இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின முப்பத்தி இரண்டாம் ஞாயிறு-

வற்றாத வரம்………… வெறுமையாக்குதலே….!!!

1 அரச 17:10-16, எபி 9:24-28, மாற் 12:38-44கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நம்மை மீண்டும் இறைவழிபாட்டில் ஒன்றிணைக்கும் நற்கருணை இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மில் தொடரும் பகிர்வு உணர்வு நம் வாழ்வை தொடர்ந்து பலப்படுத்தி நம் உறவுகளை புதுப்பிக்கின்றது. இது நம்மத்தியில் சமத்துவ சகோதரத்துவ சமூகங்களை நிலைநாட்ட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. பலவகைகளில் முகவரி இழந்த ஒவ்வொருவரும் நம் இலக்கு மக்களாக அமைந்து அவர்கள் வாழ்வு விடுதலை எழுச்சிகாண நம் ஆதரவுள்ள துணை நல்கவேண்டும். இப்பணி நம்மில் வெறுமையாக்கி கொடுக்கின்ற ஆற்றலை அதிகப்படுத்தட்டும்.

கபிரியேல் மைக்கேல் என்ற இரு சகோதரர்கள் வாரந்தோறும் ஞாயிறு திருப்பலிக்கு தவறாது பிரசன்னமாவது வழக்கமாகும். திருப்பலியைத்தவிர்த்து மற்ற எந்த குழுக்களிலும் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக்கொண்டதில்லை. திருப்பலிக்குகூட வெறும் கையோடு தான் அவர்கள் வருவதுண்டு காரணம் வசதியில்லை என்பதாலல்ல மாறாக அளவுக்கு அதிகமாக செல்வம் வசதிகள் அனைத்துமிருந்தும் அவர்களிடம் பிறருக்கு கொடுத்து உதவும் பண்பு இல்லாததே காரணமாகும். காணிக்கை தருணத்தில் உண்டியல் தங்கள் அருகாமையில் வரும்பொழுது கையைமூடியவாறு உண்டியலில் விட்டு வெளியே எடுப்பது அவர்களது ஏமாற்றும் வழக்கமாகியிருந்தது. அருகிலுள்ளவர்கள் இதை அறிநதிருந்தார்கள். நற்செய்தி அறிவிப்பு ஞாயிறான அன்று அவர்கள் இருவரும் திகைத்து தயக்கத்தோடு இருந்தார்கள் வழக்கமான ஏமாற்றுதலை செய்யஇயலாதவாறு காரணம் அன்று பங்கு தந்தை அருட்பணியாளரே உண்டியலை தட்டை கையிலேந்தி மக்களை நெருங்கி நன்கொடை உறைகளை பெற்றுக்கொண்டிருந்தார். இவர்க்ள அருகில் அருந்தந்தை வந்தவுடனே மைக்கேல் மயக்கமடைந்து கீழே விழ கபிரியேல் அவனை தூக்கி எடுத்துச்செல்ல இந்த இவர்களின் நடிப்பு மற்றவர்களின் கவனத்தை மாற்ற இவர்களிருவரும் தப்பித்துக்கொண்டனர். இது கொடுக்க விரும்பாதவர் எந்நிலையிலும் மனம் விருப்பபடமாட்டார் என்பதையும் வசதிகள் செல்வங்கள் பகிர்கின்ற கொடுககின்ற எண்ணத்தை உருவாக்காது என்பதும் விளங்குகிறது.

ஒருபுறம் இலவச தொலைக்காட்சியிலிருந்து கணணிவரை மக்கள் பணத்திலிருந்து கொடுத்து தங்களின் தங்கள் தனிப்பட்ட கட்சியின்பெயரை உயர்த்துவது நவீன கொடுத்தல் யுக்தி எனலாம். மறுபறும் தங்கள் கொடுத்தல் பாரட்டுதல் பெறவில்லை……

தங்களின் நன்கொடை பங்கு மாதந்தர இதழில் குறிப்பிடபடவில்லையே…
என்பதுபோன்ற தங்களை மையப்படுத்திய கொடுத்தல். மற்றும் மாற்றுத்தொகை பொருள்மாற்றிக்கொள்ளுதல் எங்கு எதைப்பற்றிக்கொள்ளலாம் அபகரித்துபெற்றுக்கொள்ளலாம் என்ற கொடுப்பதைவிட பெறவேண்டும் என்ற சுயமனப்பான்மையையும் வெளிப்படுத்தி இதனால் நம்மத்தியில் அன்றாட தேவையிலிருக்கும் சிறார்கள் படிக்கும் இளைய உள்ளங்கள் பலவகையில் துன்பத்தில் வறுமையில் துயருறும் மனிதத்திற்கு முகவரியில்லா நிலைக்கு நாம் காரணமாகிறோம். இன்றைய இறைவார்த்தைகள் கொடுப்பதில் நாம் நமக்கு தக்கவைத்து கொடுக்கின்றோமா? அல்லது வெறுமையாக்கி வரம்பெறுகின்றோமா என சிந்திக்க அழைக்கிறது.

இன்றை திருழிபாடு நம்முன் இருகைம்பெண்களை வெறுமையாக்கி கொடுத்தலுக்கு முன்உதாரணமாக படம்பிடித்து காட்டுகிறது. அவர்கள் ஏழைக்கைம்பெண்கள் அல்ல மாறாக அவர்கள் கணவனை இழந்த நாளிலிருந்து தருணத்திலிருந்து ஏழையாகிப்போனார்கள் சமூகத்தின் அவலங்களுக்கு. மதத்தலைவர்களால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இவர்கள் தங்களின் ஆண்உறவு சொந்தங்களின் தராள எண்ணத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஆதரவற்ற யாருமில்லா அனாதைகளோடு இவர்களும் பேசப்பட்டனர். பேச்சிழந்த உரிமையிழந்த இல்லம் பறிபோன அனாதைகளாக்கப்ட்டனர்.

சீதோன் பகுதியிலுள்ள சாரிபாத்தில் அடுத்த உணவை மட்டுமே தன்ஒரே மகனோடு வாழ்ந்திருந்த கைம்பெண்ணிடம் இறைவாக்கினர் எலியா அனுப்பபடுகிறார். சீதோன் பகுதி ஜெசபேலின் ஆட்சிக்குபட்டது எதைக்கண்டு பயந்து ஓடினாரோ அதே பகுதி ஒருபாடமாக இறைவரத்தை வெறுமையில் ஒருகைம்பெண்பெற காரணமாகயிருக்கிறது. சாரிபாத் என்றால் இளைப்பாறுமிடம் ஒய்வின் புகலிடம் எனப்பொருள்பெறுகிறது. தண்ணீர் கொடு எனத்துவங்கி அப்பம் எடுத்துவா என கேட்டு இறுதியில் கைம்பெண்ணின் நிலையை கேட்டறிந்து அப்பம் சுட்டுவா உன் வெறுமை உனக்கு என்றும் வற்றாத வரத்தைபெற்றுதரும் என ஆசீர் தருகிறார்.

நற்செய்தியில் வெளிப்படுத்தப்படும் கைம்பெண் நமக்கு முன் உதாரணமாக காண்பிக்கப்படுகிறார். 13 காணிக்கை பொருள்களை பெற்றுக்கொள்ளும் இடங்கள் எருசலேம் ஆலய பகுதியில் காணப்பட்டன. ஒவ்வொருபகுதி உணடியல்கள் எண்ணெய் – திரிகள் –ஆலயப்பணிக்குத் தேவையான மரங்கள் என தனித்தனியாக எழுதப்பட்டு பெறப்பட்டன. இக்கைபெண்ணோ இக்காணிக்கபெட்டி ஆதரவற்ற ஒன்றமில்லதவர்களுக்கு நீங்கள் தரும் பெரும்உதவி என்ற நிலை அவளின் மகனின் தேவையை வெறுமையாக்கி கொடுத்து வற்றாவரம் பெறுகின்றாள். நாம் வெறுமையாக்கி வெறுமையாக்கி கொடுக்கின்றோமா அல்லது நமக்கு ஒதுக்கி வைத்து கொடுக்கின்றோமா! வசதிபடைத்தோரின் காணிக்கை காசுகள் சப்தத்தை தந்து அவர்களை மையப்படுத்தியது. எளிய இருகாசுகள் வெறுமையாக்கிகொடுத்தல் நிரம்பிய வரத்தைபெற்றுதந்தது அவள் நிறைவாக நிரம்பிவளாக இல்லம் சென்றாள் என இயேசு அதை திருத்தூதர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

திருச்சபையின் தொடர்வளர்ச்சிக்கு பல்வேறு சபைகளின் நிலைகளுக்கு எண்ணற்ற எளியோரின் ஏழ்மை நிலையிலி வெறுயாக்கி கொடுத்தலே காரணமாகும் புனித திருத்தொண்டர் எவ்வாறு தன்னிடம் இருந்த அனைத்தையும் என தன்னை முழுமையாக வெறுமையாக்க ஆலயத்தின் திருவழிபாட்டு பொருள்களை விற்று ஏழைகளுக்கு அனைத்தும் அளித்தார். தொடர்ந்து ஆளுநர் உங்கள் சொத்துகளை கொடு என்பதற்கு லாரன்ஸ் அனைத்து எளிய ஏழை துயருவோரை அழைத்துவந்து இவர்களே திருச்சபைின் சொத்து என எடுத்துரைத்து பலியாக்கப்டுகின்றார்.

மற்றவர்களை நிரப்ப என்னை வெறுமையாக்க நான் தயாரா?
நோயிலிருப்போரை சந்திக்க என்முழு நேரத்தை கொடுக்க தயாரா?
படிக்கத் தவிக்கும் பிள்ளைகளுக்கு என் ஆசைகளை வெறுமையாக்க தயாரா,
வரங்களால் நிரப்பப்படுவோம…….வெறுமையாக்கி கொடுக்கும்பொழுது-ஆமென்.