இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

ஆண்டவரில் ஆர்ப்பரி.......அடுத்தவரோடு; அகமகிழ்ந்திடு!

எசாயா 12:2-3,4,5-6,
பிலிப்பியர் 4:4-7
நற்செய்தி வாசகம்: லூக்கா 3:10-18கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதார சகோதிரியரே சிறார்களே இளைய உள்ளங்களே

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு மற்றும் இவ்வாரத்தில் இறைவனில் ஆர்ப்பரித்து நமக்கு அடுத்திருப்பவரிடம் அகமகிழ்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம். ஆர்ப்பரித்தலும் அகமகிழ்வும் இல்லையென்றால் அங்கு இறைவன் இல்லை மற்றும் பல்வேறு அழிவுக்குரிய செயல்கள் எண்ணங்கள் நம்மில் நிரம்பியிருக்கின்றன என்பதேபொருளாகும். அதிகாரம் - செல்வங்கள் - இன்பமிகு உல்லாச ஆசைகள் நம்மில் தங்கி நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. இவைகளிலிருந்து நம்மை சுத்தமாக்கி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்திட இன்றைய திருவழிபாடு நமக்கு துணையாக அமையட்டும். இயேசு சொன்னது போல இரண்டு கார் இருந்தால் ஒன்றை தேவையிலிருப்பவர்களுக்கு கொடுப்பாயா? என்ற கேள்விக்கு ஆம்கொடுப்பேன் என பதில் வந்தது. இரண்டு வீடு இருந்தால் தங்க இடம் இல்லாதவர்களுக்கு கொடுப்பாயா ஒருவீட்டை என்றவுடன் ஆம் கொடுப்பேன் என பதில் வந்தது. குளிரில் அணிய இரண்டு மேலாடை இருந்தால் ஒன்றை குளிரில் நடுங்குபவருக்கு கொடுப்பாயா? என்றவுடன் அதெப்படிமுடியும் என் கிட்ட இரண்டு மேலாடை இருக்கிறதே என்று.

அடுத்தவரில் அடுத்தவரோடு மனமகிழ தடையாயிருப்பது நம்மை சுயநலமாக்கும் தீராதபொருளாசைகள் மற்றும் இறைவனை மறந்திடும் தடுமாறும் மனப்பான்மையே ஆகும். உலகம் - சமூகம் - குடும்பம் தனிமனிதம் இவைகளெல்லாம் அழுக்காகி அழகிழந்து இருக்கிறது இவைகளுக்கு சுத்தம் தேவை திருவருகைக்காலம் இவைகளிலிருந்து சுத்தப்படுத்தி ஆர்ப்பரித்து அகமகிழ அழைக்கின்றது.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சமாதானத்தை களைத்து போர் எச்சரிக்கைகளில் அழகிழந்திருக்கின்றனர்..... மதத்தலைவர்கள் சகிப்புதன்மையை இழந்து வேறுபர்டுகள் என்ற நச்சைவிதைத்து ஆசிரிழந்திருக்கின்றனர்.....விஞ்ஞானிகளும் ஞானிகளும் மனிதநேயத்தை மறைத்து தங்களின் அதிகாரத்தைநிரூபித்து அறிவுக்கு அடிமையாகியிருக்கின்றனர்....உறவுகள் நம்மில் நன்மையைக்கான தவறி இன்பஉல்லாசஆசைகளிலில் மூழ்கி வாழ்வைதொலைத்திருக்கின்றனர். அனைவருக்கும் அனைவரிலும் அனைத்து துறைகளிலும் சுத்தம் தேவை. இச்சுத்தப்படுத்துதல் நாம் தேடிக்கொண்ட அழுக்குகளை அகற்றி மற்றும் நாம் இழந்த ஆசீர்களை நமக்குபெற்றுதந்து நாம் மீண்டும் ஆர்ப்பரிக்க அகமகிழ துணைபுரியட்டும்.

முதல் வாசகத்து நாயகர் இறைவாக்கினர் செப்பனியா அரசன் யோசியாவோடு இணைந்து மக்களின் வாழ்வை மேலும் எருசலேமை சுத்தப்படுத்த விடு;க்கும் அழைப்பை மற்றும் அவர்களின் சீர்திருத்த முயற்சிகளை எடுத்துரைக்கிறது. கி.மு 7ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சிசெய்த யோசியாவின் காலத்தில் இறைவாக்குரைத்து எழுதியவரே இறைவாக்கினர் செப்பனியா. இஸ்ராயேல் மக்கள் மோசே கற்பித்து வழிகாட்டிய ஒரே இறைவன் யாவேயைமறந்து சூழ்நிலையில் சுற்றியிருந்தவர்களை பின்பற்றி அசர்Pயர்களின் போர் மற்றும் பாபிலோனிய அடிமைத்தனம் இவற்றையெல்லாம் சந்தித்து சூரியன் - சந்திரன் -விண்மீன் போன்ற பலதரப்பட்ட தெய்வவணக்கங்களை பின்பற்றமுனைந்து எருசலேம் யாவே இறைவனை மறக்க துவங்கியபோது செப்பனியா நம் ஒரே இறைவன் யாவே நம்மத்தியில் இருக்கிறார் நம்மை சுத்தம் செய்கிறார் நம்பாவ அழுக்கான வாழ்க்கையை களைந்து நாம் இழந்த ஆர்ப்பரிப்பை அகமகிழ்வை நமக்குபெற்றுதருவார். எருசலேமும் அழுக்கிலிருந்து கழுவப்படட்டும் என்ற சிறப்பு சீர்திருத்த அழைப்பைத்தருகிறார்.

திருவருகைகாலத்து நாயகர் திருமுழுக்கு யோவான் செப்பனியாவின் பாதையில் அழுக்குகளை களைந்து சுத்தம் பெற யோர்தானிலிருந்து அழைக்கிறார் இன்றைய நற்செய்தியில் அவரை மூன்று குழுவினர் சந்திக்கவருகின்றனர். 1.மக்கட்கூட்டத்தினர் 2.வரிவசூலிப்போர் 3.படைவீரர்கள். ஏன் இக்குறிப்பிட்டவர்கள் எதற்காக யோவானை எருசலேமை விட்டு வெளியே தேடிவரவேண்டும். சுருக்கமாக சொன்னால் பல்வேறு நிறைவில்லா அழுக்கான பாவசூழ்நிலைகளிலிருந்து சுத்தம்பெற்று கழுவப்பெற்று அகமகிழ்வோடு ஆசீரோடு வாழ ஆலோசனைபெற்றுகொள்ளவே அவரைதேடிவந்தனர். விளக்கமாகபார்ப்போம். 1.மக்கட்கூட்டத்தினர்: யூத மத மட்டும் சமுதாய சட்டத்திட்டங்கள் அதன் தலைவர்களுக்கும் கட்டுபடகட்டாயப்படுத்தப்பட்டு மற்றும் உரோமை அரசு அதிகாரத்துக்கும் மத்தியில் இருவருக்கும் இடைNயு போராடியவர்கள் நிறைவான ஆசீர் மனமகிழ்வுக்காக மனிதநேயமற்ற சட்ட மற்றும் வழக்கங்களிலிருந்து தங்களை கழுவி சுத்தபடுத்த தூய்மையாக்க யோவானை தேடிவந்தனர். 2.வரிவசூலிப்போர்: உரோமைஅரசுஆளுநருக்காக தங்களுடைய சகோதரயூதர்களை எதிர்த்து வன்முறையில்; வரிவசூலித்தவர்கள். மக்களின் எதிர்ப்பை சாபத்தை தேடிக்கொண்டவர்கள் இவர்கள் சக்கேயுவைப்போல தங்களின் மக்களை அழுத்திய ஏமாற்றிய பாவநிலையை கழுவி சுத்தப்படுத்தி தூய்மையாக்கிக்கொள்ள யோவானை தேடிவருகின்றனர். 3.படைவீரர்கள்: வரிவசூலிப்போருக்கு துணையாக வன்முறையில் பாதுகாப்போடு செயல்பட அதேசமயம் துன்புறுத்தி மக்களின் எதிரியாககருதப்பட்டனர் நிறைவான மனதை தேடி உரோமை அரசுக்காக உழைக்கவிரும்பாது மக்களையும் மதிக்கவிரும்பி தங்கள் பழைய வாழ்வைகழுவி சுத்தமாக்கிகொள்ள யோவானை தேடிவருகின்றார்கள். மூன்று குழுவினரும் தங்களின் அழுக்கான வாழ்வை எண்ணங்களை செயல்களை கழுவி தங்களை தூய்மையாக்க யோவானை தேடிவருகின்றனர். ஏன் இவர்கள் எருசலேமைவிட்டு வெளியே யோர்தானை தேடிவருகின்றனர்? எருசலேம் குருக்களின் - தூயபலியின் - வழிபாட்டின் முக்கியஇடமாகயிருக்கவேண்டியது தூய்மையை இழந்து முறைகேடான நிலைமைக்குமாறி அநீதியைப்பற்றிகொண்ட சூழலில் அழுக்காகிபோன ஆண்டவனின் ஆசீரை மறந்த எருசலேமை விட்டு வெளியே வந்து தங்களை தாங்கள் பரிசுத்தமாக கருதிய எருசலேமின் தூய்மைவேண்டி திருமுழுக்கில் சுத்தம்பெற ஆசீர்பெற அழைத்த யோhர்தானில் யோவானை நாடிவந்தனர். அவர்களை திருமுழுக்கின்பிறகு யோவான் என்ன செய்ய சொன்னார். திருமுழுக்கு தூய்மைபெறுதல் பணிக்காக செயல்பாட்டிற்காக எனவே ஆர்ப்பரித்து அகமகிழ அழைத்த செப்பனியாவை தொடர்ந்து தேவையிலிருப்போருக்கு பகிர சொல்லி சமத்துவ சகோதர சமூகம் அமைக்க சொல்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு 24பேர் அடங்கிய இளையோர் குழுவிற்கு ஒப்புரவு அருட்சாதனத்தைபற்றி தியான உரையை பகிர சென்றிருந்தேன் பலர் பணியில் இருப்பவர்கள் சிலர் படித்துக்கொண்டிருப்பவர்கள். 21வயதிலிருந்து 32வயதுகுட்பட்டவர்களாக இருந்தனர். நான் எதிர்பார்த்த கேள்வி அவர்களிடமிருந்துவந்தது. ஏன் அருட்பணியாளரிடம் சென்று பாவஅறிக்கைசெய்யவேண்டும். இறைவன் நேரே என்னை மன்னிகின்றார் அதுஎனக்குபோதுமே என்றனர் சிலர். நீங்கள் தூய்மையாகயிருக்கிறீர்கள் மன்னிக்கப்பட்டீர்கள் மன்னிப்பு எங்கே உங்களை அழைத்துசெல்லும் என இறைவன் உங்களுக்கு சொல்கிறாரா! என்றவுடன் இல்லைஎன்ற பதிலே வந்தது. ஒப்புரவு அருட்சாதனத்தில் இNயுவின்இடத்தில் அருட்பணியாளரே உன் பாவங்கள் கழுவப்பட்டன மன்னிக்கப்பட்டன சமாதானத்தோடு மனமகிழ்வோடு பிறருக்கு பகிர செல்லுங்கள் என பதில்தருகிறார் என்றேன்.. ஒப்புரவு அருட்சாதனத்தில் அனைவரும் பங்கெடுத்து முகத்தில் மனமகிழ்வோடு காணப்பட்டனர்.

திருவருகைகாலத்தின் மூன்றாம் வாரத்தில் நம் அழுக்குகளை அதிகார ஆசை – அநீதியோடு செயல்படுதல் - சுயஆசைகளுக்காக நட்பை உறவை பயன்படுத்துதல் இத்தகையவைகளை கழுவி ஒப்புரவுஅருட்சாதனத்தில் தூய்மைபெற்று ஆசீரால் நிரப்பப்பட்டு ஆர்பரித்து அகமகிழ்ந்து பகிர்ந்து மெசியாவை காண இவ்வாரத்தில் நாம் அழைக்கப்படுகிறோம். எதிலிருந்து நான் கழுவப்படவேண்டும்..சுத்தம்பெறவேண்டும்.

.ஆண்டவரில் ஆர்ப்பரித்து..... அடுத்தவரோடு அகமகிழ்வோம்-ஆமென்.