இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்திஆறாம் ஞாயிறு-

தனிமரம் செழிக்காது………… சிதைந்துவிடும்…….!!!

எண்11:25-29 யாக்5:1-6 மாற்9:38-43 45 47-48கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இன்றைய நற்கருணை திருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இறைவன் திருநாமத்தில் அவர் திருபீடத்தில் மற்றுமொரு புதிய வாரத்தை துவங்க நாம் ஒன்று சேர்ந்து வந்திருக்கின்றோம். இத்தகைய ஒற்றுமைநிறை வாழ்வுக்கு தடையாக அமைவது தனித்து செயல்படவிரும்பும் மனநிலையே. இது பிரிவினையை உருவாக்கி கூட்டாக செயல்படும் சமூக இறைவாழ்வுக்கு தடையாக திகழ்கிறது. நம்மை ஒன்றிணைத்து இணைந்து செயல்பட சவால்விடும் நம் இறைபீடமும் நற்கருணை கொண்டாட்டங்களும் தொடர்ந்து சேர்ந்து இயங்கும் குடும்பங்களாக அன்பியமாக பங்குதளமாக நம்மை வழிநடத்தட்டும்.

அம்மா நான் அக்காவோடு கார்பின்னாடி சீட்டில் உட்காரமாட்டேன்...
அப்பா நான் அண்ணனோடு சேர்ந்து பள்ளிக்கு போகமாட்டேன் தனியா சாப்பாட்டு கட்டிக்கொடுக்கனும். தனியாவண்டிவேணும் தங்கிற ரூமை ஷேர்பண்ணமுடியாது…
இன்று நாம் குடும்பங்களில் தனி டிவி தனி அலைபேசி என நாம் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நம் தனிவாழ்வை தெரிந்துகொள்ள நாம் செய்கின்ற அழிவுமுயற்சிகள்.
எனக்கு அந்த அன்பிய தலைவியோடு சேர்ந்து வேலைசெய்யமுடியாது……
அந்த பங்குதளத்திற்கு பணிபுரிய என்னால இயலாது……
அந்த துறவற சமூகத்திற்கு நாம் மாற்றலா விருப்பமில்லை அங்கு சுதந்திமாக செயல்படகஷ்டம்……இது நாம் தேடிக்கொள்விரும்பும் பற்றில்லா பாதைகள்… எப்படி புதிய தலைவியை நியமிக்கலாம் நான் தானே இந்தமரியாயின் சேனையை பத்துவருடமாக வழிநடத்தினேன்…….
நான் தானே பல வருடங்களாக நவநாள் வழிநடத்தினேன்…….நாங்க தானே 25வருடங்களாக பாடற்குழுவை சீரமைத்து செயல்படுகிறோம்….
எப்படி நேற்றுவந்தவர்கள்….புதிய நபர்பகள் எங்க இடத்தை எடுக்க பிடிக்கமுடியும்………….இது நான் அனுபவித்த நம் பங்கு தளங்களில் சந்திக்கின்ற அனுபவங்கள்
தலை தனிஆளா வெற்றிபெறுவதை யாரும் நிறுத்தமுடியாது……
சிங்கம் சிங்கிளா வெளுத்துவாங்குவதை ஒருத்தரும் தடுக்கமுடியாது….
புலி புதுசா ஒன்னு புறப்பட்டிருக்கு பாதையில எவரும் வரமுடியாது…..
இது நம்மத்தியில் சிறியோர்கள் வாலிப உள்ளங்கள் மத்தியில் நாம் கேட்பது…..இது உண்மையல்ல தனிநபராக கதாநாயகராக திரையிலும் சுவரொட்டிகளிலும் பிளக்ஸ்களிலும் தோன்றி பெருமைதேடிக்கொண்டாலும் அதற்குபின்னால் அவர்களின் நடிப்புக்குபின் இருப்பது பல நல்ல உள்ளங்கள் என்பதே உண்மையாகும். இது விளையாட்டு துறை – அரசியல் கட்சி – ஆன்மிகவாழ்வு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் குழுமங்களுக்கும் பொருந்துகின்ற உண்மையாகும். ஆக கூட்டு முயற்சியே ஒரு குழுவிற்கு உயர்வை முன்னேற்றத்தை வெற்றியை சக்தியை தரும் இதற்கு பாதகமான பிரிவினையை உருவாக்குவது பொறாமை உணர்வினால் உதயமாகும் தனிநபரின் சுயஆதாய விருப்பமே ஆகும். இச்சிந்தனைகளையே இன்றைய இறைவாசகங்கள் நம்முன் வைக்கிறது.

உங்கள் வாரிசு நான்தான் உங்களுக்குபிறகு தலைமை நான்தான் யார் இந்த எல்தாது மற்றும் மேதாது புதிதாக வந்தஇவர்கள் எப்படி போதிக்க படிப்பிக்கமுடியும் அவர்களை நிறுத்தச்சொல்லும் என அதிகார கோபத்தில் யோசுவா மோசேயை அணுகி முறையிட மோசே உன்பொறாமையிலிருந்து வெளியேவா. பொறாமைஉணர்வு நம் சமூகத்தைஅழித்துவிடும் பிரித்துவிடும் எனக்கு தோள்கொடுக்க நான் வேண்டியதால் யாவே இறைவன்அளித்த உள்ளங்களே இந்த எழுபதுபேரும் மற்ற ஆர்வமுள்ள சகோதரங்களும். இவர்கள் முகாமில்தங்கி செபக்கூடாரத்திற்கு வரவில்லை என்றாலும் அவர்களிலும் இறங்கி செயல்படுவர் ஆற்றல் அழைப்பு தரும் ஆவியானவரே. நம்மை இஸ்ராயேல் மக்களை ஒரே சமூகமாக அழைத்த இறைவனே இவர்களையும் அழைத்துள்ளார்

தனிமரமாக செயல்பட்டால் சிதைந்துவிடுவோம் இனணந்து செயல்படுவோம் என மோசேவிடுக்கும் இந்த அழைப்பு இந்நூலின் ஆசீரியரால் கி.மு 6ம் நூற்றாண்டு சமூகத்திற்கு பாடமாக எடுத்துச்சொல்லப்பட்டு எழுதப்பட்டது இந்த எடுத்துக்காட்டு குறிப்பு பொறாமை உணர்வு மனிதபலவீனம் எப்பொழுதும் தோன்றலாம் சுயநல அதிகாரத்தை உருவாக்கி குழுவையே அழிக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.

மாற்கு நற்செய்தியாளர் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கு தனித்துசெயல்படவிரும்பும் சோதனையைதவிர்த்து கூட்டாக சமூகத்தின் புதிய உள்ளங்களின் திறமைகளோடு இணைந்துசெயல்படுவதே கிறிஸ்து உருவாக்கிய சீடத்துவம் என்பதை எடுத்துகூறி விளக்க இன்றைய செய்தியை பயன்படுத்துகிறார். பலதருணங்களில் இயேசுவின் அருகாமையை அனுபவிக்கும் இம்மூன்று சீடர்களின் எண்ணம் எங்கள் இடத்தை யாரும் பிடிக்கமுடியாது நெருங்க முடியாகு எந்நாளும் நாங்கள் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் தான் அவரின் உண்மை சீடர்கள் அவரின் போதனையை பாதையை பின்பற்றிபோதிப்போம் என்பதாக இருந்திருக்கும். எனவே மற்றவர்களின் பணியை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவிடம் முறையிட்டு அவர்களை நிறுத்தசொல்லும் என்ற முயற்சி பலிக்கவில்லை. இயேசுவோ எண்ணத்தில் எதிரியாக எண்ணவேண்டாம் உடன் இணைந்து கூட்டாகசெயல்படுங்கள் குழுவை பிரிக்கும் பொறாமைநிறைந்த தனித்து செயல்படும் எண்ணத்திலிருந்து உணர்விலிருந்து வெளியேவாருங்கள் என சவால்விடுகிறார்.

திருத்தந்தை சமீபத்திய அமெரிக்க பயணத்தில் குழுமியருந்த மக்களை எனக்காக செபியுங்கள் செபிக்கத் தெரியவில்லை என்றாலும் இறைநம்பிக்கையில்லை என்றாலும் என்னை உங்கள் வார்த்தையால் வாழ்த்துங்கள் என்றதும் மற்றும் ஜக்கிய நாடுகள் அமைப்புமுன் அனைவரும் சேர்ந்து இணைந்து கூட்டுமுயற்சியாக சமூகத்தின் சமூக தீமைகளை எதிர்த்துநிற்க விடுத்த அழைப்பும் இன்றைய நற்செய்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தனிமரம் தோப்பாகாது……..தனிமுயற்சி முழுமுயற்சி ஆகாது……தனி ஆட்சி மக்கள் ஆட்சி ஆகாது…….தனிநடிப்பு திறமைக்கு சவாலாகாது…..தனித்து போரிட்ட சர்வாதிகாரம் ஒடிந்துபோனது…தனித்து விளங்கிய முதலாளித்துவம் முடிந்துபோனது…..

நல்ல தலைமை……நமக்கடுத்து இளைய உள்ளங்களை உருவாக்கி உயர்த்திபார்ப்பதிலேயே அமைகிறது. நான் அல்ல எனது அல்ல திருச்சபை பங்கு குழுக்கள் அமைப்புகள் அன்பியங்கள் எந்நாளும் இருக்க இயங்க உயர வளர முன்னேற கூட்டாக செயல்படுவோம் சாதிப்போம்-ஆமென்.