இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் - உயிர்ப்பின் 6-ம் ஞாயிறு

என் நண்பர்கள்…!.

தி.ப10:25-26 34-35 44-48 1யோவா4:7-10 யோவா15:9-17கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இறைதிருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
. அன்னைமார்களின் தினமான இன்று நம் தாய்மார்களுக்கு நன்றிகூறி.
. அம்மா என்ற மொழியோடு விசுவாச பாடம்புகட்டி பாதைகாட்டிய.
. அவர்களன்பு நம்மில் தொடர்ந்து பிறரில் வளர வரம்கேட்டு இணைவோம்.
..
. நாலுபேர் இணைந்து ஊர்சுற்றி புரட்சிசெய்வது நட்பு அல்ல.
. நாலுசுவற்றிற்குள் உட்கார்ந்து நாற்பது பேருடன் பேஸ்புக்கிலும்.
. நம் அடையாளம் தெரிவிக்காது செய்யும் சேட்டிங்கும் நட்பு அல்ல.
. காரியம் ஆவதற்கு துணைபோவதுபோல் சின்னத்திரை தொடர்களிலும்.
. கானாபாட்டோடு வண்ணத்திரையில். நாம் காண்பது நட்பு அல்ல.
. துணையாக பலமாக பலமுமாக தோளாக இருப்பதே தோழமை.
..
. இயேசு தன்நீணட இறுதிஉரையில் பாடமாக பகிரங்கமாக பகிர்கிறார்.
. முன்செல்லும் வழிகாட்டி அல்ல நான் பயிற்றுவிக்கும் குரு அல்ல நான்.
. மரமாக கிளையாக இணைந்து இருங்கள் என்னில் நிலைத்து இருங்கள்.
. அன்பே ஆணிவேராக அமையட்டும் அடையாளமுமாக காணப்படட்டும்.
. அடிபணியும் பணியாளராக அல்ல ஆர்வமிகு சீடராக அல்ல நீங்கள்.
. அனைத்துமாக அடியேனின் பிரியமிகு என்றும் பிரியா என் நண்பர்கள்.
..
. திருத்தூதர்களில் இறுதியாக இயற்கையாக முதிர்ந்த வயதில் இறந்தயோவான்.
. நினைவுகுறைந்து பார்வைமங்கி இறைச்சமூகத்தில் கூடியபோதெல்லாம்.
. நிலையாக உறுதியாக சொன்னவார்த்தைகள் பிறரை அன்புசெய்யுங்கள் என்பதே.
. முதல் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்கள் விசுவாசிகள் புனிதர்கள் என்றும்.
. இறைவனின் அடிமைகள் கிறிஸ்துவின் அடிமைகள் எனவும் அழைக்ப்பட்டனர்.
.. இக்கூற்றுக்கு பதிலாக நாங்கள் இயேசுவின் இணைந்த நண்பர்கள் என்கிறார். .
..
. அபிரகாமும் மோசேயும் இறைவனின் நண்பர்களாக அணுகப்பட்டதை.
. 2குறிப்பேடு20:7 வி.ப33:11-12 ஏசாயா41:8 நமக்கு எடுத்துக் கூறுகிறது.
. பேதுருவும் முதல்வாசகத்தில் இருமுறை மறுத்தும் தொடர்ந்து தளராது.
. தன்காலில் விழுந்த நூற்றுவதலைவன் கொர்னேலியுவை தோள்தொட்டு.
. நானும் உன்போன்று மனிதன் நாம் இயேசுவின் நண்பர்கள் ஆவோம் என.
. குடும்பமாக திருமுழுக்குபெறுவது புறஇனத்து மக்களுக்கு சிறந்து சாட்சியே.
..
. இயேசுவின் நட்பு எந்நாளும் எத்தருணத்திலும் உடன்இருப்பது.
. இக்கட்டான சமயங்களில் தோள்கொடுத்து இணைந்திருப்பதாகும்.
. உலகம் முடியும்வரை எந்நாளும் உங்ளுடன் உடன் இருப்பேன்.
. உலகின் இறுதிஎல்லை வரை நற்செய்தியும் இறையரசும்.
. பரந்து பகிரப்பட்டு கட்டப்படட்டும் நான் உடன் இருப்பேன் என்ற.
. புனிதர்கள் மறைசாட்சிகள் உணர்நது அனுபவித்த நட்பு இது.
..
தாய்மார்கள் தினமான இன்று நம்முதல் நட்பு நம் அன்னைதான்.
. நம் அனைவரின் முழுமையான நட்பு. நம் இயேசு இறைமகனே.
. பதினெட்டு வருடங்களாக இதயத்தில் தாங்கி நினைவில் நிறுத்தி.
. பரமன் பாதத்தில் பற்றி வேண்டியதன் பலனே அகுஸ்தீனாரின் புதியவாழ்வு.
. அவரின் திருமுழுக்கு நிறைவின்பொழுது அவர் மனம்நிறைந்து சொன்னது.
. இதயம் முழுமைபெற்றாகிவிட்டது நான் இறைவனோடு இணைய தயார்.
..
. தன்னைமறந்து தன் பிள்ளையை நினைப்பவள் தாய்.
. தன்பிள்ளையின் கடந்தகாலத்தை ஏற்று இன்றையநாளில் புரிந்து.
. நாளைய நாளிலும் நம்புபவள் அன்னையவளே.
. தனித் தாயாக போரடும் அனைவருக்கும் இறைத்துணை வேண்டுவோம்.
. நம் என்றும் இயேசுவின் நண்பர்கள் என உடன்செல்வோம்.பலரும்
. நண்பர்களாக உருவாக விசுவாசத்தில் உயர்வாக பணிதொடர்வோம்-ஆமென்.
..
.