இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
மூவொரு இறைவன் திருவிழா

1+1+1…= ஒரே இறையருள்….!.

இ.ச4:32-34 39-40 உரோ8:14-17 மத்28:16-20கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நம்மை ஒன்றிணைந்து சேர்த்திருக்கும் மூவொரு இறைவனின் திருநாம விழாவின் வாழ்த்துக்களும் ஆசீர்களும் நம் அனைவர் இல்லங்களிலும் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் பழகம் நம்அனைத்து உறவுகளிலும் நிரம்பியிருப்பதாக. நம் அன்றாடவாழ்வில் மற்றும் செபவழிபாடுகளில் நாம் உச்சரிக்கும் சிலுவைஅடையாளம் தந்தை மகன் தூய ஆவியானவரின் அழைப்பு நம்மில் அவர்களின் ஒன்றான பிரசன்னத்தை என்றும் உணர்த்தி நம் விசுவாசப்பயணத்தையும் ஆழப்படுத்த திருப்பலியில் இணைந்து செபிப்பபோம்.

குடும்பங்களுக்கு இடையே எத்தனையோ பிரிவுகள்…… இணையவிரும்பாமலிருக்கின்றன..
பல்வேறு நிறுவனங்களுகிடையே போட்டி பிரிவினைகள் தொடர்கின்றன…..
பல்வேறு நாடுகளுக்கிடையே பிரிவினைகள்…பதவிக்காக உருவாகின்றன…..
சமயங்களுக்கிடையே பிரிவினை வேறுபாடுகளினால் உதயமாகின்றன……
பிரிவினை சகோதர இயக்கங்கள் தோன்றியிருப்பினும் கத்தோலிக்க விசுவாசத்தை இத்தனை ஆண்டுகளாக உலகப்போர்கள் இரண்டாம் வத்திக்கான் மாற்றங்கள் பல்வேறு எதிர்ப்பு தாங்கங்கள் மத்தியில் நிலைநிறத்தி ஒன்றாக வைத்திருப்பது எது…என்ன? ஆய்வு வெளிப்படுத்துகிறது உலகமொத்தத்தில் 2012-ம் ஆண்டு கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 1.14% சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-ம் ஆம் ஆண்டு 1.09% சதவீதம் அதிகரித்துள்ளது. நம்மை திருச்சபையை நம் விசுவாசத்தை அனைத்து தாக்கங்கள் போரட்டங்கள் எதிர்ப்புகளை கடந்து நிமிர்ந்து உயர்ந்து ஒன்றித்திருக்க வைப்பது தந்தை மகன் தூய ஆவியின் ஒன்றித்த இறையருளே ஆகும். திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில் நாம் ஒன்றாகயிருப்பது சாத்தானுக்குத்தெரியும். நம்மை பிரிக்கமுயற்சிப்பதே அதன் வேலைஆகும். நாம் உச்சரிக்கும் மூவொருஇறைவன் எவ்வாறு ஒன்றித்து நம்மை ஒன்றிணைந்து செயல்படவைக்கிறார்?

நாம் இன்றைய நற்செய்தியில் அறிவிக்ககேட்டதுபோல “நீங்கள் போய் எல்லா இனத்தவரையும் சீடராக்கி தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்” என்ற கட்டளை ஒன்றிணைந்த வாழ்வுக்குவிடுக்கப்படும் அழைப்பு ஆகும். மூவொரு இறைவனைப்பற்றிய புதிய ஏற்பாட்டின் தெளிவான வெளிப்பாடு இவ்வரிகளே எனலாம்.

இன்றைய முதல் வாசகத்தின் இணைச்சட்ட பகுதிகள் பாபிலோனிய கைப்பற்றுதலின்பொழுது கி.மு 587-539 ல் எழுதப்பட்டதாகும். பல்வேறு குழப்பங்கள் தீமைகளினால் அரசர்கள்-குருக்கள்-இறைவாக்கினர்கள்-பணிகள் பயனில்லாத தருணத்தில் மக்கள் இறைவன் சாயலை மறந்து உரிமைகளை விடுத்து திரிந்திருந்தபொழுது மோசேயின் இறுதிசொற்பொழிவு நினைவுகூறப்பட்டு எடுத்துரைத்து சொல்லப்பட்டதாகும். ஆறுதலும் உற்சாகமும் தொடர்அழைப்பும் நிரம்பிய வார்த்தைகள் மோசேயின் கி.மு1250 வார்த்தைகள். நீங்கள் தேடிஅலையும் பொய்கடவுள்கள் அர்த்தமில்லாதவை. யாவே இறைவனைப்போல் உங்கள்மேல் என்றும் அக்கறையுள்ள இறைவன் யாரும் இல்லை ஒன்ணைந்து ஒன்றாகயிருங்கள் என்ற அழைப்பே ஆகும்.

1+1+1 எவ்வாறு ஒரே இறைவன் ஒரே இறையருளாகும்? இது நமது அறிவினால் புரிந்துகொள்ளக்கூடியது அல்ல மாறாக நம் இதயப்பூர்வவிசுவாசத்தினால் அனுபவரீதியாக உணரக்கூடியதொன்றே எனலாம். புனித சியன்னா கத்தரீனம்மாள் தன் மூவொருஇறைவனின் அனுபவத்தை முடிவில்லா மூவொரு இறைவா கடலின் ஆழத்தைப்போல நீர் புரிந்துகொள்ளஇயலா மறைபொருள். எவ்வளவு அதிகமாக ஆழமாக தேடுகிறேனோ அவ்வளவு நிறைவாக கிடைக்ப்பெறுகிறோம் கிடைக்க கிடைக்க அதிகமாக அறிய தேட தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உணவுமேசையே தந்தையானவர் உணவு மகன் இயேசு கிறிஸ்து அங்கு அனைத்துபிரசன்னத்தையும் வெளிக்ககொணர்ந்து பிரசன்னமாகயிருப்பவர் தூயஆவியானவர்” என்கிறார்.

புனித சிரில் கதிரவனின் கதிர்வீச்சுகளுக்கு தந்தையாகிய கடவுளையும் இதிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை மகன் கிறிஸ்துவுக்கும் இங்குநிலவும் வெப்பமே தூயஆவியார் என சொல்லி ஒரே கதிரவன் நம் ஒரே இறைவனைப்போல என்கிறார். புனித வியான்னி மரிய அருளப்பர் பீடத்தின் மேல வைக்கப்படும் எரியும் திரிகளுக்கும் ரோஜா பூக்களுக்கு ஒப்பிட்டு மூவொரு இறைவனை எடுத்துச்சொல்கிறார். எரியும் திரியில் நிறம் வடிவம் வெப்பமிருக்கிறது ஆனால் காணஇயலாது. ரோஜா பூவிலும் மணம் வடிவம் நிறமிருக்கிறது காண இயாலாதது. அதுபோல நாம் அனுபவித்து உணரவேண்டியதே மூவொரு இறைவன் என்கிறார்.

ஆலயமணிகள் மூன்றுமுறை ஒலித்து மூவொருஇறைவனின் அழைப்பை வெளிப்படுத்துகின்றன.. நாம் அனைத்து செபங்களையும் மூவொரு இறைவனின் பெயரால் துவங்கிசெபிக்கிறோம். அனைத்து அருட்சாதனங்களும் மூவொரு இறைவன் திருநாமத்தில் நிறைவேற்றப்படுகிறது. அருட்தந்தையர்கள் மூவொருஇறைவனின் திருநாமத்தில் ஆசீர் வழங்குகின்றனர். ஒவ்வொரு திருப்பலியில் நாம் பயன்படுத்தும் ஆசீரும் அழைப்பும் வாழ்த்தும் 2கொரி13:11லிருந்து எடுக்கப்பட்டதாகும். கொரிந்து சமூகமக்கள் பல்வேறு பிரிவுகளாக கருத்து வேறுபாடுகளினால் செயல்களினால் இருந்தது புனித பவுலடியாருக்கு வருத்தத்தை வலியை துயரத்தை தந்தது பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்து சவால்விடுத்துள்ளதை 2கொரி13:11-13 இறைவார்த்தைகள் வெளிக்கொணர்கிறது.

“சகோதர சகோதிரிகளே இறுதியாக நான் உங்களுக்குச்சொல்வது மகிழ்ச்சியாயிருங்கள் உங்கள் நடத்தையைச் சீர்படுத்துங்கள் என்அறிவுரைக்குச் செவிசாயுங்கள் மனஒற்றுமை கொண்டிருங்கள் அமைதியுடன் வாழுங்கள் அப்பொழுது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள் இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக”. கொரிந்து கடிதபுத்தகத்தில் காணலாம். இறுதியாக அங்கிருந்து கிளம்பும்பொழுது மூவொரு இறைவனின் ஆசீரைஎடுத்துச்சொல்லி அவர்களைப்போல ஒன்றித்துவாழ அழைப்புவிடுகிறார். இது நாம் ஒவ்வொருமுறை திருப்பலிக்கு வந்து பங்கெடுக்கும்பொழுது நாம் குடும்பமாக சமூகமாக சகோதரமாக இறைவன்பிள்ளைகளாக வாழவேண்டிய ஒன்றிப்பை நமக்கு உணர்த்தி ஆசீர்அளிக்கிறது;

புனித பிரான்சிஸ் சவேரியார் என்னில் வாழ்கின்ற தூயஆவியாரே நான் உம்மை போற்றுகின்றேன் ஆராதிக்கின்றேன் வழிபடுகின்றேன் அன்புசெய்கின்றேன்”-ஆமென்