இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு-

இயங்க…… இயக்க……… அனுப்பபடுகிறோம்!!!

ஆமோ7:12-15 எபே1:3-14 மாற்6:7-13கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவரையும் இன்றைய திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். அன்று திருத்தூதர்கள் இறைப்பணிக்காக அனுப்பபட்டதுபோல பல்வேறு புனிதர்கள் திருச்சபை வரலாற்றில் மறைப்பணிக்காக அனுப்பபட்டதுபோல நாமும் தினமும் அனுப்பபடுகிறோம். அன்றாடம் அழைக்கப்பட்டு இயங்குவதே மற்றவர்களை இயக்குவதே உன் பணி என ஒவ்வொரு திருப்பலியின் இறுதியிலும் அனுப்பபடுகிறோம். நம் செயல்பாடு தொடர்ந்து அவர்பணி ஆற்ற அவரால் இயக்கப்பட இறைப்பலியில் இணைவோம் வரம் வேண்டி செபிப்போம்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன் மூன்று நாடுகளின் திருப்பயணத்தை நிறைவுசெய்யும் தருணம் இது. எக்குவதோர் நாட்டில் குழுமியிருந்த இறைமக்களிடம் “நாம் பயணம் செய்வது ஒரு இயங்கும் செயல்படும் திருச்சபை” நாம் அனைவரும் அன்றாடம் மறைப்பணியாளர்களாக அனுப்படுகிறோம். நம் இறைப்பணியானது பெரிய வார்த்தைசாலங்களிலும் குழப்புகின்ற இறைகோட்பாடுகளிலும் இல்லாமல் மகிழ்ச்சியின் நற்செய்தியை இயங்கும் நற்செய்தியை அறிவிப்போம் மற்றவர்களை இயக்க அனுப்பபடுகிறோம் என்பதை எந்நாளும் உணர்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் நினைவுபடுத்து எடுத்துரைத்தார்.

முதல் வாசகவார்த்தைகளை புரிந்துகொள்ள அதன் அன்றைய தருணங்களை நாம் தெரிந்துகொள்வோம். அழைக்கப்பட்ட ஒரே சமூகம் இறைவன் கொடுத்த ஒரே நாடு வடக்கு மற்றும் தெற்கு எனப்பிரிந்து தெற்கு எருசலைமை மையமாகக்ககொண்ட யூதா எனவும் வடக்கு இஸ்ராயேல் எனவும பிரித்து அழைக்கப்பட்டது. எருசலேம் போன்ற வழிபட இடம் இல்லாது .இஸ்ராயேல் மக்கள் தங்களது பெத்தேலில் உள்ள ஒரு வழிபடும் இடத்தை புனித இடமாக கருதி வழிபடத்தொடங்கினர். பல்வேறு குருக்கள் அரசன் எரோபாமுக்காக பலிசெலுத்தி செயல்பட்டனர். இவர்களுக்கு தலைமை குருவாக அமட்சியா திகழ்ந்தார். இவன் தலைமையில் அரசின் அதிகாரத்திற்காக யாவே இறைவனின் உடன்படிக்கை வாக்குறுதி உடைக்கப்பட்டு மக்கள் பொய் கடவுள்களை வழிபட மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தருணத்தில் யூதாவிலிருந்து இறைவாக்கினர் ஆமோஸ் அனுப்பபடுகிறார் பெத்தேலை நோக்கி இவர் அமட்சியாவை அரசன் ஏரோபாமை மக்களை ஆக்கப்பபூர்வமாக கேள்வி எழுப்பி சவால்விடுகிறார் மேலும் தங்கள் செயல்களை வழிபாடுகளை யாவே இறைவன் பக்கம் திருப்பவில்லையென்றால் காணமாற்போவார்கள் என எடுத்துரைக்கிறார். அமட்சியாவோ கோபத்துடன் ஆவேசத்துடன் ஆமோசை இங்கிருந்து போய்விடு உன்யூதாநாட்டிற்கு செல் அரசன் உன்னை கொல்ல தேடிக்கொண்டிருக்கின்றான் நீ இறைவாக்கினர் இல்லை எங்களுக்கு போதிக்க தலையிடாதே என்றவுடன் ஆமோஸ் பதிலாக நான் பயிற்சிபெற்ற இறைவாக்கினர் அல்ல வழிமரபாக போதிக்கவோ குருவாக செயல்படவோ பிறக்கவில்லை மாறாக நான் ஒரு சாதாரண ஆடுமேய்ப்பவன். ஆனால் யாவே இறைவனால் அனுப்பபட்டவன் நான் அவரால் இயங்குகிறோம் உங்களை இயக்குவேன் என்றார்.

நற்செய்தியில் ஏன் பன்னிரெண்டுபேரை தெரிந்தெடுத்து இருவர் இருவராக இயேசு அனுப்புகிறார்.? மீட்பின் வரலாற்றில் நிலவிய பன்னிரெண்டு குலங்களின் தொடர்ச்சியாக தொடர்பணியாக பன்னிரெண்டு திருத்தூதர்களை தெரிந்தெடுத்து அனுப்புகிறார். இருவர் இருவராக செல்லச்சொல்வது அன்றைய யூத சமூகத்தில் எந்த ஒரு நிகழ்வுக்கும் சாட்சிசொல்ல இரண்டுபேர் தேவை மற்றும் ஒருவர் மற்றவருக்கு உதவியாய் ஆதரவாய் ஆற்றலாய் தோழமையாய் உடன் இருந்து பணிசெய்ய அனுப்பப்பட்டனர்.

மேலும் கைத்தடியை எடுத்துச்செல்வது போகும் பாதையில் எதிர்வரும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவதற்காகவும் மற்றும் பல்வகை பாதைகளில் கடினங்களில் பயணமும் பணியும் தொடரவும் இறுதியாக திருஎண்ணெய் எடுத்துச்செல்வதின் வழியாக சந்திக்கும் பல்வேறு உள்ளங்களுக்கும் மற்றும் சமூகத்திற்கும் இறைஅருளைத்தந்து அவர்களின் உள்ள உடல் நலத்தை பெற்றுத்தரவும் எடுத்துச்செல்ல அழைக்கப்படுகின்றனர்.

திருத்தூதர் என்றால் கிரேக்கமொழியில் அனுப்பப்பட்டவர் அனுப்படுதல் என்பது பொருளாகும். இயேசுவினால் அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் தொடர்ந்து இயங்கவேண்டும் செயல்படவேண்டும் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும் அதன்வழியாக மக்களை இயக்க செயலில் ஈடுபடுத்தவேண்டும் என விரும்பி அதுவே இறைரசின்பணி என ஆணிதரமாக தொடர்ந்து எடுத்துரைத்தார். நாம் இயங்கிகொண்டிருக்கிறோமா அல்லது முடித்துவிட்டேன் என்பணி முடிந்துவிட்டதுஎன உட்கார்ந்துவிடுகிறோமா? என் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இறைசமூகத்திடம் என் அணுகுமுறை எவ்வாறு உள்ளது? நான் அவர்களை பல்வேறு திட்டங்கள் வழியாக செயலாக்கம் நிரம்யி இறைசமூகமாக வளர்க்கின்றேனா?

புனித பிரான்சிஸ் அசிசியார் தன் மடத்து சகோதர துறவியை வெளியே ஒரு ஆலயத்து தியான மறையுரைக்காக அழைத்துச்சென்றார். மடத்தைவிட்டு வெளியே வந்து தெருக்களில் நடக்கின்றபொழுது பேருந்தில் பயணம் செய்தபொழுது ஆங்காங்கே நின்று எதிர்படும் பிள்ளைகளோடு சிரித்துபேசினார் வாலிப உள்ளங்களோடு விளையாடினார். பெரியவர்கிடம் நின்று செவிமடுத்து உரையாடினார். இதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டது. உடன் வந்த சகோதர துறவியோ பொறுமையிழந்து மாலை நேரமாகிவிட்டது எப்பொழுதுதான் நாம் மறைபோதனை ஆற்ற ஆலயம் சென்றடைவோம் எனகேட்டவுடன். பிரான்சிஸ் அவர்களோ எப்பொழுது நாம் மடத்தைவிட்டு வெளியேவந்து எதிரில் சந்தித்தவர்களிடம் பேச கேட்க சிரிக்க விளையாடினோமோ அப்பொழுதே நாம் நற்செய்திபணியில் நம்மை ஈடுபடுத்தி இயங்கினோம். பல்வேறு உணர்வுகளுடன் கேள்விகளுடன் இருந்த அவர்கள் மத்தியிலும் உயிரோட்டத்தை உருவாக்கி அவர்களை இயங்க வைத்தோம் என்றார். திருப்பலியின் இறுதி பகுதி மிக முக்கியமானது காரணம் ஒவ்வொரு திருப்பலியின் நிறைவிலும் நாம் சென்று வாருங்கள் என அனுப்பபடுகிறோம். அனுப்பபடும் நாம் வெளியே சென்று இயங்குகிறோமா? பிறரை இயக்கவைக்கின்றோமா? ஆமென்.