இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, USஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
தவக்காலத்தின் ஜந்தாம் ஞாயிறு

உடன்படிக்கை: உடைந்த ஏட்டிலா!.......... உயரிய இதயத்திலா!

எரே31:31-34 எபி5:7-9 யோவா12:20-33கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தவக்காலத்தின் ஜந்தாம் ஞாயிறு திருவழிப்பாட்டிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இச்சிறப்புக்காலத்தின் தொடக்கத்திலிருந்து இறைவன் நம்மோடு இணையவிரும்பும் அனுபவங்களை பாலைவனஅனுபவம் – மலைஉச்சி அனுபவம் – ஆலயத்தில் சங்கமிப்பு – வெளிச்சமான இல்லம் என ஒவ்வொரு ஞாயிறும் சிந்தித்து செபித்து வாழ்ந்து காட்ட முயற்சிகள் எடுத்தோம் இவ்வாரத்தில் நான் உங்கள் கடவுள் நீங்கள் என் மக்கள் என உரிமைகொண்டாடிய இறைவனின் உடன்படிக்கை வெறும் பலகை ஏட்டிலல்ல மாறாக ஒவ்வொருவரின் இதயத்திலிருமே என உணர்ந்து இணைவோம் இறைப்பலியில்.

இரு எண்ணங்களிடையே ஏற்படுவது அல்ல
….. இரு உரையாடல்களிடையே நடைபெறுவது அல்ல…
இரு வியாபாரத்துக்கிடையே பேசப்படுவது அல்ல….
இரு நிறுவனத்துக்கிடையே கடைப்பிக்கப்படுவது அல்ல
… இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்படுவது அல்ல…
இரு கட்சிகளுக்கிடையே பேசிமுடிப்பது அல்ல……
ஆம் இவைகளல்ல நாம் சிந்திக்கும் உடன்படிக்கை..மேற்சொன்னவைகள் ஒப்பந்தம் வாக்குறுதி அவைகளில் எப்பொழுதும் மாற்றம் வரலாம் மாறுபாடு ஏற்படலாம் குறிப்பிட்டகாலத்திற்கு மட்டுமே உரியதாக இருக்கலாம். ஆனால் உடன்படிக்கை மாறாதது உடைபடாதது உறுதியானது. இது இருஇதயத்து உறவுகளுக்குள்ளே கருவாகி உருவாகி உயர்வாக என்றும் இருப்பது. திருமணம் ஒருபெரிய முக்கிய உடன்படிக்கை ஆனால் எவ்வளவு எளிதாக திருமணங்கள் உடைபபட்டு முறிவுபட்டு பிள்ளைகள் பெற்றோரின் முழுபாசமின்றி அடையாளமிழந்த உறவுகளாக வாழ்வைஇழந்து தவிக்கின்றன. ஒத்துவரவில்லை என்று ஒருவார்த்தையில் சொல்லி நான் மாதமாதம் பணத்தை வளரும் வரை கொடுக்கின்றேன் என்கடமையை நிறைவேற்றி ஜீவாம்சத்துக்கு வழிசெய்கின்றேன் எனலாம். வெறும் கொடுப்பதல்ல உடன்படிக்கையின் உறவு உடனிருப்பது உடனாக உயிராக இருப்பது எனவே தான் உடன்படிக்கைக்கு இரத்தத்தை அடையாளமாக சொல்கிறார்கள். இரத்தமில்லா உடன்படிக்கையில்லை. இரத்தம் இல்லா உயிரில்லை வாழ்வில்லை. நான் உங்கள் கடவுளாக உயிராக இருப்பேன் நீங்கள் என்உயிருள்ள பிரிய பிள்ளைகளாக இருப்பீர்கள் என்ற உடன்படிக்கை இறைவனி;ன அழைப்பு ஏன் யாரால் உடைக்கப்பட்டது? எவ்வாறு அது பழைய உடன்படிக்கையானது? ஏன் புதிய உடன்படிக்கை தேவைப்பட்டது? புதிய உடன்படிக்கயைின் சிறப்பு எது? இன்றைய உடன்படிக்கையின் அழைப்பு எது? இத்தகைய கேள்விகளுக்கு இன்றைய இறைவார்த்தைகள் நமது சிந்தனைக்கு பதில் தந்து புதிய உடன்படிக்கையின் சகோதர தோழர்களாய் தோமிகளாய் வாழ அழைக்கின்றன.

பழைய உடன்படிக்கை பலகை ஏட்டில் எழுத்துகளாலானது
குறிப்பிட்ட இனமான இஸ்ராயேல் ….யூத குலத்திற்கு உரியது
இறைவன் தெரிந்தடுத்த அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உருவானது
மிருகங்கள் பலியாக்கப்பட்டன
மிருகங்களின் இரத்தம் தெளிக்கப்பட்டன
குரு மக்கள் சார்பாக பணியாற்றினார் பலிசெலுத்தினார்.
புதிய உடன்படிக்கை இதயத்தில் எழுத்தப்பட்டது
அனைத்து மனிதத்திற்கும் உரியது உள்ளடக்கியது
இறைமகன் இயேசுவுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே ஒரு இணைப்பாக உருவானது
இயேசுபலியாக்கப்பட்டார்
இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது
இயேசு – பலிப்பொருள்
இயேசு – பலிசெலுத்துபவர்
இயேசு-பலிப்பீடம் (சிலுவை – கல்வாரிமலை – இன்றைய நற்கருணைப்பீடம்.
ஏன் உடன்படிக்கை உடைக்கப்பட்டது….ஏன் புதிய உடன்படிக்கை தேவைப்பட்டது? முதல் வாசகத்தில் ஏரேமியா இறைவாக்கினர் புதியஉடன்படிக்கை இதயத்தில் எழுதப்படும் என இயேசுவின் இரத்தம் சிந்திய இறப்பை புதியஉடன்படிக்கையாக சொல்ல காரணம். இஸ்ராயேல் மக்கள் மறந்தனர் பிரிந்தனர் தங்களுக்கு கடவுள்களை உருவாக்கிகொண்டனர் அதற்கேற்றாற்போல குருக்களும் அரசர்களும் மக்களை பிரித்து தங்கள் பதவிகளை தெய்வங்களாக்க முயன்றனர். பாபிலோனிய அடிமைத்னத்திலிருந்து விடுதலைப்பெற தயங்கும் மக்ளுக்கு நீங்கள் எழுத்து உடன்படிக்கையை உடைத்து மறந்துபோனீர்கள் பாவம் வேற்றுமை பிரிவினைகள் அதிகமாகிவிட்டன. உங்கள் இதயத்தில் உடைபடாத உடன்படிக்கயயாக இறைவன் இயசுவருவார். அவர் இரத்தம் அவரோடு உயிராக உங்களை இணைக்கும் என்கிறார்.

இயேசுவும் நற்செய்தியில் அடையாளம் தெரியா கோதுமைமணி மடிந்தால் தான் செடிபெரிதாகி பலன்தரும் அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் என அளைவரையும் உடன்படிக்கயைின் பிள்ளைகளாக அழைக்கிறார்

. முதல் உடன்படிக்கை……….பலகை எழுத்திலிருந்து உண்மையாக்கபடவில்லை….
முழு உடன்படிக்கை……..சிலுவை மரத்திலிருந்து இரத்ததினால் இணைத்து உயிராகியது……
தொடரும் உடன்படிக்கை……நற்கருணைபீடத்தில் சிந்தபட்டு கொடுக்கப்பட்டு இணைகிறது…..ஆமென்