இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழா

நடமாடுவோம்…. நற்கருணை இயேசுவோடு….!.

வி.ப24:3-8 எபி9:11-15 மாற்14:12-16 22-26கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவருக்கும் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவின் வாழ்த்துக்கள். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பவுல் சொன்னது என் நினைவுக்கு வருகிறது..”நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது”. திருச்சபையின் பிரிய உறுப்பினர்களாகிய நாம் இப்பெருவிழாவில் வீதிகளில் நற்கருணை பிரசன்னத்தோடு பவனி செல்வதுபோல என்றும் நற்கருணை இயேசுவோடு நடமாடி சாட்சி பகர சமூகமாக குடும்பமாக உறுதி எடுப்போம்.

கிறிஸ்தவ அழைப்பிற்கு பிராமாணிக்க பற்றுதலோடுயிருந்ததற்காக 21வருடங்களாக சிறையிலிருந்த சீன நாட்டு பேராயர் டோமினிக் டாங் மிக தைரியத்தோடு ஆற்றுதலோடு ஜந்துவருட இருண்ட அறையிலிருந்ததருணத்தில் இரண்டு மணிநேரம் தான்விரும்பியதை செய்ய வாய்ப்புகொடுக்கப்பட்டு வெந்நீரில் குளிக்கமணுமா……உடை மாற்றனுமா…..வெளியில் நடைபயிற்சி செய்யனுமா…..யாருக்காவது தொலைபேசியில் பேசனுமா….கடிதம் எழுதனுமா…..என்று கேட்டபொழுது ஆயர் டோமினிக் பதில்சொன்னது நான் நற்கருணை திருப்பலி நிறைவேற்றவிரும்புகிறேன் என்பதாகும்.

வியட்னாமில் இயேசுசபையை சார்ந்த ஜோசப் டோன் ஜந்து ஆண்டுகளாக சிறைக்கைதியாகயிருந்தபொழுது மறைவாக போரட்டங்களுக்கு மத்தியில் சககைதிகளோடு இரவில் பலசிறைக்கைதிகள் உறக்கத்திலிருக்கும்பொழுது திருப்பலி நிறைவேற்றியதை ஆனந்த கண்ணீரோடு இவ்வாறு நினைவு கூறுகிறார். “என் போர்வையே என் பீடமானது…என் சிறைஉடையே என் திருப்பலி ஆடையானது…..நான் அத்தருணத்தில் மனிதத்தோடும் அனைத்து படைப்புகளோடும் ஒன்றித்துபோனேன்”. என்பதே.

இங்கிலாந்தின் புனித ஜோன் ஆப் ஆர்க் 1431-ல் சிறையிலிருந்தபொழுது மரணதண்டனையான எரிகின்ற நெருப்பிற்கு அழைத்துச்செல்வதற்கு முன்பாக உங்களுடைய இறுதி விருப்ப வேண்டும் உணவு என்ன என வினவியபொழுது அவள் சொன்னது நற்கருணை என்றாள்.

எவ்வாறு இவர்களின் அன்றாட வாழ்வின் நடைமுறையோடு நற்கருணை ஒன்றானதோ அதுபோல நாமும் நடமாடவேண்டும் நற்கருணை இயேசுவோடு என்ற அழைப்பை இன்றை திருவிழா நமக்கு சொல்லி அழைப்புவிடுக்கிறது

. மூன்று வாசகவார்த்தைகளும் முழுமையான பலி நிறைவுபெற்ற அன்பின் வாக்குறுதி நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் இயேவே என்பதை எடுத்துச்சொல்கிறது. இரத்தமில்லாத பலியில்லை. யூத எபிரேய வழக்கத்தில் இரத்தத்தில் தான் மனித உயிர் இருக்கிறது என பெரிய நம்பிக்கை நிலவியது. எனவே பலிசெலுத்தும் தருணத்தில் இரத்தம் சிந்தப்பட்டது பொழியப்பட்டது தெளிக்கப்பட்டது. துவக்கத்தில் இறைவன் தனிப்பட்ட நபர்களை அழைத்து அவர்களோடு தன் அழைப்பு அன்பு உடன்படிக்கையை செய்தார்.அபிராம்-ஈசாக்-யாக்கோபு போன்ற தலைவர்களாவர். பின்பு இனத்தோடு மோசேவழியாக முழு இஸ்ராயேல் சமூகத்தோடு நாட்டு மக்களோடு உடன்படிக்கைசெய்தார்.

இன்றைய முதல் வாசகவரிகளில் நாம் காண்பதுபோல உடன்படிக்கையின் பலகைகளைபெற்றபிறகு மலைஅடிவாரத்தில் நன்றியுணர்வோடு நன்றிபலியாக பாஸ்கா இரவு கடத்தலில் கிடைக்கப்பெற்ற தலைப்பிள்ளைகள் பன்னிரென்டுபேரை எரிபலி செய்ய அனுப்பி கொண்டு வந்த இறைச்சியை உணவாகவும் அதன் இரத்தத்தை சிறிது பீடத்தின்மேலும் மற்றதை கூடியிருப்போர் மேலும் தெளித்தார். எரிபலியின் வழியாக எரியும் புகை இறைவனை சேர்ந்தடைந்து தொடுகிறது தங்கள் வேண்டுதல் நன்றி என எண்ணினர். கொல்லப்பட்ட விலங்குகளின் வழியாக செலுத்தப்பட்ட பலிகள் சடங்காக மாறின பலிசெலுத்தும் குருக்கள் அர்த்தத்தை இழந்தனர். இரவும் பகலும் கொல்லப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டது. எருசலேம் கண்ணுக்கு தெரிவதற்கு முன்பு எருசலேமின் இரத்த வாடை உணரப்பட்டது என்றுசொல்லப்பட்டு வந்தது.

எனவே நற்செய்தியில் இயேசு செயலால் உடன்படிக்கையை முழுமையாக்குகிறார்.. எடுத்து…நன்றிசெலுத்தி…பிட்டு…அனவைருக்கும் கொடுத்து உண்ணுங்கள் …பருகுங்கள் என்ற அனைத்தும் வார்த்தைகளை கடந்த அர்த்தமுள்ள செயல்களாகும்.

பழைய உடன்படிக்கை….புதிய உடன்படிக்கை….என்ன வேறுபாடுகள்?
பழையது கறைகளோடு குறைந்துபோனது….புதியது நிறைவானது முழுமையானது…
பழையது வெளிப்புற சுத்தம் கொடுத்தது…புதியது உள்ளத்து தூய்மை பெற்றுதந்தது…
பழையதில் விலங்குகள் கட்டாயப்படுத்தி கொல்லபட்டன…புதியதில் சுயவிருப்பத்தோடு இயேசு தன்னையே பலியாக்கினார்...
பழையது சட்டத்தின் கட்டாயம்…புதியது அன்பின் செயல்…
பழையதில் மோசே கருவியாக செயல்பட்டார்……புதியதில் இயேசுவே பலிசெலுத்துபவராக..பலிபொருளாக பலிபீடமாக ஆனார்….
பழையது முறிந்த உடன்படிக்கை…..புதியது முடிவில்லா உடன்படிக்கை…..
நான் சொல்லவிருப்பது நாம் கொண்டாடும் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவின் வரலாற்று பின்னணி அற்புத புதுமை நிகழ்வாகும். 1263-ம் ஆண்டு ஜரோப்பிய தேசத்து செக்குடியரசின் பிராகுவேயிலிருந்து ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றிய பல்வேறு கேள்விகள் குழப்பங்கள் நம்பிக்கை குறைபாடுகள் சிந்தனைகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் இத்தாலியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அத்திருப்பலியில் அர்ச்சிப்பு வார்த்தைகள சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாகமாறி இரத்தம் கசிய துவங்கியது. .இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்குப்பிறகு 1264-ம்ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பன் இதன் நினைவாக செய்தியாக இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை சிறப்பிக்க கட்டளைபிறப்பித்தார். இந்த அற்புதநிகழ்விற்கு பிறகுதான் அவ்வாலயத்தில் துவங்கி பல இடங்களில் நற்கருணை பவனி பகிரங்கமாக தெருக்களில் பயணமாகி வாழும் இயேசு நம்மத்தியில் நடமாடுகிறார் என்ற நற்கருணை இயேசுவோடு மக்கள் அன்றாட வாழ்வில் நடமாடதொடங்கினர். 2011-ல் மே மாதத்தில் இந்த அற்புத பிரசன்னத்தில் திருப்பலியில் இணைந்து செபித்தது புல்லரிக்ககூடிய முழுமனதை தொடக்கூடிய உணர்வு அனுபவத்தைதந்தது. இன்றும் அந்த இரத்தகறைப்பட்ட கார்ப்பரோல் (விரிப்பு துணியும்) குருவானவர் திருப்பலியாற்றிய இடமும் பாதுகாக்கப்பட்டு நம்பார்வையில் படும்பொழுது புரியஇயலா உணர்வையும் புதுவாழ்வில் புதுஅழைப்பை பெற்று தருகிறது.

நான் அன்றாட வாழ்வில்….அனுதின நிகழ்வுகளில்…..சந்திக்கும் உறவுகளோடு…போராடும் தருணங்களில்…நற்கருணை இயேசுவோடு நடமாட தயாரா!-ஆமென்.