இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா

இன்றைய நாளே: முதல் நாள்….மூன்றாம் நாள்….. …..!

தி.ப10:34 37-43 கொலோ3:1-4 யோவா20:1-9



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
உயிர்த்த இறையவன் நம்இறைமகன் இயேசுவின்
இணையில்லா ஆசீர் உங்களோடு தங்கட்டும்!
உயிர்ப்பு ஞாயிறு ஒருநாள் கொண்டாட்டமல்ல
உயிர்த்த இயேசு ஒருகாலத்திற்குட்பட்டவர் அல்ல
உயிர்ப்பு அனுபவம் கடந்தகால வரலாறு அல்ல
உயிருள்ள இயேசு மண்ணகத்தை மறந்தவர் அல்ல
இன்றைநாள் எனக்கு ஏமாற்றம் தந்ந நாள் நல்ல நாள் அல்ல
இன்றைய தினம் என் வேலை கேள்விக்குறியான நாள் நல்ல நினைவு அல்ல
இன்றை நேரம் எனக்குகுரியது அல்ல நான் நினைத்தது நடக்கவில்லை
இன்றும் நான் கொடுத்துவைக்கவில்லை என்சார்பாக தீர்ப்பை இறைவன் தரவில்லை…

. நாளின் நேரத்தின் தருணத்தின் நிகழ்வுகளுக்கு யார் காரணம்?
நானா? என்னை சுற்றியிருப்பவர்களா? என்னை படைத்த இறைவனா? என்நாள் வராதா? எனக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என் நேரம் எப்பொழுது?
எனக்கும் உயிர்ப்பு என் திறமைக்கும் ஒரு புதியபாதை கிடைக்காதா?

மேற்சொன்ன ஆதகங்கள் குமுறல்கள் சராசரிமனிதனுடையவை
எனக்குரிய நாள் ராசியான நாள் எங்யோயில்லை யாரிடமுமில்லை
என்னை சுற்றி நானே உருவாக்கும் கசப்பான வெறுப்பான கல்லறை ஏன்!
என்குரிய நாளில்லை நேரமில்லை என்பதை மாற்றுவோம் மனதால் எண்ணத்தால்.

வாரத்தின் முதல்நாளும் விழுந்தபின் மூன்றாம் நாளான ஞாயிறு
முக்கியமான நாள் முழுமையான நாள் முடிவுறாத நாளாகும்.
உயிர்ப்பை புதுஉயிரை புத்துணர்வை புதுவாழ்வை பெற்றெடுத்த நாள்

உயரலாம் உருவாக்கலாம் உயிராகலாம் என்பதை உண்மையாக்கிய நாள்…..

ஓடிய திருத்தூதர்கள் திடீரென ஆச்சரியத்தில் ஆடிப்போனநாள்
தேடிச்சென்ற பெண்கள் திகைப்புள்ளாகி அதிசயத்தநாள்
வெறுமையான கல்லறை வெண்மை நிறை தூதர் அவரின் செய்திகள்
பயத்தை கேள்விகளை குழப்பங்களை அதிகமாக்கிய நாள்
இன்றையநாளும் முதல்நாளாக காண உயிர்ப்பின் நாளாக காண
இறப்பும் பயமும் பாவமும் பலவீனமும் சோதனையும் வேதனையும் இறுதி கதவுஅல்ல முடியும் புள்ளி அல்ல முக்கியமையம் அல்ல
உயிர்ப்பே உயிர்த்த இயேசுவே மறுதொடக்கம் புதுமுயற்சி புதுவாழ்வு

இதயம் மற்றும் சிறுநீரக தானத்துக்காக ஆறுமாதங்கள் காத்திருந்த ஜிம்
7 என்ற எண்மட்டுமல்ல 7 எனவரும் எந்நாளும் எனக்குரிய நாள்
என்ற எண்ணம் மாற இன்றைய நாளும் என்நாள் என்உயிர்ப்பின் நாள் என புத்துயிருடன் காத்திருந்து உயிர்ப்பை அனுபவித்த நாள் புது உயிர்பெற்றநாள்
மூன்றாம் நாளும் முதல் நாளும் எனக்கு மறுஅன்பு அனுபவமாகட்டும்.
அது முக்கியமான இன்றைய நாளாகட்டும் உயிர்ப்பின் மக்களாவோம்-ஆமென்.