இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறு-

ஆமென்…….என் அன்றாட முடிவாகட்டும்!!

யோசு24:1-2 15-18 எபே5:21-32 யோவா6:60-69கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவரையும் இன்றைய திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். நாம் இன்றைய ஞாயிறு திருவாசகங்களோடு யோவானின் கடந்த ஜந்துவார தொடர் உரையாடல் சிந்தனைகளை நிறைவுசெய்கிறோம். இவைகள் நற்கருணையின்மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை மற்றும் பற்றுதல்களை ஆழப்படுத்தியிருக்கும் என நம்புகிறோம். வாரத்தின் இந்த ஒருநாளில் மட்டுமல்ல மாறாக நம் அன்றாடவாழ்வில் ஒவ்வொருநாளிலும் நற்கருணை இயேசுவுக்கு சாட்சிபகரவேண்டியது நமது பொறுப்பு ஆகும். நமது நண்பர்கள் மற்றும் அறிமுகமில்லாதோர் மத்தியில் சாட்சிபகர நம்விசுவாச பதில் அவசியமானது இது அர்த்தமுள்ள ஆமென் ஆகும் அர்ப்பண உணர்வோடு இப்பதிலை நாம் வெளிப்படுத்தவேண்டும்.

உங்கள் பங்கின் தந்தையர் அருட்பணியாளர் பெயர் என்னவென்று கேட்டபொழுது சிறுவன் சொன்னபதில் எங்க பங்கில் மூன்று அருட்பணியாளர்கள் இருக்கின்றார்கள் ஒருவர்பெயர் ப்பாதர் அல்லேலூயா அடுத்தவர் பெயர் பிரெய்ஸ் த லார்ட் மூன்றாவதாக ப்பாதர் ஆமென். உடனே ஏன் இவ்வாறு அழைக்கின்றீர்கள் என்றபொழுது தொடர்ந்து சிறுவன் சொன்னான் அவர்கள் அவர்களுக்குரிய ஆமென் அல்லேலூயாவைதான் அதிகம் அடிக்கடி பிரசங்கத்தில் சொல்லி பயன்படுத்துகின்றனர் எனபதே ஆகும்.

நாமும் ஆமென் என்ற நம் பதிலை பலமுறை பயன்படுத்தி சொல்கிறோம். வழக்கு மொழியில் இதை ஆமோதிக்க பயன்படுத்தும் வார்த்தையாகிய ஆம் என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆமென் என நான்சொல்லும் பொழுதெல்லாம் நான் உணர்ந்து சொல்கிறேனா?

ஆம் என முழு விருப்பத்தோடு ஈடுபாட்டோடு சொல்கிறேனா?
என் அன்றாட ஆம் பதில்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவைகள்?
திருமணநாளில் ஒருமுறை சொன்ன ஆம் அன்றாடம் எத்தனை சவாலாகயிருக்கிறது!
என்பிள்ளைகள் சிறுவயதில் அவர்கள் பிறந்தநாளுக்கு கேட்டதிற்கெல்லாம் ஆம் என்று சொல்லியிருக்கிறேன்.. ஆனால் வளர்ந்விட்டார்கள் அவர்கள அதே ஆம் என்ற பதிலை நான் சொல்லமுடியாது!

துவக்கத்தில் ஆர்வமாக உடற்பயிற்சியை சில நாட்கள் வாரங்கள் எனதுவங்கி அதை ஆம் என தொடரமுடியாமற்போவதேன்?
இளையோர் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்திற்குபிறகு ஞாயிறு நற்கருணைக்கு ஆம் என சொல்வதில்லை?
தேர்தலுக்குமுன் மக்ளுக்கு ஆம் எனச்சொல்லும் அரசியல்வாதி தேர்தலுக்குப்பிறகு ஏன் கட்சிதலைவர்களுக்கு மட்டும் ஆமென் என சொல்கிறார்கள்?
நம் அன்றாட ஆம் மற்றும் ஆமென் பதில்களை முடிவுகளை இன்றைய இறைவார்த்தைகள் சிந்தித்துப்பார்க்க அழைக்கிறது. யோசுவா முதல் வாசகவரிகளில் எத்தகைய முடிவுகளுக்கு ஏன் எந்நிலையிருந்து எடுக்க அழைக்கிறார்? நமக்குத்தெரிந்தது விவிலியம் கூறுவது மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டை தூரநின்று பார்த்தார் ஆனால் அதில் மக்களை இட்டுச்சென்றது யோசுவா மட்டுமே. இத்தருணத்தில் மோசேயின் வாக்குறுதிகளை அவரை பின்தொடர்ந்த சந்ததியினர் வாக்குறுதியை வழிபாட்டை மறந்தனர். பல இனங்களாக பிரிந்துயிருந்தனர். அவரவர்கள் வாழ்ந்த எல்லைகுள்ளாக கடவுள் மற்றும் வழிபாடு வேறுபட்டுயிருந்தது. அமோரியர்கள் கனானை கட்டுப்பாட்டிற்குள் கைப்பற்றியபொழுது அமோரியர்களின் தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர்.

யோசுவா வித்தியாசமான நியாயமான சவாலாக மக்களை திரும்பி யாவே இறைவனுக்கு நன்றிகூறி தேடிவந்து பற்றிக்கொள்ள அழைக்கின்றார். நீங்கள் சமீபத்தில் தேடிக்கொண்ட பொய்தெய்வங்களை ஏற்றுக்ககொள்கிறார்களா? அல்லது வரலாற்றில் துவக்கமுதல் உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து அனுபவித்து வழிபட்ட யாவே இறைவனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என முடிவுஎடுக்க ஆம் என சொல்ல அழைக்கிறார்.தொடர்ந்து யோசுவா அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் “செக்கேம்” எருசலேமிலிருந்து 40 மைல்களுக்கு அப்பால்உள்ள அடையாளமும் அர்த்தமுள்ள இடமாகும் காரணம் இங்குதான் யாவே இறைவன் அபிரகாமுக்கு முதலில் வெளிப்படுத்தி உடன்படிக்கை செய்துகொண்டார். தொடர்ந்து யாவேஇறைவன் அவர்கள் இனத்துக்கு விடுதலை பாதுகாப்பு மீட்பு தந்துவழிநடத்தினார் எனச்சொல்லி செக்கேம் என்பது தோள்கொடுப்பது எனப்பொருள்படும் நானும் என்வீட்டாரும் தோள்கொடுக்கும் இறைவனுக்கு முழுமனதோடு ஆம் எனச்சொல்லி அவர்பணிக்கே ஆமென் என தன்நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்கிறார்.

யோவான் கடந்த ஜந்துவாரங்களாக இயேசுவின் என் சதை என் உடல் என் இரத்தம் என்பதை புரிந்துகொள்ள மக்களுக்கு இருக்கும் தடைகளை முன்வைக்கிறார். ஒன்று ஜயாயிரம் பேருக்கு உணவளித்தவரை சக்திநிறைந்த போரிட்டு உரோமை அரசுகளிடமிருந்து விடுதலை பெற்றுத்தரும் தலைவராக எதிர்பார்த்தனர். இரண்டு அவருடைய இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை மூன்று: இயேசுவின் உடலை இரத்தத்தை உணவாக உட்கொள்ளுவது சாத்தியமில்லாதொன்று காரணம் யூதகருத்துப்படி இந்த உட்கொள்ளுதல் பழைய உடன்படிக்கையிலிருந்து விலகுதல் ஆகும். இயேசு குறிப்பிடும் முழுத்தன்மையை அவர்கள் உணரவில்லை. மனிதஅவதாரம்-வானிலிருந்து வந்த உணவு நானே..மீட்பு-நான் தரும் உணவு மெய்யான சதை உலகிற்காக…விண்ணகமகிமை நான் தந்தையின் இல்லத்திற்கு செல்கிறேன். ஆக தன் முழுத்தன்மையிலும் பங்கேற்க அழைக்கும் இயேசுவிடம் திருத்தூதர்கள் நாங்கள் வேறுபட்டவர்கள் ஆம் எங்குசெல்வோம் ஆமென் உமது மனித அவதாரம்-உடலின் பகிர்வு-விண்ணகமகிமையிலும் பங்கெடுக்க தயார் விரும்புகிறோம் என வெளிப்படுத்துகின்றனர்.

ஜீலி அப்தாப் என்ற 26வயது பெண் 2013ல் பகிர்ந்துகொண்டது அவள் பாகிஸ்தானில் கிறிஸ்தவளாகி ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தபொழுது சிலர் ஒன்றுசேர்நதுவந்து அவள் கழுத்தில் அணிந்திருந்த இயேசுவின் உருவத்தை எடுத்து எறியவேண்டும் என கட்டாயப்படுத்தபொழுது அவள் நான் என் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முழுமனத்தோடு எந்நாளும் ஆமென் ஆம் என்றுதான் சொல்வேன் என மறுநான் எதிர்பாரதா விதமாக ஆசிட் எடுத்துவந்து அவள் முகம் கழுத்து என அனைத்துவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாள் ஜீலி மருத்துமனையில் கூட பயமுறுத்தப்பட்டாள். ஆனால் அவளின் ஆம் மற்றும் ஆமெனில் எந்த மாற்றுதல் கிடையாது. முகம் சிதைந்து நாவிழந்து ஒருகண்பார்வை மறைந்து கழுத்து உருவிழந்து போனாலும் அவளின் நிலைப்பாடு ஆயரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மற்றும் உயர்படிப்புக்கு வாய்ப்புகிட்டியது.நம்முடைய ஆமென் உணர்வுபூர்வமானதாக உண்மையானதாக இருக்கட்டும்….ஆம்..ஆமென்.