இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
இயேசுவின் இறைஇரக்கத்தின் பெருவிழா

ஒன்றாக்கும்…….. பரிவிரக்கம் …..!

தி.ப4:32-35 1யோவா5:1-6 யோவா20:19-31கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இறைஇயேசுவின் பரிவிரக்கம் உங்கள் அனைவரையும்
இன்றும் என்றும் பாதுகாத்து பராமரித்து பகிர்ந்து வாழ வரம் அருள்வாராக!

பசியிலே பாவத்திலே துன்பத்திலே தோல்வியிலே
பொருளின்றி பெயரின்றி துணையின்றி தொடர்பின்றி
பேசிக் கேட்கஇயலா தேவையிலிருப்போர் பலர் இருக்க
பரிதாபமே நமது வாடிக்கை பதிலாக இருந்துவிடுகிறது

பரிதாபம் உதட்டளவில் இருந்துவிடும் ஒரு உயிரில்லா அனுதாபம்
பேச்சளவில் வெளிப்படுத்தி பலனின்றி போகும் ஒரு உணர்வு
பரிதாபம் மேலோட்டமானது கவனத்தை ஈர்க்ககூடியது
புதியதேவைகள் கூட பழகிப்போனதாகிவிடும் பரிதாபப்படும்பொழுது

தேவையானது அத்தியாவசமானது அவசியமானது பரிவிரக்கமே
துயரத்திலிருப்போருடன் துயரப்படுவது துணையாவது பரிவிரக்கம்
திசைதெரியாது தவிப்போருடன் ஒன்றாகி வழியாவது பரிவிரக்கம்
தடுமாற்றத்துடன் தயங்கிவாழ்வோருடன் உடனிருந்து ஒளியாவது பரிவிரக்கம்

சொல்லளவில் நின்றுவிடும் பரிதாப உணர்வை கடந்து
செயலளவில் இரக்கப்பட்டு இறங்கிவந்து ஈடுபடுதே பரிவிரக்கம்
செய்பவர்கள் சாதனையாளர்கள் மனித ஆர்வாளர்கள் மன்னிப்பை நம்புவபர்கள்
சொல்லித்திரிபவர்கள் வேகமில்லாதவர்கள் உள்ளமில்லா மனிதமுகங்கள்

உயிர்த்தஇயேசு உறுதியாக உரைத்தது பரிவிரக்கமன்னிப்பே பணியாகட்டும்
உயிருள்ள சமூகம் பரிவிரக்கத்தோடு பகிர்ந்து வாழ்ந்த முதல்கிறிஸ்தவம்
உள்ளத்தால் எண்ணத்தால் ஒன்றிணைந்து ஒன்றாக சாட்சிபகர்ந்த சமூகம்
உடைந்த அப்பத்தை உணவாக கொண்ட சமத்துவ சகோதரம்

எதிர்ப்புகள் உரோமை அரசுகளிலிமிருந்து யூதகுழுக்களிலிருந்து
ஏன் வளரவிடவேண்டும் என ஆதங்கத்தோடு தோன்றின
எத்தனையோ வன்முறைகள் எண்ணற்ற மறைசாட்சிளை பலிகொண்டன எதுவும் வளரும் உயரும் துவக்க கிறிஸ்தவ சமூகத்தை நிறுத்தமுடியவில்லை
பரிவிரக்கப்ப பகிர்வு ஒன்றிப்பே பலமாக அமைந்தது

போலந்தின் புனிதையான பவுஸ்தினவே பரிவிரக்தின் திருத்தூதராவார்
படிப்பறிவு முழுமையின்றி பருவவயதிலேயே துறவறமடம் சேர்ந்து
பக்தியியும் பக்குவமும் இறைவன்கொடையாக பெற்று இறையருளால்
பல்வேறு இறையிரக்க இயேசுவின் காட்சிகளை கண்ட புனிதையாவார்
.
முப்பத்தி மூன்றே ஆண்டுகளில் முழுநிறைவாக வாழ்ந்தார்
முழுஉலகத்தை இயேசுவின் இறைஇரகத்தால் இணைத்தார்
. மன்னிப்பைபெற்று மன்னிப்பு கொடுங்கள் என அழைப்புவிடுத்து
மறவா நினைவுகளால் இன்றும் நாம் சாட்சிபகர துணையிருக்கின்றார்.

இறையிரக்த இயேசுவின் இரு ஒளிக்கதிர்கள் வெளிப்படுத்துவது
திருமுழுக்கு ஒன்றிப்பை திருத்தண்ணீரான வெண்மைநிறமும்
திருப்பலி நற்கருணையோடு ஒருடலாவதை சிவப்புநிறமுமே
நம் ஒன்றிப்பை அவரிலே புதப்பிப்போம் இன்றும் என்றுமே

புனித ஜெரோம் விவிலிய மொழிபெயர்ப்பாளர் விளக்கவுரையாளர்
எருசலேம் குகைகளிலே தன்பணிமுடித்து செபத்திலிருக்க
கிறிஸ்துபிறப்பு காலத்தருணத்திலே நீ கொடுக்கவிரும்பும் கொடை என்ன?
என்ற இயேசுவின் குரலுக்கு தன் மொழிபெயர்ப்பு எழுத்தாக்கம் எனபதில்தர
மறுபதில் கிடைக்காது தன்செப தப தர்மமுயற்சியை தரவிரும்புகிறேன் என மீண்டும்கூற
இயேசு இறுதிச்சொல்லா சொன்னதோ “உன் தடுமாற்ங்களை பாவங்களை என்னிடம் கொடு
பரிவிரக்கத்தை உனக்களித்து உன்னோடு என்றும் ஒன்றாவேன்” என்பதாகும்.

இறை இரக்கத்தை உணர்ந்து அனுபவித்து புதுப்பிப்போம்
இன்று அவரின் பரிவிரக்கத்தை பகிர்வால் பதிலால் பிறருக்கும் சொந்தமாக்குவோம்-ஆமென்.