இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
புனித வியாழன்

இணைந்திருக்க…….. இறங்கி வா….!

வி.ப12:1-8 11-14 1கொரி11:23-26 யோவா13:1-15கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே புனித வாரத்தின் முப்பெரும் நாட்களை உங்களோடு துவங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மீட்பின் நிகழ்வுகளை வெளிக்கொணரும் இந்த மூன்று முக்கிய நாட்கள் புனித வாரத்தின் மையமான அருள் நிறை நாட்களாகும். மீட்பின் வரலாற்றக்கும் விசுவாசப்பயணத்தின் ஒரு தொடக்கம் மேலும் ஒரு திருப்புமுனை உண்டு என்று உணரவைக்ககூடிய நாட்கள் இவை. இன்றைய பாதம் கழுவும் நிகழ்விலிருந்து நான் பெற்றுக்கொள்வது என்ன? இயேசுவின் இறுதிஇரவு உணவின் நினைவு கொண்டாட்டத்தில் நான் அடையும் மகிழ்ச்சி என்ன? நற்கருணையின் மற்றும் குருத்துவத்தின் பிறப்பின் நாளாகிய இன்று இவ்வுயரிய கொடைகளுக்காக நன்றி கூறி மகிழ்ந்து கொண்டாடி பகிர்வோம்.

இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வாழ்வோம் என வாக்குறுதியோடு துவங்கும் எத்தனை திருமணங்கள் இன்றைய நாட்களில் எளிதாக விரைவாக பிரிந்துகிடக்கின்றன…….

ஒன்றிணைத்து தீமையை வன்முறையை எதிர்ப்போம் என்ற ஜக்கியநாட்டு நிறுவனத்துக்கு தடையாய் எத்தனை நாடுகள் பிளவுகளை தூண்டுகின்றன……

ஒரே வயிற்றில் கருவான உடன்பிறப்புக்கள் சொத்துக்காக பேசா உறவுகளாவதில்லையா………

ஒரே மதத்தை சார்ந்திருப்போர் சாதியவெறியினால் விரோதிகளாவதில்லையா……….

நம் தேசியபற்றுக்கு மொழிகளின் மற்றும் மதத்தின் பெயரால் வன்முறைகள் எழுகின்றனவே…

ஒரே கட்சியில் இருபிரிவுகள் நிலவுகின்றன…..ஒரே நிறுவனத்தில் இரு எதிர்ப்பு குழுக்கள் ஏன்… வேறுபாடுகள் இருப்பது எதார்த்தம். வேற்றுகருத்துகள் மற்றும் முரண்பாடான எண்ணங்கள் தோன்றுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆனால் பிரிவினைகள் முறிவுகள் ஏதிர்ப்புக்கள் இணைந்திருத்துதலுக்கு தடையாகயிருக்கிறது. இப்பிரிவினைகளால் பிளவுகளால் ஒன்றித்து வாழ்வு மட்டுமல்ல பாதிக்கப்படுவது அதற்கும் மேலாக கைவிடப்பட்ட உள்ளங்கள் இதற்குபலியாகி புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு ஆதரவின்றி விட்ப்படுகிறார்கள்.

பெரியவியாழன் நமக்குகற்றுத்தரும் செய்திஎன்ன? இன்றைய முதல் வாசகத்தில் பாஸ்கா இரவு மற்றும் பாஸ்கா உணவிற்கான தயாரிப்புகளுக்கு வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. இது விடுதலைப்பயணத்தின் நினைவு உணவு ஆகும். எண்ணில்லா வேதனைமிகு எண்ணற்ற காலமாய் அடிமையாய் நடத்தப்பட்டு இதிலிருந்து மீட்புகிடைக்காதா? இதுதான் நம் இறுதிகதியா? என்ற மக்களுக்கு நான் உங்கள் இறைவன் உங்களை தெரிந்தெடுத்து உடன்படிக்கையில் உங்களோடு இணைத்துக்கொண்டஇறைவன் கடந்துசெல்லுங்கள் பாஸ்கா கடத்தலை கொண்டாடுங்கள் என்ற நினைவுகொண்டாட்டம் நாளடைவில் அர்த்தமற்றுபோனது. பிரிவினைக்கு பலியாகி வேறுபலகடவுள்களை உருவாக்கிகொண்டனர். பலியிடுமிடம் வியாபாரமையமாகியது. இறைவனோடு இணைக்க துணையிருக்கவேண்டிய குருக்கள் தங்கள் நிலையை தக்கவைக்க அதிகாரத்துக்குவிலைப்போகி வெற்றுச்சடங்காற்றினர். மறக்கப்பட்ட இறைவன் புறக்கணிக்கப்பட்டு பிரித்துவிடப்பட்ட மனிதத்துக்காக மாற்றி அமைத்ததே நாம் நினைவுகூறும் பெரியவியானது இயேவின் புதிய பாஸ்கா நினைவு கொண்டாட்டம்.

எவ்வாறு புதிய பாஸ்கா உண்மையானது பிரிவினைக்குள்ளானவர்களுக்கு புதுஉயிரானது? இயேசு எத்தனை விருந்துகளுக்கு சென்றார் அங்கிருந்த பிரிவினையை கண்டார் ஆண்-பெண் என்ற பிரிவினைகள் ஒரே இஸ்ராயேல் இனம் பலகுழுக்களாக பிரிந்தது. சிறப்பாக யூதர்கள் சமாரிய மற்றும் புறஇனத்தவர் என்ற பிரிவினைகள். இந்த பிரிவினைகள் வழிபடும் இடங்களிலும் உணவுஅருந்தும் இடத்திலும் வெளிப்படையாக காணப்பட்டது. மக்கள் தாங்கள் பிரித்து புறக்கணிக்கப்பட்ட உணர்வை வலியை வெளிப்படுத்த இயலாது தவித்துபோராடினர். இயேசு வரிசேகரிக்கும் சக்கேயுவீட்டில் உணவருந்தசென்றபொழுது பரிசேயர் இல்லத்தில் உணவருந்தியபொழுது பாவிகளோடு உறவாடியபொழுது இயேசு தவறாகப்பேசப்பட்டார். மக்களை இறைவனோடு இணைக்கவேண்டிய குருக்கள் பாதைமாறி பதவிதேடிபோயினர் மனிதஒற்றுமையும் மனிதசகோதரத்துவமும் மனிதநேயமும் புதைக்கப்பட்டு பதவியும் அதிகாரமும் மையமாக்கப்பட்டன. மற்றும் எருசலேம் ஆலயத்து இரக்கமில்லா வியாபார பலிகள் தங்கள் நிலையை தக்கவைக்க அதிகாரத்திலிருப்போருக்கு ஆமாம் போடும் இறைபற்றில்லா சடங்குகளை நிறைவேற்றினர். இவைகளையெல்லாம் கண்டஇயேசு புதுப்பாஸ்கா விழாவிற்கு அடித்தளமிடுகிறார்.

இறங்கி வா….இணைந்திருக்க: உணவருந்துவிடங்களிலும் செபக்கூடங்களில் மட்டுமல்ல மாறாக அனைத்துதருணங்களிலும் அனைத்து நிலைகளிலும் இறங்கி வந்தால் மட்டுமே இணைந்திருக்கமுடியும் என செயலால் காட்டி இதை நினைவாக நம்முன் எந்நாளும் நினைவுகூற ஆணித்தரமான அன்புக்கட்டளையிடுகிறார். இச்செயல்நிறை படிப்பினைக்கு உணவுஅருந்தும் தருணத்தை நிஜமாக்குகிறார். எப்படி இறங்கிவருகிறார்? தான் அவ்விருந்திடத்தின் அன்புச்சீடர்களின் தலைவர் என்ற இருப்பிடத்திலிருந்து எழுந்து இறங்கிவருகிறார்.

மேலாடையை கழற்றுவதன்வழியாக சட்டங்கள் சடங்குகள் இறைவாக்கு தெரிந்த யூதன் என்ற நிலையிலிருந்து எழுந்து இறங்கி வருகிறார்.

இடுப்பிலே கட்ட துண்டைகையிலெடுப்பதன் மூலம் துண்டின் அடையாளமான பணியாளனை பற்ற பணியாளனாக மாற இறங்கிவருகிறார்.

தன்போதனையை கேட்க தன்வழிபின்பற்றுவோரின் பாதங்களை கழுவி முத்தமிடும்பொழுது அச்சேவையை ஆற்றும் அடிமைஎன்ற நிலைக்கு இறங்கிவருகிறார்.

அன்பு தோழமை நண்பர்களே நீங்கள் தொலைவிலுள்ள சீடர்கள் அல்ல நண்பர்கள் பலிசெலுத்தமறந்து பதவிக்கு பலியாகிப்போன குருக்களுக்கு சவாலாக நீங்கள் இறங்கிவரவேண்டும் எங்கு யாருக்கு மத்தியில் பணிபுரிகிறீர்களோ அவர்கள் நிலைக்கு இறங்கிவாருங்கள் அவர்களோடு நீங்கள் இணைந்திருந்து நான் உங்களோடு இணைந்திருப்பேன் என செயல்பாட்டுள்ள போதனையாக்கியதே இப்பெரியவியாழனாகும்.

எவ்வாறு இறங்கிவந்தால் இணைந்திருப்பது சாத்தியம்? இணைப்பை வெளிக்காட்ட இயேசு ஏற்படுத்தி விட்டுசென்றதே நற்கருணைபிரசன்னம். நான் உங்கள் நிலைக்கு இறங்கிவருவதே உங்களோடு எந்நாளும் இணைந்திருக்கவே நீங்கள் என்நினைவாகச் செய்யும்பொழுது உங்கள் சமூகத்தோடு இணைந்திருப்பீர்கள் நானும் அங்கு உங்களில் இருப்பேன் என்கிறார். எடுத்து…நன்றிகூறி-உடைத்து-கொடுத்து பகிர்வது ஒவ்வொருமுறையும் இறங்கிவந்து இனணந்துவாழ செயல்பட விடுக்கப்படும் சவாலான அழைப்புஆகும். நம்மத்தியிலும் இதைநாம் உணராது இறங்கிவரமறுக்கும்பொழுது நற்கருணை ஒரு சடங்காகநமக்கு இருந்துவிடுகிறது..

குடும்பத்தில் – சமூகங்களில் – பணியிடங்களில் – பொறுப்புகளிலிருந்தாலும் – தன்உடன் இருப்பவர்களுடன் இணைந்தவாழ இணைந்து செயல்பட பதவி – அதிகாரம் – முன்சார்புஎண்ணம் இவைகளிலிருந்து தொடர்ந்து இறங்கிவரஅழைக்கப்படுகிறோம்.

தன்னுடைய 58வது வயதில் கேன்சர் வியாதியில் மரணபடுக்கையில் 1993-ல் இதுபோன்ற ஒரு பெரிய வியாழன்று இத்தாலியைச்சேர்ந்த ஆயர் டோனி பெல்லோ தன் இறுதி அறிக்கைமடலை தன் மறைமாவட்டத்து குருக்களுக்கு “தோள்பட்டையும் –துண்டும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இதில் நற்கருணையிலுள்ள இயேசுவோடுள்ள இணைப்பை தோள்பட்டையும் – பணியில் மக்களோடுள்ள இணைப்பை துண்டும் வெளிப்படுத்தி வெளிக்கொணர்கின்றன. இறைவனோடும் மக்களோடும் இணைந்துவாழ பணியாளனாக அழைக்கப்பட்டவரே குருவானவர். குருத்துவத்தையும் நற்கருணையும் நிறுவிய நினைவுநாள். இது தோள்பட்டையின் மற்றும் துண்டின் திருநாள். இது அன்பின் மற்றும் பணியின் திருவிழா என்கிறார் தன் அனுபவ எழுத்துகளில்.

17டிசம்பர்1944ல் ஜெர்மனி நாசி வன்முறைக்கு பலியாகி சிறையில் இருந்தபொழுது பிரான்சு நாட்டு ஆயர் தன் சககைதியாகிருந்த திருத்தொண்டர் காரல் லேசனருக்கு சிறையில் குருப்பட்டம் கொடுக்க புதிய குருவான காரல் ஒவ்வொருநாளும் சிறையில் கொண்டாடி பகிர்ந்த சமதத்துவ நற்கருணையிலிருந்து பிறசககைதிகளோடு ஒருசமத்துவ சகோதர சந்தோச உணர்வை இயேசுவின் உடனிருப்பை துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியில் கொடுத்தது எனச்சொல்லி 1945ல் விடுதலையை கோண்டாடிய சிலமாதங்களிலே மனநிறைவோடு இறக்கினறேன் எனசாட்சிபகர்ந்தார்.

1431ல் இங்கிலாந்தின் புனித ஜோனாப்பார்க் சிறையில் நெருப்பில் மரணதண்டனைக்கு முன்பு நீங்கள் உண்ணவீரும்பும் இறுதி உணவு என்ன? என்ற கேள்விக்கு அவர்சொன்னது நற்கருணையிலுள்ள இறைஇயேசு வேண்டுமே அவரே போதும் ஆவார்.

புனித தமியான் சொன்னது “நற்கருணை ஒரு சிறப்பு உந்துதல் சக்தி”..
புனித மாக்சிமில்லியன் “என் உடலிலுள்ள இரத்தம் இயேசுவின் இரத்தமே”…
புனித பீட்டர் ஜீலியன்…”இயேசுவின் நெருப்பு நிறை பிரசன்னமே நறகருணை” ஆகும்.
புனித 2ம் ஜான் பவுல் “நற்கருணையே நம் சொத்து”…
எக்குறைபாடுகள் நிலவினாலும் இயேசு நம்மில் நிலைத்தருப்பதபோல நற்கருணையும் குருத்துவமும் எந்நாளும் வாழும் உயரும்-இறங்கி வருவொம்…இணைந்து செயல்படுவோம்-ஆமென்.