இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு-

மீதியானவைகள்………… முழுமையானவைகளே!!

2அரச4:42-44 எபே4:1-6 யோவா6:1-15கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவரையும் இன்றைய திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். நம் நற்கருணை ஒன்றிப்பு பல்வேறு விதங்களில் வகைகளில் வேறுபட்டுயிருக்கும் நமக்கு ஒரு ஒற்றுமையின் நினைவாக அமைகிறது. ஒவ்வொரு ஞாயிறு பங்கேற்பும் கொண்டாட்டமும் நம்மில் ஒரு முழுமை உணர்வை அனுபவத்தை ஏற்படுத்தவேண்டும். இவைகள் மீதியானவைகள் இவர்கள் மீச்சமானவர்கள் என எவரையும் ஒதுக்காமல் குறைவாக கருதாமல் அவர்கள் இணைந்தாலே திருவழிபாடு நற்கருணை நம் சமூகம் இறையரசு முழுமையாகும் என இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்து கூறுகின்றன. நம்மில் மீதியானவைகளை முழுமையாக்குவோம் முழுஆசீரை நிறைவாக பெற்று மகிழ்வோம்.

20 அப்பங்களை கொண்டு 100 பேருக்கு உணவளிக்க முடியுமா?
5 அப்பபங்களை வைத்து 5000 பேருக்கு உணவு தர இயலுமா?
என் இரண்டு பிள்ளைகளுக்கு நல்ல உணவு தர கஷ்டப்படுகிறேன் எப்படி பங்கிலுள்ள மறைக்கல்வி பிள்ளைகளுக்கு உதவிசெய்ய என்னால் இயலும்?
நானே வாடகைவீட்டிலே மிக குறைந்த வசதிகளோடுயிருக்கிறேன் பிறகு எப்படி என் வீட்டில் அன்பிய கூட்டம் நடத்தி எல்லாரையும் கவனிக்கமுடியும்?
சாத்தியமாகதது சாத்தியமாகும்…….மீதியானது..மிச்சமானது….மிகுதியாகும்? எவ்வாறு?
உதவி கேட்டுவருபர்களிடம் நாம் கேட்கின்ற வார்த்தை நீங்க மிச்சம் மீதியிருந்தா தாங்க அதுபோதும் என்பது தானே. யாரும் புதிய சோறுயிருக்கிறதா என்று கேட்பது கிடையாது பழையது மீச்சம் மீதியானது ஏதாவதுயிருந்தா கொடுங்களேனுதானே நாம் கேட்கிற வார்த்தைகள். மிச்சமானது எஞ்சியது என்றால் குறைத்துமதிப்பீடக்கூடியதாக நாம் எண்ணுகிறோம். மிச்சமில்லை ஆகவே உதவி கொடுப்பதுகிடையாது பட்டினி பசியை நீக்குவது சாத்தியமாகாது என்று சொல்வது நம்மிடம் நிலவுகின்ற பொருளாதார அரசியல் சமூக ஒருதரப்பட்ட அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு சீடர் தன் குருவை அணுகி ஏன் பட்டினியினால் மக்கள் அவதியுறுகிறார்களே இது ஆண்டவின் விருப்பமா, தண்டனையா? என்ற கேள்விக்கு குருவோ நாமும் நம் சமூகவாழ்க்கை முறையுமே காரணம் என்பதை இவ்வாறு எடுத்துச்சொன்னார். நம்மில் இருப்பவர்களை பின்வருமாறு பார்க்கலாம். சிலர் ஒரே வேளை உணவை உண்டு வாழ்வர் அவர்கள் யோகி என அழைக்கப்படுவர். இருவேளை உணவை உண்டு வாழ்பவர்கள் போகி என்றழைக்கப்படுவர் மூவேளை உணவை உண்பவரை ரோகி எனலாம் ஆனால் நான்குவேளை உணவு உண்பவரை துரோகி எனலாம்.. எனவே பிறரின் பட்டினிக்கு யார்காரணம்? மேற்குறிப்பிட்ட குழுக்களில் நமக்கு தெரியும்.

இன்றைய வார்த்தைகளில் பொதுவாக காணப்படுவது உணவு பகிர்வு அப்பம் புதுமை எண்ணிக்கை நற்கருணையின் முன்வெளிப்பாடு என்றிருந்தாலும் புதிதாக ஒரு கருத்தை காண அழைக்கின்றேன். அதுவே மீதியது எஞ்சியது மிச்சமானது. முதல் வாசகத்திலும் நற்செய்தியிலும் நமக்கு தரப்பட்டிருக்கிறது.

முதல் வாசக பிண்ணனி என எடுத்துக்கொள்ளும்பொழுது பிரிந்திருந்த இரு அரசுகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது வடக்குபுற அரசு. அங்கு வழிபாடு மறக்கப்பட்டு அரச பொய் எண்ணங்கள் சிலைகள் தெய்வமாகியது. வழிபாட்டிற்கும் பலிசெலுத்துதற்கும் வாய்ப்பு இல்லாமற்போகி யாவே இறைவனின் வாக்குறுதியை மறந்து எருசலேம் பிரசன்னத்தை மறுத்து மக்கள் வாழ்ந்திருந்தனர். அத்தருணத்தில் அறுவடையின் நாளின் முதற்கனியை வாரத்தின் முதல் நாளானா ஞாயிறுஅன்று அழைக்கப்பட்டோருக்கு கொடுத்து ஆசீர் பெறுவோம் என் எளிய மனத்துடன் எண்ணி எடுத்துவராமல் தன்னிடம் இருந்த 20 கோதுமை அப்பங்களை எடுத்துவருகிறார் முதற் கனியை தருவதே நன்றியின் மக்களாக யாவே இறைவனை ஆசீர் பெற்றுக்கொள்வதற்காகவே. அப்பொழுது இறைவாக்கினருடன் இருந்தவர்கள் நாம் நூறு பேருக்கு அதிகமாகயிருக்கிறோம் எவ்வாறு 20 அப்பங்களை பகிர முடியும்? என கேள்வி எழுப்ப தயங்க இயலாது எனச்சொல்ல இறைவாக்கினர் அன்போடு அதிகாரத்துடன் ஆணையிடுகிறார். நீங்கள் எடுத்துக்கொடுங்கள் அனைவரும் உண்ணட்டும் என அங்கு வெளிப்படுகின்ற அதிசய உண்மை மீதமாகிறது எஞ்சிய துண்டுகள் கிடைக்கப்படுகின்றன. மீதமானது மிச்சமானது முழுமையாகிறது அனைத்துமாகிறது.

நற்செய்தியிலே யோவான் மிச்சமானது 12 கூடைநிறைய எனத்தெளிவாக சொல்கிறார். 5அப்பம் என்பது விவிலியத்தில் அருள் ஆசீரை குறிக்கிறது. 2 மீன்கள் என்பது பிரிந்த இருஅரசுகளான இஸ்ராயேல் யூதேயா என அரசகளைக்குறித்து அவர்களின் மறுஒன்றிப்பை நம்முன் முன்குறித்து வெளிப்படுத்துகிறது. 7 என்பது முழுமை எனநமக்குத் தெரியும். எஞ்சியது மீதமானது மிச்சமானது என்பது கிரேக்க மொழியில் விவிலியத்தில் முழுமை அல்லது மொத்தம் என்ற சொல்லும் பொருளுமாகும். ஆக பன்னிரெண்டு கூடைகள் உலகின் கடை எல்லைவரை பணிசெய்ய அழைக்கப்பட்ட 12 திருத்தூதர்களையும் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட 12குலத்தின் மீட்பின் பணியும் பயணமும் தொடர்கிறது முழுமைபெறுகிது இயேசுவில் என்பதையுமே குறிக்கிறது.

எஞ்சியது மீதமானது மிச்சமானது முழுமையின் மொத்தத்தின் ஒரு பகுதி ஆகும் ஒவ்வொரு பகுதியும் முக்கியமாகும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் உடலின் அங்கம் பகுதிகளாகிறோம் ஆக நாம் ஒவ்வொருவரும் முக்கியம். நற்கருணையில் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் நாமும் பல்வேறு வகைகளில் எஞ்சிய மீதமான துண்டுகளானாலும் ஒரே அப்பத்தின் வழியாக ஒரே இயேசுவின் முழுமையான மொத்தப்பிரசன்னமாகிறோம். நம் சமூகமும் முழுமை அனுபவத்தை பெறுகிறது. முதல் வாசகத்தில் ஒரு எளிய மனிதரும் நற்செய்தியில் ஒரு சிறுவனும் எஞ்சிய துண்டுகள் மீதமானவைகள் முழுமையாக மொத்தமாக காரணமாகின்றார்கள் சகோதர சமத்துவ அபரிவிதமான ஆசீருக்குகாரணமாக அவர்கள் தங்களிடம் இருந்த அப்பங்களை எண்ணவில்லை எண்ணிக்கொடுக்கவில்லை மாறாக எளிய உள்ளத்துடன் அளிக்க அது பலுகியது பெருகியது நிரப்பியது நிறைவை முழுமையைப் பெற்றுதந்தது.

கலிபோர்னியாவிலுள்ள ஒரு பள்ளியிலே இரு ஆசீரியர்கள் இணைந்து அனைத்து பிள்ளைகளும் சமத்துவாக நிறைவு பெறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இலவச உணவு தரும் மரம் என்ற தலைப்பில் ஒருமரம் நட்டு பிள்ளைகள் போதும் என்று மீதியாகவைக்கும் உணவுகளை சிற்றுண்டிகளை அங்கு கொணர்ந்து வைக்கச்சொன்னார்கள் நாளடைவில் பள்ளிப்பிள்ளைகள் பெற்றோர்களிடம் சொல்லி தங்கள் உணவோடு சிறிது அதிகமாக மற்றொரு உணவு பொருட்களை எடுத்துவந்து வைத்தார்கள். இந்த உணவுப்பொருட்களைவைத்து அனைத்து அவர்கள் பள்ளிகளில் மட்டுமல்ல மற்ற அருகிலுள்ள பள்ளி பிள்ளைகளுக்கும் அதைத்தொடர்ந்து சாலையோரம் வாழும் அருகிலுள்ள ஒரு சிறிய சமூகத்திற்கும் அவர்களின் உணவு உதவிகள் எஞ்சிய துண்டுகளாயிருந்த அனைவரையும் முழுமையாக்கின முழுஆசீரைப்பெற்று தந்தன.

என் அருகில் என்னைச்சுற்றியுள்ள மீதமான மிச்சமான எஞ்சிய துண்டுகளான உள்ளங்கள் உறவுகள் யார்? யாரை நான் நற்கருணை அப்பமாக இறைபிரசன்னமாக முழுமையாக்க வேண்டும்?-ஆமென்.