இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








குருத்து - பாடுகளின் ஞாயிறு

மகிழ்ச்சியும்….. மாறுபாடுகள் நிரம்பிய நுழைவு!

ஏசா50:4-7 பிலி2:6-11 மாற்11:1-10 14:1-15:47



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே வரலாறு பேசும் மற்றும் காலம் காலமாக நிறைவுகூறப்படும் பரிசுத்தவார நிகழ்வுக்குள் உங்களோடு நுழைவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இயேசுவின் துயரம் – இறப்பு மற்றம் உயிர்ப்பு இவைகளினால் அவரின் பரிசுத்த இரதத்தில் கிடைக்கப்பெற்ற மீட்புவிடுதலை நினைவுகளினால் பரிசுத்தம் அல்லது பாடுகளின் வாரம் ஞாயிறு என அழைக்கிறோம். மேலும் இயேசு எவ்வாறு மனிதத்தின் துன்பங்களோடு ஒன்றானாரோ அதுபோல நாமும் இயேசுவின் பயணம் மற்றும் பாடுகளோடு ஒன்றாவோம் இவ்வாரத்தின் அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் குடும்பமாக சமூகமாக பங்கெடுத்து பயனும் பலனும் பெறுவோம்.

நம்வாழ்வில் நாம் பல்வேறு நுழைவுகளை துவக்கங்களை அனுபவிக்கிறோம்: புதிய பள்ளி அல்லது கல்லூரி படிப்பின் துவக்கம்…… புதிய வேலையின் முதல்நாள் நுழைவு…….புதிய இல்லம் கட்டிமுடித்து நுழைதல்…..திருமணமுடித்து துவங்கும் புதியவாழ்வு…..முதல் குழந்தை நம்குடும்பத்தில் நுழையும் அனுபவம்……உடல் நலம்பெற துவங்கும் புதிய சிகிச்சையின் நம்பிக்கைநிறை துவக்கம்…………

ஒவ்வொரு புதிய நுழைவும் துவக்கங்களும் மகிழ்ச்சியை தருகின்றன. அதேதருணம் பல்வேறு எதிர்பார்ப்பு நிறை குழப்பங்களினால் மாறுபாடுநிறை உணர்வையும் தருகின்றன. இம்மாறுபாடுகள் முரண்பாடுகளாக நம்கண்ணுக்கு தெரிகின்றன. மகிழ்ச்சியோடு அங்கே போரட்டங்கள் எதிர்பார துயரங்களும் நிலவுகின்றன. புதியவேலையில்…புதிய உறவில்….புதியமுயற்சியில்…..புதிய படிப்பில்….தோல்விகள் சவால்கள் கேள்விகள் ஏமாற்றங்கள் உண்டு இத்தருணங்களில் நாம் மூழ்கிவிடாமல் இருக்க நிமிர்ந்து எழ நம்மில் நம்வாழ்வில் நுழைய காத்திருக்கும் இயேசுவின் அமைதிபிரசன்னத்தை நாம் வரவேற்கின்றோமா என்ற சுய ஆய்வுசெய்ய இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பாடுகள் நமக்குசொல்லபட்டன. நம்சிந்தனைக்கு பவனியின்பொழுது அறிவிக்கப்பட்ட நற்செய்தியோடு நம் சிந்தனையை துவங்குவோம். இதில் இயேசுவின் எருசலேம் ஆரவாரநுழைவு நமக்கு தரப்பட்டுள்ளது. எருசலேமின் 11 நுழைவுவாயில்களில் இயேசு 8வது நுழைவுவாயில் வழியாக நுழைகின்றார். எட்டுநாள் மீட்பு பயணத்துவக்கம் எருசலேம்நுழைவோடு துவங்க காரணம். அங்கு நிலவுகின்ற நம்வாழ்வில் எதிர்படுகின்ற பல்வேறு முரண்பாடு மற்றும் மாறுபட்ட தருணங்களில் அமைதியின் அரசராக அவர் நுழைவுக்குதுணையிருக்க அழைக்கப்படுகின்றோம். காணப்படும் மாறுபாடுகள் என்ன?

குதிரை – கழுதை: குதிரையை அரசர்கள் போரின் மற்றும் வெற்றியின் அடையாளமாக அத்தருணங்களில் பயன்படுத்தி பயணம் செய்தனர். மாறாக அமைதியை வெளிப்படுத்த அவர்கள் கழுதையின் மீது பவனிவந்து சாட்சிபகர்ந்தனர். செக்கரியா9:9 “இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.” 1அரசர்1:38 அவ்வாறே குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர்.

ஓசான்னா – சிலுயைில் அறையும்; யூத மதத்தலைவர்களின் மனிதநேயமற்ற அளவுக்கதிகமான சுமக்கஇயலா கட்டாயப்படுத்தப்பட்ட பளுவாகக்கருதிய சட்டங்களிலிருந்தும் மற்றும் புதியதாக உருவாகிவரும் உரோமை அரசுகளின் வன்முறையான செயல்களிலிருந்தும் விடுதலை பெற இப்பொழுதே எங்களை காப்பாற்றும் என்பதுதான் “ஓசான்னா” என்பதாகும். உடனே இப்பொழுதே விடுதலை பெற்றுதாரும் ஓசான்னா என்று முழக்கமிடுகின்றனர். இந்த முழக்கத்தின் முரண்பாடு என்னவெனில் இதே காப்பாற்றும் என்று கத்திய மக்கள் மதத்தலைவர்களின் அதிகாரம் மற்றும் சுயநலத்துக்கு பலியாகி சிலுவையில் அறையும் என் மாற்றி கூறி அநீதிக்கு துணைபோயினர்.

ஒலிவ கிளைகள் – காட்டிக்கொடுத்தல்: ஓலிவ இலை அமைதியின் அடையாளம். இரு நாடுகள் மற்றும் இரு அரசர்களுக்கிடையே அமைதிப்பேச்சு வார்த்தை நடைபெறும்பொழுது அமைதி ஒப்புதலுக்கு அடையாளமாக ஒலிவ இலையை பயன்படுத்தினர். கிரேக்க அரசிகள் பொதுநிகழ்வின்பொழுது ஒலிவகிரீடம் அணிந்து தோன்றினர். ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கும் ஒலிவகிரீடம் அணிவிக்கப்பட்டது. தொ.நூ8:11”மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்”. வெள்ளத்தின் அபாயம் தணிந்து அமைதிதிரும்புகிறது என்று ஒலிவ இலையை புறாபற்றி வந்தது. ஒலிவ கிளைகளை தாங்கியவர்கள் மதத்தலைவர்களின் பதவிபயத்திற்காக காட்டிகொடுத்து அவர்களின் செயல்களுக்கு முரண்பாடாகிறார்கள்.

தொடரும் முரண்பாடுகள்: தராளமனத்துடன் விலையுயர்ந்த நறுமணத்தைலத்துடன் தோன்றும்பெண் – பணஆசைக்காக இயேசுவின் அன்புக்கு விலைபேசும் யூதாசு…கெத்சமெனியில் உறங்கும் அன்புசீடர்கள் – விழிப்போடு துன்பமிகு செபத்தில் இயேசு….கசையடியும் இகழ்ச்சியும் அறையும் பெறும் .இயேசு – ஒன்றும் பதில்பேசா இயேசு….. விடுதலைபெறும் கொலைக்குற்றவாளி – கொலைக்குற்றம் சாட்டப்படும் இயேசு….பயந்து ஓடும் சீடர்கள் – பற்றுணர்வோடு அருகிலிருந்த பெண்கள்……

முரண்பாடுகள் மாறுபாடுகள் நிரம்பியிருக்கும் வாழ்வில் இயேசுவின் எருசலேம் நுழைவு பல அழிவுகளைக்கண்ட பலவிதமான வியாபாரக்கூடாராமாக்கப்பட்ட எருசலேம் முரண்பாட்டு வழிபாட்டுக்குள்ளான ஆலயம் என்னில் அமைதிகாணட்டும் நானே எருசலேம் நானே புதிய எருசேலம் அமைதிமிகு எருசேலேம் மடிந்து எழுவேன் என நம்மில் நுழையும் இயேசுவை நாம் அனுமதித்து அனுபவம்கண்டு அமைதியைப்பற்றுகின்றோமா?

2000 ல் பெரியவெள்ளி கொலோசியத்தின் சிலுவைப்பாதை சிந்தனைகளுக்கு பிறகு திருத்தந்தை புனித 2ம் ஜான் பவுல் பின்வரும் சிந்தனைகளை முன்வைத்தார்..

o “அநீயாயமாக குற்றம்சாட்டப்பட்வர்களின் வலியை பழிசுமத்தப்பட்ட இயேசுவைத்தவிர யாரால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியும்”

o “மனித மதிப்பும் நம்பிக்கையின்றி தவிக்கும் எண்ணஇயலாபலரின் சுமைகளை முள்முடியோடு அவமானப்படுத்தப்பட்ட இயேசுவைத்தவிர யாரால் சுமக்கமுடியும்”

o “தனிமையில் வெறுமையீல் துயரத்தில் எதிர்காலமின்றி தகர்க்கபட்ட பலரின் நிலையை ஆணியால்அறையப்பட்டு காயப்படுத்தப்பட்ட இறைமகனைத்தவிர யாரால் குணமாக்கமுடியும்…

நம் இயேசு நம்மோடு பயணித்து காயப்பட்டு துயரப்பட்டு தனித்துவிடப்பட்டு கீழேதள்ளப்பட்டு நம் காயங்களை வலிகளை பங்கிட்டு பங்கெடுத்து பயணிக்கின்றார். நம்மில் நுழைய அவரை அனுமதிக்கின்றோமா? முரண்பாடுநிறை தருணங்களிலிருந்து அமைதியை அனுமதிப்போம் என்பதே புனித வாரத்தின் செபமும் செயலுமாகட்டும்-ஆமென்.