரசமானது நிறைவை ஆசீரை பெற்று தந்தது. மரியாள் கல்வாரியில்கூட இதோ உன் நேரம் தருணம் என இயேசுவின் மீட்பு மரண நேரத்தை மாட்சியின் நேரம் என உடனிருந்து உணர்த்துகிறார். மரியன்னையின் மற்றும் இயேசுவின் உடனிருப்பு நமக்கு அத்தருணங்களை பெற்றுத்தரட்டும். முதல் வாசகத்தில் கி.மு578ல் பாரசீக அரசன் எருசலேமை புதுப்பிப்போம் மீண்டும் கட்டி எழுப்புவோம் வாருங்கள் என்று பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ராயேல் மக்களை அழைத்தபோது அவர்கள் எருசலேம் முடிந்துவிட்டது அழிந்துவிட்டது கோயிலும் நகரமும் மீண்டும் மீண்டும் எங்களின் இடிந்துபோன தகர்ந்துபோன வாழ்க்கையையுமே நினைவுபடுத்துகின்றன மேலும் அழைத்து தேர்ந்தெடுத்த இறைவன் எங்களை கைவிட்டுவிட்டார் என்ற எண்ணத்தையே கொடுக்கின்றன எனவே அழிந்திருக்கும் எருசலேம் நகரின் சுவர்களையும் கோயிலையும் பார்க்க நாங்கள் விரும்பவில்லை எங்கள் நேரம் இன்னும் வரவில்லை என தயங்கி பயந்து மறுத்து ஒதுங்கியபொழுது எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனி;ன் நன்மையான நம்பிக்கையான நேரத்தை தருணத்தை ஏற்றுக்கொள்ள புதுஎருசலேமை காண அழைப்பே இந்த வாசக வரிகளாகும். எருசலேமே! நீபாழ்பட்டது – அழிந்துபோனது – நம்மிக்கை இழந்துபோனது என அழைக்கப்படமாட்டாய் மாறாக இறைவனின் விருப்பத்திற்குரிய மணிமகுடமாக கருதப்படுவாய். இறைவன் மணமகனாக மற்றும் எருசலேமையும் உங்களையும் மணமகளாக பிரியமுடன் நம்பிக்கையுடன் அன்போடு நோக்குகிறார். இது இறைவனி;ன் நேரம் நன்மையின் நேரம் மாட்சியின்நேரம் எருசலேமை நோக்கி நம் கண்கள் அமைய நாம் பயணிப்போம். நாங்கள் தேர்தெடுக்கப்படா மக்கள் என எருசலேமை வெறுப்பாக பார்த்த புறஇனத்தவர்களும் எருசலேமை அணுகிவருவார்கள். எருசலேமின் வெற்றிக்கு சாட்சிபகர்வார்கள் இதுவே நன்மையின் - வெற்றியின் - நம்பிக்கையின் மாட்சியின் நேரம் என்ற செய்தி நம்மில் அனைத்து நேரங்களையும் நல்ல மற்றும் நன்மையின் நேரங்களாக காண அணுக துணையாகயிருக்கட்டும்.

அருட்தந்தை காரல்ஸ் வால்ஸ் தன்னுடைய அனுதின வாழ்வை போற்றுவதில் என்ற புத்தகத்தில் பின்வரும் கதையை எடுத்துரைக்கிறார். ஜான் தன் மனைவியின் பிறந்தநாளில் அவளுக்கு நல்லதொரு சேலையை வாங்கி அழகாகஅதை தயாரித்து அன்பளிப்பாக பரிசாக கொடையாக கிறிஸ்துபிறப்பு விழாவிற்கு கொடுத்து அதை அணிந்து கொள்ளுமாறு சொல்ல அவர் மனைவி சொன்ன பதிலே அதற்கு நல்ல நேரம் ஒன்றும் வரவில்லை...என்பதே. பலமுறை வெளிநாடுகளுக்கு – புனித நாடுகளுக்கு சென்றபொழுது ஆர்வத்தோடு அச்சேலையை எடுத்துவருவாள் ஆனால் நேரம் வரட்டும் என அதை பயன்படுத்தாமல் அணியாமல் வைத்துவிடுவாள். இவ்வாறு பல பயணங்கள் பல குடும்ப நிகழ்வுகள் என நிகழ்ந்தேறினாலும் அவள் அந்த புதிய சேலை அணிவதை 9வருடங்கள் காலம் தாழ்த்தி வந்தாள். ஒருநாள் மேரி கீழே விழுந்து திடீரென மாரடைப்புக்கு ஆளாகி...இறக்க நேரிட ஜான் சொன்னது நீ நேரம் வரவில்லை என காலம் தாழ்த்தினாய் இன்று 9வருடங்கள் நீ தட்டிக்கழித்த சேலை உன் உயிரற்ற உடலுக்கு சொந்தமானது என அடக்கசடங்கிற்கு அச்சேலை பயனபடுத்தபட்டது.

நல்ல நேரத்திற்கு காலம் தாழ்த்தவோ...முயற்சி எடுப்பதில் சாக்குபோக்கு சொல்லவோ கூடாது.

நேரம் வந்து விட்டது....உறவுகளை ஒன்று சேர்க்க. நேரம் வந்து விட்டது...ஆலயகுழுக்களில் ஈடுபட்டு செயல்பட....கானாவூர் திருமணத்தில் செயல்பட்ட அன்னை மரியாளும் இயேசுவும் நம் குடும்பத்தில் சமூகத்தில் உடனிருந்து நம்வாழ்வின் நன்மையின் நேரங்களை நமக்கு அடையாளம் காட்டுவார்களாக -ஆமென்.