இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு

எஞ்சிய துண்டுகள்… நாமே…. பிறருக்கு நற்கருணையாவோம் !

ஏசா55:1-3; உரோ8:35இ37-39; மத் 14:13-21கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சசோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நம் சமூக உணர்வோடு இறைபீடத்தை நோக்கி வருவது நம் இறைவன் சமூகத்திலே தன்னை ஒவ்வொருமுறையும் வெளிப்படுத்துகிறார் என்பதை நமக்கு சுட்டுகாட்டுகிறது. ஆம் இஸ்ராயேல் மக்களுக்கு சமூக ஒன்றிப்பில் அவர்களை தன் பிள்ளைகளாக அழைத்து அவர்களோடு நெருங்கிய அழியா உடன்படிக்கை செய்துகொண்டார். இயேசு தன்இறையரசு பணிக்கு பன்னிரெண்டு திருத்தூதர்கள் என்ற சமூகஉறவுகளாக தெரிந்துகொண்டார். ஒவ்வொரு நற்கருணைதிருவிருந்தும் இதே பாதையில் நம் சமூக உறவுகளில் ஒன்றிப்புகளில் முழுமையான அபரிவிதமான விருந்து அனுபவங்களை எதிர்கொள்ளஅழைக்கிறது. பல்வேறு தேவைகளில் தவிப்போரை நம் இறைபீடத்தில் நினைவுகூர்ந்து நாம் அவர்களுக்கு நற்கருணையாக விரும்புவோம்.

ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானாகவளரும் என்ற பழமொழியானது நம் மத்தியில் சொல்லபடுவதுண்டு ஆனால் சுய நலஎண்ணத்தோடு இதை ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன் பிள்ளை தரித்திரமாகபோகும் என்று சொல்லி பிறர்தேவைக்கு பிறர் பசிக்கு கண்மூடிவாழ்வோருமுண்டு. இதன் அர்த்தம் ஊரார் பிள்ளை என்றுவித்தியாசம் பார்க்காமல் அதையும் தன் பி;ள்ளையாகபார்க்கும்பொழுது அங்கு இருபிள்ளைகளும் வரும் இணைந்துவளர உயர வர்ய்ப்புஉண்டு என்பதாகும். நம்மை சுற்றி பல்வேறு பசிகளை காண்கிறோம்.
தனிமையிலே வாடி ஏங்குகின்ற நட்புபசி…..
நோயிலே சந்திக்கயாருமில்லை என்ற ஆறுதல்பசி……
பெற்றோர் இல்லா பிள்ளை என்ற பாசப்பசி…..
மனஅழுத்தத்தில் வெறுப்பாண உணர்வகளில் ஆலோசனை பசி……
பலவீனங்களில் ஆன்மிக பசி……
பிரிவுகளில் இழப்புகளில் துணைபசி…….
கடன்குறைபாடுகளில் பொருளாதாரபசி…….
வயிற்றுவெறுமையில் உணவுப்பசி…….
வாய்ப்புகளில்லாமையில் அறிவுபசி…. என்று நம்மை சுற்றி பல்வேறு பசிகள் இருக்கின்றன அவர்களை நிரப்புவது யார்? இப்பசிகளை இறைவன் நிவர்த்திசெய்வாரா? இறைவன் நிரப்பி பசியாற்றுவாரா? இலவசமாக நம்பசியை ஆற்றுகின்றஇறைவன் நமக்கும் எஞ்சிங துண்டுகளைதந்து பன்னிரண்டுகூடைகளில் நம்மையும் ஒன்றாக்கி பிறரின் பல்வேறுபசிகளை நிரப்ப அழைப்பதையே இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுகின்றன.

முதல் வாசகத்தில் ஏசாய இறைவாக்கினர் பாபிலோனியாவின் பிடியில் சகஅகதிகளாக வாழ்ந்தவர்களுக்கு பசியாற்றுகின்ற யாவேஇறைவனை ஞாபகப்பபடுத்துகின்றார்.. இஸ்ராயேல் மக்கள் 600 வருடங்களுக்குமுன்பு அவர்கள் மூதாதைகர்களை எகிப்தியிலிருந்து வழிநடத்தி பாலலைநிலத்திலே நீரும் மன்னா உணவும் வழங்கிய யாவே இறைவனின் செயல்பாடுகளை மறந்து தங்களை அவர் கைவிட்டுவிட்டார் புறகணித்துவிட்டார் என பாபிலோனிய அரசனின் கடவுள்வழிபாடுளின் பின்செல்லலாமா எனசிந்தித்துகொண்டிருக்கையில் இவ்வாசகவரிகளில் ஏசாய இறைவனின் அழைப்பை அவர்களுக்கு உணர்த்துகிறார். நீரை தந்து தாகம் தீர்ப்பேன். திராட்சை இரசமும் பாலும் அப்பமும் இலவசமாக தந்து உங்களை நிரப்புவேன். பசியோடுயிருப்பவர்களே தேடிவருங்கள். இதுவெறும் வயிற்றுப்பசியை நிரப்புவதுகிடையாது மாறாக பல ஆண்டுகளாக நாடுளாக நாடுகடத்தப்பட்டு ஏமாற்றம் வெறுப்பு கோபம் இவைகளில் ஆதரவு அன்பு விடுதலை உரிமைவாழ்வு பசியை எதிர்நோக்கிய அவர்களுக்கு யாவே இறைவன் அந்த உரிமைவாழ்வைஅருள்வார் என்பதை ஏசாயா உறுதியளிக்கிறார்.

எவ்வாறு இன்று நம்வழியாக வறுமை மற்றம் பலபசிகளிலிருந்து விடுதலைபெற்றுதர அவர்களை நிரப்ப நாமும் எவ்வாறு அழைக்கப்படுகிறோம் என்பதை மத்தேயு இயேசுவின் வார்த்தைகளில் விளக்குகின்றார். அப்பம் பலுகுதல் புதுமை நிகழ்வை நான்கு நற்செய்தியாளார்களும் தங்கள் எழுத்து நூலில் குறிப்பிட்டுகின்றனர். இவைகள் பழையஏற்பாட்டில் மீட்பின் வரலாற்றில் இஸ்ராயேல் மக்களை மன்னா உணவினால்; நிரப்பிய யாவேஇறைவனின் அன்பையும் ஆதரவையும் பின்சென்று பார்க்கவும் இயேசுவின் இறுதிஇரவு மெசியாவின் விருந்தையும் முன்குறித்து பார்க்க எடுத்துரைக்கின்றனர். சம சகோதர விருந்தில் யாவே இறைவனின் அபரிவிதமான நிரப்புதலை நமக்கு படம் பிடித்துகாட்டுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு அடையாள எண்கள் செயல்கள் எண்ணிக்கைகள் பல்வேறு உள்ளார்ந்த அர்த்தங்களை நமக்குசொல்கின்றன. நம் சிந்தனைக்கு பன்னிரெண்டு கூடைகள் நிரம்பிய எஞ்கிய கூடைகளாக இருந்தன என்பது நம்மையே குறித்துகாட்டுகின்றன. தனக்குப்பிறகு தன்பல்வேறு பசிநிரப்பும் பணியை செய்ய அடையாளமாக திருத்தூதர்களிடம் தந்து மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள் எனச்சொல்லி என்பணிணை தொடர்ந்துநீங்களே ஆற்றவேண்டும். நம்மையும் அந்தபணியில்; இணைத்துக்கொள்ள எஞ்சிய துண்டுகளை 12 கூடைகளாக நிரப்பினர் என்பதை தெரிவிக்கிறார். ஆம் அந்த எஞ்சிய துண்டுகள் நாமும் நற்கருணை இயேசுவால் பலரில் பலவேறு பசியை நிரப்ப அழைக்கப்படுகிறோம். இப்பணியை உணர்ந்துசெய்ய நாமும் நம்மை நம் அழைப்பை நம்மைசுற்றியிருப்போரை எடுக்கவேண்டும் - ஒவ்வொருவருக்குமாய் நன்றி சொல்லவேண்டும்-நம்பயங்களை தயக்கங்களை கோபங்களை உடைத்து நம்மையேபகிர துணியும்பொழுது நம்மில் உள்ள எஞ்சிய துண்டுபுதுஉருவம் மற்றும் புதுவாழ்வு பெறுகிறது.

கனடாவிலுள்ள புனித தாமஸ மூர் கல்லூரி பசிலியன் அருட்தந்தையர்களால் நடத்தப்படுகிறது. அங்கே உக்கிரேனிய ஓவியரின் வரைபடம்வைக்கப்பட்டு அனைவருக்கும் அன்றாடம் நற்கருணை அழைப்பைவிடுக்கின்றது. இது நாம் நற்செய்தியில் காணும் அப்பம் பலுகுதலின் புதுமைநிகழ்வு ஆகும். அதில் திருத்தூதர்கள் இடத்தில் பல்வேறு பசிலியிய அருடதந்தையர்கள் தங்கள் துறவற உடையில் மக்களுக்கு உணவை பகிர்வதாக வரையப்பட்டிருக்கிறது,. மற்றும் சில கல்லூரி இளையோர் எஞ்சிய துண்டுகூடைகளை பெறுவதுபோல கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது எவ்வாறு நாம் பிறரின் பசியை நிரப்ப நற்கருணையாக அழைக்கப்படுகின்றோம் தினமும் ஞாபகப்படுத்துகின்றது.

பலர் எவ்வாறு இந்த சிறு செயல் சந்தித்து ஆறுதல் கூறுவதோ ஒரு சிலநாள் உணவுபகிர்வதோ நற்கருணை அன்பால்; நிரப்புவதாகும் என்றுகேட்கலாம் ஈடுபடமறக்கலாம். ஆசீர்பெற்ற அன்னைதெரேசா சொன்னது “ நாம் பிறரின் பசியை நிரப்பும்செயல் கடல் நீரின் ஒருதுளி எனலாம் ஆனால் அந்த ஒருதுளி இல்லையென்றால் கடல் நீர் அந்தஒருதுளி குறைபடுகிறது” எத்தனையோ பேருடைய துளிகள் இறுதியில்கடலின் வற்றும்நிலைக்கு செல்லலாம். எஞ்சிய துண்டுகளாகிய கூடைகளில் நிரம்பியிருக்கும் நாம் நற்கருணைஇயேசுவால் பிறரின் பல்வேறு பசியை நிரப்புவோம்-ஆமென்.