இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு

உறைவிடமாவோம்..  புகலிடம் தருவோம்.!!!

எசே17:22-24 2கொரி5:6-10 மாற்4:26-34



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நம் அருகிலிருப்பவரை உற்றுநோக்கி நற்கருணை விருந்துக்கு மனமுவந்து அழைத்துவரவேற்போம். நற்கருணை திருத்தூதர் புனித பீட்டர் ஜீலியன் தன் பல்வேறு சிந்தனைகளுள் ஒன்றாக “நற்கருணை பீடம் வாழ்வின் பல்வேறு காயங்களினால் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டோரின் புகலிடம்” என்ற ஆழ்ந்த கருத்தை எடுத்துரைக்கின்றார். நாமும் அதே தனித்துவ அன்பின் அரவணைப்பை அனுபவிக்கவே இப்பீடத்தை நோக்கி ஒன்றுகூடி வருகிறோம். இதுவே நம்மை அவரின் பிரிய பிள்ளைகள் என்ற உரிமையை பெற்றுத்தருகிறது. நாமும் பல்வேறு வகைகளில் தனித்திருப்போருக்கு மறுத்தலை அனுபவித்திருப்போருக்கு உறைவிடமாக புகலிடம்தர அழைக்கப்படுகிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் விரும்பி தவிக்கும் இறைப்பீடத்தில் அர்பணமாக்குவோம்.

கடந்த 2014-ல் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து இத்தாலிக்கு பணித்தேடிவந்து அகதிகளாக சென்றவர்கள் 160000 பேர் ஆவர். இதுபோன்று வாழ்வாதரத்திற்கு அகதிகளாக பயணம் செய்பவர்களின் மறுக்கப்படுவது உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வுள்ளங்கள் சந்திக்கும் அனுபவமாகும். முதியவர்கள்…நோயாளிகள்…குடும்ப உறவுகளால் ஒதுக்கப்படுகிறார்கள்……..

பிரிந்த தம்பதியர் திருச்சபையில் இணைந்திருக்க மறுத்தலை அனுபவிக்கின்றனர்….
போதைகளுக்கு அடிமையாகியுள்ள இளைய உள்ளங்கள் வெறுப்புகளை..அவமானங்களை சந்திக்கின்றனர்….
தங்களது பல்வேறு ஆசைக்கனவுகளை நிறைவேற்ற பலரைநம்பி ஏமாற்றப்பட்டு தனிமையை மனஅழுத்தத்தை வாழ்வாக்குகின்றனர்….
. இதுபோன்ற பல்வேறு தருணங்களினால் புறக்கணிப்பட்டு வெறுக்கப்பட்டு மறுக்கப்பட்டு இருப்போர் விரும்புவதெல்லாம் புகலிடம்…உறைவிடமே. இன்றைய இறைவார்த்தைகள் நம்மத்தியில் நமக்குதரப்படும் இறைஇயேசுவின் பிரசன்னமிகு உறைவிடத்தில் அனுதினம் தஞ்சம் புகவும் நம்மையும் புகலிடம் உருவாக்கும் உள்ளங்களாக உயர அழைப்புவிடுக்கின்றன.

. இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்பது கேதுரு மரம்’. யூதாவின் கடைசி அரசன் ஜெகோவாக்கிம் பாபிலோனிய அரசர் நெபுகத்நேசரினால் கி.மு590 ல் தாக்கப்பட்டு யூதா அரசு பறிபோக முப்பது வருட பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு பிறகு எசேக்கியேல் இறைவாக்கினர் முடிவில்லா அரசர் உங்களை மீண்டும் உருவாக்குவார். மீண்டும் உங்கள் வாழ்வை கட்டிஎழுப்புவார். அவரே அன்பின் புகலிடமாக உறைவிடமாக உங்களுக்குயிருப்பார் என யாவே இறைவனின் வாக்குறுதிகளை எடுத்துரைக்கிறார்.

கேதுருமரத்தை அந்த அன்பின் உறைவிடத்திற்கு ஒப்பிடுகிறார். இது அழகான மரம்..உறுதியான மரத்திலானது…..சிவப்பு நிறத்திலிருக்கும்……மேலும் பல்வேறு கட்டடங்கள் உயரமாத உருவாக தூண்களாக தாங்கும் இரும்புகளாக கேதுருமரம் அமைவதுபோல உங்கள்வாழ்வும் கேதுருமரம்போல உயர்த்தப்படும் உறுதிப்படுத்தப்படும் என எடுத்துரைக்கிறார். அனைத்துவிதமான பறவைகள் மற்ற விலங்குகள் வந்து தங்கும் என்பது பல்வேறுதரப்பட்டோருக்கு புகலிடம் அந்த முடிவில்லா அரசரானே மெசியாவே என்கிறார். கேதுருமரம் பழைய ஏற்பாட்டில் பலரை ஏற்றுக்கொள்ள அரவணைத்துவழிநடத்த தரப்படும் சிறந்த உதாரணமாகும். இது ஒருமிகச்சிறிய யாரும் கவனிப்பாரின்றியுள்ள தளிரிலிருந்து உருவாகிறது. ஆனால் மிக உயர்ந்த பலமிக்க மரமாக வளர்கிறது. வழிஇழந்த முகவரிமறந்து முழுஅடையாளம் மறுக்கப்பட்ட அனைத்து இஸ்ராயேல் மக்கள் மற்றும் அவர்கள் பாதையில் வருவோர் முடிவில்லா அரசராகிய மெசியாவின் உறைவிடத்தில் புகலிடமாவர்.

இன்றைய நற்செய்தியில் திருத்தூதர்களுக்கு உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு இயேசுவின் உற்சாகவார்த்தைகளாகவும் மேலும் உரோமையின் நீரோ மன்னனின் கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலின் வேதனையின்பொழுது கிறிஸ்தவசமூகத்திற்கு சகோதர தைரியத்தை இவ்வுதாரணங்களில் மாற்கு எடுத்துரைக்கிறார். கடுகுவிதை மிகச்சிறியது பார்வைக்குபடாதது மறைந்திருக்ககூடியது ஆனால் வளர்ந்தால் வானத்துபறவைகள் பலவற்றிற்கும் வந்து தங்க இளைப்பாற புகலிடமாகயிருக்கும். வளர்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ சமூகம் உறுதியானது உயர்ந்து வளரும். திருமுழுக்கின் வழியாக அனைவருக்கும் புகலிடமாக உறைவிடமாக அமையும்.

மிகச்சிறிய பரிச்சயமில்லாத அனுபவமில்லாத பதினொரு திருத்தூதர்களோடு திருச்சபை துவங்கியது.இவர்கள் பார்வைக்குபடாத கேதுருமரத்தளிர்போலவும் மறைந்திருக்கும் சிறிய கடுகுமணியைப்போலவும் இருந்தாலும் திருச்சபை வளர்ந்து உலகளாவியஅளவில் பல்வேறு மொழி கலாச்சார மற்றும் தேசங்களில் உயர்ந்தோங்கியிருக்கிறது. திருச்சபை பலம்நிறைந்த சிகப்புநிற கேதுரு மரம்போல உயாந்தோங்கியிருக்கிறது. பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட அனைவரையும் அரவணைக்கும் பரந்த கடுகுமரமாக அன்பு அடைக்கலமாக புகலிடமாக திகழ்கிறது.

“திருச்சபை உறுதியாக வளர்ந்துகொண்டிருக்கிறது” இது திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஆகஸ்டு18 2011 ஸ்பெயின் நாட்டில் உலக இளையோர் தின ஒருங்கிணைப்புக்கு சென்றிருந்தபொழுது திருச்சபையின் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாக பார்த்த பத்திரிகை மற்றும் அனைத்து சமூக தொடர்பு நிருபர்களுக்கு இதையே தெளிவாக பதிலாக தந்தார்

. 3லிருந்து 5 லட்சம் வரை உயிர்களை11 நாடுகளில்பலிவாங்கிய டிசம்பர் 26 2004 சுனாமியில் அன்பின் புகலிடமானவர்கள் பரமேஸ்வரன் மற்றும் சுடாமணி தம்பதியர். நாற்பது வயதுள்ள இவர்கள் தங்கள் மகன் கிருபாசன் மற்றும் மகள்கள் 12வயது ராக்ஸ்னையா 9வயது காருண்யா இவர்களுடன் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த தருணம் பேய்அலை சுனாமி மூன்றுபிள்ளைகளையும் அடித்துசென்றது கண்ணிமைக்கும் நேரத்தில். சொல்ல இயலா இழப்பை தாங்கமுடியாது பல்வேறு மனஉளச்சல்கள் தற்கொலை எண்ணங்கள் கோபமிகு போராட்டங்கள் என்றுயிருந்தபொழுது தங்கள் பகுதியிலே பெற்றோர்களை இழந்து பரிதவித்துதிரிந்த பிள்ளைகளை பார்த்தபொழுது “நாங்கள் இறந்திருந்தால் எங்கள் பிள்ளைகள் இந்த குழுவில் அலைந்துதிரிந்திருப்பார்கள்” நாங்கள் இவர்களுக்கு புகலிடமாகவேண்டும் என விரும்பி முடிவுஎடுத்து 6பெண்பிள்ளைகள் மற்றும் 14 ஆண்பிள்ளைகள் என மொத்தம் 20 பேருக்கு புகலிடமாக அன்பின் உறைவிடமாக தங்கள் வாழ்வை அமைத்து சாட்சிபகர்கின்றனர்.

நாம் பிறருக்கு அன்பின் உறைவிடமாக அரவணைக்கும் புகலிடமாக வளர தயரரா?-ஆமென்.