இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா

முழுக்குபெறஅல்ல ………….. முழுபிள்ளையாக!!!

எசாயா 40:1-5, 9-11
தீத்து 2:11-14; 3:4-7
லூக்கா 3:15-16, 21-22



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நாளில் உங்கள்அனைவரையும் இத்திருவிருந்திற்கு அன்போடு அழைக்கின்றேன். நம்முடைய சமத்துவ சமூக பங்கேற்பில் நம் திருமுழுக்கு நிகழ்வை நம்முன் கொணர்ந்து நாம் அன்று பெற்ற திருமுழுக்கு அழைப்பை இன்றைய நாளில் புதுப்பித்துக்கொள்வோம். இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகள் என்ற உணர்வை எந்நாளும் நம்மில் தக்கவைத்து செயல்படுவோம்.

என்ன கோயில்பக்கம் உங்களை பார்த்து பலமாதங்கள் ஆகிவிட்டன. வெளியூருக்கு போயிரிந்திங்களா என்று கேட்டதற்கு அந்தோணிசாமி சொன்னபதில். இல்லை பப்பாதர் நான் இயேவுக்குள்ள போயிட்டேன் என்று சொன்னது எனக்கு புரியவில்லை. பல நாட்கள் கழித்து எனது புரிதலுக்குஉள்ளானது. இதே போல பலர் அதிகநாட்கள் ஆலயத்திற்கு வராமல் வேறு செபகூட இடங்களுக்கு செல்லும் பொழுது சொல்கின்ற வார்த்தை.நான் இயேசுவுக்குள்ள வந்துட்டேன். நான் மீட்படைந்திட்டேன். நான் ஆண்டவரை கண்டுகொண்டேன். ஊழியக்காரராயிட்டேன் என்ற வார்த்தைகளை பதில்களாக கேட்கும்பொழுது அவர்கள் திருமுழுக்கின் முக்கியதுவத்தை புரிந்துகொள்ளவில்லை மற்றும் அவர்களின் சமூகமும் குடும்பஉறவுகளும் ஒர் உதாரணமாக வாழ்ந்து சாட்சிபகரவில்லை என்பதுமே காரணமாகும். பங்குகளிலும் அருட்பணியாளர்கள் சிலரும் மக்களை மையப்படுத்திய வழிபாடு சந்திப்புகள் நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொள்ளாததும் தங்களின் அழைப்பை பிற இடங்களில் தற்காலிகமாக தேடுவதும் நவீன வாடிக்கையாகிவிட்டது.

இன்றைய இயேசுவின் திருமுழுக்கு திருவிழா மற்றும் திருவிழா நிகழ்வு மற்றும் இறைவார்த்தைகள் நாம் ஒரே திருமுழுக்கு பெற்ற ஒரே விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒரே இயேசுவை பின்பற்றும் யாராலும் மாற்றஇயலா இறைவனின் அன்பார்ந்த உரிமை பிள்ளகைள் என்ற தகுதியை அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. ஆக ஒரே பிறப்பு ஒரே விசுவாசம் ஒரே திருச்சபை ஒரே திருமுழுக்கு என்பதை உறுதிப்படுத்துகிறது.

நீ என் அன்பார்ந்தவன்…அன்பார்ந்தவள்! திருமுழுக்கை முதலில் உருவாக்கியது திருமுழுக்கு யோவானா? அல்லது இயேசுவா? என்றகேள்விக்கு உரிய உண்மையான பதில்: யோவானோ அல்லது இயேசுவோ திருமுழுக்கை உருவாக்கவில்லை. மாறாக யூதர்கள் மத்தியில் நூற்றாண்டுகளாக ஒப்புரவுசெயலாக பாவத்தின் கழுவாயாக பழக்கத்திலிருந்தது. கி.பி 70ல்எருசலேம் வீழ்ச்சிவரை யூதமக்கள் தண்ணீர் சேருமிடம் என்ற ஒரு குளத்திலே ஆன்மிக சுத்தப்படுத்துதல் என்ற சடங்கின் மூலம் தங்கள் பாவங்களிலிருந்து கறைகளிலிருந்து சுத்தப்படுத்திக்கொண்டனர். ஆண்கள் ஒய்வு நாளிலும் பெண்கள் மாதத்திற்கு ஒருமுறையும் இச்சடங்கைசெய்தனர். யூதமதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும் இச்சடங்கானது பின்பற்றபட்டது. பராம்பரிய யூதர்கள் இன்றும் இப்பழக்கத்தை பின்பற்றுகின்றனர். யூதர்களின் இச்சடங்கானது தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அர்த்தமில்லாமல் பாவவாழ்க்கை தொடர்ந்தது. இதுஒருவெறும் சடங்காகவே இருந்தது.

யூதமதத்தை ஏற்றுக்கொள்ளும் புறஇனத்தவர் அனைவரும் சுத்தப்படுத்திக்கொள்ள இந்த மனமாற்ற முழுக்கில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும. யூதர்கள் ஏற்கனவே தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் புனிதநிலையில் இருப்பதால் அவர்களுக்கு இச்சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்கு தேவையில்லை என் நிலைக்கு சவாலாக திருமுழுக்கு யோவானின் புதிய அழைப்பும் திருமுழுக்கும் அமைந்தது. இது யூத வரலாற்றில் உருவான முதல் பெரிய மாற்றம் ஆகும். தங்கள் பாவங்களை உணர்ந்து பெற்ற திருமுழுக்கு அர்த்தமுள்ளதாகியது. என் அன்பார்ந்த மகன் – மகள் நீ என்ற அழைப்பும் அறிவிப்பும் நம்மை இயேசுவின் பாதையில் நடக்க உரிமையை பெற்றுகொடுக்கிறது.இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளாக இயேசுவின் சகோதரஉறவு குடும்பத்தில் நம்மை இணைக்கிறது.
அன்று இயேசுவை இறைத்தந்தை நீரே என் அன்பார்ந்த மகன் என்று அறிக்கையிட்டு வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்டதுபோல நாம் திருழுமுக்குபெறும்பொழுது சொல்லப்படுகின்ற நான் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் திருமுழுக்கு கொடுக்கிறேன் என்பது நாம் இறைவனின் அன்பார்ந்த பிள்ளை நீ என்ற ஏற்றுக்கொள்ளுதலை வெளிப்படுத்துகிறது. என் குழந்தை பத்துமணிநேரம் இருதய அறுவைசிகிச்சைக்கு செல்லஇருப்பதால் இறைவனின் அன்பார்ந்த குழுந்தையாக செல்லவிரும்புகின்றோம் என்ற பெற்றோரின் வேண்டுதல் மருத்துவ ஆன்மிகபணியில் பலதருணங்களில் என்விசுவாசத்தை புதுப்பித்திருக்கிறது.
நீ இயேசுவை தாங்கியிருக்கின்றாய்! திருச்சபை வரலாற்றின் தந்தையர்கள் சொல்வது பாவ – பலவீனமான மற்றும் புறக்கணிப்பட்ட நிலையில் இருந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே இயேசு யோர்தானில் இறங்கி திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கின்பொழுது நம்மீது அளிக்கப்படும் எண்ணெய் நாம் இந்த மீட்பின் எண்ணெயினால் இயேசுவோடு அடையாளப்படுத்தப்பட்டு அவர் தரும் மீட்பினால் அவரை நாம் தாங்கிச்செல்கின்றோம். நாம் அவருக்குரியவர்களாகிறோம். தொடர்ந்து நமக்கு தரப்படும் பெயரும் இறைவன் நம்மை பெயர் சொல்லி உரிமையோடு அழைக்கிறார். நம்மில் எத்தனைபேருக்கு நமது பெயரின் அர்த்தம் தெரியும். நம்மில் எத்தனைபேர் நம்பெற்றோரை நம் ஞரன பெற்றோரை நமக்கு தரப்பட்ட பெயரின் காரணத்தை கேட்டு அறிய முயற்சிசெய்திருக்கின்றோமா?
நீ பங்கெடுக்க பணியாற்ற துவங்குகிறாய்! திருமுழுக்கு பல துவக்கங்களுக்கு மையமாக அமைகிறது. அவைகளில் முக்கியமானது திருமுழுக்கின்வழியாக நாம் இயேசுவோடு இயேசுவின் பணியில் பங்கெடுக்க பணியை துவக்க அழைக்கப்படுகின்றோம் இது அழைப்பை தொடர்ந்த சிறப்பாக முக்கியமான பொறுப்பும் ஆகும். நோவா வெள்ளத்திலிருந்து மீட்க்கப்ட்டது ஒருபணியின் துவக்கம் ஆகும். மோசே பாறையில் தண்ணீர் பெற்றது ஒரு பணியின் துவக்கம் ஆகும். இஸ்ராயேல் மக்கள் செங்கடலை கடந்தது விடுதலையின் மீட்பின் நிகழ்வு அவர்கள் பணியின் துவக்கமுமாகும். முழுக்கு என்பது நீரில் மூழ்குவது கரைவது கரைத்துக்கொள்வது ஒன்றாவது என்ற கிரேக்கமொழியின் அர்த்தம் ஆகும்.. திருமுழுக்கின்பொழுது உச்சந்தலையில் அளிக்கப்படும் கிறிஸ்மா எண்ணெய் நாம் இயேசுவின் அரச குருத்துவ மற்றும் இறைவாக்கின பணியில் பங்கெடுக்க பணியாற்ற அழைக்கப்டுகின்றோம் என்ற உரிமை உறுதிமொழியைகொடுக்கிறது. இயேசு யோர்தான் நீரில் தன்னை கரைத்துகொண்டது மக்களின் பணியில் தன்னைமுழுமையாக கரைக்க இணைத்துக்கொள்ளவிரும்பியதன் முன்உறுதிச்செயலாகும்.

ஒவ்வொருமுறை ஆலயத்திலோ வெறுஎங்கிலும் தீர்த்தத்தை எடுத்து நெற்றியில் இருத்தி சிலுவை அடையாளம் வரைவது நாம் இறைவனின்அன்பார்ந்தவர்கள் – நாம் இயேசுவை தாங்கியிருக்கின்றவர்கள் – இயேசுவின் பணியில் பங்கெடுக்க சாட்சிபகரவேண்டியது நமது அன்றாட கடமை என உணர்ந்து மகிழ்வோம் சாட்சியாவோம்-ஆமென்.