இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருவருகைக்காலம் நான்காம் வாரம்

இணைந்திட.... இதமாகிட.......!

மீக் 5:1-4,
எபி 10:5-10
லூக்1:39-45



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதார சகோதிரியரே சிறார்களே இளைய உள்ளங்களே
திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு மற்றும் கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு வெகுஅருகாமையில் இருக்கும் நம்மை இன்றைய திருவழிபாடு மற்றும் இறைவார்த்தைகள் மற்றவரில் மற்றவரின் நிலையில் நம்மை இணைத்து அவர்களுக்கு இதமாகிட அழைக்கிறது. நம் அருகாமையில் அடையாளம் இழந்தவர்களோடு இணைந்து அவர்களுக்கு இதமாகி இறையன்பை பெற்றுதர இணைவோம் இன்றைய திருவிருந்து கொண்டாட்டத்தில்.

டெல்லியில் நடந்த கற்பழிப்பு நிகழ்வு பாதிக்கப்பட்ட உள்ளங்களின் போராட்டம் மனிததன்மை மறைந்ததை காண்பிக்கிறது. தூத்துக்குடியில் பள்ளிக்கு தேர்வுக்குச்சென்ற 13வயது மாணவி கொடூரமாக மாயமானமுறையில் கொல்லப்பட்டது மனிததன்மை இழந்த சமூகத்தை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் கனடிக்கெட்டில் நியு டவுன் பள்ளியில் கடந்தவெள்ளி 14ம்தேதி ஆடம் என்ற 20வயது இளைஞன் பகலில் 20பிஞ்சு சிறார்கள் உள்பட 6பெரியவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றது மனித மாண்பு கொல்லப்பட்டதை சொல்கிறது. 20சிறார்கள் 10வயதுட்குட்பட்டவர்கள். பாவம் அறியாதவர்கள் வாழவேண்டியவர்கள் அன்பே உருவானவர்வர்கள்.

இவைகளெல்லாம் மற்றமனித மனதை உணர்வை புரிய ஏற்றுக்கொள்ள விரும்பா உள்ளங்கள் தங்கள் வெறித்தன ஆசையை மிருகஉணர்வுக்குஆளாக்கி அதை நிறைவேற்ற பல உள்ளங்களை பாதிப்புக்குள்ளாகுவதை சொல்கிறது அதே சமயம் பாதித்த மனிதங்களோடு இணைந்து அவர்களுக்கு இதமாகிடும் நல்ல மனங்கள் இருப்பதால் மனிதநேயத்தை மதிப்பை மாண்பை தக்கவைக்க மனிதம் போரடுவதையும் நமக்கு உணர்த்துகிறது. அமெரிக்க பள்ளி சம்பவத்தில் இறந்த ஆசீரியர்கள் சிறார்களை கட்டிஅரவணைத்து பாதுகாத்து இறந்தவிதம் அவர்கள் எவ்வாறு அவர்களை மாணவசிறார்களாகபார்க்காமல் மாறாக தன்பிள்ளைகளாக பாவித்ததை நம்முன்வைக்கிறது. தீயணைப்பு வீரர்கள் மற்ற தன்னார்;வதொண்டர்கள் தங்களை- தங்கள்நேரத்தை அந்த சமூகத்தோடு இணைத்துகொண்டவிதம் நிச்சயம் பாதிக்ப்பட்டவர்களுக்கு தேவையான ஒருஇதம் எனலாம்.

இறைவன் மனிதமாக மனித்தோடு இணையவந்தது மீட்பு –மகிழ்வு –அமைதி என்றஇதமாகும் உணர்வுகளை கொடுக்கவந்ததை குறிக்கிறது. இன்றைய முதல் வாசகத்pல் இறைவாக்கினர் மீக்கா கிறிஸ்துபிறப்புக்கு 250வருடங்களுக்கு முன்பு கி;.மு8ம் நூhற்றாண்டின் பிற்பகுதியில் பிரிந்திருந்த நாடு சமூகத்தை இணைக்க அவர்களோடு ஒன்றாக இணைந்து அவர்களுக்கு இதமாகவருவார் என்பதை எடுத்துரைக்கிறார். எப்பராத்தா எனப்படும் பெத்லகேம் என்பது பெத்லகேம் புதுபெயர் என்பதாகும். இவைகளுக்கு பொருள் அப்பத்தின் வீடு-இல்லம் என்பதாகும். இறைவாக்கினர் மீக்கா ஒருவரே தெளிவாக குறிப்பாக மெசியா பிறக்கஇருக்கும் இடத்தை பெயரிட்டு வெளிப்படுத்துகிறார். தாவீது மற்றும் அவர்தந்தை பிறந்ததும் இந்தஇடமே. ஆனால் தாவீது அரசனுக்குபிறகு நாடுகள் வடக்கு மற்றும் தெற்காகபிரிந்து மக்கள் மனிதநேயத்தை மறந்து பிரிவினால் பாதிக்கப்பட்டிருந்தபொழுது நாம் நிமிர்ந்து பார்த்த தாவீதுகுலத்திலே மெசியாஉதயமாவார் உங்களுக்காக உங்களில் இணைய உங்களுக்கு இதம்தர வருவார் என எடுத்துச்சொல்கிறார். இதுவே nசியாவின் வாக்குறுதியின் முழுமையான நிறைவேற்றுதல் எனலாம்.

நற்செய்தியிலே 14வயது இளம் கன்னிப்பெண் 50மைல்களை நான்கு நாட்களாக கடந்து யூதேயா மலைப்பகுதிக்குசெல்கிறார். அவருக்கும் போராட்டம் மற்றும் பல்வேறு சிந்தனைகள் இருந்தன ஆனால் தன்னைவிட பல்வேறு மனப்போரட்டத்தில் தத்தளித்த எலிசபெத்தோடு இணைகிறார். அவருக்கு இதமாகிறார். எனவே மரியாவின் மனதை உணர்வுகளை ஆசீர்பெற்றவர் மற்றும்பேறுபெற்றவர் என்ற வார்த்தைகள் மூன்று பயன்படுத்தப்பட்டு தெளிவாக நமக்குச்சொல்கிறது. இவைஅமைதியை அவைணைத்து - மீட்பை தமதாக்கி – மனிதநேயத்தை உள்ளடக்கி இவைகளையெல்லாம் சுமந்ததால் அவர் ஆசிர்பெற்றவரே. ஏலிசபெத்தை அரவணைத்து அந்த ஆசீரால் அவரோடு இணைந்து அவரையும்ஆசீராக்கிறார்.

அமெரிக்க சம்பவத்தில் வி;க்கி சோடோ என்ற27வயது ஆசிரியை தன் வகுப்பில் 7பிள்ளைகளை காப்பாற்றி 6 பேரோடு கொல்லபட்டது மற்றும் அவரின்நட்பு உள்ளங்கள் சொன்னது விக்கி தன்பள்ளி சிறார்களை மாணவஉள்ளங்களாக அல்ல மாறாக தன்சொந்தகுழற்தைகளாக தன்வானதூதர்களாக பாவித்தாள் அவர்களோடு இணைந்திருந்து இதமாகிசெயல்பட்டாள் என்பதாகும். இணைவது மற்றும் இதமாவது பிரிந்திருக்கும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பல்வேறு உள்ளங்களோடு இணைவது அவர்களாவது அதன்மூலம் அவர்களுக்கு இதமாமாவதாகும். இது இறைவன் அவர்களில் இணந்து அவர்களுக்காக அவர்களோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

மீக்கா பிரிந்திருக்கும் மக்களைஅரவணைக்க வந்து அவர்களோடு இணைந்து இதம்தர வரஇருக்கும் மெசியாவை எடுத்துரைக்கிறார். மரியாவின் பயணம் மற்றும் எலிசபெத்தை அரவணைத்து அவரோடு நான்கு மாதங்கள் இணைந்திருந்தது ஒரு இதமான இறையனுபவத்தின் வெளிப்பாடு ஆகும்.

யாருக்கு என் அரவணைப்பு தேவை....
யாரோடு நான் இணையவேண்டும்... இதமாகவேண்டும்......
துயரத்தில்... பாதிக்கப்ட்டு....பிரிவைசந்தித்து யாருக்கு நான் ஆசீராகவேண்டும்....
யுhரை நான் குடிலுக்கு அழைத்துசெல்லவேண்டும்....
யாருக்கு நம்மில் நம்மேர்டு இணைய வந்துள்ள மெசியாவை காட்ட வேண்டும்-ஆமென்.