இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பாஸ்கா காலம் - உயிர்ப்பின் 4-ம் ஞாயிறு

நான் அறிவேனா…!.........

தி.ப4:8-12 1யோவா3:1-2 யேவா10:11-18



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
நல்ல ஆயன் வாரத்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
.
நம்மை அழைக்கும் அவர்வழி நம் தொடர்பாதையாகவும்.
நமக்குரிய பொறுப்பில் நம் மந்தைக்கு பராமரிப்பு பாதையாக.
நாள்தோறும் உணர்ந்து செயல்பட்டு உடன்வழி நடப்போம்.
.
பெயரைக்கேட்க வேண்டாம் காரணம் அதை நான் கேட்டதில்லை.
பெற்றோர்கள் நான்காவதவனே என்றே அழைப்பதால் 4ம் எண் நான் என அறிவேன்.
வளர்ந்தவனே எனநண்பர்கள் அழைப்பதால் உயரம் என் அடையாளம் என அறிவேன்.
விளங்காதவனே என ஆசிரியர் கூப்பிடுவதால் வேதனையோடு என்னை அறிவேன்.
சிறைக்கைதிக்கும் எனக்கும் என்னவித்தியாசம் எனக்கு புரியவில்லை.
சிதறிப்போன என்வாழ்வு சீராகுமா என எனக்கு தெரியவில்லை.
சுற்றும் உலகில் சிலையாகிப்போன சொந்தங்கள் விலைபேசுகின்றன.
செம்மையான வாழ்வின்றி என்னைப்போல் அறியப்பட சொந்தமாகப்பட.
சிறப்பாக உடன்வழிநடக்க எதிர்பார்த்திருக்கும் உள்ளஙகள் எத்தனையோ பேர்.
.
முதல் வாசகத்தில் பேதுரு கட்டுகிறவர்கள் அன்று பொறுப்பை விலைபேசிய தலைவர்கள்.
முதன்மையான இயேசுவுக்கு சிலுவை மரணம் பெற்றுத்தந்தவர்கள்.
முற்றிலும் வேண்டாம் எனவிலக்கிய கல்லே திருச்சபைக்கு உலகமீட்புக்கு.
மூலைக்கல்லாயிற்று அவர் வழிநடத்துதலில் அனைத்தும் இணைக்கப்பெற்றன.
வரைவதிற்கு திறமைபெற்ற லூக்கா உயர்ந்த கட்டிடத்தின் இருவளைவுகளை.
இணைக்கவேண்டிய மூலைக்கல்லாக இயேசுவை எடுத்துச்சொல்லி.
விண்ணக – மண்ணகத்தின்…..யூதர்கள்-புறஇனத்தாரின்……மனிதம்-தெய்வீக மீட்பு.
இவைகளை இணைத்த மூலைக்கல்லே நம் ஆயன் இயேசு கிறிஸ்து.
.
கூலிக்கு வேலைசெய்யும் ஆயன் யார்?
தொழிலாக கருதி ஈடுபாடு இல்லாது பணத்திற்கு வேலை செய்பவர்
காட்டு ஒநாய் மற்ற எதிரி விலங்குளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள
பயந்து ஓட இறுதியில் பின்னால் செல்பவனே இந்த ஆயன்
மந்தையை கட்டுபடுத்த கைத்தடியை பயன்படுத்தி அடிக்கிறவர்
ஆடுகளை அறியாவர் அவர்கள் குரலைத் தெரியாதவர்

சொந்தமாக உரிமைகொண்டாடும் ஆயன் யார்?
மந்தைக்கு சொந்தமானவன்…..மந்தையோடு ஒன்றானவன்
எதிர்வரும் எதிரிகளிடம் தன்உயிரை பணயம்வைத்து தன் ஆடுகளுக்கு முன்செல்பவனே நல்ல ஆயன்…..
எதிரில் வரும் ஓநாய்களிடம் சண்டையிட்டு செரந்தம் கொண்டாடும் ஆடுகளை காப்பாற்ற கையில் தடியோடு முன் நடப்பவனே நல்ல ஆயன்….
தன் ஆடுகளின் குரல்களை நன்றாக அறிந்தவன்…

தானே கதவாக இரவுமுழுவதும் படுத்து தன்னையல்ல
தன்னைமீறி எந்த விலங்கும் தாக்காவண்ணம்
தன்சொந்த ஆடுகளை காப்பாற்ற உயிரைக்கொடுக்க தயங்கா
உயிரான உயிராகும் சொந்த ஆயனே நல்ல ஆயன் இயேசுகிறிஸ்து

33வயதில் மரணித்த மாவீரன் அலெக்சாண்டரின் தலைமைத்துவம்
பேராசைக்கு மத்தியில் பலவெற்றிகளை பெற்றுதந்தது
பாரசீக எல்லையில் பாலைவனத்தில் படைகளோடு கடந்தபொழுது
தண்ணீர் தாகம் கொல்ல அனைவரும் சோர்ந்த நேரம்
படைத்தளபதியோ எங்கிருந்தோ சிறிது தண்ணீரை ஹெல்மட்தொப்பியில்
உங்களுக்காக என அலெக்சாண்டருக்குதர அவரோ அனைவருக்கும் இருக்கிறதா எனவினவ
இல்லை சிறிது தண்ணீர் உங்களுக்குமட்டும்தான் என படைகள் முன்
அத்தண்ணீரை கீழேகொட்டி உங்களுக்குமுன்னே செல்வேன்
உங்களைப் பாதுகாக்க உங்களை வழிநடத்த போராட என்றான்.

பெற்றோரே ஞானப்பெற்றோரே ஆசீரியர்களே மருத்துவர்களே
அருட்தந்தையர்களே அருட்துறவியர்களே வதாடும் வக்கீல்களே
வழிநடத்துபவர்களே பல்வேறு பொறுப்பிலுள்ளவர்களே
நம் பொறுப்பிலுள்ளவர்களை நாம் அறிவோம் வழிநடப்போம்
பல்வேறு தொழில்நுட்ப கணணியை சுய நலத்திற்கு
பயன்படுத்துவதை தடுப்போம் பிள்ளைகளின் ஆன்மிக ஆளுமை மதீப்பிடுகளை பாதுகாப்போம்
நம் நல்ல ஆயன் நம்மையும் பிறருக்கு ஆயராக நம்மை வழிநடத்துவராகஆமென்.