இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பாஸ்கா காலம் - உயிர்ப்பின் 5-ம் ஞாயிறு

எங்கே.. என் தொடர்பு இணைப்பு…....!

தி.ப9:26-31 1யோவா3:18-24 யோவா15:1-8



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இன்றைய இறைவிருந்திற்கு பிரியமுடன் உங்களை அழைக்கின்றேன்.
இனிய உறவுகளாய் நம்மை சகோதரமாக இனணக்கும்
இறைபிள்ளைகளாய் நம்மை தொடர்புபடுத்தும் நற்கருணை பீடம்
இறைஇயேசுவோடு இணைந்திருந்து நிலைத்திருக்க வரமருளட்டும்

தொடர்பு எல்லைக்குவெளியே இருப்பதால் தொடர்புகொள்ள இயலாது
தொடர்பு இணைப்பு பழுதடைந்துள்ளது பின்னர் தொடர்புகொள்ளவும்
இவைகள் நம் பொறுமையை சோதிக்கின்ற நாம் கேட்கின்ற பதில்கள்
இதற்காகவே நம் ஆவலை தூண்டுகின்ற பல்வேறு விளம்பரங்கள்
இந்தியாமுழுவதும் தெளிவான தொடர்புக்கு வோடாபோன் விரைவீர்
கிராமங்களெங்கும் கிடைக்ககூடிய இணைப்பு ஏர்டெல் இலவச இணைப்பு

அலைபேசியை நம்பி கைபேசியோடு மட்டும் இணைந்திருந்து
அனைத்து உறவுகளின் இணைப்பை மறந்து இருப்பது
அழிவை நோக்கிய பாதைக்கு கொண்டுசேர்க்கும்
அன்றாட மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறித்துவிடும்
அநேக உறவுகளை நம்வட்டத்திலிருந்து பிரித்துவிடும்
அர்த்தமில்லாத தனித்துவ எண்ணத்தை நம்மில் உருவாக்கிவிடும்

தொடர்புகொள்ளுதல் நிறைவான இணைப்பை ஏற்படுத்தும்
இணைப்பு நிலையான உடன் இருத்தலை உறுதிசெய்யும்
உறவுகளோடு உள்ளங்களோடு இறைஇயேசுவோடு என்றும்
இணைந்து இருத்தல் பல பலன்கள் பதில்களை பெற்றுதரும்
வெறுமையம் வெற்று உணர்வும் எதிர்மறை எண்ணங்களும்
இணைந்து இல்லாததால் தொடர்பின்மையினால் தோன்றுபவைகளே

நற்செய்தியாளர் யோவான் முதல் நூற்றாண்டின் இறுதியில்
நன்மையான செய்திகளை ஆழமான கருத்துகளை அடையாளமொழியில்
நிஜ நிகழ்வுகளை நம்முன் மறுநிகழ்வுகளாக எடுத்துரைக்கிறார். இயேசுவின் இறுதிஇரவுஉணவு மேலறை நிகழ்வு நான்கதிராமாக
இறைதந்தையோடு என்றுமுள்ள உண்மையான தொடர்பையும்
தான்அழைத்த பாசமிகு சீடர்களோடுள்ள நெருக்கத்தையும் சொல்கிறது

இறைத்தந்தையின் தொடர்பும் இணைப்பு இறுக்கம் எத்தகையது
நானே……நானே……..(வாழ்வுதரும் உணவு-நல்ல ஆயன்-வழி-பாதை..உண்மை
உயிர்ப்பும் உயிரும்-ஒளி-திராட்சை செடி)
இத்தகைய ஏழு உறுதிபடுத்தும் பயன்பாட்டுச்சொல்கள்
இறைத்தந்தையிடமிருந்து மீட்பைகொண்டு வந்துள்ள மெசியா
மீட்பின்வரலாற்றில் முன்குறித்துக்காட்டப்பட்ட இறைமகன்இவரே
உடன்படிக்கையின் வாக்குறுதியின் நிறைவும் முழுமையும்

என்னோடு எந்நாளும் இணைந்திருத்தல் கனிகளையும் குணங்களையும்
நலன்களையும் பலன்களையும் அருளையும் ஆசீரையும் பெற்றுதரும்
இறையவனோடு தொடர்பின்மை அழிவை பிரிவை ஏற்படுத்தும்
தொடர்பைமறுத்து இணைப்பைஅறுத்து அழிவை தேடிய யூதாசு
மற்றனைத்து சீடர்களுக்கு பாடமாகயிருக்கவிரும்பி வெளிப்படுத்துவதே
இறைஇயேசுவின் இந்த இறுதிபிரியாவிடை நீண்ட மனப்பகிர்வாகும்

இணைத்திருத்தலுக்கு பின்னிபிணைந்திருக்கும் திராட்சைகொடி பாடம்ஏன்
அத்திமரம் – ஒலிவமரம் – திராட்சைசெடி மத்தியகிழக்கு நாடுகளில் வளர்பவை
படர்ந்து வளர்ந்து பரந்து பின்னிபிணைந்து கிளைகளாக கொடிகளாக
பிரிவு முறிவின்றி தோன்றுவதே திராட்சை செடிகளும் கொடிகளும்
இவைகள் எடுத்துக்கொள்ளும் தண்ணீரும் உரமும் வேரிலிருந்து
கிளைகளுக்கு கொடிகளுக்கு பரந்து பழங்களை பலனாகதருவது அருமை

இயேசு திராட்சை செடி நாம் திராட்சை கொடிகள் இணைப்பும் தொடர்பும்
நெருக்கத்தை உற்சாகத்தை பிரசன்னத்தை பலனை நிறைவாகத்தரும்
இறைதந்தை பெயரிட்ட இஸ்ராயேல் திராட்சைசெடி உதறிச்சென்றது
இக்கட்டான அழிவுகளை முடிவுகளை சந்தித்து மீட்புக்கு ஏங்கியது
இணைந்து இருக்கின்றேன் உங்களோடு என் இறைதந்தையோடு என்ற
இறைஇயேசுவோடு தொடர்புபடுத்தி இணைவோம் இறைமக்களை தொடுவோம்

திருத்தந்தை புனித 2-ம் ஜான்பவுல் துன்பநோயில் இயங்கசக்தியின்றி இருக்கையில்
பல்வேறு கருத்து வேறுபாடுகள் நேர்மறையாக சொல்லப்பட்டன இத்தருணத்தில்
திருத்ததந்தை சொன்ன பதில் நான் இயேசுவை தொட்டுக்கொண்டிருக்கின்றேன் என்பதே
ஆசீர்பெற்ற அன்னைதெரேசா சொன்னது இறக்கும் துயரத்திலிருக்கும் உள்ளங்களை
தொட்டுக்கொண்டு தாங்கிகொண்டிருக்கையில் நான் இயேசுவோடு இணைந்திருக்கிறேன்
இறைத்தொடர்பை பிறருக்கு தந்துகொண்டிருக்கிறேன் என்பதாகும்.

நான் இறைஇயேசுவோடு இணைந்திருக்கின்றேனா? நிச்சயம் பலன் கொடுப்பேன்
நான் உறவுகளோடு தொடர்பிலிருந்தால் திருச்சபையோடும் ஒன்றித்திருப்பேன்
என் தொடர்பு இணைப்பு அலைபேசியிலும் வலைதளத்திலும் மட்டுமல்ல
எந்நாளும் உறவுகளோடு உண்மை இறைவோடு இணைந்திருக்கட்டும்-ஆமென்.